Showing posts with label பண்ணையம். Show all posts
Showing posts with label பண்ணையம். Show all posts

Wednesday, February 26, 2014

பண்ணையம் Feb - 26- 2014

நான் டென்னிஸ் பார்க்க ஆரம்பித்த காலத்தில் போரிஸ் பெக்கர், ஸ்டீபன் எட்பர்க், இவான் லெண்டில், ஜான் மெக்கென்றோ - என ஆண்கள் நால்வர் மட்டும் அரைஇறுதிக்கு வந்துக்கொண்டிருப்பார்கள். அதில் நான் ஸ்டீவன் எட்பர்க்கின் ரசிகன். ஏனென்று தெரியவில்லை, ஆர்ப்பாட்டமில்லாத உருவம், ஆட்டமாக இருக்கலாம், வித்தியாசமாக வலது கையில் கடிகாரம் அணிந்து கொண்டதற்காக கூட இருக்கலாம்.

பெண்களில் ஸ்டெபி கிராஃபின் கிராஃப் ஏறிக்கொண்டிருந்த காலமது. முதன் முறை பார்த்தவுடனே பற்றிக்கொண்டது இவரைப்பார்த்துதான் (கேப்ரியலா சபாடினி).(அந்த வயசுலேவான்னெல்லாம் கேட்கப்படாது)
ஆகிரதையான உடல்வாகு, தெனாவெட்டான ஆட்டம் இப்படி என்னைக் கவர்ந்தவர். ஸ்டெபி கிராபின் சர்வீஸ்களை சிதறடிப்பார். அதில் ஒரு ஆண்மைத்தனம் இருக்கும். நான் பார்த்த பெரும்பான்மையான ஆட்டத்தில் எல்லாம் சபாடினி தோற்றுதான் போயிருப்பார். ஆனாலும் அவரை பிடிக்கவே செய்தது. கால ஓட்டத்தில் காணாமல் போய்விட்டார். மரியா செரபோவா, விக்டோரியா அசரென்கா என்று கவர்ச்சி மங்கைகள் வந்திருந்தாலும் இன்னும் மனசுல குடியிருக்கிருவர் சபாடினி மட்டும்தான்.


எதையோ தேடப்போக விக்கியில் இன்று அவரின் தகவல்களைப் படிக்க நேர்ந்தது.



------------------------------------------------

படித்ததில் பிடித்தது:

மேற்கு வங்க மாநிலத்தின் முன்னாள் முதல்வர் சித்தார்த்த சங்கர் ரே, அடிக்கடி ஒரு கதை சொல்வார். ''மிகப் பெரிய பணக்காரப் பெண் ஒருத்தி, 'எனக்கு பகவத் கீதையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதற்கு விளக்கம் சொல்லி என்னைப் புரியவைப்பவர்களுக்கு என் சொத்தில் பாதியைத் தருகிறேன்’ என்று அறிவித்தாராம். இதைப் பார்த்ததும் அவரது கணவர் பதறிப்போனாராம். 'சொத்தில் பாதி என்றால் எத்தனை கோடி தெரியுமா? இவ்வளவு பணத்தை யாராவது இழப்பார்களா?’ என்று அவர் கேட்டா ராம். 'எனக்குப் புரிந்துவிட்டது என்று சொன்னால் தானே பணம் போகும். எனக்குத்தான் புரியப் போவது இல்லையே? புரிந்துவிட்டது என்று சொல்லப்போவதும் இல்லையே?’ என்றாராம் அந்தப் பெண்.


பல இணைய விவாதங்கள் கூட இப்படியாகத்தான் இருக்கு, தேவையான விளக்கமெல்லாம் குடுத்தபிறகும் மறுபடியும் ஆரம்பித்திலேயிருந்தே வருவாங்க. அவுங்களை எல்லாம் அப்படியே விட்டுட்டு, நாம பாட்டுக்கு டீ குடிக்கப் போயிடனும்..


------------------------------------------------

வேலையில்லாப்பட்டதாரி: (VIP)

அம்மா என்ற பாடல் கேட்டவுடனே கண்ணில் நீர் கோர்த்துக்கொண்டது, சமீபத்தில் அம்மாவை இழந்த யாரும் இந்தப் பாடகலைக்கேட்டால் கண்ணீர் முட்டத்தான் செய்யும்.

விட்ருவோம், அழுவாச்சி காவியம் நமக்கு செட் ஆவாது.

ஒரு வாரமாக Loopல் ஓடிக்கொண்டிருக்கும் பாட்டு, வேலையில்லாப் பட்டதாரி பாடல். காரணம், செம துள்ளல். ஆரம்ப கால ரகுமானிடமிருக்கும், அந்த ரத்தத்தை சூடாக்குற, ரட்சகன் நாகார்ஜூனுக்கு புடைக்குமே அந்த மாதிரி நரம்பை முறுக்குகிற மாதிரியான இசை. ஆரம்ப இசையே பைப்பில் ஆரம்பித்திருக்கும், இது எம். எஸ்.வி காலத்திலிருந்தே ஆர்ப்பாட்டடத்துக்கான அடியாக அமைந்துவருவது, இலக்கணமான்னு தெரியல. (அதைப்பற்றி இன்னொரு பதிவுல பேசுவோம்)

இந்தப் பாட்டை , யாருமில்லாத தெருவுல ஒரு டீக் கடை பெஞ்சுக்கு முன்னாடி ஆடுவாங்களோ? இல்லை, பொல்லாதவன் "எங்கேயும் எப்போதும்" மாதிரி முழுக்க பல்பா போட்டு எடுப்பாங்களோ? அப்படி இப்படின்னு கற்பனை பண்ணிட்டே இருக்கேன். ஆனாலும் இந்தப் பாடலின் காட்சி வடிவத்திற்கு தனுஷ், மற்றும், இயக்குநர் ரொம்ப மெனக்கெட்டே ஆகனும். இந்த காணொளி அதை எல்லாம் தூள் தூள் பண்ணிடுச்சு. சரியான இடத்துல வெட்டி ஒட்டி, வெறியேத்துறாங்க. கம்னு இந்த வீடியோவையே படத்துல வெச்சிடுங்க, வேல்ராஜ். பட்டாசா இருக்கும்.

என்னதான் இருந்தாலும் ரஜினி ரஜினிதான்!!! அந்த எடிட்டருக்கு ஷொட்டுகள்!!




Monday, June 17, 2013

பண்ணையம் June-17-2013

பல்பு 

முந்தியெல்லாம் படைப்புகளை எழுதி காசு குடுத்து கவரிலோ போஸ்ட் கார்டிலோ எழுதிப் போட்டா 'வருந்துகிறோம்' அப்படின்னு காசு குடுத்து கவர் வாங்கி திருப்பி அனுப்புவாங்க. இப்போதெல்லாம், நாமளும் ஈமெயிலுல அனுப்புறோம். ஆனா,  வருந்துகிறோம் அப்படின்னு கூட பதில் ஈமெயில் வருவது இல்லை. படைப்பு வெளியானாத்தான் தெரிய வருது. இதுதான் புது வகையான பத்திரிக்கை தர்மம் போல.

இப்பவெல்லாம் பல்பு வாங்கினா கூட தெரியறதே இல்லை


==000==

ஓவராத்தான் போயிட்டு இருக்காங்க

ட்வர்ட் ஸ்நோடன் அப்படிங்கிறவந்தான் விக்கிலீக்ஸுக்கு விசயங்களை ததவரு அப்படிங்கிற செய்திதான் போன வாரயிறுதி பரபரப்பு. அவருதான் சொல்லியிருக்காரு NSA(அதாவது லோக்கல் மொழியில சொன்னா அமெரிக்க தேசத்தின் பாதுகாப்பு வாரியம்(?!)) தொலைபேசி, Skype, Facebook, Twitter இன்னும் எது எது எல்லாம் தொலைதொடர்புகளுக்காக உபயோகப்படுத்துறோமோ, அதை எல்லாத்தையும் NSA ஒட்டுக்கேட்பதா அவர் சொன்னாரு. இது பலரை கொந்தளிக்க வெச்சிருக்கு. இதை ட்விட்டர், ஃபேஸ்புக் அப்படின்னு பலரும் எதிர்ப்பு தெரிவிக்க, பலரோ அப்படியெல்லாம் இருக்காதுன்னு சொல்லிட்டு இருக்காங்க.

இது போன வாரம் ஹூஸ்டன் பண்பலையில வந்த  ஒரு நகைச்சுவை இல்லாட்டி நக்கல் அப்படின்னு எடுத்துக்கலாம். போன வாரம்ஒபாமாவின் மகளோட பிறந்தநாள், அவருக்கு என்ன ஒபாமா என்ன பரிசளிச்சிருப்பாரு அப்படின்னு ஒரு கேள்வி கேட்டாங்க அதுக்கு வந்த ஒரு பதில் இது "Justin Bieber's Cell Phone Call records".

==000==

இனிமே தந்தி அடிக்காது


டந்த 160 ஆண்டுகளாக நமக்காக சேவை செய்த "தந்தி"  ஜூலை 15 முதல் தன்னோட சேவையை நிறுத்திக்கொள்ளப் போகிறதா தபால் துறை அறிவிச்சிருக்கு. தொழில்நுட்ப வளர்ச்சியில் அழிந்துப் போகிறது இன்னொரு தொழில் நுட்பம்,. வல்லவன் வாழ்வான்  என்பதுதான் நியதியும் கூட. ஆனாலும் தந்தி பல தலைமுறைகளாக நம்மோக சமூகத்தில் ஒரு அங்கமாகிட்டே வந்திருக்கு. தந்தி வந்தா பயப்படறது , "பயத்துல பல்லெல்லாம் தந்தியடிச்சுது" அப்படின்னு சொல்றது,  ஏன் தினத்தந்தி அப்படிங்கிற ஒரு நாளிதழ் அப்படின்னு நம்மோடவே பயணித்திருக்கிறது தந்தி.இன்றைய செல்போன் யுகத்துல தந்தி என்பது செல்லாக்காசு.

போய்(வா) தந்தி!


==000==


நடுத்தெருவில் 
அடிபட்டு இறந்துகிடந்தது
நாயொன்று
நன்றியில்லாமல் 
கடந்து போயின
மனித மிருகங்கள்..

==000==





சினிமாவுல அடிச்சுக்கொல்றதுக்கு மூக்கு லாரியைத்தான் வில்லன்கள் உபயோகப்படுத்துவாங்க. அதனால சின்ன வயசுல மூக்கு லாரின்னாலே பயம்தான். இப்பவும் அந்த பயம் இருக்கத்தான் செய்யுது.






==000==


இணையம் மூலம்
உலகம் முழுக்க பேசுவோம்
பக்கத்துவீட்டுக்காரன் 
யாரென்று தெரியாமலேயே


 ==000==

ன் முதல் அலைபேசியை 2001ல் வாங்கினேன். அப்ப பேச, நான் மத்தவங்களுக்கு அழைச்சா ரூ.4(Outgoing), வேற யாராவது என் அலைபேசிக்கு அழைச்சா நிமிசத்துக்கு ரூ.2(Incoming). காசை விடுங்க, அதைவிட பெரிய சிக்கல் Charger. 10 நிமிசம் பேசினாவே Charge போயிடும். அதுக்காக  Charger கையிலேயே தூக்கிட்டுப் போவனும். நோக்கியா வந்தபிறகு கொஞ்சம் இது மாறியது. 2013லும் Charger எடுத்துட்டுதான் போக வேண்டியிருக்கு, அப்ப Ericscon இப்ப iPhone, ஒன்னும் வித்தியாசமில்லை.பேச மட்டுமே iPhone வெச்சிருந்தா தாங்குது, ஆனா 4g/LTEன்னு போட்டு விளையாண்டோம், முடிஞ்சோம். 3 மணிநேரத்துக்காவது தாங்குறாப்ல ஃபோன் குடுங்க டிம்மு

Tuesday, May 28, 2013

பண்ணையம் -மே-28-2013

இணைய மொண்ணைகள் :

எழுத்தாளர் ஜெயமோகனின் பதிவு ஒன்று வாசக வட்டத்தில் சிறு சலசலப்பை ஏற்படுத்தியது என்னமோ உண்மைதான். அதற்கான விளக்கத்தையும், சரியாகவே சொல்லியிருக்கிறார். ஆமாம் இணையத்தில் பெரும்பான்மையினர் மொண்ணைகள்தான். நுனிப்புல் மேய்தல் கூட்டம்தான் அதிகம், ஒரு எழுத்தாளனின் உண்மையான கருத்தை படித்து அறிவதற்கு கூட ஆர்வம் காட்டுவதில்லை. இவர்களை எல்லாம அவர் மொண்ணைகள் என்று சொன்னதில் தவறேதுமில்லை. #iSupportJemo [1] [2]

=======================================
IPL-6 

இறுதி ஆட்டத்தில் சென்னையும் மும்பையும் மோதும், அதில் மும்பை வெற்றி பெரும் என்று நான் கொஞ்சம் நாளுக்கு முன்னமேயே கணித்து ட்விட்டரில் சொல்லியிருந்தேன். அதுபோலவே நடந்தது. விசயம் அதிலில்லை, சச்சின் ஆட்டதின் போது கண்ட பேட்டியும், ஒரு குழந்தையைப் போல் அவர் குதூகலித்தையும் மறக்கவே முடியவில்லை, எத்தனாயிரம் ஆட்டங்கள் பார்த்திருப்பார், ஆனாலும் புதிதாக ஆடவருபவனின் உணர்ச்சியைப்போலவே இருந்த அந்த மனிதனின் குணம்தான் இவ்வளவு உயரத்திற்கு கொண்டு சென்றிருக்கிறது.

தோனி - கடைசிவரைக்கும் தன்னாலானதை இறுதி ஆட்டத்தில் செய்தார். கடைசி பந்தில் 29 ஓட்டங்கள் தேவை, இது சாத்தியமே இல்லை என்றாலும், பெளலிங்கில் வைட் போட்டது, ஃபீல்டிங்கை மாற்றியது என மும்பை செய்தது எல்லாம் தோனி என்கிற பயமே காரணம். வெற்றியோ தோல்வியோ, விசில் போடுறதை மட்டும் நிறுத்தப் போவதில்லை நாங்கள். மும்பை அணியினருக்கு வாழ்த்துகள் #விசில் போடேய்

=======================================

போன வாரம் ஒரு கடற்கரைக்குப்  போனோம். அப்ப இந்தப் பெயர்ப்பலகை கண்ல பட்டுச்சு. அப்ப சுட்டது இது.
(சுட்டது-Shoot புகைப்படம் சுட்டேன், சரியா வராது இல்லே?)

=======================================

சினிமாப் படமோ, குறும்படமோ : எதை எடுத்தாலும் அதற்கென்று சில விதிமுறைகள் உண்டு. ஸ்லம்டாக் மில்லியனர் படத்தின் இயக்குனர் டேனி பாய்ல் 15 விதிமுறைகளைச் சொல்லியிருக்கிறார். சினிமாப் பிரியர்கள் படிக்க வேண்டிய உபயோகமான 15 குறிப்புகள், http://www.moviemaker.com/articles-directing/danny-boyle-15-golden-rules-filmmaking/


=======================================

ன்னிக்கு காலையில கனவுல வந்தது, தாவரங்கள் இல்லைன்னா உலகம் பொய்த்துப்போகும் அப்படின்னு என்னமோ ஒரு கனவு, அதுல வந்த ஒரு வார்த்தையை படமா போட்டுப் பார்த்தேன். கனவுல கூட நமக்கு உலகத்தைக் காக்கிற சிந்தனைதான் வருதுன்னா பாருங்களேன்.
=======================================

TMS



தமிழ் சினிமாவுலகுக்கு மாபெரும் இழப்பு. இப்ப எல்லாம் சில பாடல்களைக் கேட்டா சில சம்பவங்கள் நினைவுக்கு வரும்,. சில பாடல்களை கேட்டவுடனே உடனடியா, ரொம்ப நாளா கூப்பிடாத கல்லூரி/பள்ளித் தோழனையோ தோழியையோ கூப்பிட்டு அந்தப் பாட்டை கேட்டதையும், அதுக்கு சம்பந்தமான சம்பவத்தை நினைச்சி சிலாகிச்சி பேசிக்குவோம். அப்படித்தான் ஒரு தலைமுறையே இந்த மாதிரி சம்பவங்களுக்கான ஞாபகத்தை வரவழைக்கக் கூடியவர் TMS. எத்தனாயிரம் பாடல்கள் பாவனைகள்? எம்.ஜி.ஆருக்கு ஒரு மாதிரியும் , சிவாஜிக்கு ஒரு மாதிரியும், முடியுமா? ஒரு தலைமுறையையே தன் குரலால அடிமைப் படுத்தி வெச்சிருந்தவரு. இன்னிக்கு காலையில முருகன் பாட்டுக்களை கேட்டுக்கொண்டிருக்கும் போது இந்தப் பாட்டும் வந்துச்சு. "கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்" பாட்டை இறைஞ்சி பாடியிருக்காரு. நாமளே முருகன் கிட்டே நேரடியா கேட்கிறமாதிரி நமக்குத் தோணும். உங்களுக்கு ஏது ஐயா சாவு. எங்க மனசுல எப்பவுமே இருப்பே ராசா..

Thursday, October 11, 2012

32/365 ராஜாவுமா காப்பியடிச்சார்?

ஒரு சமூக வலைதளத்துல இந்தப்படத்தை பகிர்ந்து "இது ரொம்ப தப்பு" , பெண் என்பவள் சிகரெட் பிடிப்பது தப்பு, கேவலம்,, அசிங்கம் அப்படின்னு எல்லாம் பேசிட்டு இருந்தாங்க.  உண்மைதான், புகைப்பழக்கம் என்பது தப்புதான். ஆனா அதைப்பத்தி அங்கே பேசலை.. பெண் சிகரெட் பிடிப்பதுதான் தப்பு அப்படிங்கிற மாதிரி பேச்சு இருந்துச்சு. பெண்கள் சூழ நிக்கும்போது ஆண்கள் சிகரெட் பிடிக்கிற மாதிரி  போஸ்டர் வந்தப்ப இதையே சொல்லியிருக்கலாமே?  என்ன மாதிரியான ஆணாதிக்க சமூகம் இது.

ஒவ்வொரு தெரு முக்குலையும் பொட்டி கடை வெச்சி ஆண்கள் பீடி, சிகரெட் குடிக்கலாம், ஆனா பெண்கள் குடிக்கக்கூடாது. பெண்கள் மது குடிச்சாலும் தப்பு. மதுவோ, புகையோ - எந்தப் பழக்கமிருந்தாலும் அந்தப் பெண்ணை ஆண்கள் பார்க்கும் பார்வை இருக்கே.. காமத்துலதான் முடியும். 

திருந்துங்க ஆண்களே.. கெட்ட பழக்கம், தப்புன்னு சொல்லுங்க. சரி. அது என்ன ஆண்களுக்கு மட்டும்தான் சிகரெட் பிடிக்கிறதுன்னு எழுதி வெச்சிருக்கா என்ன? தப்போ, சரியோ பெண்களை சரிசமமா நடத்துங்க..




டைம்பாஸ் விகடன்

விகடனின்  டைம்பாஸ் பற்றி சுரேஷ்கண்ணன் எழுதிய  பதிவு  பிடித்தது. அதுவும் இந்த வரிகள் நெத்தியடி


காந்தியை நினைவுப்படுத்தும் பொக்கை வாய்ச்சிரிப்புடனும் தலையில் கொம்புடனும் இருக்கும் விகடன் தாத்தாவின் உருவத்தை ரசிக்காதவர்கள் எவரும் இருக்க முடியாது. ஆனால் கேலிச்சித்திரங்களில் உருவம் சிறிது சிறிதாக மாறி விபரீதமான அர்த்தத்தை தருவதைப் போன்று தாத்தாவின் தலையிருக்கும் கொம்பு நீண்டு 'டைம்பாஸ்' வடிவில் ஒரு சாத்தான் உருவமாகிக் கொண்டிருக்கிறதோ என்று தோன்றுகிறது.

டைம்பாஸ் - விகடனின் 'ஆல்டர் ஈகோ'


 ராஜாவுமா? 

ராஜாவுமா? அப்படின்னு கேள்வி கேட்க வெச்சது இந்த இசை. 20ம் நூற்றாண்டுல ஸ்பானியர்  Antonio Ruiz-Pipo - Danza No1. அப்படியே சுட்டிருக்காரு போல. இணையம் இல்லாததால, அந்தக் காலத்துல தெரியலை.. இன்னுமா தெரியாம இருக்கும்?




மின்சார கனவு
தமிழ்நாட்டுல(சென்னை தமிழ்நாடு இல்லையே, எப்பவுமே மத்த மாவட்டத்தை விட்டு தணிச்சுத்தானே இருக்கு) மின்சார நிறுத்தம் தொடர்பாக துணுக்குப் படம்








31/365 பண்ணையம் அக்-11

இந்தவாரம் வெளியான இன்னொரு டீசர்.. ஆமாங்க, போடா போடி, நீர்ப்பறவை, மற்றும் துப்பாக்கி.. 3 டீசர்கள் வெளிவந்துச்சு. அதுல செல்ஃப் எடுக்காம போன டீசர் இதுதான். மீது ரெண்டு அருமை. அதுவும் துப்பாக்கி டாப்-கிளாஸ் மாஸ் டீசர்


==00oo00==
போன வாரம் Ben & Jerry Icecream தயாரிக்கிற இடத்துக்கு ஒரு சுற்றுலா போயிருந்தோம். அங்கே ஒரு படம் சிரிக்க வெச்சது. நமக்கு சங்கி மங்கி தெரியும், இது என்னமோ புதுசா சங்க்கி மங்க்கின்னு ஒரு Icecreamமாம்



==00oo00==
நான் விரும்பிய என்னுடைய ட்விட்டுகளில் சில
  • கலைஞர் சட்டையை மாத்தினார். இணையம் முழுக்கா அதே பேச்சு. Now you know who the Trend Setter is


  • ''அழகிரி வேறு, ஸ்டாலின் வேறு அல்ல; இருவரும் தி.மு.க-தான்!'' #இந்த வசனம், ஃபெவிக்கால் விளம்பரத்துக்கா தலைவா?

  • நானெல்லாம் எதுவும் கலக்காமலே, தண்ணியை ஒரு ஆஃப் அளவுக்கு அடிக்கிறவன் #குடிக்காதவர்களின் பஞ்ச்


  • அதிமுகவுல சேர்ந்துட்டா, ஒரு முறையாவது.. ஒரு வாரமாவது அமைச்சாராகிடலாம்


  • அரசியல் இன்னும் முழுச்சாக்கடையாகவில்லை. நல்லகண்ணு, வை.கோ மாதிரி இன்னும் நல்ல தலைவர்கள், சிலர் இருக்கிறார்கள்

  • கெளதம் ஒரு படத்தைத்தான் காப்பியடிச்சாரு. ALவிஜய் எல்லாப் படமுமே அப்படித்தான் பண்றாரு. ஆனா மதிக்கவே மாட்டேங்குறாங்க


  •  வெளியாகும் பாதி குறும்படங்களில் சரக்கடிப்பதே முக்கிய நிகழ்வாக காட்டப்படுகிறது. அப்படி மாறிப்போச்சு நம்மோட சமுதாயம்.


  • பனியன் போட்டு, சட்டையை அதுக்கு மேல போட்டு "டக் இன்" பண்ணிட்டுப் போறதுக்கு எதுக்கு 6 பேக்? #முடியாதவன்பேச்சு


  • குவாட்டருக்கும், ட்விட்டருக்கு ஒரு நெருங்கிய சம்பந்தமுண்டு. ரெண்டுலேயும் உள்ளே இறங்கிட்டா உளறல் அதிகமா இருக்கும்


  • சோகமான தருணங்களில் தேநீர் அருந்துவது, கொஞ்சம் கொஞ்சமாய் கவலைகளைப் விழுங்கிக்கொண்டிருப்பதாய் தோன்ற வைக்கிறது.


  • இப்போதெல்லாம், சன் / கே டிவிக்களில் ஒளிபரப்பாகும் படங்களை பார்க்கவைப்பதில் இளையராஜாவே முக்கிய பங்குவகிக்கிறார்.



==00oo00== 

இந்த வாரம் நான்கு படங்களின் பாடல்கள் வெளியாகியிருக்கு

  • ஆதிபகவன் - இயக்கம் - அமீர் / இசை - யுவன் / ஜெயம் ரவி, நீத்து சந்திரா
  • துப்பாக்கி - இயக்கம் - முருகதாஸ் / இசை - ஹாரிஸ்/  விஜய், காஜல் அகர்வால்
  • நீர்ப்பறவை -  இயக்கம் - சீனு ராமசாமி - /இசை- ரகுநந்தன் / விஷ்ணு, சுனைனா
  • போடா போடி - இயக்கம் - விக்னேஷ் சிவா/இசை - தரன்/ STR, வரலட்சுமி

==00oo00==  

ம்மணிதான் தினமும் என்னை வேலையிடத்துக்கு கொண்டு வந்து விடறதும், திரும்ப கூட்டிட்டுப் போறதும்.  வழக்கமா வர்ற கேள்விதான், இன்னிக்கும் வந்துச்சு " வேலை முடிஞ்சதா? வரலாமா?"

ஆனா, வழக்கமாயில்லாம நான் சொன்ன பதில்

தலையை லைட்டா ஆட்டி "I am waiting" அப்படின்னு சொன்னேன் #துப்பாக்கி

காரணம்???



==00oo00==

இந்த வாரம் மாற்றான் வெளியாகுது, பார்ப்போம். அது Stuck On youவா இல்லையான்னு.

Saturday, September 15, 2012

22/365 பண்ணையம் (14-செப்)


உலகம்: மீண்டும் லிபியா, எகிப்து மற்றும் புரட்சி நடந்த  நாடுகளில்  கலவரம். இதுவரை புரட்சியாளர்களுக்கு உதவியாய் இருந்த அமெரிக்காவை எதிர்த்து நடந்து வருகிறது கலவரம். காரணம், அமெரிக்காவில் முகமது நபி அவர்களை அசிங்கமாக சித்தரித்து வந்த ஒரு குறும்படம்தான் காரணம். அது வெளியிடப்பட்டது அமெரிக்கா என்பதால் அமெரிக்காவை எதிர்க்கிறார்களாம். எனக்கு என்னமோ இது பழைய பகையை மனசுல வெச்சு வெம்பி வெம்பி இருந்த மக்களுக்கு, ஒரு காரணம் கிடைச்சதும் வெடிச்சிட்டாங்க அப்படின்னு நினைக்கிறேன். சிலரோ இல்லை,. ”இது அல்-கொய்தா ஆட்களும், புரட்சியில் தோற்ற மக்களின் ஆதரவாளர்களும்தான் காரணம்” அப்படின்னும் சொல்லிக்கிறாங்க. ஆக மொத்தம் அமெரிக்க தூதுவர்கள் எல்லாம் உசுர கையில புடிச்சிட்டு இருக்காங்க. இது ஆழமா யோசிக்க வேண்டிய விசயம். ஒரு குறும்படத்துக்கு எதிர்க்கிறாங்க, அப்படின்னா மக்களின் உணர்வை என்னவென்று சொல்வது. அதுக்கு அமெரிக்கா எப்படி காரணமாக முடியும்? தூதுவர்களயும், பாதுகாப்பு அதிகாரிகளையும் கொன்னிருக்காங்க. ”தூண்டிவிட்டா எதையும் செய்யும் ஆட்டு மந்தை மக்களா புரட்சி பண்ணினாங்க?” அப்படின்னு நினைக்கிறா மாதிரி வெச்சிட்டாங்க :( ப்ச்ச்

குறும்படத்தைத் தேடாதீங்க. அப்படி ஒரு சுவடே இல்லாம பண்ணிடாங்க. இதை இயக்கியது யார், நடித்தவர்கள் அப்படிங்கிற சுவடுமே இல்லாம செஞ்சிட்டாங்க.

=============================================================

இந்தியா: மீண்டும் ஒரு டீசல் விலையேற்றத்தை மத்திய அரசு அறிவிச்சிருக்காங்க. டீசல் விலை ஏத்துறதுதான் நாட்டின் விலையேத்தத்துக்கு அடிப்படை அப்படின்னு தெரிஞ்சே ஏத்துறாங்கன்னா மத்திய அரசு இதைத்தான் எதிர்பார்க்குதா? இதுல சில்லறை வணிகத்துலயும் அந்நிய முதலீடாம்.சேதி கேட்ட மூணாவது நிமிசம் முக்கு கடை அண்ணாச்சி விலையேத்திட்டாரு, பழசாயிருந்தாலும், சம்பந்தமேயில்லைன்னா ஆட்டோக்காரங்களும் “பெட்ரோல் விலையேறிருச்சு சார்” அப்படின்னு இன்னும் ஒரு ரூ.10 சேர்த்தி கேட்பாங்க, அடுத்து பேருந்து கட்டணம் ஏறும்..

***தா, என்னடா நினைச்சிட்டு இருக்கீங்க? 


=============================================================

தமிழகம்: கூடங்குளம், இந்த முறை, அல்லது கடைசி முறை அப்படின்னு சொல்லலாம். போராட்டம் வெடிச்சிருக்கு. இரண்டு பக்கத்துலையும் சீற்றம் அதிகமாவே இருக்கு. வழக்கம் போல இணையபுலிகள் ஒரு சாரார் அணுமின் நிலையம் வேணும்னும், வேணாம்னும் அங்கங்கே சண்டை போட்டுக்கிறாங்க. ஆனா, செயல்படுத்த ஆரம்பிச்ச பின்னாடி மத்திய அரசு போயிட்டே இருக்கும். நம்ம ஆட்கள் போராடினா மதிக்க மத்தியில இருக்கிறது என்ன இங்கிலீஷ்காரனா? இந்தியன்தானே. உசுருக்கு இந்தியா எப்ப மதிப்பு குடுத்திருக்கு?

=============================================================

iPhone5 - அறிவிச்சவுடனே, பலத்த எதிர்ப்பு வந்துச்சு. மாத்தாத வடிவமும், புதுசா தொழில்நுட்பம் எதுவுமே இல்லைங்கிறதாலும் எனக்கும் புடிக்கலை. இணைய மக்களிடம் பலத்த ஏமாற்றம். ஆனால், நடந்ததோ வேற..

Pre-orders for the iPhone 5 went live at midnight and, true to form, they went like hotcakes. You may remember that it took 22 hours for the iPhone 4S and about 20 hours for the iPhone 4 to sell out of its pre-order, launch-day stock. The iPhone 5 took just about 60 minutes. 

Yep. One hour after pre-orders went live, Apple.com adjusted shipping expectations from one to two weeks due to the overwhelming demand

 Thanks http://techcrunch.com


=============================================================

கேட்டதில் பிடித்தது: ஆஸ்திரேலிய தமிழ் வானொலியில்   நம்ம கானா பிரபா, ரகுமான் பற்றிய நிகழ்ச்சிக்காக எழுத்தாளர் திரு. சொக்கன் அவர்கள் ரகுமான் கடந்து வந்த 20 ஆண்டுகள் பற்றி அளித்த பேட்டி, கேளுங்க. 


=============================================================



பார்த்ததில் பிடித்தது: நெற்றிக்கண் படத்துல வந்த அதே காட்சிகளை Re-Mix பண்ணியிருக்காங்க. புதுசா எதுவுமில்லைன்னாலும், ஆரம்பிச்சது  பொண்ணுங்க பக்கம் என்பதால் கொஞ்சமே வித்தியாசம்...

Cafe-Coffee day - குறும்படம் 

Thursday, July 26, 2012

பண்ணையம் 07-25-2012

தாம்பரம் Zion பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்துவந்த மாணவி ஸ்ருதி சேது மாதவன்.  இவரது தந்தை ஒரு ஆட்டோ ஓட்டுனர். 25 ஜூலை 2012 பள்ளிப் பேருந்தில் சென்று கொண்டிருந்த போது  பேருந்தில் இருந்த ஓட்டை வழியே கீழே விழுந்து இறந்து போனார்.  

ற்கனவே இருந்த ஓட்டையின் மேல ஒரு சின்ன பலகையைப் போட்டு வெச்சிருக்காங்க. பேருந்து சாலையிலிருந்த ஒரு பள்ளத்தில் ஏறி இறங்கும்போது பலகை விலகிட, குழந்தை அந்த ஓட்டையின் வழியே தவறி கீழே விழுந்துடுச்சு. இதுல  என்ன கொடுமைன்னா, "இது ஒப்பந்ததாரர் வண்டி,  அதனால எங்களுக்கும் இதுக்கும் சம்பந்தமில்லை" அப்படின்னு சொல்லி தப்பிச்சிக்கிடுச்சு பள்ளி நிர்வாகம்.

இதுக்கும் 6 மாசத்துக்கு முன்னாடிதான் வண்டிக்கு FC நடந்துச்சாம். இந்த நாட்டுல அலட்சியம், லஞ்சம் இதுக எல்லாம் தலைவிரிச்சி ஆடுது.

அதுசரி, 2004-Jul-16ல் நடந்த கும்பகோணம்  பள்ளி தீவிபத்துக்கே இன்னும் விசாரணதானே நடத்திட்டு இருக்கோம்.


=================================================================

"விளையாடி முடிச்சி 6 மணிக்கு வீட்டுக்கு வந்திடனும்" -அப்படின்னு என்னோட தலைமுறையில சொன்னாங்க.

ஆனா நாம நம்ம புள்ளைங்களுக்கு என்ன சொல்றோம்? "விளையாடி முடிச்சி 6 மணிக்கு வீடியோ கேம்ஸை அணைச்சிட்டு படிக்க உட்காந்திடனும்".

எவ்ளோ வித்தியாசம் பாருங்க? ஏன் இப்ப குழந்தைங்க எல்லாம் ஒன்னா சேர்ந்து விளையாடுறது இல்லை. அந்த சூழல் மாறினதுக்கு சாலையில பெருகின போக்குவரத்து நெரிசல்தான் காரணமா? இல்லை திண்ணைகள் ஒழிஞ்சதா?

இது எங்கே போய் முடியுமோ தெரியல

=================================================================



ந்த வாரம் கார்டூனிஸ்ட் பாலாவின் படம் சொல்லும் விசயம்தான் நிறைய யோசிக்க வைக்குது. தி.மு.க, அ.தி.மு.க ரெண்டு கட்சிகளும் நம் மக்களோட குடிப்பழக்கத்துக்கு தூண்டுகோலாகாவே இருக்காங்க. லாட்டரியை  ஒழிச்சா மாதிரி இதையும் ஒரு நாள் ஒழிப்பாங்கன்னு நம்புவோம். இப்பவெல்லாம் "நான் குடிக்கிறதில்லைங்க" அப்படின்னு சொல்ற ஒருத்தரை ஆச்சர்யமாத்தான் பார்க்க வேண்டிய நிலைமைக்கு வந்துட்டோம்.


நன்றி பாலா. அவரது Facebook முகவரி

=================================================================


ட்டிடம் கட்டும்போது சாரம்னு ஒன்னு கட்டுவாங்களே தெரியுங்களா? அதுக்கான இணையான ஆங்கில வார்த்தை என்னான்னு இன்னிக்குத்தான் தெரிஞ்சிக்கிடேன்.



Scaffolding சாரம் என்பதற்கு இணையான ஆங்கிலச் சொல் Scaffolding.
=================================================================
ங்கே பார்த்தாலும் இளையராஜா ரகுமான் சண்டைதான். அவுங்களுக்காகதான் இந்தப் படம்.

=================================================================
பின்குறிப்பு: 
படம் உதவி: விக்கி, கூகிள், இந்தியன் எக்ஸ்பிரஸ், கார்ட்டூனிஸ்ட் பாலா, நன்றி!

தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி

  தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை  -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை  காசி  எழுதியது தமிழோவியத்துக்காக  பாஸ்டன் பாலாஜி  க...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நாகேஷ் (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) வாலி (1) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)