”சின்னத்தம்பி” படத்தில், வெளியுலகையே பார்த்திராத கதாநாயகி முதல்முதலாக நாயகனுடன் வெளியே வந்து சுற்றிப்பார்ப்பதுபோல ஒரு காட்சி. இந்தப் பாடலின் கம்போஸிங்கின்போது யாருமே உடனில்லை. ராஜா சார் மட்டும்தான் இருந்தார். நான் Situation சொல்லிமுடித்த அடுத்த நிமிடமே, உடனடியாக தனது ஆர்மோனியத்தில் பாடலின் மெட்டை வாசித்து, ஆர்மோனியத்திலேயே விரல்களால் தாளமும் போட்டுக்கொண்டு, ‘போவோமா ஊர்கோலம்…? என்று Lyric’ஆகவே ஆரம்பித்து’ முழு பாடலையும் Compose செய்து முடித்துவிட்டார். Recordingம் முடிந்தது. பின்னர் நான் பாடலை Picturise பண்ணிமுடித்தேன்.
கதாநாயகி முதன்முதலாக வெளியே வந்து பறவைகளைப் பார்ப்பதோ, சேற்றில் கால்வைப்பதோ… அவர் எனக்குக் கொடுத்த இசைக்கு நான் Shots எடுத்திருந்தேன் அவ்வளவுதான். பாடலைப் பார்த்தார்…!! ‘கதாநாயகி முதல்முதலாக வெளியுலகைப் பார்க்கிறாள்..!! பறவைகளின் ஒலியுடன், Keyboard’ல் துவங்கி, புல்லாங்குழலுடன் பாடலின் Prelude பயணிக்கிறது. படமாக்கிக் கொண்டு சென்றிருந்த பாடலைப் பார்த்துவிட்டு…
“இல்லை.. இவள் முதல்முதலாக வெளியுலகைப் பார்க்கிறாள்.. அதற்கு இந்த Prelude மட்டும் போதாது. இன்னும் கொஞ்சம் Extra’வாக ஏதாவது இருந்தால் நன்றாக இருக்கும்..!! நீ ஒரு 100 அடிக்கு ஏதாவது காட்சிகள் Add பண்றியா..?” என்றார்.
உடனே நான் ப்ரசாத்தில் இருந்து, வாகினி ஸ்டுடியோவிற்குச் சென்று, இந்தப் பாடலின் நிறைய Shots’ஐ Edit பண்ணி ஒரு 80 அடிக்குக் காட்சிகளை எடுத்துக்கொண்டுபோய் அவரிடம் கொடுத்தேன்.
அப்படி நான் கொடுத்த காட்சிகளுக்கு அவர் ஒரு Violin Score எழுதி அமைத்துத்தந்தார். படத்தில், அந்த வயலின் இசை முடிந்து அதன்பின்னர் ’போவோமா ஊர்கோலம்’ பாடலின் Prelude துவங்கும். பாடலின் முன்னர் வரும் அந்த வயலின் இசையுடன் அதைப் பார்த்தவுடன் எனக்கு உடலெல்லாம் சிலிர்த்துவிட்டது.
- இயக்குனர் திரு. பி.வாசு அவர்கள் விஜய் டி.வி.யின் ”இதயம் தொட்ட இசைஞானி” நிகழ்ச்சியில் பகிர்ந்துகொண்டது.
’போவோமா ஊர்கோலம்’ பாடலின் Prelude’ஐயும், Prelude’க்கு முன்வரும் அந்த இசையையும் இதில் கேளுங்கள். நிச்சயம் உங்களுக்கும் உடல் சிலிர்க்கும்.
ஒரு சமூக வலைதளத்துல இந்தப்படத்தை பகிர்ந்து "இது ரொம்ப தப்பு" , பெண் என்பவள் சிகரெட் பிடிப்பது தப்பு, கேவலம்,, அசிங்கம் அப்படின்னு எல்லாம் பேசிட்டு இருந்தாங்க. உண்மைதான், புகைப்பழக்கம் என்பது தப்புதான். ஆனா அதைப்பத்தி அங்கே பேசலை.. பெண் சிகரெட் பிடிப்பதுதான் தப்பு அப்படிங்கிற மாதிரி பேச்சு இருந்துச்சு. பெண்கள் சூழ நிக்கும்போது ஆண்கள் சிகரெட் பிடிக்கிற மாதிரி போஸ்டர் வந்தப்ப இதையே சொல்லியிருக்கலாமே? என்ன மாதிரியான ஆணாதிக்க சமூகம் இது.
ஒவ்வொரு தெரு முக்குலையும் பொட்டி கடை வெச்சி ஆண்கள் பீடி, சிகரெட் குடிக்கலாம், ஆனா பெண்கள் குடிக்கக்கூடாது. பெண்கள் மது குடிச்சாலும் தப்பு. மதுவோ, புகையோ - எந்தப் பழக்கமிருந்தாலும் அந்தப் பெண்ணை ஆண்கள் பார்க்கும் பார்வை இருக்கே.. காமத்துலதான் முடியும்.
திருந்துங்க ஆண்களே.. கெட்ட பழக்கம், தப்புன்னு சொல்லுங்க. சரி. அது என்ன ஆண்களுக்கு மட்டும்தான் சிகரெட் பிடிக்கிறதுன்னு எழுதி வெச்சிருக்கா என்ன? தப்போ, சரியோ பெண்களை சரிசமமா நடத்துங்க..
டைம்பாஸ் விகடன்
விகடனின் டைம்பாஸ் பற்றி சுரேஷ்கண்ணன் எழுதிய பதிவு பிடித்தது. அதுவும் இந்த வரிகள் நெத்தியடி
காந்தியை
நினைவுப்படுத்தும் பொக்கை வாய்ச்சிரிப்புடனும் தலையில் கொம்புடனும்
இருக்கும் விகடன் தாத்தாவின் உருவத்தை ரசிக்காதவர்கள் எவரும் இருக்க
முடியாது. ஆனால் கேலிச்சித்திரங்களில் உருவம் சிறிது சிறிதாக மாறி
விபரீதமான அர்த்தத்தை தருவதைப் போன்று தாத்தாவின் தலையிருக்கும் கொம்பு
நீண்டு 'டைம்பாஸ்' வடிவில் ஒரு சாத்தான் உருவமாகிக் கொண்டிருக்கிறதோ
என்று தோன்றுகிறது.
ராஜாவுமா? அப்படின்னு கேள்வி கேட்க வெச்சது இந்த இசை. 20ம் நூற்றாண்டுல ஸ்பானியர் Antonio Ruiz-Pipo - Danza No1. அப்படியே சுட்டிருக்காரு போல. இணையம் இல்லாததால, அந்தக் காலத்துல தெரியலை.. இன்னுமா தெரியாம இருக்கும்?
மின்சார கனவு
தமிழ்நாட்டுல(சென்னை தமிழ்நாடு இல்லையே, எப்பவுமே மத்த மாவட்டத்தை விட்டு தணிச்சுத்தானே இருக்கு) மின்சார நிறுத்தம் தொடர்பாக துணுக்குப் படம்
உலகம்: மீண்டும் லிபியா, எகிப்து மற்றும் புரட்சி நடந்த நாடுகளில் கலவரம். இதுவரை புரட்சியாளர்களுக்கு உதவியாய் இருந்த அமெரிக்காவை எதிர்த்து நடந்து வருகிறது கலவரம். காரணம், அமெரிக்காவில் முகமது நபி அவர்களை அசிங்கமாக சித்தரித்து வந்த ஒரு குறும்படம்தான் காரணம். அது வெளியிடப்பட்டது அமெரிக்கா என்பதால் அமெரிக்காவை எதிர்க்கிறார்களாம். எனக்கு என்னமோ இது பழைய பகையை மனசுல வெச்சு வெம்பி வெம்பி இருந்த மக்களுக்கு, ஒரு காரணம் கிடைச்சதும் வெடிச்சிட்டாங்க அப்படின்னு நினைக்கிறேன். சிலரோ இல்லை,. ”இது அல்-கொய்தா ஆட்களும், புரட்சியில் தோற்ற மக்களின் ஆதரவாளர்களும்தான் காரணம்” அப்படின்னும் சொல்லிக்கிறாங்க. ஆக மொத்தம் அமெரிக்க தூதுவர்கள் எல்லாம் உசுர கையில புடிச்சிட்டு இருக்காங்க. இது ஆழமா யோசிக்க வேண்டிய விசயம். ஒரு குறும்படத்துக்கு எதிர்க்கிறாங்க, அப்படின்னா மக்களின் உணர்வை என்னவென்று சொல்வது. அதுக்கு அமெரிக்கா எப்படி காரணமாக முடியும்? தூதுவர்களயும், பாதுகாப்பு அதிகாரிகளையும் கொன்னிருக்காங்க. ”தூண்டிவிட்டா எதையும் செய்யும் ஆட்டு மந்தை மக்களா புரட்சி பண்ணினாங்க?” அப்படின்னு நினைக்கிறா மாதிரி வெச்சிட்டாங்க :( ப்ச்ச்
குறும்படத்தைத் தேடாதீங்க. அப்படி ஒரு சுவடே இல்லாம பண்ணிடாங்க. இதை இயக்கியது யார், நடித்தவர்கள் அப்படிங்கிற சுவடுமே இல்லாம செஞ்சிட்டாங்க.
இந்தியா: மீண்டும் ஒரு டீசல் விலையேற்றத்தை மத்திய அரசு அறிவிச்சிருக்காங்க. டீசல் விலை ஏத்துறதுதான் நாட்டின் விலையேத்தத்துக்கு அடிப்படை அப்படின்னு தெரிஞ்சே ஏத்துறாங்கன்னா மத்திய அரசு இதைத்தான் எதிர்பார்க்குதா? இதுல சில்லறை வணிகத்துலயும் அந்நிய முதலீடாம்.சேதி கேட்ட மூணாவது நிமிசம் முக்கு கடை அண்ணாச்சி விலையேத்திட்டாரு, பழசாயிருந்தாலும், சம்பந்தமேயில்லைன்னா ஆட்டோக்காரங்களும் “பெட்ரோல் விலையேறிருச்சு சார்” அப்படின்னு இன்னும் ஒரு ரூ.10 சேர்த்தி கேட்பாங்க, அடுத்து பேருந்து கட்டணம் ஏறும்..
தமிழகம்: கூடங்குளம், இந்த முறை, அல்லது கடைசி முறை அப்படின்னு சொல்லலாம். போராட்டம் வெடிச்சிருக்கு. இரண்டு பக்கத்துலையும் சீற்றம் அதிகமாவே இருக்கு. வழக்கம் போல இணையபுலிகள் ஒரு சாரார் அணுமின் நிலையம் வேணும்னும், வேணாம்னும் அங்கங்கே சண்டை போட்டுக்கிறாங்க. ஆனா, செயல்படுத்த ஆரம்பிச்ச பின்னாடி மத்திய அரசு போயிட்டே இருக்கும். நம்ம ஆட்கள் போராடினா மதிக்க மத்தியில இருக்கிறது என்ன இங்கிலீஷ்காரனா? இந்தியன்தானே. உசுருக்கு இந்தியா எப்ப மதிப்பு குடுத்திருக்கு?
iPhone5 - அறிவிச்சவுடனே, பலத்த எதிர்ப்பு வந்துச்சு. மாத்தாத வடிவமும், புதுசா தொழில்நுட்பம் எதுவுமே இல்லைங்கிறதாலும் எனக்கும் புடிக்கலை. இணைய மக்களிடம் பலத்த ஏமாற்றம். ஆனால், நடந்ததோ வேற..
Pre-orders for the iPhone 5 went live at midnight and, true to form, they went like hotcakes. You may remember that it took 22 hours for the iPhone 4S and about 20 hours for the iPhone 4 to sell out of its pre-order, launch-day stock. The iPhone 5 took just about 60 minutes.
Yep. One hour after pre-orders
went live, Apple.com adjusted shipping expectations from one to two
weeks due to the overwhelming demand
கேட்டதில் பிடித்தது: ஆஸ்திரேலிய தமிழ் வானொலியில் நம்ம கானா பிரபா, ரகுமான் பற்றிய நிகழ்ச்சிக்காக எழுத்தாளர் திரு. சொக்கன் அவர்கள் ரகுமான் கடந்து வந்த 20 ஆண்டுகள் பற்றி அளித்த பேட்டி, கேளுங்க.
பார்த்ததில் பிடித்தது: நெற்றிக்கண் படத்துல வந்த அதே காட்சிகளை Re-Mix பண்ணியிருக்காங்க. புதுசா எதுவுமில்லைன்னாலும், ஆரம்பிச்சது பொண்ணுங்க பக்கம் என்பதால் கொஞ்சமே வித்தியாசம்...
இத்தாலியில்
இருக்கும் Bologna என்ற ஊரில் உள்ள கடைவீதி ஒன்றில்
நடந்துபோய்க்கொண்டிருந்த ஒருவன், கடையில் இருந்து ஒலித்த ஒரு பாடலைக்
கேட்கிறான். கேட்டதும் அவனுக்கு மிகவும் பிடித்துவிடுகிறது. ஆனால் எந்தக்
கடையிலிருந்து பாடல் வந்தது என்று அவனுக
்குத்
தெரியவில்லை. ஒவ்வொரு கடையாக விசாரிக்கிறான். ஒரு வழியாகக் கடையைக்
கண்டுபிடித்து, ”ஐந்து நிமிடங்களுக்கு முன்னால் ஒரு பாடலைப் போட்டீர்களே?
அந்தப் பாடலை மறுபடியும் கேட்கவேண்டும்” என்று சொல்லி தேடித் தேடி
ஒருவழியாகப் பாடலையும் கண்டுபிடிக்கிறான். ‘இது எந்த ஊர் பாடல்?
எங்கிருந்து வந்தது இந்த இசை?’ என்று கடைக்காரரிடம் விசாரிக்கிறான். ‘இது
சென்னையில் இருந்து வந்தது’ என்கிறார் கடைக்காரர். விமானம்
ஏறுகிறான். வந்திறங்குகிறான் சென்னையில். அந்தப் பாடலை உருவாக்கியவரைச்
சந்தித்தே தீருவது’ என்று எண்ணி அவர் வீட்டு வாசலில் தவம் கிடந்து, ஒரு
வழியாய் சந்திக்கிறான். Bologna’வில் வருடா வருடம் தான் நடத்தும் Angelica
Music Festival’க்கு அவரை அழைக்கிறான். அவரும் அவன் வேண்டுகோளை ஏற்று,
Italyல் Concert நடத்தித் தந்தார். ஏதோ ஒரு தேசத்தில் எதற்காகவோ
சுற்றிக்கொண்டிருந்த ஒருவனை அப்படிச் சுண்டி இழுத்து இங்குக் கூட்டி வந்த
அந்தப் பாடல் ‘புத்தம் புது காலை பொன்னிற வேளை”. - ”யூகியுடன் யூகியுங்கள்” நிகழ்ச்சியில் திரு. யூகிசேது கூறியது. நன்றி: FB: இசைஞானி பக்தர்கள் (The Maestro’s Devotees)
என்னோடு சேர்ந்துதான் வெற்றிபெற முடியும் என்ற நிலையில் நீயும் இல்லை. உன்னோடு சேர்ந்துதான் வெற்றிபெற முடியும் என்ற நிலையில் நானும் இல்லை.
என் இலக்கிய வாழ்க்கையின் இரண்டாம் பாகத்தைத் தொடங்கி வைத்தவனே! தூக்கி நிறுத்தியவனே!
உன்னை நினைக்கும் போதெல்லாம் என் மனசின் ஈரமான பக்கங்களே படபடக்கின்றன.
கொட்டையை எறிந்துவிட்டு, பேரீச்சம்பழத்தை மட்டுமே சுவைக்கும்
குழந்தையைப்போல என் இதயத்தில் உன்னைப் பற்றிய இனிப்பான நினைவுகளுக்கு
மட்டுமே இடம் தந்திருக்கிறேன்.
மனைவியின் பிரிவுக்குப் பிறகு அவள்
புடவையைத் தலைக்கு வைத்துப் படுத்திருக்கும் காதலுள்ள கணவனைப் போல
அவ்வப்போது உன் நினைவுகளோடு நான் நித்திரை கொள்கிறேன். --- திரை உலகில் நான் அதிக நேரம் செலவிட்டது உன்னிடம்தான். மனசில் மிச்சமில்லாமல் பேசிச் சிரித்தது உன்னோடுதான். பெண்களைத் தவிர என் கனவில் வரும் ஒரே ஆண் நீதான். நமக்குள் விளைந்த பேதம் ஏதோ நகம் கிழித்த கோடுதான். ஆனால் நான் கண்ணினும் மெல்லியவன்; நகத்தின் கிழிப்பை என் விழிப்பை தாங்காது.
பரணில் கிடக்கும் ஆர்மோனியம் எடுத்து, தூசு தட்டி, வாசிப்பது போல் உன்
தூசுகளைத் துடைத்துவிட்டு உன்னை நான் ஆர்மோனியமாகவே நேசிக்கிறேன். --- நீளமான வருடங்களின் நீண்ட இடைவெளியைப் பிறகு ராஜாஜி ஹாலில் எம்.ஜி.ஆர். இரங்கல் கூட்டத்தில் இருவரும் சந்தித்துக் கொள்கிறோம். என்னை நீ குறுகுறுவென்று பார்க்கிறாய். உன்னை நானும் பார்க்கிறேன். தூண்டிலில் சிக்கிய மீனாய்த் தொண்டையில் ஏதோ தவிக்கிறது. வார்த்தை துடிக்கிறது; வைராக்கியம் தடுக்கிறது; வந்துவிட்டேன். --- அன்று... இரவெல்லாம் உன் ஞாபகக்கொசுக்கள் என்னைத் தூங்கவிடவில்லை. உன்னோடு சேர்ந்த பின்தான் எத்தனை எத்தனை மாற்றங்கள் என்னில். ஒரே வருஷத்தில் சூரியனை என் பக்கம் திருப்பிச் சுள்ளென்று அடிக்க வைத்தாய். இந்த விதைக்குள் இருந்த விருட்சத்தை வெளியே கொண்டு வந்தாய். என் பெயரைக் காற்றுக்குச் சொல்லிக் கொடுத்தாய். நீதான்... அந்த நீதான் ஒரு நாள் எனக்கு வக்கீல் நோட்டீசும் அனுப்பினாய். ஒரு கணம் திகைத்தேன். வெள்ளைத் தாமரையாய் இருந்த மனசு கார்பன் தாளாய்க் கறுத்தது. பிறகு நிதானமாய் சிந்தித்தேன். நீ எனக்குச் செய்த நன்மைகள் மட்டுமே என் நினைவுக்கு வந்தன. சினிமாக் கம்பெனிகளின் முகவரிகளே தெரியாத அந்த வெள்ளை நாட்களில் என்னை வீட்டுக்கு வந்து அழைத்துப் போவாயே! அதை நினைத்தேன். நான் கார் வாங்குகிற காலம் வரை உன் காரில் என்னை என் வீட்டில் இறக்கி விட்டுப் போவாயே! அதை நினைத்தேன்.
உன் வீட்டிலிருந்து உனக்காகக் காய்ச்சி அனுப்பப்படும் ஒரு கோப்பைப் பாலில்
எனக்குப் பாதி கொடுக்காமல் எப்போதும் நீ அருந்தியதில்லையே! அதை
நினைத்தேன். ‘ஆயிரம் தாமரை மொட்டுக்களே’ பாடல் பதிவாகி முடிந்ததும்
என்னைப் பரவசத்தோடு தழுவிக்கொண்டு என் கன்னங்களை வருடிக்கொண்டு, அப்படியே
புகைப்படக்காரரைப் படமெடுக்கச் சொன்னாயே! அதை நினைத்தேன். அந்த நினைவுகளின் இதமான உஷ்ணத்தில் உன் வக்கீல் நோட்டீஸ் எரிந்து போனது. --- எனக்கு எதிராக உன் பெயரில் ஓர் அறிக்கை வருகிறது. இருக்காதே என்று நினைக்கிறேன்.
பிறகு நண்பர்களுக்குச் சொல்லி நகலைக் கைப்பற்றுகிறேன். உன் அறிக்கைதான். ஒரு பெண் வெட்கப்படுவது மாதிரி இருக்கும் உனது கையெழுத்தேதான். படித்தேன். சிரித்தேன். கிழித்தேன். வேறோரு கோணத்தில் நினைத்தேன். உன் எழுத்தில் இந்த உஷ்ணம் இருந்தால் உன் இருதய அடுப்பில் எத்தனை விறகு எரிந்திருக்கும்! உன் உள்ள உலை எத்தனை முறை கொதித்திருக்கும்! காரணமே இல்லையே. இது இருதயத்திற்கு ஆகாதே. --- நண்பர் கமல்ஹாசன் என்னை அழைத்து அவரது புதிய சரித்திரப் படத்துக்கு வசனம் எழுதச் சொல்கிறார். சந்தோஷத்தோடு ‘சரி’ என்கிறேன்.
ஆனால் லோக்சபையின் தீர்மானத்தை ராஜ்யசபா அடித்துவிடுவது மாதிரி நீ தடுத்து விடுகிறாய். இப்படியெல்லாம் அடிக்கடி நான் சிரித்துக்கொள்ள சந்தர்ப்பம் தருகிறாய். --- நான் எப்போதும் நேசிக்கும் இனியவனே! இப்போது சொல்கிறேன். உனது பட்டறையில் எனக்கெதிராய் அம்புகள் மட்டுமே தயாரிக்கப்படுகின்றன. ஆனால் எனது யுத்தத் தொழிற்சாலையில் கவசங்கள் மட்டுமே தயாரிக்க வேண்டும் என்று கட்டளையிட்டிருக்கிறேன்.
ஏனென்றால், என்னை எதிரியாக நீ நினைக்கிறாயே தவிர உன்னை எதிரியாக நான் நினைக்கவில்லை. ---
உன்னை நான் பிரிந்தோ என்னை நீ பிரிந்தோ அல்லது பிரிக்கப்பட்டோ நாம்
தனித்து நின்ற சமயம் உனக்கு வேண்டாதவர்கள் சிலர் என் வீட்டுக்கு
வந்தார்கள்.
உனக்கெதிரான அவர்களின் கூட்டணிக்கு என்னைத் தலைமையேற்க சொன்னார்கள். நான் கொதித்தேன்.
இவ்வளவு உயரத்தில் ஏறியிருக்கும் ஒரு தமிழன் உருண்டு விடக்கூடாது. --- நீயும் நானும் சேர வேண்டுமாம். சில தூய இதயங்கள் சொல்லுகின்றன. உனக்கு ஞாபகமிருக்கிறதா?
‘ஈரமான ரோஜாவே’ எழுதி முடித்துவிட்டு ஆழியாறு அணையின் மீது நடந்து
கொண்டிருந்தோம். திடீரென்று என்னை நீ துரத்தினாய்; நான் ஓடினேன். நீ
துரத்திக்கொண்டேயிருந்தாய்; நான் ஓடிக்கொண்டேயிருந்தேன்.
மழை வந்தது. நின்று விட்டேன். என்னை நீ பிடித்து விட்டாய். அப்போது சேர்ந்து விட்டோம்.
ஏனென்றால் இருவரும் ஒரே திசையில் ஓடிக் கொண்டிருந்தோம். இப்போது முடியுமா?
இருவரும் வேறு வேறு திசையில் அல்லவா ஓடிக்கொண்டிருக்கிறோம்? ---
இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள் புத்தகத்திலிருந்து:
ஆனந்த விகடனில் தாமிரா எழுதிய கதையை இங்கே நினைவு கூர்கிறேன். இவர்களுக்குள் எழும் தவறான புரிதல்களோ, அல்லது திரிக்கப்பட்ட பொய்களோ என்னைப் போன்ற கோடிகணக்கான இசை ரசிகர்களை அல்லவா பாதிக்கிறது. வைரமுத்து தன்னிடம் இருந்ததை கொட்டிவிட்டார்.
ஹ்ம்ம், இதுவும் கடந்து போகும், முத்துவுடன் ராஜா இசையமைக்காமலே போகலாம், ஆனால் யுவனுடன் மதன் கார்க்கி இணைந்து பணியாற்றும் காலம் வரும் என எண்ணி காத்திருக்கிறேன்.
ஆடுகள் பகை கொள்ளும்வேளையில் குட்டிகள் உறவு கொண்டாடுவதை குதூகலத்துடன் பார்த்திருக்கும் ஒரு பட்டியாளன் போல் காத்திருக்கிறேன்.
Thanks to https://www.facebook.com/pages/ILLAYARAJA-KING-OF-MUSIC/271188690679
கொஞ்ச காலம் இந்தத் துறையில் இருந்ததால எனக்கு கொஞ்சம் இதைப் பத்தி தெரிஞ்சி வெச்சிருந்தேன்.
இசையமைப்பாளருங்க எல்லாம் முழுமையான இசை தெரிஞ்சவங்கன்னு சொல்ல முடியாது. அதாவது எல்லா வாத்தியத்துக்கும் Notes எழுதி குடுக்க. கார்த்திக் ராஜாவுக்குதான் தமிழ்ல அதிகமான வாத்தியத்துக்கு குறிப்பு(Notes) எழுதித்தர முடியும். இசையமைப்பாளருங்களே குறிப்ப எழுதிக் குடுத்தாதான் அவுங்க அனுபவிச்ச் உணர்வு கிடைக்கும்.
சில இசையமைப்பாளருங்க Sound Engineering பின்புலத்துல இருந்து வந்தவங்க. உதாரணம் ஆதித்யன், இமான். இவுங்களுக்குத்தான் இந்த மாதிரி காப்பி விளையாட்ட விவரமா பண்ணத்தெரியும். Sound Eng இல்லாட்டி காப்பி அடிக்கிறது 'ஈ அடிச்சான் காப்பி' மாதிரி ஆகிரும். அதுக்கு உதாரணம் தேவா. அப்படியே சுட்டுப் போடுறது. சரி, எப்படி எல்லாம் மெட்டுக்களைச் சுடுவாங்க (என் அறிவுக்கு எட்டிய வரையில)
பழைய பாட்டுக்களை கேட்டு அப்படியே சரணத்தை பல்லவியா போடுறது(Vice Versa). இதுக்கு காரணம் தமிழ் Nativity கெடைக்கும்னு சொல்லிக்கிறது (திருடா திருடி- வண்டார் குழலி)
ஆங்கிலப் பாட்டுக்களை கேட்டு அப்படியே தமிழ்ல சுட்டுப்போடுறது. ஆதாரத்தோட கேட்டா Inspirationனு சொல்லிடறது, இது பக்கா குழந்தைத் தனம்(முகவரி- ஆண்டே நூற்றாண்டே..)
இதுக்கு மேல ஒரு புத்திசாலித்தனம் இருக்கு. அதாவது ஸ்பானிஸ், சீனா, அல்ஜீரியா, இப்படி நம்ம ஊர் மக்கள் கேட்காத பாட்டுக்களை சுட்டுத்தர்றது. இதுக்கு ஒரு தனி கலை வேணும். இது பெரும்பாலும் உதவியாளருங்கத்தான் பண்ணுவாங்க. சீக்கிரம் பண்ணிடலாம், காசும்தான். நான் இதுல செம கில்லாடி, பல பாட்டுக்களை அள்ளித்தந்திருக்கேன். MP3 தேட மட்டும் திறமை வேணும். நாம தான் கூகிளு, யாஹூ, அல்டாவிஸ்டா எல்லாத்துலேயும் U டர்ன் அடிச்சவங்களாச்சே. FYI, altavista is the best of mp3 search.
அடுத்தது உதவியாளருங்ககிட்டே இருந்து வாங்கிக்கிறது/புடிங்கிக்கிறது. இதுதான் நம்ம ஊர்ல ஜாஸ்தி, காரணம் புதுசாவும் இருக்கும், மாட்டிக்கவும் மாட்டோம். என்ன அந்த நாசமா போன மெட்டு போட்டவங்களுக்கு கொஞ்சம் பணம் தரனும், யார்கிட்டேயும் சொல்லிடாம பார்த்துக்கனும். (ஹாரிஸ் உருவான காரணம் இது)
Freelanceஆ தரவங்க கிட்ட காசு குடுத்து வாங்கிக்கிறது. அதாவது ஒரு குப்பன் நல்ல மெட்டு வெச்சிருந்தாருன்னா 5 ஆயிரத்தை குடுத்து வாங்கிக்கிறது. அவ்ளோதான். குப்பனும் பேச முடியாது, copy rights பிரச்சினையுமில்ல. இதுல காசு குடுக்காம ஏமாத்தினா சங்கர்(கணேஸ்) மாதிரி சில சம்பவங்கள் நடக்கும், கலீஜ் கூட ஆவும், குப்பனுக்கு காசு குடுக்கலைன்னா கோவம் வரத்தானே செய்யும்?
இப்போ Sound Eng வெச்சிகிட்டே மெட்டு போடுறது. அதாவது ஒரு பாட்டை எடுத்து ரிவர்ஸுல ஒட விடறது, அப்புறமா ஒட்டு போட்டு ரெடி பண்ணிட வேண்டியது. இது ரொம்ப நல்லா வர மேட்டரு. அதான் Sound Eng சீக்கிரமா இசையமைப்பாளருங்க ஆகுற ரகசியம். (முத்து-ஒருவன் ஒருவன் முதலாளி- சன் டிவி theme music , relatedஆம். பசங்க சொன்னாங்க)
கடைசியா இருக்கிறது ரொம்பச் சுலபம், வேத்து மொழியில ஹிட் ஆன பாட்டுகளோட மெட்டை இங்கே போட்டுக்கிறது. Globalisationல சீக்கிரம் கண்டு புடிச்சிடறாங்க.
இது எல்லாம் நான் அங்கன இருக்கும் போது இருந்துச்சு. Technology has improved very much இல்லீங்களா. உங்களுக்கு இது மாதிரி் ஏதாவது தெரிஞ்சா சொல்லிட்டுப் போங்க.