1) இது கர்நாடகாவில் சிவசமுத்திரத்திலிருந்து சோம்நாத்பூர் போற வழியில எடுத்ததுங்க. அந்தச் சாலையில மாட்டு வண்டிதான் போவும், அப்படியாப்பட்ட சாலையில நம்ம ஆல்டோவும் ஊர்ந்துகிட்டே போச்சு. ஒரு 26 கிமீ தானுங்க. ஆனா கர்நாடக செழுமைய அங்கே பார்க்கலாம். மேலும் அதைப்பற்றி எழுதி இருக்கேன் பாருங்க.
2) லண்டன் கிங்கஸ்டனில் எடுத்தது. ராணி முதல்ல இருந்த அரண்மனையாம், அதைத்தான் பார்க்கப்போனோம். அப்புறமாத்தான் தெரிஞ்சது அங்கே ஒரு உல்லாச பூமியே இருக்குன்னு. ஆத்துக்குள்ளே சின்னச் சின்ன தீவு மாதிரி இயற்கை செஞ்சு வெச்சு இருக்க நம்ம மக்கள் வழக்கம் போல கொட்டாய போட்டு இருக்காங்க. சொத்த வித்து அங்கே தங்கலாம். பழைய இங்கிலாந்து பாரம்பரியம் கெடாம பாதுக்காக்குற ஊருங்க அது.
மேல இருக்கிற ரெண்டு படங்களுமே Nikon 3100 Coolpixல எடுத்ததுதானுங்க.
முதல் படம் அருமையிலும் அருமை.
ReplyDeleteKalakitenga, all the best
ReplyDeleteஎனக்கில்ல எனக்கில்ல...!!!
ReplyDeleteயோவ் உங்களுக்கு இயற்கைன்னாலே மரந்தானா...அப்புறம் அட்டு மாதிரி ஒரு வாத்துவேற...போங்கய்யா நீங்களும் உங்க பொகைப்பட பொட்டியும்...
ReplyDeleteநான் ஏன் இப்படி எல்லாம் பேசுறேன்னு பார்க்கறீங்களா...
நானும் போட்டியில கலந்துக்கறேன் இல்ல...அதான்...
நேரா போயி என்னோட பொகைப்படங்கள பாருங்க...அப்புறம் டிஸைட் பண்ணிக்கலாம்...யாரு இங்க விண்ணர்னு...(வடிவேல் பாணியில படிங்க)
http://imsai.blogspot.com
ஆனா ஒன்னு...எதுக்கு ப்ரொபஷனல்க்குள்ள போட்டின்னு தான் இப்படி ஒரு டீலு...ஹி ஹி
வருகைக்கும் ஊட்டத்துக்கும் நன்றிங்க வடுவூராரே
ReplyDeleteஇளா,
ReplyDeleteமுதல் படம் நச்! வலப்பக்கம் இருக்கற மரத்தோட எட்ஜ் இடப்பக்கத்துக்கு வந்திருந்தா பர்ஃபெக்ட் ஒன்! :)
முதல் படம் -- அருமை
ReplyDeleteஇரண்டு படங்களுமே அருமை.
ReplyDeleteபுள்ளைங்க படம் போட்டு கொசுறுல இடம் புடிச்ச நீங்க எங்கே, மரத்தையும் வாத்தையும் படமா போடுற நான் எங்கே, ஒரு ஐடில வாங்கய்யா.
ReplyDeleteமின்னலு, மத்த படத்தையெல்லாம் "பார்த்த நான்
எனக்கில்ல எனக்கில்ல...!!! " ன்னு சொல்லிட்டு இருக்கேன், நீங்க வேற
டேங்ஸ்-ஆசான், பாபா & ஜெசிலா
ReplyDeleteஇளா,
ReplyDeleteமுதற்படம் கண்ணையும், மனதையும் கொள்ளையடிக்கிறது. அருமை. வெற்றி பெற வாழ்த்துக்கள்.