Showing posts with label Songs review. Show all posts
Showing posts with label Songs review. Show all posts

Friday, December 10, 2010

காவலன் - பாடல்கள் விமர்சனம்

பாடல் - விண்ணைக் காப்பான் ஒருவன்..
பாடியவர்கள்: திப்பு, ஸ்வேதா
எழுதியவர்: பா.விஜய்


கொஞ்ச வருசமாவே கபிலன்தான் விஜய் படங்களுக்கு ஆரம்ப பாடல் எழுதிட்டிருந்தார், ஆச்சர்யமா இந்த முறை பா.விஜய்க்கு குடுத்திருக்காங்க. ஆனாலும், வழக்கம் போலவே வரும் ஒரு ஆரம்ப பாடல். ட்ரம்பெட்டில் ஆரம்பம், சரணத்தில் வயலின்கள் என அதே மொட்டையின் பழைய டெம்ப்ளேட். என்ன கொஞ்சம் புதுசா செஞ்சிருககாங்க. ஆரம்ப பாடல் எடுத்து முடிச்சவுடன், கொஞ்ச நாளைக்காவது விஜய் ஓய்வு எடுக்கப் போயாகனும். காடு மேடெல்லாம் உருண்டு புரண்டு பேயாட்டம் ஆடுவாரு. இந்தப் பாட்டும் கொஞ்சமும் குறைச்சலில்லாத ஆட்டத்தைத் தரும். ரசிகர்களை மனசுல வெச்சிகிட்டு எழுதின பாட்டுபோல, விஜயையும் புகழ கூடாது, அதே சமயம் ரசிகர்கனையும் புகழக்கூடாது, பின்னே எத்தனை வருசம்தான் அதையே பண்றதுன்னு வித்தியாசமா ஆண்டவனைப் பாட போயிட்டாங்க. ஆரம்பத்துல இருந்து வரும் ஒரே மாதிரியான தாளம் சலிக்க வெக்குது. ரெண்டாவது சரணத்துக்கு அப்புறம் வரும் குத்துல விஜய் எப்படி ஆடுவாருங்கிற எதிர்பார்ப்பு எகிற வைக்குது. அதே பழைய கள்ளு, பழைய சட்டி, புதுமணம்.

பாடல் : யாரது.. யாரது
பாடியவர்கள்: கார்த்திக் , சுசித்ரா
எழுதியவர்: யுகபாரதி
”ஒரு படத்துக்கு ஒரு மெலடியாவது வெக்கனும், அது வாழ்நாளைக்கும் பேசப்படற பாட்டா இருக்கனும்” இதுதான் வித்யாசாகரிடம் பழகியவர்கள் அடிக்கடி கேட்கும் வார்த்தை. பாடியது கார்த்திக் வேற. சொல்லவும் வேணுமா? அட காந்த குரலழகி சுசித்ராவும் சேர்ந்தா.. ஆனா சுசித்ராவின் குரல் சும்மா ஹலோமட்டும் சொல்லிட்டுப் போயிடறாங்க :( ரெண்டாவது சரணத்துக்கு முன்னாடி தன்னோட ஹஸ்ஸி குரலில் ஒரு ஹம்மிங். காதல் தாபத்துல பாடுற மாதிரியான பாடல். ஐயா சித்திக், இதுல விஜய ஆடவெச்சிராங்க. நல்ல மெலடி.. மோனிஷா என் மோனலிசா படத்தில் டீ ஆரின் “ஹலோ ஹலோ” பாடல் ஞாபகம் வருவதை தவிர்க்கத்தான் முடியவில்லை.



பாடல் : ஸ்டெப் ஸ்டெப்
பாடியவர்கள்: பென்னி தயாள் , மேகா
எழுதியவர்: விவேகா


இந்தப் பாட்டுக்கு இசையமைச்சது விஜய் ஆண்டனியோன்னு சந்தேகப்படுற அளவுக்கு ஆரம்ப இசையும், இசைக் கோர்வையும். ”நிலாவே வா”அஃதே அஃதே வில ஆரம்பிச்ச ஆட்டம் இந்தப் பாட்டிலும் தொடருது. மேற்கத்திய இசையில் ஒரு களோபரமே நடந்திருக்கு. விஜய் ஆட்டத்தை மட்டுமே எதிர்பார்த்த பாடல். வித்தியாசம் பண்ணியிருக்காரு விதயாசாகர். வழக்கமா விஜய் பாட்டுன்னாவே போற்றித்தான் பாடனுமா? யூ டூ விவேகா?

பார்க்கதான் சிறுபுள்ள..கலக்குற பயபுள்ள..
இளம்பெண்கள் நினைப்பால நீதான் மாப்பிள்ளை
ஏமாந்த ஆளில்லை..நான் உன்னை போலில்லை.
என்ஆட்டம் பாரேண்டி யாரும் இணையில்லை

பாடல் : சடசட சடசட
பாடியவர்: கார்த்திக்
எழுதியவர்: யுகபாரதி

மீண்டும் கார்த்திக், யுகபாரதி. டிபிகல் கார்த்திக், வித்யாசாகர் பாடல். இதென்ன யுவன் பாட்டு மாதியிருக்கேன்னு கேட்கத் தோணுது. மீண்டும் மேற்கத்திய சாம்ராஜ்ஜியம். புல்லாங்குழல் வரவேண்டிய இடத்தில் கூட கீபோர்ட். ஆரம்பத்தில் இருந்தே இருக்கும் அதே துள்ளல், வேகம் உள்ள பாட்டு. கோவில் படத்துல ஹாரிஸ் போட்ட “சிலுசிலுவென தென்றல் அடிக்குது” சாயல் ரொம்பவே பல்லவியில தெரியுது. அதுதான் மனசுல நெருடுது.

”காதல் தெருவிலே என் ஆசை அலையுதே நீங்க நினைவினிலே நிழல் கூட வெளுக்குதே”
”குரலாலே என்னில் குடியேறிக்கொண்ட கொலைகாரி உந்தன் ஞாபகங்கள் என்னை குத்துதே”

யுகம், வேகம், வித்யாசாகரின் துள்ளல். நல்லதொரு பாடல்.


பாடல் : பட்டாம்பூச்சி
பாடியவர்: கே.கே, ரீட்டா
எழுதியவர்: கபிலன்

ஆரம்ப பாடல் இல்லைன்னா என்ன, எனக்கும் ஒரு வாய்ப்பு வருமென கபிலன் காத்திருந்திருப்பார் போல. semi beatல் ஒரு காதல் பாடல். மீண்டும் 90களில் பாட்டமைத்தது போலவே இந்தப் பாட்டும். இந்தப் பாட்டி பண்பலைகளிலும், தொலைக்காட்சிகளிலும் காதலர்களின் தேர்வா இருக்கும் பாடல். அரசியலுக்கு உள்குத்து வெச்சும் ஒரு வரி. தெரிஞ்சே செஞ்சிருப்பாங்களோ?  இந்தப் பாட்டே எனக்கும் புடிச்ச பாட்டு, திரும்ப திரும்ப ஓடிட்டு இருக்கு.

”அலைவரிசையில் நீ சிரிக்க.. தொலை தொடர்பினில் நான் இருக்க..”


ஒட்டுமொத்தமாக பார்க்கும்பொழுது, 4 வருடங்களாக விஜய்க்கு முன்னுரிமை தந்தே வந்த பாடல்களைக் கேட்டு கேட்டு சலிச்சுப் போன நேரத்துல நல்லவிதமாய், வித்தியாசமாய் அமைந்த பாடலகள். இது விஜய்க்கும், வித்யாசாகருக்கும் மிக முக்கியமான படம். ரெண்டு பேருக்குமே ஒரு hit தேவைப்படற நேரத்துல வித்யாசாகர் தனக்கு குடுத்த வேலையை திருப்திகரமா முடிச்சுட்டாரு. அப்ப விஜய்?

Rating : 3.5/5

தமிழோவியத்துக்காக எழுதியது

Tamiloviam anbudan varaverkirathu – தமிழோவியம் அன்புடன் வரவேற்கிறது.

Thursday, December 2, 2010

ManMadhan Ambu Songs review

இடம் : recording Theater
கமல் உள்ளே வேகமா வருகிறார்,DSP அதைவிட வேகமா எழுந்திருச்சு நின்னு
DSP :வணக்கம் சார்.

கமல்:ஆங், நமஸ்காரம் தேவிபிரசாத் காரு, பாகுன்னாரா?

DSP :நல்லா இருக்கேன் சார். நீங்க எப்படி இருக்கீங்க.

கமல்:பாகுன்னாமு. மஞ்ச்சு....

DSP :சார், தமிழ்லயே பேசிக்கலாமே.

கமல்:yes, we will. எந்த மாதிரி பாட்டு கேட்டாரு, கேஎஸ் ரவிக்குமார்?

DSP : இன்னும் கேட்கலை சார், நீங்க வர்ற வரைக்கும் காத்திருக்கனும்னார். அதான். நீங்க எப்படி எப்படி சொல்றீங்களோ அப்படியே போட்டிரலாம் சார். ஏன்னா நான் உங்களைப் பார்த்து வளர்ந்தவன்.

கமல்:ஹ்ஹ்ம். ரவி நீங்க Situation சொல்லுங்க.

கேஎஸ்ரவிக்குமார் situation சொல்ல.

DSP : தந்தானானா நே. தாஅனானானா

கமல்: தந்தானானா நே. தாஅனா ந்னு இருந்தா நல்லா இருக்கும். அதுக்கு பதிலா தானானா தானானா வெச்சிக்கலாம். அப்படியே நானே பாட்டும் எழுதி பாடிடரேன், நீங்க ரெண்டு பேரும் வெளியே வெயிட் பண்ணுங்க.

இப்படிதானாயிருக்கும் மன்மதன் அம்பு பாட்டு வாங்கின லட்சணம்.
Same Kamal and Same DSP. இரண்டு பேரும் சேர்ந்து பால் கறக்கப் போன கதை கடைசி வரியில இருக்கு படிச்சுப் பாருங்க.


------------------------000----------------------
பாடல்: தகிடு தத்தோம்
எழுதிப் பாடியது: கமல்

ஒரே தத்துவம்தான் போங்க இந்தப் பாட்டுல. "போனா போகுதுன்னு விட்டின்னா, கேணைன்னு ஆப்பு வெப்பாண்டா, வேணுமின்னா போயி நின்னீன்னா காக்க வெப்பாண்டா", "சாம, பேத, தான தண்டம் நாலும் சேர்ந்து தோத்துப் போகும் போது தகிடு தத்தோம்", "நல்லவன்னு யாரைச் சொல்ல, கெட்டவன்னு யாரைச் சொல்ல, நல்லவனைக் கெட்டவனா மாத்துறவந்தான் கெட்டவன்" இப்படி பாட்டு முழுக்க ஒரே தத்துவம்தான். பாட்டுல ரெண்டாவது சரணத்துல கம்யூனிஸமும் வந்துருது. ஷ்ஷ் ஷ் அப்பா தாங்க முடியல.

Who's the hero…
பாடியது: ஆண்ட்ரியா
எழுதியது: கமல்ஹாசன்

தமிழில் இப்படி ராக் & ரோல் பாட்டு கேட்டு வெகு காலமாச்சுங்க, ஒரு காலத்துல கலக்கோ கலக்குனாங்களே உஷா உதூப் (அவுங்க படத்துல நடிச்சிருக்காங்க) பாடின மாதிரியே இருக்கு. அருமையான குரல், இசை கோர்வையும் அருமை. rock and rollக்கு Pipe மிக முக்கியம், DSPன் கோர்வை பிரமிக்க வெக்குது. அசத்தல் DSP & Andrea கூட்டணி. உஷா உதூப் இந்தப் பாட்டுக்கு உதட்டசைக்க கமலின் ஆட்டத்தை எதிர்பார்க்கனும். ரசிகர்களுக்கு விருந்து தருவாரா கமல்?

பாடல் கவிதை:
எழுதியது: கமல்
கவிதை (பாடியது): த்ரிஷா, கமல்


ஒரு விபச்சாரப் பெண் தன்னோட வாடிக்கையாளரிடம் பேசுவது போல அமைந்திருக்கும் இந்தக் கவிதை(ப்) பாடலில் புரிவது ஆச்சர்யமான விசயம். முதலில் கவிதைச் சொல்லும் த்ரிஷா வாடிக்கையாளர்களிடம் மனசளவுல தள்ளி இருக்கிறது, அவுங்க நடவடிக்களைச் சொல்ல, கவிதைப்போடு வருது. இதுக்கு நடுவுல

"ஓ..நீங்க பக்திமானா ?
ஆ…அதெல்லாம் இல்லீங்க, நான் புத்திமானாங்கிறங்கிறதே கேள்விகுறியா இருக்கு.."

இப்படி தன்னோட செருகலையும் கமல் வெச்சிருப்பது ச்சும்மா ச்சும்மா எல்லா படத்திலேயும் சொல்றது ஒரே அலுப்பாவும், அயர்ச்சியாவும் இருக்கு. கமலும் சொல்லும் கவிதை, ஒரு பெண் கடவுளிடம் தனக்கு வரும் கணவன் எப்படி இருக்கனும் வேண்டி விரும்பி வரம் கேட்கிறா மாதிரி இருக்குங்க. இருவரில் ரஹ்மான் செய்த அதே Bass வெச்சி இதற்கு இசையமைச்சதும் கொஞ்சம் பழைய நெடியும் கூட.
கவிதை வரிகளை ஏற்கனவே பதிவா போட்டாச்சு. படிக்க இங்கே க்ளிக்கவும்
ஒரு நல்ல கவிதை, இல்லே சுமாரான கவிதை, இல்லை கவிதை..கவிதை கவிதை..

பாடல்: நீல வானம்
எழுதிப் பாடியது: கமலஹாசன்




ஒரு பியானோ, ஒரு வயலின், ஒரு கோரஸ், ஒரு கமல், ஒரு கிதார் போதும்னு நினைச்சு பாட்டு எழுதி இசையமைச்சிருக்காங்க. மெட்டில் சரியா உக்காராத வார்த்தைகளும், கமல் பாடிய பழைய பாடல்களும் ஏதோ ஞாபகத்துக்கு வந்துட்டு போகுது. ஹ்ம்ம்.. இதுவும் ஒரு பாட்டு படத்துல இருக்கு.

பாடல்: ஒய்யாலே
பாடியது: முகேஷ், சுசித்ரா
எழுதியது: விவேகா

B&Cயில இந்தப் பாட்டுக்கு ஆட்டம், பாட்டமா விசில் பறக்கும். ஆச்சர்யமான விசயம் DSP ஆர்மோனியத்தை சரியானபடி உபயோக படுத்தியிருப்பது. நல்ல ஒரு குத்துப் பாட்டு, DSPக்கு புடிச்ச முறையில விட்டு பாட்டை வாங்கியிருக்காங்க. இந்தப் பாட்டுல கமலோட செருகல் எதுவுமில்லாததே வித்தியாசமா இருக்கு. DSPன் குத்துகளின் வரிசையில் இந்தப் பாட்டும் இடம் புடிக்கும்.


பாடல்: மன்மதன் அம்பு
பாடியது: DSP
எழுதியது: கமல்

வழக்கமா, இசையமைப்பாளர்கள் பாடுற பாட்டு எப்பவுமே ஹிட்டாகும், வேற மாதிரி சொல்லனும்னா ஹிட் ஆகுற பாடல்களை இசையமைப்பாளர்களே பாடிருவாங்க. இதுவும் விதிவிலக்கில்லாத பாட்டு. வழக்கமான DSP, வழக்கமான beats.. சேம் ஓல்ட் DSP. மேடைகளில் DSP செய்யும் அதே குறும்பும் இதுல அடங்குது. very lively Song.







------------------------000----------------------
படம் ஐரோப்பாவில் எடுக்கப்பட்டதினால கொஞ்சம் வயலின் எல்லாம் அதே பாணிக்கு மாத்தி செஞ்சிருப்பது அருமை. கமல் படங்களில் கமலின் ஆதிக்கமிருக்கும்னு எல்லாருமே தெரியும். இந்தப் படத்தின் பாடல்கள்ல அது ரொம்பவே அதிகமா தெரியவதே அயர்ச்சி.


DSP & கமலஹாசன் என்னும் ரெண்டு புலிங்க சேர்ந்து பூனைப் பால் கறந்த கதைதான் 'மன்மதன் அம்பு' பாடல்கள்.


Rating: 2.5/5

தமிழோவியத்துக்காக எழுதியது - அசல் இங்கே

தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி

  தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை  -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை  காசி  எழுதியது தமிழோவியத்துக்காக  பாஸ்டன் பாலாஜி  க...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நாகேஷ் (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) வாலி (1) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)