"சிங்கம் சிங்கிலாதான் வரும், பன்னிங்கதான் கூட்டமா வரும்" விசில் பறக்குது, பேப்பரு மழை கொட்டுது.
இன்னும் சிலரோ, ரசிகர்கள்தான் கூட்டமா போறாங்க, அதனால ரசிகர்ங்க எல்லாருமே _____. விடுங்க, மேட்டருக்கு வருவோம். இதையே விகடன் மதன்கிட்டே ஒருத்தர் "சிங்கம் சிங்கிலாத்தான் போகுமா சார்?"ன்னு கேள்வி கேட்க மதன் சொன்ன பதில் கேட்டா நமக்குதான் அதிருது. "சிங்கங்க எப்பவுமே கூட்டமாதான் வேட்டையாட போகும், வரும். சிறுத்தைதான் தனியா போகும்"னு ஒரு போடு போட்டு இருக்காரு.
அப்போ சுஜாதா ஒரு ரைமிங்காகதான் இந்த பஞ்ச் டையலாக் வெச்சு இருக்காரு போலத் தெரியுது. அட, சுஜாதா சொன்னது சரின்னா மதன் சொன்னது தப்பா? யாரோ ஒருத்தர் நம்மளை மொக்கையாக்கியிருக்காங்க. அது யாரு? சுஜாதாவா? மதனா?
இளா!
ReplyDeleteசிங்கம் கூட்டமாக வரும் சரி எல்லம் பெண்சிங்கங்கள் , பல பெண்சிங்கங்கள் இருக்கும் கூட்டத்திற்கு ஒரே ஒரு ஆண்சிங்கம் தான் தலைவனாக இருக்கும், அதன் வேலை வேட்டை ஆடுவது கூட கிடையாது இனப்பெருக்கத்திற்கு மட்டுமே. அப்போ ஆண்சிங்கம் என்னதான் செய்யும் சும்மா கிர்ர்ர்ர்ர் நு கர்ஜித்து ஆடு, மாடு, மான் மந்தையை அச்சுறுத்தி விரட்டும் அவ்வளவே. மிரண்டு ஓடும் அப்பாவி விலங்குகளை பெண் சிங்கங்கள் போய் வேட்டையாடியவுடன் ஆண்சிங்கம் போய் சாப்பிட்டுவிட்டு(lion' share) மிச்சம் வைப்பதையே பெண்சிங்கங்கள் சாப்பிடும்(இதைப்பார்த்து தான் நம்ம ஊரிலும் கணவன் சாப்பிட்ட பிரகு மனைவி சாப்பிடும் பழக்கம் வந்ததது போல) மேல் விவரங்களுக்கு டிஸ்கவரி அல்லது நாஷனல் ஜியோகிராபி பார்க்கவும்!
எனவே சிங்கம் சிங்கிலா வரும்னா தவறு இல்லை எனலாம்!
இதுல இன்னோன்னு சொல்றேன் பாருங்க. ஆண் சிங்கம் உக்காந்த எடத்துலயே திங்கும். பெண்சிங்கங்கதான் கூடிப் போயி வேட்டையாடிக்கிட்டு வரும். அதத்தின்னுதான் அலும்பு ராஜ்ஜியம் செய்யும் சிங்கிள் சிங்கம். :))))))))))))
ReplyDeleteSujatha sonnathu pizhai...
ReplyDeletemathan sonnathu sari...
singathileyum...penn singam thaan vedai yaadurathu..
nay be he could have meant single male lione keeping 4-5 females in it's den....
விட்டால் சிங்கம் திருமணம் பண்ணிக்காம சிங்கிளாகத்தான் வருமிண்ணுசொல்லுவீங்க போலிருக்கே..
ReplyDeleteவவ்வாலு இந்த லெவலுக்கு வாரிட்டீங்களே
ReplyDeleteசும்மா அதிருதில்ல
ஆமாங்க இளா, வவ்வால் சொல்றதும் மதன் சொல்றதும் தான் சரி.
ReplyDeleteஆண் சிங்கம் ரொம்ப சோம்பேறி. பெண் சிங்கங்கள் வேட்டையாடினத தின்னுட்டு சும்மா இருக்கும். எத்தன தரவ அனிமல் ப்ளானட்ல பாத்துருக்கோம்.
Around the anilmal planet we go
ReplyDeleteஅப்படின்னு ஒரு பாட்டு வரும் அனிமல் ப்ளான்ட்டுக்கு விளம்பரம். கேக்க நல்லா இருக்கும். (சின்ன புள்ளங்க மாதிரின்னு ரங்கமணி திட்டுனாலும் விடாம கேப்போமில்ல)
நம்மளை மொக்கையாக்கறதுக்கு குமுதம் ஆனந்த விகடன்ல எந்த கருமத்தை வேனா எழுதலாமே...
ReplyDeleteமதன் சொல்வதெல்லாம் உண்மைன்னு ஒரு கூட்டம் அலையுது
சுசாதா சொல்வதெல்லாம் சத்தியம்னு ஒரு கூட்டம் அலையுது
நீங்களா எப்பதான் புத்தகங்களை எடுத்து படிக்கப்போறீங்கன்னு யாராவது கேட்டுட்டா ?
சரி விடுங்க...இதை வெச்சு எப்படி மொக்கை பதிவு போடலாம்னு நான் இப்போ யோசிக்கனும்
ரொம்ப முக்கியம் மக்கா..
ReplyDeleteவவ்வால் சாரே, இப்படி ஒரு விளக்கம் எதிர் பார்க்கிலேங்க. பட்டைய கெளப்புறீங்க போங்க
ReplyDeleteநம்மளை மொக்கையாக்கறதுக்கு குமுதம் ஆனந்த விகடன்ல எந்த கருமத்தை வேனா எழுதலாமே...
ReplyDeleteஎதுக்கு தழல் இப்போ இந்த கொலவெறி நீங்கதான் சுயத்துலயே மொக்கைல சக்கைப்போடு போடறதுக்குத்தான் பொறந்தவராச்சே. குமுதம் விகடன் பாத்து மொக்கை கருமாந்திரம் பண்ற ஆளா நீங்க. என்னதான் இருந்தாலும் உங்களுக்கு ரொம்பத்தான் தன்னடக்கம்
இளா,
ReplyDeleteஹி... ஹி மதன் சொன்னதும் தப்பில்லை, சுஜாதா சொன்னதும் தப்பில்லை என்பது போல கருத்த சொல்லி நானும் ஒரு நடுனிலைவியாதினு காட்டிகிட்டாச்சுல!