Showing posts with label கற்பனை. Show all posts
Showing posts with label கற்பனை. Show all posts

Tuesday, May 12, 2020

இன்மை தருவது வலியல்ல, பேரிரைச்சல்

சூனியம் என்றொரு சமஸ்கிரதச் சொல்லொன்று உண்டு. அதற்கு இன்மை, மாயை என்று தமிழில் பல பொருள்கள் இருக்கலாம். ஆனால் மனதிற்கோ ஒரே விதமான உணர்வுதான். அதற்கு மொழியில்லை. இளையராஜாவின் How to Name it ல் வரும் வயலின் இசை கமழ்ந்து வரும் பொழுது இதயம் கனக்கும், கனமென்றால் அப்படியொரு கனம் இருக்கும். இதயம் அறுந்து விழுந்துவிடுமோ என்கிற ஐயம் மனதில் எழுமளவுக்கு இதயம் கனக்கும். கண்களில் கண்ணீர் வர மறுக்கும். கண்ணீர் வர மனதில்  ஓரளவுக்கு
சோகமிருந்தால் போதும், கண்ணீர் வர மறுக்கும் சோகத்தின் எல்லையை இன்மை காட்டும். இன்மையின் உணர்வுக்கு அளவு கோல் வைத்து அளக்கும் அளவிற்கு யாருக்கு துணிவும் இல்லை, ஏனெனில் அந்த சோகத்தை ஏற்கும் மனநிலையை யாரும் வேண்டுவதில்லை. இன்மை, அதுவாக நம்முள் முள் வைத்து தைத்துவிட்டுப் போகும், இல்லை, தைத்துக்கொண்டே இருக்கும்.


டு இரவில் எழும் பொழுதே மனதின் வலி உணரலோடு எழுந்தால் பிறகு அந்த வலி நாள் முழுக்க இருக்கும், கண்கள் மூடியிருக்கும், உறங்க கண்கள் இரண்டும் கெஞ்சும். கண்கள் கெஞ்சி பார்க்கும், பிறகு இதயம் கொண்ட வலியை கண்களும் ஏற்கப் பழகிக்கொள்ளும். விழலுக்கு இறைத்த நீரைப்போல  கிஞ்சித்தும் உபயோகமில்லாத கண்களின் கெஞ்சலை சற்றும் பொருட்படுத்தாது இதயம் தன்னிஷ்டப்படி வலியை உணர்ந்துகொண்டே இருக்கும். அந்த வலி இரவு வரை தொடரும், சில நாட்கள் இரவு கடக்கும், மீண்டும் கண்கள் கெஞ்சும், ஆனால் இதயம் மிரட்டி கண்களை அடக்கிவிடும்.

வாழ்க்கையில் நாம் கடக்கும் இரவுகளின் தூரத்தை யாரும் அளந்து விட்டிருப்பதில்லை, தூங்கிக் கடக்கிறோம், அதனால் அதன் நீளம், வண்ணம் அறியாமலே இருப்போம். ஓர் இரவு முழுக்க இதயம் அதன் வலியை உணர்ந்துகொண்டிருக்கும் பொழுது, இமை மூடிய கண்கள் தூங்காமல் இருக்கையில், இரவின் நீளம் தெரியும், இரவு ஏன் அமைதியில்லாமல் இருக்கிறது என எண்ணத் தோன்றும், இரவின் வண்ணம் தெரியும், அதன் இரைச்சல் தெரியும், இரவின் ஓலமும் நமக்குக் கேட்கும்.


மீண்டும் மீண்டும் ஒரே நினைவினில் வாழ்ந்து பழக்கப்பட்ட வாழ்வில், திடீரென அதனை மாற்ற எத்தனிக்கும் தருணங்களில், தலை அறுபட்ட ஆட்டின் கதறல் போன்று ஓர் ஓலம் எழும், அந்த ஓலம், அதீத இரைச்சல் கொண்டது, நம்மைச் சுற்றிலும் பேரமைதி இருக்கும், ஆனால் மனத்திற்கு புயலடித்துக்கொண்டிருக்கும்.  அறிவு இதனையெல்லாம் புரிந்துகொண்டிருக்கும், ஆனால் உணர்ந்து கொண்டிருக்காது.




யார் சொன்னது இன்மை அமைதியானது என்று? அதன் பேரிரைச்சலில், உடலின் அனைத்து உறுப்புகளும் அந்த இரைச்சலை உற்று நோக்கும். இன்மைக்கான காரணத்தை மனம் அறியும், மனம் மட்டுமே அறியும், என்னைச் சுற்றி வரும் குதூகலத்தில் மனம் லயிப்பதில்லை, அனைவரும் சிரிக்கும்பொழுது நானும் சிரித்து வைப்பேன், அதனைப் பார்த்த மனம் சிரிக்கும், அது எக்காளச் சிரிப்பென்று உதடும் அறியும். மீண்டும் மீண்டும் வரும் இரவு வரும், மீண்டும் மீண்டும் வலி வரும், மீண்டும் மீண்டும் கண்கள் கெஞ்சும், இறுதியில் இதயத்தின் வலியே வெல்லும்.. அது இன்மை தரும் வலி..

Thursday, January 23, 2020

WhatsApp DP - சிறுகதை

காலை எழுந்தவுடனே சுந்தரியின் WhatsApp DP யைத் தேடிப் போய் பார்ப்பதே எனக்கு வழக்கமாகிவிட்டது. என் பெயர் தாரணி, நானும் சுந்தரியும் ஒரே அப்பார்ட்மெண்டில், வெவ்வேறு ப்ளாக்கில் வசிப்பவர்கள், ஒரே அலுவலகத்தில் பணி புரிபவர்கள், முப்பதுகளின் மத்தியில் இருப்பவர்கள். இருவருக்கும் திருமணமாகி 2 பையன்கள் உண்டு. அடிக்கடி குடும்ப சகிதமாக சந்தித்துக்கொள்வோம். பையன்கள் எல்லாம் ஒரே வயதாக இருந்த காரணத்தினால், Potluck அடிக்கடி நடக்கும். வாரயிறுதியும், தீபாவளி, பொங்கல் மாதிரியான கொண்டாட்டங்கள் எல்லாம் இப்படியே ஓடும்.



சுந்தரி WhatsApp DPயை  அடிக்கடி மாற்றுவது வழக்கமாக வைத்திருந்தாள். புதுப் புடவை உடுத்தினால் அதைப் படமெடுத்து அதை WhatsApp DPயாக சில நாட்கள் வைத்திருப்பாள், சில நாட்கள் பூக்கள் மட்டும் வைத்திருப்பாள். இப்படியாக இருந்த அவளது WhatsApp DPக்கள், ஒரு மாதத்திற்கு முன்பு வேறு
பரிமாணம் எடுக்க ஆரம்பித்தது. Private Chatல் குறைந்த பட்சம் 30 நிமிடங்ளாக தினமும் எதையாவது Chat செய்து கொள்வோம். அப்படித்தான் WhatsApp DPயை கவனிக்க ஆரம்பித்தேன். திடீரென சோகமாக இருக்கும் குழந்தை படம் வைத்திருப்பாள். அன்று அவள் சோகமாகத்தான் இருப்பாள். ஒரு நாள் சம்பந்தமே இல்லாமல் முள் படம் வைத்திருப்பாள், ஒரு நாள் கல்யாண மோதிர படம் வைத்திருப்பாள். ஆனால் அன்று அவளது கல்யாண நாளாக இருக்காது. ஒரு நாள் புன்னகை மன்னன் ரேவதி படம் வைத்திருந்தாள், ஒரு நாள் காதல் கோட்டை தேவையாணி படம் வைத்திருந்தாள்.


ப்படியாக WhatsApp DPயிலேயே சுவாரஸ்யம் கூட்டிக்கொண்டே சென்றாள். அவள் WhatsApp DP மூலம் எழுதும் கதை மீது பித்துப் பிடித்துப்போனது எனக்கு..நேரடியாக ஒரு நாள் அவளிடம் கேட்டே விட்டேன். அதற்கு சுந்தரியோ "போடீ, நானே வேலை பொழப்பு இல்லாம மாத்திட்டு இருக்கேன், நீ பெருசா கேட்க வந்துட்டே, போய் வேலையைப் பாரு" என்று நகர்ந்து விட்டாள்.  ஆனாலும் எனக்கு என்னமோ ஒரு எண்ணம். அதை குரூர புத்தி என்றும் சொல்லலாம். ஒரு நாள் அந்த குரூர புத்தி தோன்றியது. அவளது மொபைலைத் திருடி WhatsApp படித்தால் என்ன என்று தோன்றியது. அன்று முழுவதும் எனக்கு வேலையே ஓடவில்லை. அவளது Lock Patternஐ கண்டுபிடிப்பது முதல் வேலையாக இருந்தது,  ஒரு நாள் அவளது சீட்டிற்கு பின்னாடி உட்கார்ந்தேன். என்ன chat செய்கிறாள் என்று எட்டி பார்த்துக்கொண்டே வந்தேன். ஒரு முறை Unlock செய்யும் பொழுது கண்டு பிடித்துவிட்டேன். சரி, இப்போ அவளது மொபைல் மட்டும் கிடைத்தால் போதும், அவளது WhatsApp எல்லாம் படித்துவிடலாம். என்னவாகவோ இருக்கட்டும், ஆனால் படம் மாற்றுவது மட்டும் என்னவென்று தெரிந்துகொண்டால் போதும்.

ப்படியாகவே இரு வாரம் சென்றது. சனிக்கிழமை காலை ஒரு நாள் வீட்டிற்கு வந்தாள், எதையோ பேசிக்கொண்டிருந்தவள், அவளது மொபைலை ஹாலிலிருந்த டேபிள் மேல் வைத்துவிட்டு சமையலறைக்கு வந்தாள். இதுதான் சமயம் என்று அவள் சமையல் அறையில் இருக்கையிலேயே வெளிவே வந்து சட்டென்று அவளது மொபைலை ஆஃப் செய்து சோபாவின் அடியில் சொருகி வைத்துவிட்டு பிறகு சமையலறைக்குச் சென்றேன்.மிகவும் படபடப்பாக இருந்தது.  படபடப்பை காட்டிக்கொள்ளாமலே வழக்கம் போல பேச ஆரம்பித்தேன்..
"சரி, நான் கிளம்புறேன். துவைக்கனும், அப்புறமா வீட்டுக்கு வா" என்று சொல்லிவிட்டு ஹாலுக்கு வந்தவள், "என் ஃபோனை பார்த்தியா? " என்று கேட்டாள்.

"நீ ஃபோனை கொண்டு வந்தியா? நான் பார்க்கவே இல்லையே, வீட்டுல வெச்சிட்டு வந்திருப்பே.. எதுக்கும் வீட்டுக்குப் போய் பார்த்துட்டு சொல்லு" என்றேன்.

டபடப்பாக நடந்து போனாள் சுந்தரி. நானும் படபடப்பாக ஃபோனை எடுத்து அவளது On செய்து, pattern lock போட்டு, AeroPlane மோடை ஆன் செய்தேன். WhatsApp போனேன். நேற்று அவள் இதயம் ஹீரா படம் வைத்திருந்தாள். அவளது Chat முழுவதையும் Scroll செய்ய ஆரம்பித்தேன். இதயம் முரளி படம் பார்த்ததும் சட்டென அந்த Chatஐ Open செய்தேன்.எனக்கோ விரல்கள் எல்லாம் நடுங்கிக்கொண்டிருந்தது. வாசலுக்கு வந்து வராண்டாவை பார்த்தேன், அநேகமாக சுந்தரி வீட்டில் ஃபோனைத் தேடிக்கொண்டிருக்கலாம். இரண்டும் நிமிடத்தில் படிக்க முடியுமா எனப் பார்த்தேன். பெரிய பெரிய Chatகளாக இருந்தது. வராண்டாவில்  திரும்பி என் அப்பார்ட்மெண்டுக்கு ஓட்டமும் நடையுமாக வந்து கொண்டிருந்தாள் சுந்தரி. "போச்சு.. போச்சு.. மாட்டிக்கப் போறோம்" என வாசற் கதவைச் சாத்தி பூட்டிவிட்டு வேகமாக சமையலறைக்கு வந்து அந்த Chatஐ scroll செய்து செய்து Photoக்கள் எடுத்தேன்.  30 விநாடிகளில் சுந்தரி வந்துவிடுவாள். அந்த Phone numberஐயும் photo எடுத்தேன்.  காலிங் பெல் அடித்தது. சட்டென அவளது ஃபோனை ஆஃப் செய்து ஹாலின் டிவிக்கு முன்பு வைத்தேன். கதவைத் திறந்தேன்.

'என்னாச்சு கிடைச்சதா?'

"இல்லை, இங்கேதான் கொண்டு வந்தேன், ஞாபகமிருக்கு, இப்போ ஃபோன் பண்ணினால் Switched Off அப்படின்னு வருது"

"அப்படியா இரு" என்று சமையலறைக்கு வந்து எனது ஃபோனை எடுத்து அவளது எண்ணுக்கு அழைத்தேன்,  Switched Off என்று வந்தது. வராதா பின்னே, நாந்தானே ஆஃப் செய்து வைத்தேன்..

'ஆமா எங்கே வெச்சே, ஞாபகமிருக்கா?'

'ஹால் சோஃபா டேபில் மேலதான் வெச்ச ஞாபகம்'

'வெச்சா எங்கே போயிரும்' என்று தேடுவதைப் போல நானும் பாவலா காட்ட ஆரம்பிச்சேன்.

தேடிக்கொண்டே வந்தவள் டிவிக்கு முன்னாடி இருந்த ஃபோனைப் பார்த்ததும் . "அட இங்க பாரு, டிவிக்கு முன்னாடி வெச்சிருக்கேன். பேட்டரி காலி போல, அதான்  Switched Off அப்படின்னு வந்திருக்கு. 10 நிமிசம், கலக்கிருச்சு போ" என்று சொல்லி கிளம்பியவளை வழி அனுப்பி வைத்துவிட்டு வந்து அந்த போட்டோக்களை பார்த்தேன்.

காதல் காதல்  காதல் .. அத்தனை Messageகளிலும் காதல் சொட்ட சொட்ட பேசியிருக்கிறார்கள். அடிப்பாவி சுந்தரி நீயா இப்படி? இத்தனைக் காதலா உனக்குள்ள இருக்கு? காதல்காரிடீ என்று மனசுக்குள் நினைத்தேன். இப்படியெல்லாம் கூட சுந்தரிக்கு பேச வருமா என ஆச்சர்யப்பட்டேன். சரி, யாரு இவளுடைய ஆள் என்று பார்த்தேன். John USA என்று save செய்து வைத்திருந்தாள். ஆனால் +91 என்று ஆரம்பித்த எண் அது. அடிப்பாவி என்னா தில்லாலங்கடிடீ என்று நினைத்து அந்த எண்ணை என் ஃபோனில் அடித்து தேடினேன். "HUSBAND-OFFICE PHONE" என மின்னியது 

Monday, October 30, 2017

பேங்க் மேனேஜரும் நானும்

ஒரு தடவை ஒரு வங்கியில் Personal Loan கேட்கப் போனேன்.  மிகுந்த சிரமப்பட்டு மேலாளரை சந்திக்க முடிந்தது, மேலாளர் என்னிடம் கடனுக்குப் பிணையாக  சொத்து பத்திரம் வேண்டும், என்னோட சம்பள சான்றிதழ்  வேண்டும், என் வீட்டுக்காரம்மா கையெழுத்து வேண்டும்,  அப்புறம் இருவரின் கியாரண்டி கையெழுத்து வேண்டும் என்று ஏகப்பட்ட வேண்டும்கள், அனைத்தையும் அளித்து அப்படி இப்படியாக பத்து நாட்களில் கடன் வந்து சேர்ந்தது. 

Image result for bank clip art


கடன் வாங்கிய தேதியிலிருந்து சரியாக வட்டியும் முதலுமாக கட்டிக் கொண்டே வந்தேன், இடையே ஒரு சேமிப்பு கணக்கையும் ஒன்றைத் துவக்கி சிறிய பணத்தை மாதா மாதம் சேர்க்க ஆரம்பித்தேன். கடன் சரியாக 3 வருடத்தில் முடிந்தது, கடன் கட்டி முடித்த சான்றிதழ் வாங்க வங்கிக்கு வரச் சொன்னார் மேலாளர்.


அன்று மேலாளரைச் சந்திக்க சிரமம் ஏதுமில்லை, வங்கியின் முழு வருட கணக்கு இந்த மாதம் இறுதியில் வருகிறது, ஏதாவது ஒரு பெரிய 
தொகையை எங்க வங்கியில் வைப்புத் தொகையாக போட்டால் 
உதவியாக இருக்கும் என்று நேரடியாகவே கேட்டார் மேலாளர்.

எனக்கும் இது தானே சந்தர்ப்பம், உடனே நானும் அவரிடம் 
"ஓ, தாரளமாக டெபாசிட் பண்ணுறேன். ஆனால் அதுக்கு  நீங்க உங்களோட அல்லது உங்க பாங்க்கோட சொத்துப் 
பத்திரம், உங்க சம்பள சர்டிபிகேட், உங்க வீட்டுக்காரம்மா  கையெழுத்து, அப்புறம் உங்களை விட பெரிய ஆபீசர்  ரெண்டுபேரோட கியாரண்டி கையெழுத்து எல்லாம் வேணும், இதெல்லாம் கொடுத்தா நான் உங்க பாங்க்கில டெபாசிட் போடறேன்" என்றேன்.

அவர் கேட்டதைத்தான் கேட்டேன், அதற்கு ஏன் என்னை முறைத்தார் என்று தெரியவில்லை.



நாங்க கேட்டால் மட்டும் கடன், 

நீங்க கேட்டா டெபாசிட்டா ??? என்னங்க..?? 
நம்பிக்கை, நாணயமுங்குறது 
ரெண்டு பக்கமும் இருக்கணுமில்லீங்களா...??? 

இந்த நாட்டில் அவருக்கு ஒரு நியாயம், எனக்கொரு நியாயமா?


Img Courtesy http://clipartview.com

Thursday, September 22, 2011

சோனா - SPB சரண்- நடந்தது என்ன? ரிப்போர்ட்

சரண் மற்றும் சோனா விவகாரம் பற்றிக்கொண்டு எரிகிறது, செய்திகளில். பல தளங்களில் சோனாவிற்கு ஏக வரவேற்பு.

’அந்தப் பொண்ணு பாவம்யா’,’ ‘கவர்ச்சி நடிகைன்னா கையப்புடிச்சி இழுத்துருவானுங்களே. வில்லன் நடிகர்களை வில்லனாய் பார்க்கிற சமூகம் ஆச்சே’, ‘அப்பன் பேரை கெடுக்க வந்த புள்ளைய்யா இது’ இப்படி.
 

சரி, விசயத்துக்கு வருவோம்...
வெங்கட் பிரபு கோவா படம் ஆரம்பித்த சமயம். மள மளவென படங்கள் ஆரம்பித்துக்கொண்டிருந்தார் சோனா. “எங்கேயிருந்துடா மாப்ளே இவ்ளோ பணம் கிடைச்சது.ஹ்ம்ம்ம்,, எல்லாம் ‘அப்படித்தாண்டா’” இப்படி சொல்லி பொருமிக்கொண்டது பொதுசாம். ஒரு படம் கூட முன்னேறவே இல்லை. சூட்டோடு சூடாக வெங்கட்பிரபுவுக்கு(இனி பிரபு) ஒரு சிறியளவில் பணம் கொடுத்து அடுத்தப்படத்திற்கு ஒப்பந்தம் செய்தார் சோனா(தளங்களில் வருவது போல் 75 லட்சம் அல்ல) எந்த விதமான ஒப்பந்தங்களும் போடப்படவில்லை. இதெல்லாம் நம்பிக்கையின் பேரில் திரையுலகில் நடப்பதுதான். மங்காத்தாவுக்கு ஆரம்பிப்பதற்கு முன்னே படம் ஆரம்பிக்கலாமா என பிரபு சோனாவிடம் வினவ, பணமில்லை அடுத்த முறை பார்த்துக்கொள்ளலாம் என சொன்னாராம் சோனா.


ரண், பிரபு பழக்கம் ஊரறிந்ததுதானே. சிறுவர்கள் முதல் இந்நாள் வரை தொடரும் பந்தம், தனிப்பட்ட முறையில அல்லாது தகப்பனார் இருவரும் “வாடா போடா” என அழைத்துக்கொள்ளுமளவிற்கு நெருக்கம். அப்படியே தொடர்ந்தது சரண்-பிரபு. சரண்/SPB தயாரிக்க, சமுத்திரக்கனி இயக்க், பிரபு நடிக்க வந்த படம் உன்னைச் சரணடைந்தேன் மிகப்பெரிய தோல்வி. அதறகு பரிகாரமாக சென்னை 600028, அதே சரண் தயாரிக்க பிரபு இயக்க(குடும்பப்படம் என சொல்லிக்கொண்டார்கள் படப்பிடிப்புத்தளங்களில்), படம் மிகப்பெரிய வெற்றி. இதனிடையில் சரண் தயாரித்த சில படங்கள் பெரும் தோல்வி.

அதே சமயம் ஒரு கிசுகிசுவிலும் சிக்கிக்கொள்ளாதவர் சரண். அப்பா பேரை காப்பாற்றிக்கொள்ள அரும்பாடு பட்டவர், பணம்/பட விவகாரங்களிலிருந்து மட்டும் அவரால் தப்பிக்கமுடியவில்லை(நேரம் சரியில்லை)
விவரப் பட்டியல் 
  • 2003 உன்னைச்சரணடைந்தேன் - தோல்வி
  • 2005 மழை - தோல்வி- பெரும் பணம் நஷ்டம்
  • 2007 சென்னை 600028 -வெற்றி
  • 2008 குங்கும பூவும் கொஞ்சு புறாவும் - தோல்வி- பொருள் நஷ்டம்
  • 2009 நாணயம் - படத்திற்கு நல்ல பெயர் ஆனாலும் தோல்வி- நஷ்டம்
  • 2011 ஆரண்ய காண்டம் - இணையளவில்/வாயளவில் வெற்றி- பெரும் நஷ்டம்- தன்னுடைய கனவாக நினைத்த Kodhandapani studiosஐ விற்றே படத்தை வெளியிட்டார்கள். மீளமுடியாத கடன்.

ங்காத்தாவின் பெரும் வெற்றிக்குப்பிறகு, சரணுக்காக படம் செய்வதென முடிவு செய்தார் பிரபு (Friend Indeed). வழக்கம் போல், இந்த முறையும் சோனாவிடம் ஒரு வார்த்தை கேட்கலாமென பிரபு நினைத்து அழைத்தார். சோனா இந்த முறை படம் செய்யலாமென சொல்ல பிரபுவுக்கு குழப்பம். காரணம், விசாரித்த வரையில் சோனாவிடம் பணமில்லை என்றே சொன்னார்கள். அதுவுமில்லாமல் பிரபுவின் அடுத்தப் படம் பெரிய பட்ஜெட் படம். இதற்கான பணத்தை சரணால் ஏற்பாடு செய்ய முடியும்,(இன்னும் பல சொத்துக்கள் கைவசம் இருப்பதால்), சோனாவிடம் பணமில்லை என்பதை அறிந்த பிரபு,வைபவ் வீட்டிற்கு, சோனாவையும், சரணையும், மற்றும் தன்னுடைய அணி (மகத், வைபவ், பிரேம்ஜி இன்னும் வெகு சிலர், அதில் ஒரு காவல்துறை அதிகாரியும் அடக்கம்) என அனைவரையும் அழைத்தார் . பணத்தை வட்டியுடன் திருப்பி தந்துவிடலாம் என பிரபு நினைக்க சோனா அங்கே வந்தார்.

பிரபு அணி தண்ணிவண்டி அணி என எல்லாருக்கு தெரிந்த விசயம்தான். சோனாவும் மதுக்கும்பலில் கலந்து கொள்ள பேச்சு பேச்சாகவே இருந்தது. சரண் இப்போது குடிப்பதில்லை என பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. 3 ரவுண்டேலேயே “டேய் பிரபு , பேசி முடிச்சிடுடா” என சரண் பிரபுவிடம் சொல்ல, எல்லார் முன்னிலையிலேயும் சோனா குடுத்த பணத்திற்கு 1.5% வட்டியும் காசோலை அளிக்கப்பட்டது. பணத்தைப் பெற்றுக்கொண்ட சோனா அத்துடனே கிளம்பிவிட்டார்.
சோனா போகும்வழியிலேயே பிரபுவை அழைத்து “என்னை ஏமாற்றிவிட்டீங்க, படம் பண்றதுதான் பேச்சு. ஏன் மாறுனீங்க” என கேட்க பிரபு “அதான் எல்லாம் முடிஞ்சிருச்சே. ஏன் மறுபடியும் ஆரம்பிக்கிறீங்க” என கேட்டுள்ளார். இல்லை, படம் பண்ணித்தாங்க, இல்லாட்டா பிரச்சினை பண்ணுவேன் எனச் சொல்ல, பிரபு “பேப்பர்ல ஒன்னுமில்லை, வெறுங்கையில் முழம் போட முடியாது, படம் பாதியில நின்னுச்சுன்னா என் பேர் கெட்டுப்போயிரும், நீங்க சங்கத்துல சொல்லிக்குங்க” என கோபமாய் பேசி வைத்துவிட்டார் பிரபு. இதுதான் நடந்தது.

  டுத்த நாள் காலையில் சோனா புகார் குடுக்கிறார், என்னவென்று “சரண் தன்னிடம் தப்பாக நடக்க முயற்சித்தார்” என .. காவல்துறையினருக்கு தங்களுடைய துறையிலிருந்தே உண்மை தெரியவர மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சரணோ, எதிர் புகார் அளிக்கப்போகிறார் என அறிந்த சோனா, நெஞ்சு வலியென மருத்துவமனையில் போய் அனுமதி வாங்கிக்கொண்டார். இது எல்லோரும் அறிந்த விசயம். பெண் எது சொன்னாலும் அம்பலம் ஏறும் என இருக்கும் சமுதாயத்தில், சில லட்சங்களை விட்டெறிந்து சோனாவின் வாயைடைத்திருக்கிறார் SPB. இனி, சோனா சில காலங்கள் அமைதியாக இருப்பார்.

தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி

  தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை  -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை  காசி  எழுதியது தமிழோவியத்துக்காக  பாஸ்டன் பாலாஜி  க...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நாகேஷ் (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) வாலி (1) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)