Showing posts with label கிராமம். Show all posts
Showing posts with label கிராமம். Show all posts

Wednesday, January 13, 2016

சல்லிக்கட்டு ஒரு சப்பைக்கட்டு

நாங்கள் க்ரிக்கெட், இறகுப் பந்து என்று விளையாடிக் கொண்டிருக்கையில் "விளையாட்டுன்னா அது  கபடி மாதிரி வீரமா இருக்கனும்டா, அதை விட்டுட்டு இது எல்லாம் விளையாட்டா?" என்று சொல்லுவான் என் நண்பன் செந்தில். இது கொங்கு வட்டாரம் என்பதால் கபடியே வீரமான விளையாட்டாக சொல்லிக்கொண்டான். இதே மதுரைப் பக்கமாக இருந்தால் சல்லிக்கட்டு என்று சொல்லியிருப்பானாக இருக்கும்.

சல்லிக்கட்டு, இன்று பலவாறான பரபரப்புகளை பரப்பிக்கொண்டிருக்கிறது இணையத்தில். இது தான் தமிழன் வீரமென்றும், பண்டைய தமிழர்களுக்கான விளையாட்டு என்று சொல்லப்படுகிறது. அப்படியா? முதல்வன் படத்தில் சம்பந்தமேயில்லாமல் "எங்க ஜாதி ஆளை அடிச்சி போயிருவானா?" என்று திடீரெனக் கூவும் போக்குவரத்து ஊழியர் மாதிரி , ஒரு சாதிக்காரர்கள் இது எங்கள் விளையாட்டு இதில் அரசாங்கம் தலையிடக்கூடாது என்று போராட்டம் வேறு. அப்ப மத்த சாதிக்காரனுக்கு அது வீரமில்லையா? இதில் மாடுகளைக் காப்பாற்ற வழக்குகள் வேறு. அடப்பாவிகளா, மாட்டு மேல பரிதாபப் பட்டுதான் வேணாம்ங்கிறீங்களா? மனுசனுக்கு அடிபடுமே அதைப் பத்தி கவலைப் படலையா? மாடு முட்டி சாவறானே அவனுக்கு இழப்பீடு என்ன கிடைத்துவிடும்? எந்த காப்பீடு திட்டமாவது இதற்காக இருக்கா? இருக்காது. ஏனெனில் இதற்கெல்லாம் காப்பீடு கிடைக்காது. அடிபடுறானே, அவனை நம்பியிருக்கும் குடும்பத்தினருக்கு என்ன பதில் சொல்வீர்கள்? உங்க ஒரு நாள் கூத்துக்கு செத்துப்போறவனுக்கும், கால், கை போறவனுக்கும் நீங்க என்ன செஞ்சிருக்கீங்க? மாட்டை கொடுமை படுத்துகிறார்கள் என்று போராடும் மக்களை விட்டுவிடுவோம். அவர்களுக்கு மாட்டுக்கறி விற்கும் கடைகளுக்கான முகவரி தெரியாமல் இருந்திருக்கும். வீரம் வீரம் அப்படின்னு சொல்லிட்டு செத்துப்போறவனுக்காக யார் போராடப்போறாங்க? விவேக் தெளிவாகவே ஒரு படத்தில் சல்லிக்கட்டை எதிர்த்து பேசியிருப்பார். மனுசன் தெரிஞ்சு தான் போராடுறான், அப்ப என்ன வேண்டுமென்றாலும் ஆகட்டும் என்பது எல்லாம் முட்டாள்தனத்தின் வெளிப்பாடு.

வீரமென்றால் அடுத்த வருடம் காளைகளை விட்டுவிட்டு சிங்கம், புலி போன்ற விலங்குகளை வீரம் என்ற பெயரில் அடக்கிக்கொள்ளுங்கள்.  மதுரை வட்டாரங்களைத் தவிர்த்து வேறு எங்கும் நடைபெறாத இந்த விளையாட்டை தமிழர்களின் பண்பாடு என்று பொதுமைப் படுத்தாதீர்கள்.

Saturday, October 11, 2014

நாலாங்கிழமையும் ஒருக்காமலையும்

இன்று புரட்டாசி நாலாங்கிழமை


ஒருக்காமலை

ருக்கல் மாமலை, இதுதான் இந்த மலையோட உண்மையான பேராம்.

ன்னுடைய குழந்தைப்பருவம் முதல், பள்ளிக்கூடம் முடிக்கிற வரை, இந்த மலைக்கு எனக்கும் ஒரு பெரிய பந்தம் இருந்தது. என் அம்மா பிறந்த இடம் இந்த மலையின் அடிவாரத்தில் இருக்கிறது. வீட்டிலிருந்து ஒரு ஃபர்லாங் தூரம்தான் மலை. ஆடு மேய்க்க, இலை, தழை பறிக்க, சுனை நீர் எடுக்க, கோவில் என பலதுக்கும் இந்த மலை வாழ்வின் அங்கமாகவே இருந்தது வந்தது. மலையின் உச்சியில் இருப்பது ஒரு பெரிய கல், உண்மையாகச் சொல்லப் போனால், இரண்டு பாறைகள் இருக்கின்றன. ஏன் ஒரு ஒருக்கல்லை மட்டும் சொல்றாங்கன்னு தெரியல. பெரிய கல்லின், அடியில்,20 அடி தூரம் ஒரு சாளரம் போல இருக்கும். அதில் அந்தக் காலத்திலேயே கோவில் மாதிரி அமைச்சிருக்காங்க. இப்ப வேற மாதிரி கட்டிட்டாங்க, வியாபார மயமான பின்னாடி, அதாவது அரசின் கவனத்துக்கு வந்து, சாலை அமைத்து, பேருந்து வசதி செய்து, மின்சாரம், தண்ணீர் வசதி அமைத்தப் பின். என்னுடைய பள்ளிக்காலத்தில் எந்த வசதியுமில்லை, மலையேறித்தான் போயாகனும். கல்லின் இடுக்குகளில், அதாவது பாளி(லி) என்று சொல்லும் இடங்களில்தான் தண்ணீர் எடுக்க வேண்டும். மழை வந்து தேங்கிய நீர்தான் அது. பந்தமும், விளக்குகளும்தான் வெளிச்சத்திற்கு. பாலித்தண்ணீர் அப்படிங்கிறதினாலதான் அங்கே சமைக்கும் பொங்கலுக்கும், பருப்புக்கும், ரசத்திற்கும் அவ்வளவு ருசியிருக்கும். பல நாடுகளிலும் அந்த சுவை கிடக்கவில்லை.

புரட்டாசி விரதம், எல்லாருக்கும் தெரிவது பெருமாளுக்காக விரதம் இருப்பது. எங்க ஊர்ப்பக்கத்தில் இந்த வழக்கம் வேற, முதலாங்கிழமை முதல் நாலாங்கிழமை வரை அசைவம் கிடையாது. முதலாங்கிழமை என்பது புரட்டாசி மாதத்தில் வரும் முதல் சனிக்கிழமை. புரட்டாசி என்பது விவசாயத்திற்கு சிறப்பான மாதம் , இந்த மாதம்தான்  பெரும் மழை பெய்யும், அடை மழை என்பது சாதாரணமாக இருக்கும், பள்ளத்தில் எல்லாம் தண்ணீர் ஓடும், பள்ளம் என்பது வண்டித்தடம், மாட்டு வண்டி போய் வரும் தடம், இந்த பள்ளத்தில்தான் மலையிருந்து வரும் நீர் பெருக்கெடுத்து மழைக்காலங்களில் ஓடும், தண்ணீர் ஓடாத நாட்களில் வண்டி ஓட்ட பயன்படுத்திக்கொள்வார்கள்.

ப்பாவின் தொழிலோ வெளியூர்களில் இருக்கும், தோட்டத்திலிருந்து அதிக தூரத்தில் இருக்காது. இன்று காரில் சென்றால் 10-15 நிமிடங்களில் தோட்டத்தை அடைந்துவிடுவோம். சாலை வசதி இன்று இருக்கிறது. அன்றைய நிலைமையோ வேறு. சங்ககிரி வந்து S4 பிடித்து, கீழ்க்கடையில் இறங்கி, காட்டு வழிப்பயணம், மாரியாயி கோயில் கடந்து, இரண்டு மூன்று உறவினர்கள் வீடுகள் கடந்து, ஒன்றிரண்டு வார்த்தைகளாவது பேசிவிட்டு,
கோட்டாங்கல் கரடு வழியே தோட்டத்தை வந்து சேர வேண்டும். அந்த வழிப்பயணமே ஒரு அலாதி இன்பமாக இருக்கும், அதுவும் நடைப்பயணம் வேறு,  வழியெங்கும் தண்ணீராய் ஓடும். வழக்கமாக வரும் வழியில் தண்ணீராய் இருக்க, தண்ணீரைத் தாண்டி, தாண்டி வளைந்து, நெளிந்து வந்து சேருவோம். பெரும்பாலும் வெள்ளிக்கிழமை பள்ளி முடிந்தவுடனே, கிளம்பி சாயங்காலமே வந்து சேர்ந்துவிடுவதாகத்தான் இருக்கும். வந்தடவுடனே, கிணற்றில் குதிப்பதுதான் எனக்கு முதல் வேளையாய் இருக்கும். புரட்டாசி அடை மழை காரணமாக கிணற்றில் நீர் அதிகமாக இருக்கும். மேலேயிருந்து குதிப்பதுதான் என்னுடைய மிகப்பெரிய சவாலே. அதற்காகவே இந்த நாலாங்கிழமைக்காக காத்திருப்பேன்.

னிக்கிழமை காலையில் அம்மாயி, அம்மா, அத்தை எல்லாருமே பொங்கல் வைக்கத் தயாராகிவிடுவார்கள், காலை 6 மணிக்கெல்லாம் அப்பிச்சி, சொசைட்டியில் பாலை ஊற்றிவிட்டு வந்துவிடுவார். கிணற்றின் அருகே இருக்கும்  கொய்யா மரத்தின் ஓரத்தில்தான் பொங்கல், சமையல் வைப்பார்கள். அந்த இடத்தைச் சுத்தம் செய்வதை அம்மாயி பார்த்துக்கொள்வார்கள். எனக்கும் தாத்தாவிற்குமான வேலை கொலுமிச்சை  காய்களை பறிப்பதுதான், கொஞ்சம் கடிடமான வேலையும் கூட, காரணம், சரியாக கால் அடி நீளம் வரை இருக்கும் அதன் முட்கள். காய்களைப் பறித்து ஒரு மூட்டையில் கட்டிக் கொள்வார் அப்பிச்சி. நான் கிணற்றில் குதித்து கும்மாளமிட்டுக்கொண்டிருப்பேன். பிறகு அவரும் குளித்து முடித்துக் கிளம்பி, ஒருக்கா மலை ஏறத் தொடங்குவோம். ஆவாரம்பாளையத்திலிருந்து ஒரு
தடம் வரும்,அங்கேயிருந்து படி ஆரம்பிக்கும், அதுதான் ஒரு மலையடிவாரம். இன்னொரு அடிவாரம் தம்பி மாமா வீட்டிலிருந்து சற்று தள்ளியிருக்கும், அந்தப் படியில் ஏறினாலும் அடிவாரத்திலிருந்து வரும் வழியில் சேர்ந்துவிடும், படியென்பது 10-20 படிகள்தான், பிறகு எல்லாம் மண் பாதைதான். எங்களுக்கோ இந்த இருவழிகளுமே சற்று தூரம், அதனால் மலையினூடே ஏற ஆரம்பித்துவிடுவோம், வழியெல்லாம் இருக்காது,  குறுக்கில் சென்றால் சீக்கிரம் கோயில் சேர்ந்துவிடலாம்.

லையில்,  பாதிவழியில் சில கடைக்காரகள் கடை விரித்திருப்பார்கள். 3ம் கிழமையும், 4ங்கிழமை மட்டுமே வரும் வியாபாரிகள் அவர்கள், சங்ககிரி, கொங்கணாபுரத்திலிருந்து வரும் சிறு வியாபாரிகள் அவர்கள். கனமாக மழைக்காகிதம் (Plastic) சாக்குகளை விரித்து வியாபாரம் செய்வார்கள். கற்பூரம், சாமிக்குப்பூ, தேங்காய்,  பழம், ஊதுவர்த்தி, சில மிட்டாய்கள், முறுக்குகள், என்று ஒரு மூட்டையில் கட்டிவந்து பிறகு வியாபாரம் செய்பவர்கள். அவர்கள்தான் அப்பிச்சியின் குறியே இவர்கள்தான். இவர்களிடம் அப்பிச்சி கொண்டு சென்ற கொலுமிச்சை காய்களை விற்றுவிடுவார், எனக்குத் தெரிந்து அவர் அவ்வளவு பெரிய வியாபாரியெல்லாம் இல்லை. இருவரிடம் விலை கேட்பார், யார் அதிகம் கேட்கிறார்களோ அவரிடம் ரூபாய் ஒன்றோ இரண்டோ வைத்து விற்றுவிடுவார். கொலுமிச்சை புளிப்பு அதிகம் கொண்ட, எலுமிச்சைப் பழம் போல உருவத்தில்  பெரிய அளவில் இருக்கும், ஆனால் பச்சையாகத்தான் இருக்கும், பழுத்து நான் பார்த்ததேயில்லை. இதைத் தின்றால் தண்ணீர் தாகம் எடுக்காது, மலையில் நடப்பவர்களுக்கு இது உகந்தது, தண்ணீர் அதிகம் குடிக்கத் தேவையிருக்காது. மலையில் ஆங்காங்கே சுனை நீர் வேறு இருக்கும். ஆனாலும் இந்தக் காயை வாங்குபவர்கள் அதிகம், காரணம், அந்தப் புளிப்பும், அரிதாக வருடம் ஒரு முறை சாப்பிடுவதாலுமாக இருக்கலாம்.

      னக்கு ஞாபகம் இருந்த வரையில் நாங்கள் உச்சிகால பூஜைக்கெல்லாம் இருந்ததேயில்லை, போவோம், காயை விற்போம், பிறகு மலை இறங்கி வந்துவிடுவோம். வீட்டிற்கு வந்தால் சமையல் அநேகமாக முடிந்திருக்கும், அல்லது முடியும் தருவாயில் இருக்கும். அன்று எல்லாருமே ஒரு சிந்திதான், அதாவது காலையில் யாரும் சாப்பிட்டிருக்க மாட்டார்கள், (ஒரு பொழுது). சமையல் பெரும்பாலும் இப்படித்தான் இருக்கும். பச்சரியில் வைத்த பொங்கல், பச்சைப்பயிறு குழம்பு, புளி ரசம், 3 வகை காய்கள்(பெரியல்), அதிலும் கண்டிப்பாய் பூசணிக்காய் இருக்கும், புடலங்காய் இருக்கும், பீர்க்கங்காய் இருக்கும். இதைத் தவிர்த்து நான் பார்த்ததேயில்லை. வாழை இலை அறுத்து வருவது அப்பா/ மாமா வேலையாக இருக்கும். சாப்பிட ஆரம்பிக்கும் முன் “கோவிந்தா கோவிந்தோவ்வ்வ்வ்வ்” என்று உரக்கக் கத்துவோம், கண்டிப்பாய் அது அடுத்த தோட்டத்தில்/வீட்டில் இருப்பவர்களுக்கு கேட்க வேண்டும், அதாவது நாங்கள் விரதம் முடித்துவிட்டோம், நீங்கள் எப்படி என்பதாக இருக்கும் அந்த சத்தம்.

ன்றைய சாயங்காலம் போண்டாவோ, பஜ்ஜியோ, கச்சாயமோ, கண்டிப்பாக இருக்கும், சாயங்காலம் மதியம் வைத்த சமையல் மீதமிருக்கும், அதை உண்டு உறங்கிவிடுவோம், குடும்பமெல்லாம் ஒன்று சேர்ந்து பேசி மகிழ்ந்து தரையிலும், கயிற்றுக்கட்டிலும் உறங்கிவிடுவோம். அடுத்த நாள் காலை, அப்பிச்சி, நான், மாமா, அப்பாவென்று கோழிகளைப் பிடிப்பதுதான் முதல் வேலை. பிடித்து முடிப்பார்களோ இல்லையோ நான் கிணற்றில் குதித்திருப்பேன், 3 அல்லது நான்கு மணி நேரம் கண்ணீர் சிவக்கும் அளவுக்கு நீந்தி மகிழ்வேன். பசியுடன் நீந்தும் என்னை பெரும்பாலும் சாப்பாட்டிற்கு இழுந்துதான் வந்திருக்கிறார்கள். இந்த இடைப்பட்ட நேரத்தில் கோழி கொதித்திருக்கும், 10 அல்லது 10:30க்குள்ளாக சாப்பிட்டிருப்போம். வெற்றிலைப்பாக்குடன்,  நாட்கள் கட்டி காத்த விரதம் முடிவுக்கு வந்திருக்கும். மறுபடியும் அரட்டை, காய்கறிகளைப் பறித்து பைகளை நிரப்பி, சாயங்காலம் காப்பி குடித்தவுடன் கிளம்பிவிடுவோம்.

ன்று புரட்டாசியில் அடை மழை பெய்வதுமில்லை, ஊற்றெடுத்து பள்ளத்தில் தண்ணீர் ஓடுவதுமில்லை, கொலுமிச்சை மரங்களும் இல்லை, ஒருக்கா மலைக்கும் போவதில்லை, கிணற்றுக் குளியலும் இல்லை, கோவிந்தா கோவிந்தா என்று சத்தமும் இல்லை,  மணம் மணக்கும் அந்தக் கோழி குழம்பும் இல்லை, அப்பிச்சி, அம்மாயி, அம்மாவும் உயிரோடு இல்லை, ஆனால் அந்த ஈரம் படிந்த நினைவுகள் மட்டும் ஒவ்வொரு வருடமும் வந்து போகிறது.

Sunday, September 9, 2012

17/365 கிழிஞ்சது கிருஷ்ணகிரி

குவின்ஸி ஒரு வீட்டின் ஓரத்தில் கவனிப்பாரற்று கிடக்கும் டிராக்டர்




பாஸ்டன் -Commons படகு சவாரி



இச்சு இச்சு இச்சு கொடு..




கிழிஞ்சது கிருஷ்ணகிரின்னு சொல்றோமே, கிழிஞ்ச கிருஷ்ணகிரி 
எப்படி இருக்கும்னு யோசிச்சிருக்கீங்களா?


[All Photos Shot in iPhone-4]

Thursday, September 6, 2012

14/365 நீங்க மாடு மேய்க்கத்தான் லாயக்கா?

ள்ளிக்கூடத்துல படிக்காத மாணவர்களைப் பார்த்து அதிகம் சொல்லப்படுவதுதான் இது "நீ மாடு மேய்க்கத்தான் லாயக்கு". எந்த ஆசிரியருக்காவது  தெரியுமா, மாடு மேய்க்கிறது எவ்வளவு கஷ்டம்னு?

ங்க ஐயன், மாடு மேய்ச்சிதான் ஆசிரியர் ஆனார். அந்தப் பரம்பரையில் வருவதாலும், நானும் மாடு மேய்ச்சிருக்கேன் என்பதாலுமே கேட்கிறேன் மாடு மேய்க்கிறது அவ்வளவு சுலபமா?

  1. உங்களுக்குத் தாளி வெக்கத் தெரியுமா? தவிடும் ,தண்ணியும் கலந்து  காலையில பால் கறக்கிறதுக்கு முன்னாடியே வெச்சிடனும், காளை மாடுன்னாலும். நான் சொல்றது 5 மணிக்கு முன்னாடி, எழுந்திருச்சிருவீங்களா?
  2. சாணி அள்ள முடியுமா?  அதுவும் காலையில ஒரு தரம், சாயங்காலம் ஒரு தரம்னு ரெண்டு தரம் சாணி அள்ளனும். அள்ளுவீங்களா?
  3. மூக்கனாங்கயிறு முடிச்சு போடத் தெரியுமா?
  4. கொம்பு சீவி விடத் தெரியுமா?
  5. கட்டுத்தாரையை கூட்டி அள்ள முடியுமா?
  6. மாட்டுக்கு கொசு கடிக்காம இருக்க, சும்மா ஏஸி ரூம்புல குட்-நைட் தட்டற மாதிரி இல்லீங்க. நாய்த்துளசியைத் தேடிப் புடிச்சாந்து, பொவப் போட்டு கொசுவை ஓட்டனும், முடியுமா?
  7. வாரத்துக்கு ஒரு தபா தண்ணியூத்தி வுட முடியுமா?
  8. காளை மாடுன்னா 6 மாசத்துக்கு ஒரு தடவை லாடம் கட்டனும், (பசு மாடுன்னா வருசத்துக்கு ஒரு தபா "ஜிங் சாக்" பண்றதை வேடிக்கைப் பார்க்கலாம்.)
  9. பருத்திக்கொட்டையும், புண்ணாக்கும் சரியான நேரத்துல வெக்க முடியுமா?
  10. தீனி வெச்சாலும் மாடு மேய்க்க ஓட்டிப்போவனும், ரெண்டு மாட்டை ஒன்னா மேய்க்க வெக்கவே முடியாது, இதுல பத்து, பதினைஞ்சு இருந்தா டவுசர் அவுந்துரும்.
  11. மாட்டுக்கு ஏதாவது ஆச்சுன்னா உடனே மருத்துவரைக் கூட்டியார முடியுமா?
  12. இதை எல்லாத்தையும் விடுமுறை இல்லாம 7 நாளும், வருசம் முழுக்கவும் செய்ய முடியுமா?


[எங்க மாடு]

னிமே மாடு மேய்க்கத்தான் லாயக்கு அப்படிங்கிறவங்ககிட்ட இதைக் கேட்டுடுங்க....இதெல்லாம் முடியும்னா நீங்க மாடு மேய்க்கவே போலாம், அப்படின்னும் சொல்லிடுங்க.

மாடு மேய்க்கிறதுன்னா சும்மா இல்லீங்க, ரெம்ப கஷ்டம்

Friday, February 24, 2012

கிராமத்தானின் ஒரு நாள்

கிராமத்துல ஒரு அட்டவணையைப் போட்டு வாழ்றதில்லைன்னு ஆராச்சும் சொன்னாங்கன்னா நம்பாதீங்க. எங்கூர்ல சத்தியமா ஒரு அட்டவணையாட்டம்தாங்க இருக்கும் வாழ்க்கை. எம்பட ஐயன் படிச்சு பட்டணத்துக்குப் போயி வேற அட்டவணையை போட்டு வாழ்ந்தாலும், எம்பட தாத்தா/பாட்டி/அப்பிச்சி/அம்மாயி வாழ்க்கை வேற மாதரதாங்க இருந்துச்சு. இப்ப நானிருக்குற நிலைமைக்கும் அவிங்களுக்கும் சம்பந்தமேயில்லீங்க. பேன் போட்டா கரண்டு சாஸ்தியாயிரும்னு போன வருசம் சொன்னாருங்க அப்பிச்சு. ஆனா, அதுக்கு மின்னாடியெல்லாம் ஃபேனே அங்கே இல்லீங். நானெல்லாம் வளர்ந்த காலத்துல ஃபேன், டிவி, ரேடியோ எல்லாம் இல்லீங். சரி, நாம விசயத்துக்கு வருவோமுங்.


காலை, வெள்ளைனைய எழுந்திருச்சி(4:45-5:00) மாடு,எருமை பாலை பீய்ச்சிருவாங்க. கருக்கல்ல இருக்கறப்பவே சொஸைட்டிக்கு போயி பாலை ஊத்தியாவனும். நம்பூட்டும் சொஸைட்டிக்கும் ஒரு ஒன்ற மைல் இருக்கும்னு நினைக்கிறேன். பால் எடுத்துட்டுப் போவ பால் லாரி வரதுக்கு முன்னாடியே போயாவனும்.

சொஸைட்டியில் ரீடிங் பார்த்து புஸ்தவுத்துவத்துல குறிச்சிட்டு கிளம்புனா விடியறாப்ல மசமசன்னு இருக்கும்போதே வீட்டு வந்துரனும். அப்புறம் பாட்டி வெக்கிற காப்பிய குடிச்சிட்டு கிளம்பிரோனும். வருசையா தேங்காய் மரத்துல இருந்து உழுந்த தேங்காயெல்லாம் பொறுக்கி ஒன்னா இரு கூட்டானா சேர்த்துட்டு அப்படியே “2” போயிட்டு வந்துரனும். வரும்போதே பல்குச்சியில பல்லு விளக்கிட்டே திரும்ப வந்து, சாப்பிட தயாராயிரோனும். இந்த நேரத்துல பாட்டி கட்டுத்தாரைய கூட்டியிருக்கும், தயிர கடைஞ்சு மோராக்கியிருக்கும். ஒரு பெரிய தேங்கா அளவுக்கு வெண்ணை எடுத்து உரில போட்டும் வெச்சிருக்கும். வந்தவுடனே பழைய சோத்துக்கு மோரும் ஊத்தி குடுச்சிபுட்டா மணி 8 ஆயிருக்கும். காட்டுல வேல இருந்தா அப்படி பார்க்க வேண்டியதுதான். என்னவேலைன்னு கேட்குறீங்களா? தண்ணி கட்டுறது, பார் புடிக்கிறது, செடிக்கு மருந்து வெக்கிறது, கரும்புக்கு சோவை எடுக்கிறது, களை புடுங்குறது, பருத்தி புடுங்குறது, வயலடிக்கிறது, செடி வெட்டியாந்து உரம்போடுறது இப்படி மொறைக்கு ஒவ்வொரு வேலை இருக்கும்.


இதெல்லாம் காலை நேரத்துல மத்தியானம் சோறுங்கிறது 12-12:30க்குள்ள முடிஞ்சிரும். பெரும்பாலும் நேத்து வெச்ச குளம்புதான் சோத்தோட திங்கனும். மோர் ஊத்தி கரைச்சி குடிச்சிபுட்டா கண்ணை சொக்கிரும்.தென்ன மரமோ, புங்க மரத்தடியிலோ, இல்ல வேப்ப மரமோ ஒவ்வொரு ஊட்டுக்கு மின்னாடியும் இருக்கும், அப்படியே தூங்கிர வேண்டியதுதான். 2 மணிக்காட்டம் எந்திருச்சு ஆட்டையும், மாட்டையும் கரட்டுக்கு ஓட்டிக்கிட்டுப் போனா சாயங்காலம் ஆகிரும். 4-4:30ரக்கு ஊட்டு திரும்ப வந்து ஆட்டை எல்லாம் பட்டியில அடைச்சிபுடனும். மறுபடியும் பால் பீச்சினதும் காப்பி வெச்சுரும் பாட்டி. குடிச்சிட்டு பாலை எடுத்துட்டு சொஸைட்டிக்குப் போயிருவோம். அங்கே கதையடிக்கிறது, பொரணி பேசறதெல்லாம் அப்பத்தான் நடக்கும்.
[ஒலக்கச்சின்னானூர்- கோட்டான்கல் கரடு]

இந்த நேரத்துல பாட்டி சோறு பண்ணி வெச்சிருக்கும். சொஸைட்டியில இருந்து திரும்ப வந்ததும் அண்டாவுல தண்ணியூத்தி சூடு பண்ண வேண்டியதுதான். அதுக்குன்னே தேங்காய் மட்டை உரிச்சி அடுக்கி வெச்சிருப்போம். தேங்காய் உரிக்கிறதைப் பத்தி இன்னொருக்கா சொல்றேங்க. குளிச்சிட்டு வந்து சாப்பிட்டு தூங்கிர வேண்டியதுதான்.
[ஒலக்கச்சின்னானூர்- அப்பச்சி வீட்டுல இருக்கும் குளியலறை]

சனிக்கிழமைன்னக்கே பால் சொஸைட்டியில அந்த வாரத்துக்குண்டான பால் காசு வந்துரும். சனியன்னிக்கி கொங்கணாபுரம் சந்தை, ஆடு விக்க வாங்க வேலை இருந்தாப் போவலாம், காய் போட போவோம். அதுக்கு வெள்ளிக்கிழமையன்னிக்கே காயேல்லாம் பொறிச்சு சாக்குப்பையில கட்டி வெச்சிருவொம். மொதல்ல சைக்கிள்லதா போயிட்டு இருந்தோம். இப்போ டிவிஎஸ் 50 வந்ததிலிருந்து 4-5 மூட்டை அடிக்கி எடுத்துட்டு போயிரலாம். கண்டிப்பா தனியா போவ மாட்டோம், பங்காளிங்க எல்லாம் ஒன்னு கூடிதான் போவோம். அப்பத்தான் புரோக்கரு ஏமாத்தாம காசு தருவான்.

அதுவுமில்லா நாங்க பங்காளிங்க அல்லாரும் ஒன்னாப் போனாவே அவனுக்கு 407 அளவுக்கு வந்துரும்ல. அவனுக்கும் ஒரே வேளையாப் போயிரும். சனியன்னிக்கு கொங்கணாபுரம் போவற வேலையில்லைன்னா ஞாயித்துக்கிழமை சங்கீரி (சங்ககிரி) போயிருவோம். அன்னிக்குத்தான் சங்ககிரியில் சந்தை. அன்னிக்குத்தான் பலசரக்கு சாமான் வாங்குறதெல்லாம். கோழிபுடிக்கிறது எல்லான் ஞாயித்துக்கிழமைதான்.

அப்புறம் சினிமாவுல காட்டுறாப்ல பஞ்சாயத்தையெல்லாம் என் வாழ்க்கையிலேயே பார்த்தது இல்லீங். எங்க ஐயனும் பார்த்தது இல்லியாம். இட்லி தோசை எல்லாம் தீவாளுக்கும், ஆடி அமாவாசைக்கும்தான் கிடைக்கும் இல்லாட்டினா சந்தைக்குப் போறப்ப சாப்புட்டுவந்தாதான் ஆச்சு. சனிக்கிழமை சாயங்காலம் ஆனா பஜ்ஜியோ, போண்டாவோ, கச்சாயமோ, தேங்கா வடையோ பாட்டி சுடும். ஒரு ரவுண்டு கட்டிட்டா ரவைக்கு சாப்புடவே தோணாதுங்.

இந்த வாழ்க்கை முறை, 1990 களில் என் பள்ளிப் பருவத்தை அடிப்படையா வெச்சி எழுதுனதுங்க. 2000கள்ல டிவி வந்துச்சு, நாடகம், போன் எல்லாம் வந்துருச்சு. அதைப் பத்தி இன்னொரு நாள்ல எழுதறேனுங்.

Monday, November 21, 2011

ஞாநியின் சொந்த ஊர் எதுவென்று தெரியுமா?

இந்த வார கல்கியில் ஞாநி எழுதிய இந்த கட்டுரை, நிச்சயம் எல்லோரும் படிக்க வேண்டிய கட்டுரை.... சில பதிவுகளை படித்தவுடன் நம் உணர்வுகளைப் பிரதிபலிப்பது போலவே இருக்கும். அப்படியாப்பட்ட பதிவுதான் இது. நான், பொதுவாக பதிவுகளை பிரதியெடுத்து வெளியிடுவது இல்லை எனினும், இந்தப் பதிவுக்காக அந்த விதியை சிறிதே தளர்த்திக் கொள்கிறேன். காரணம் நான் எழுதிய ஆணிவேர் என்ற கதையும் இதனை ஒட்டியே இருக்கிறது.  ஞாநி அவர்களை மாதிரியே நானும் பின்புலத்தில் என் சொந்த கிராமத்தில் பெயருடன் நானும் புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டுமென்ற ஆவலுடன் போனமுறை ஊர் சென்ற போது, சாலை விரிவாக்கத்தில் அந்த மஞ்சள் நிற ஊர்ப் பலகையும் காணாமல் போய்விட்டது :(

இன்னும் சில நூறு பேரை இது சென்றடைய வேண்டும் என்ற எண்ணமே அதற்குக் காரணம். நன்றி: கல்கி, ஓ-பக்கங்கள்,இட்லிவடை,ஞாநி


சென்ற வருடம் அமெரிக்காவுக்குச் சென்றபோது ஒவ்வொரு விமான நிலையத்திலும் என் பாஸ்போர்ட் பெயரில் இருக்கும் பூர்விக ஊர் பெயரை அதிகாரிகள் கஷ்டப்பட்டுப் படிக்கும்போதெல்லாம், அந்த ஊரை இதுவரை நான் பார்த்ததே இல்லையே என்ற வருத்தம் மேலெழுந்துகொண்டே இருந்தது. எங்கள் குடும்பத்தில் என் அப்பாவைத் தவிர வேறு யாரும் அந்த ஊரைப் பார்த்ததில்லை.

ண்மையில் புரிசை கிராமத்தில் நடந்த புரிசை கண்ணப்ப தம்பிரானின் நூற்றாண்டுக் கலைவிழாவில் எங்கள் பரீக்‌ஷா குழுவின் நாடகம் நடத்த அங்கே செல்லவேண்டியிருந்தபோது, பயண வசதிகளை முடிவு செய்வதற்காக கூகுள் மேப்களை அலசிக் கொண்டிருந்தேன். அப்போதுதான் புரிசையிலிருந்து சுமார் ஒரு மணி நேரத் தொலைவில் என் பூர்விக ஊர் நல்லூர் இருப்பதைக் கவனித்தேன். இரவு நாடகத்தை முடித்துவிட்டு, அதிகாலையில் நல்லூர் போகலாம் என்று முடிவு செய்தேன். எங்கள் நாடகம் முடியும்போது நள்ளிரவு ஒரு மணி. அந்த நேரத்திலும் சுமார் 100 பேர் நாடகம் பார்த்தார்கள். நாங்கள் சுமார் இரண்டு மணிக்கு புரிசை கிராமத்திலேயே ஏதோ ஒரு வீட்டுத் திண்ணையில் படுத்துத் தூங்கப் போனோம்.

ல்லூர் ஆற்காடு அருகே இருக்கும் கலவை என்ற சிறு நகரை ஒட்டிய கிராமம். நல்லூரை அடைந்ததும் எங்கே யாரிடம் என்ன சொல்லி எதை விசாரிப்பது என்று எதுவும் என்னிடம் இல்லை. ஏனென்றால் அந்த ஊரில் எங்கள் குடும்பத்துக்கு நிலம், வீடு எதுவும் இல்லை. உறவினர்கள் யாரும் இல்லை. என்னிடம் இருந்த இரண்டு தகவல்களில் ஒன்றால் எந்தப் பயனும் இல்லை.

என் தாத்தா முனுசாமி அந்த ஊரின் முன்சீப்பாக இருந்தவர். அடுத்து என் அப்பாவும் அந்தப் பரம்பரை முன்சீப் வேலையை ஓரிரு வருடம் பார்த்துவிட்டு ஊரை விட்டு வந்துவிட்டார். அப்பா ஊரை விட்டு வந்த வருடம் 1927! இன்னொரு தகவல் அப்பாவின் பங்காளி சகோதர உறவினரான நல்லூர் சோமசுந்தரம் என்பவர், விடுதலைப் போராட்ட வீரர் என்பதாகும்.

முதலில் ஒரு வீட்டு வாசலில் கண்ணில் பட்டவரிடம் கேட்டேன். அவர் எல்லாத் தகவல்களையும் விரல்நுனியில் வைத்திருந்தார். அவர் பெயர் முனுசாமி! பஞ்சாயத்து அலுவலக ஊழியர். சோமசுந்தரத்தின் வீடு இன்னும் இருப்பதாகவும் அவரது குடும்ப வாரிசுகள், உறவினர்கள் பலர் ஊருடன் தொடர்பில் இருப்பதாகவும் சொன்னார். ஊரில் இருக்கும் பழைய சிவன் கோயிலை அவர்கள் புதுப்பித்துக் கட்டியிருப்பதாகவும் சொல்லி என்னை அந்த சிவன் கோயிலுக்கு அழைத்துச் சென்று காட்டினார். சோமசுந்தரத்தின் வீட்டையும் சுற்றிக் காட்டினார்.

கோயிலும் வீடும் என் ஆர்வத்துக்குரியன அல்ல. அந்த அக்ரஹாரத் தெருவின் முடிவில் மிகப் பெரிய மரம் ஒன்று. அதன் வயது சுமார் 200 வருடங்கள் என்றார்கள். அதுதான் சுவாரஸ்யமான கற்பனைகளைத் தூண்டியது. இருபது வயது வரை இங்கே இருந்த என் அப்பா, அந்த மரத்தின் கீழ் விளையாடியிருப்பாரா, நண்பர்களுடன் அரட்டை அடித்திருப்பாரா என்றெல்லாம் யோசித்தேன்.

இப்போது ஊரின் மக்கள்தொகை சுமார் இரண்டாயிரம். சரிபாதி காலனியில் தனியே வசிக்கும் தலித்துகள். அப்பா காலத்தில் இதில் சரிபாதிதான் மொத்த மக்கள்தொகையாக இருந்திருக்கலாம்.

ஊருக்குள் நுழைந்து பஞ்சாயத்து ஊழியரைச் சந்தித்தது முதல், ஊரை விட்டுத் திரும்பி கலவை, ஆற்காடு வழியே சென்னை வந்தபின்னரும் கூட, எனக்கு நிறைய செல்பேசி அழைப்புகள் வந்தபடி இருந்தன. எல்லாரும் நல்லூரிலிருந்து தொலைதூர மாநிலங்கள், வெளியூர்கள் சென்று குடியேறியவர்கள். பெரும்பாலோர் சிவன் கோயிலைப் பற்றியே என்னிடம் பேசிக் கொண்டிருந்தார்கள். பல நூறு வருடங்கள் முந்தைய பழைய கோயிலைப் புதுப்பித்துக் கட்டிய பெருமையும் மகிழ்ச்சியும் அவர்களுக்கு இருந்தது.

எனக்கு ஆர்வமில்லாத விஷயம் அது. என்னை இன்னமும் உறுத்தும் கேள்வி ஏன், தங்கள் சொந்த ஊரை விட்டு, தொழில் நிமித்தம் வெளியூர் சென்று வாழ்வோர் பலரும் (எல்லோரும் அல்ல), ஊருக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றும்போது, முதலில் கோயில் புனருத்தாரணத்தையே எண்ணுகிறார்கள் என்பதுதான். படிப்பு தான் அவர்களை உலகம் சுற்ற வைத்தது. அந்தப் படிப்புக்காக அடுத்த தலைமுறைக்கு ஏன் எதுவும் செய்யத் தோன்றுவதில்லை?

கலவை பகுதியில் ஆண்களை விடப் பெண்களே மக்கள் தொகையில் அதிகம். ஆனால் பெண்களின் எழுத்தறிவு 59 சதவிகிதம்தான். நல்லூர் கிராமத்தில் ஒரு நூலகத்தைப் பார்த்திருந்தால் நான் மகிழ்ச்சி அடைந்திருப்பேன். ஒவ்வொரு வேளையும் ஒரு உறவினர் வீட்டில் போய் சாப்பிட்டுப் படிக்க வேண்டிய வறுமையில் இருந்த என் அப்பாவையும் அடுத்து எங்களையும் வறுமையிலிருந்து விடுவித்தது படிப்புதான்.

சொந்த ஊர் என்பது சிலருக்கு நெகிழ்வான உணர்வுகளை எழுப்புகிறது. எனக்கும் செங்கற்பட்டு அப்படிப்பட்ட நெகிழ்ச்சியை ஏற்படுத்தும். எனக்கு அதுதான் சொந்த ஊர். ஆனால் ஒவ்வொரு முறை செங்கற்பட்டுக்குப் போகும்போதும் நெகிழ்ச்சியை ஏற்படுத்துவது பழைய நினைவுகள்தான். இப்போதைய ஊரைப் பார்க்கும்போது அதிர்ச்சியும் கோபமும் வருத்தமும்தான் வருகின்றன. ஊரே கடை வீதியாக மாறிவிட்டது. சாலைகள் எல்லாம் யுத்தம் நடந்த பூமி போல இருக்கின்றன.

நண்பர்களோடு மகிழ்ச்சியாகச் சென்று உலாவிய ரேடியோ மலை மர்ம தேசமாகி விட்டது. வேறு எந்த ஊரிலும் எனக்குத் தெரிந்து ஊருக்கு நடுவே சிறு குன்று கிடையாது. அதன் மீது ஒரு பூங்கா, நகராட்சியின் வானொலி எல்லாம் ஒரு காலத்தில் இருந்தன. அதனால்தான் ரேடியோ மலை என்று பெயர். அண்மை யில் சென்றபோது குன்றேறிப் பார்த்தேன். அங்கே இருந்த அச்சுறுத்தும் தோற்றத்தில் சிலர் முறைத்த முறைப்பில் திரும்பிவிட வேண்டியதாயிற்று.

நான் தவறாமல் மாலை நேரங்களில் நண்பர்களுடன் சடுகுடு விளையாடிய வேதாசலம் நகர் அழகேசனார் தெரு பூங்காவும் விளையாட்டுத் திடலும் சிதிலமடைந்து கிடந்தன. அதை ஆக்கிரமித்து சிலர் வீடு கட்டியிருந்தார்கள். வருடம் முழுவதும் விதவிதமான விளையாட்டு வீரர்களுடன் உயிர்த்துடிப்போடு காணப்பட்ட சீர்திருத்தப்பள்ளி விளையாட்டுத் திடல் பாழடைந்து ரயில்வேயின் கோடவுனாகக் கிடக்கிறது. குளவாய் ஏரியைத் தூர்த்து ப்ளாட் போடவேண்டியது மட்டும்தான் பாக்கி. அதன் ஆயக்கட்டு வயல்கள் எல்லாம் பைபாஸ் சாலையினால் ஏற்கெனவே ப்ளாட்டுகளாகிவிட்டன.

ஒரு காலத்தில் நமக்குப் பெருமகிழ்ச்சி தந்த பல விஷயங்கள் கால ஓட்டத்தில் அர்த்தமற்றவை ஆகிவிடுகின்றன. இளம் வயதில் தினசரி மணிக்கணக்கில் அரட்டை அடித்த நண்பனை முப்பது வருடம் கழித்து சந்திக்கும்போது, பழைய சந்தோஷங்களின் தொடர்ச்சியாக இப்போதும் மகிழ்ச்சி ஏற்படுகிறது. ஆனால், சில நிமிடங்களுக்குப் பின் இருவருக்கும் பேச எதுவுமில்லை. பகிர எதுவுமில்லை. கால ஓட்டத்தில் இருவரின் மதிப்பீடுகளும் வெவ்வேறு திசைகளில் போய்விட்டதே காரணம். மாறாக ஒரு வாரம் முன்பு அறிமுகமான ஒருவருடன் மணிக்கணக்கில் பேசுகிறோம். இருவருக்கும் இடையில் பொது அக்கறைக்குரியவை நிறையவே இருப்பதே காரணம்.

உறவுகளைச் சடங்குகளாகவோ, அல்லது வெறும் பழக்கத்தினாலோ அல்லது வேறு வழியில்லாமலோ தொடரும் போது அவை சுமையாக மாறுவதுதான் நிகழும்.

உறவாடக் கற்றுக்கொள்வோம் என்பதுதான் நான் அண்மையில் குடந்தையில் நடத்திய ஒரு பயிலரங்கத்தின் செய்தி. லயன்ஸ் க்ளப் இதை ஏற்பாடு செய்திருந்தது. லயன்ஸ் மாவட்டம் 324ஏவின் இப்போதைய ஆளுநர் ராமராஜன் இந்த வருடம் வித்தியாசமான சில பயிலரங்குகளை நான் நடத்தித் தரவேண்டும் என்று பிடிவாதமாக இருந்தார். நானும் என் தோழி பத்மாவும் அவற்றைச் செய்து தரப் பொறுப்பேற்றுக் கொண்டோம்.

லயன்ஸ் உறுப்பினர்கள் தம்பதிகளாக வந்து பங்கேற்கும் பயிலரங்கம் இது. அரசியல், கல்வி, மீடியா, வணிகம் எல்லாமே கடும் சிக்கல்களுடன் இருக்கும் சூழலில், தனி வாழ்க்கையில் உறவுகளும் எவ்வளவு சிக்கலாக இருக்கின்றன என்பதை எல்லோரும் உணர்ந்து என்ன செய்யலாம் என்ற கவலையிலும் ஏக்கத்திலும் இருக்கிறார்கள். போலி கௌரவமும் அதிகாரப் பார்வையும்தான் பல உறவுகளை நாசப்படுத்துகின்றன. அன்பும் பரஸ்பர மதிப்பும் மட்டுமே நம்மை மீட்கும்.

இன்னொரு பயிலரங்கம் கிராமப்புற அரசுப் பள்ளிகளில் பயிலும் ப்ளஸ் ஒன் மாணவர்களுக்கு, பத்து வாழ்க்கைத் திறன்களை அறிமுகப்படுத்துவதற்கானது. மாணவர்கள் துடிப்பாக இருக்கிறார்கள். ஆர்வத்தோடு இருக்கிறார்கள். வசதிகளும் வாய்ப்புகளும் மட்டும் தான் குறைவாக இருக்கின்றன. இப்படிப்பட்ட பயிலரங்கங்கள் அவர்களுக்கு நீந்திக் கரையேறக் கிடைக்கும் இன்னொரு துரும்பு.

மயிலாடுதுறையில், நகராட்சி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது. நூறாண்டுகளுக்கு மேலாக நடக்கும் அந்தப் பள்ளியின் வரலாறு பிரமிப்பானது. எழுத்தாளர்கள் கல்கி, துமிலன், சா.கந்தசாமி, தி.மு.க. தலைவர் பேராசிரியர் அன்பழகன், இன்னும் ஐ.ஏ.எஸ் உயர் அதிகாரிகள் பலர் படித்த பள்ளி இது என்று அறிந்தபோது நெகிழ்ச்சியாக இருந்தது.

அப்படிப்பட்ட பள்ளியில் ஒரு நூலகம் இல்லையென்று தெரிந்தபோது அதிர்ச்சியாக இருந்தது. இருநூறு கோடி ரூபாயில் ஒரு கனவு நூலகத்தை, சென்னையில் அமைக்கிறோம். இருநூறு ஊர்களில், இரண்டாயிரம் பள்ளிகளில் நூலகங்கள் இல்லை. அல்லது இருந்தும் இல்லாத நிலை. மயிலாடுதுறை பள்ளியில் ஆயிரக் கணக்கில் நூல்கள் உள்ளன. ஆனால் நூலகர் பதவிக்கு ஆள் நியமிக்கப்படவில்லை. பள்ளிகளில் காவலர் (வாட்ச்மேன்), துப்புரவுப் பணியாளர் பதவிகளெல்லாம் கூட அரசால் நியமிக்கப்படாத நிலைதான் பல பள்ளிகளில் இருக்கின்றன. பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் மூலம் தொகுப்பு ஊதியத்தில் சிலரை ஒரு சில ஊர்களில் நியமிக்கிறார்கள்.

ஒவ்வொரு பயணமும் நம் சூழல் எவ்வளவு சிக்கல் நிரம்பியதாக இருக்கிறது என்பதை உணர்த்துகிறது. கூடவே அதையெல்லாம் தாண்டி எழுந்து வருவதற்கான துடிப்போடும் ஆர்வத்தோடும் தேடலோடும் இன்னொரு தலைமுறை உருவாகிக் கொண்டே இருக்கிறது என்பதைப் பார்க்கும் வாய்ப்பையும் இந்தப் பயணங்கள் எனக்குத் தருகின்றன.

முசிறியில் மாணவர் பயிலரங்கம் முடிவில் அன்றைய அனுபவத்தைச் சொல்லுங்கள் என்று கேட்டதும் அலை அலையாக எழுந்து வந்து முதல் முறை மைக் முன்னால் பேசிய அத்தனை முகங்களும் குரல்களும் மறக்க முடியாதவை.

Sunday, July 17, 2011

ஆடி - 1 - தேங்காய் சுடுற நோன்பி


இன்னைக்கு ஆடி-1.

அதாவது பாரதப் போர் ஆரம்பிச்ச நாள். நிறைய அக்கப்போரும் இருக்குங்க. புருஷன்மாருங்க எல்லாரும் பர்ஸ கெட்டியா புடிச்சுக்கனும் இல்லைன்னா கவுத்திருவாங்க இல்லே. பின்ன நிமிஷத்துக்கு ஒரு தரம் டி.வில ஆடித்தள்ளுபடி விளம்பரம். "எடுத்துக்கோ, எடுத்துக்கோ அண்ணாச்சி கடையில எடுத்துக்கோ"ங்கைறாங்க. அப்புறம் வுட்டுக்காறம்மாங்கல்லாம் என்ன பண்ணுவாங்க. அதுவுமில்லாம ஆடி மாசம்'ன்னா புருஷன், பொஞ்சாதிங்களை பிரிச்சு வேற வெச்சுருவாங்கலாமில்லை. இதையெல்லாம் பார்த்தா ஆடி மாசம் ஒரு பெரிய வில்லத்தனமான் மாசம்'ன்னு தான் நமக்கு தோணுதுங்க.

சரி, ஆடி-1 என்ன விஷேசம் தெரியுங்களா? தேங்காய் சுடுறதுதான். அட அடுத்தவங்க காட்டுல இருந்து இல்லீங்க. நம்ம தோட்டத்து தேங்காயதாங்க. பள்ளிகூடம் போகுறப்போ எல்லாம் பசங்களும், பொண்ணுங்களும் பள்ளிகூடத்துலயே தேங்காய் சுடுவோம். அது ஒரு கனாக்காலம். ஹ்ம்ம். சனிக்கிழமையே எல்லா கூட்டாளிங்களுக்கு சொல்லிவிட்டோம். திங்கள் காலையில தேங்காய் சுடறதா. இப்ப பசங்க கழுதமாதிரி ஆகி, தொப்பைய வெச்சுக்கிட்டு வந்துட்டாங்க. கையில ஒண்ணு, ரெண்டுன்னு குழந்தைங்க வேற. என்ன பண்ண காலம் வேகமா உருண்டு ஓடுது.

அட, இத எப்படி சொய்யறது சொல்லிறேங்க. அநேகமா, யாரும் சொல்லாத சமையல் குறிப்பு இது, அதனால குறிச்சு வெச்சுக்குங்க. நல்லா முத்தின தேங்காய், சோளம், ஒரு 10 கிராம், கம்பு ஒரு 10 கிராம், வெல்லம், எள்ளு ஒரு 10 கிராம். சுடுறதுக்கு குச்சி + எரிக்க சுள்ளி. தேங்காய நல்ல மட்ட உரிச்சு, குடுமி எடுத்துடனும். தேங்காய்க்கு புள்ளி மாதிரி 3 வடு இருக்கும். அதுல ஒண்ண மட்டும் ஓட்ட போட்டு பாதி தண்ணியை எடுத்துரனும். அப்புறமா, எள்ளு, கம்பு, சோளம், வெல்லம் எல்லாத்தையும் திணிச்சு, ஒரு பெரிய குச்சியில சொருகிட்டு சுடனும். அந்த குச்சி ஒரு 5 அடியாவது இருக்கனும், அப்போதான் தீ சுடாது. அப்படியே தேங்காய் சுடும்போது எவனாவது எகத்தாளம் பேசினா அந்த குச்சியாலையே ஒரு போடு போடலாம் பாருங்க.

Camp Fire மாதிரி ஒரு நெருப்பு மூட்டி எல்லாரும் உக்காந்து சுட வேண்டியதுதான். தேங்காய் நல்லா வெந்த பிறகு வெடிக்கும், எடுத்து உடச்சு திங்கவேண்டியதுதான். என்னா ருசி தெரியுங்களா? அம்புட்டுதான் தேங்காய் சுடுறது. சுடும்போதுதான் ஊர் கதையெல்லாம் பேசுவோம். எவனாவது கடுப்பு ஆகி சுட்டுகிட்டு தேங்காயால இருக்கிற அடிப்பான், அதுவும் தனி கலாட்டா. இதெல்லாம் நகரத்து பக்கம் இருக்குமா? தெரிஞ்சா சொல்லுங்க

Thursday, July 2, 2009

காசியும், ஞானும், பின்னே சந்தவையும்

சந்தவை: இப்படித்தான் எங்க ஊர்ல சொல்லுவோம். கண்ணாலமாவி மொதோ மொறையா மாப்புள்ளை வூட்டுக்கு வரம்போது சந்தவ செஞ்சு போடுறது, மாமியார் வழக்கம். அது என்னாத்துக்குன்னு எல்லாம் தெரியாது. அது என்னா சந்தவன்னு கேக்குறவங்களுக்கு உங்க பாசையில சொன்னா "இடியாப்பம்" இல்லாட்டி சந்தகை கன்னடத்துல சவிகே, அல்லாத்துக்கும் புரியராப்ல சொன்னாக்கா நூடுல்ஸ்.

சந்தவ சுடுறது பெரிய விசயம். ஏன்னா, இதச் சுட ரெண்டு பேரு வேணும். இட்லிக்கு சுடறாப்லதான் மாவு இருக்கும். என்னா, உளுந்து போட மாட்டாங்க. வெறும் அரிசிய ஊறவெச்சு, உப்பு போட்டு வெச்சுக்குவாங்க, புளிக்க வெக்கவெல்லாம் வேணாம். அப்படியே ஆட்டுக்கல்லுல இருந்து எடுத்து நேராவே இட்லி தட்டுல ஊத்திரலாம். ஆனா இட்லி மாதிரி பொசு பொசுன்னு உப்பாது இது. கல்லாட்டம் இருக்கும்.

இதுவரைக்கும் நமக்கு ஒன்னும் வேலை இருக்காது. சந்தவ மரம்(சந்தவ புளியரது), இது பெரிய வேலை பண்ணும். சந்தவ சுடறதுக்கு மொதோ நாளே எண்ணை போட்டி வெச்சுரனும். இல்லாட்டி திருவரவங்களுக்கு பாடு கஷ்டமாயிரும். சுட்ட இட்லி மாதிரி இருக்குறத எட்டுத்து உள்ளே போட்டு திருவனும். சந்தவ வருதோ இல்லீயோ, திருவரவங்களுக்கு டப்பா டான்ஸ் ஆடிரும். சந்தவ எடுத்ததுக்கு அப்புறம் கீழ கொஞ்சூண்டு ஒட்டி இருக்குறதுதான் திருவறவங்களுக்கு. சந்தவ, மூனு வெதமா திம்போம். ஒன்னு- சந்தவய போட்டு, அதுக்கு மேல பழம், சர்க்கரை போட்டுக்கனும். ரண்டு மூணு வாழப்பழத்தை போட்டு பெனஞ்சு, நெய்ய அதுக்குமேல ஊத்தி சாப்புடறது. ரண்டு- சந்தவைக்கு தேங்காப் பால் ஊத்துறது. மூணு- சந்தவய வருத்து திங்கறது.

காசி அண்ணாச்சியோட சேவை மேஜிக்ல கஷ்டப்படாம் சந்தவ வருது(Updated: This site may harm your computer-அப்படின்னு கூகிள் சொல்லுது). இத்தனை கஷ்டம் இல்லே. மாவு ஊத்தினா சந்தவை வருது. NS கிருஷ்ணன் சொன்னாபல் “சுச்சிய தட்டுனா, தட்டுல இட்லி” இந்தியாவுல மூணு வாங்கினேன். அதுல ஒன்னு இப்போ அமெரிக்காவுலதான் இருக்கு. காசி அண்ணாச்சிக்கிட்ட மொதல்ல கேட்டதே "இத வெளிநாட்டுக்கு எடுத்துட்டு போவ முடியுமா"ன்னுதான். வாங்கி வேஸ்ட்டாப்போச்சுன்னா? அண்ணாச்சி முயற்சி பண்ணச் சொன்னாரு. கொண்டுவரது கொஞ்சம் சுலுவாத்தான் இருந்துச்சு. இப்போ சந்தவை சுலுவா செய்ய முடியுது. என்ன மாவு மட்டும் கொஞ்சம் சரிப்பதமா இருக்கனும் இல்லாட்டி நல்லா வர மாட்டேங்குது. ஒரு தடவை பண்ணிப்பார்த்துட்டா அப்புறம் தெரிஞ்சிரும். ஒரு சிடி வேற இருக்கு, எப்படி செய்யறதுன்னும் சொல்லித்தர்றாங்க.நெறைய recipe தந்திருக்காங்க, ஆனா அதுல ஒன்னகூட நாஞ்செஞ்சி பார்க்கல. நமக்குத் தெரிஞ்ச மூணு அயிட்டத்தையுமே சாப்பிட்டா போதுமுன்னு வுட்டுட்டேன். அதாகப்பட்டது, சந்தவ சாப்பிட்டா லிவருக்கு நல்லதாம், எதிர்வூட்டு செட்டியாரு சொன்னாரு.

Friday, August 1, 2008

ஆடி 18

இன்னைக்கு ஆடி 18ங்க!
நம்ம ஊரு பக்கம் ஆடி 18ன்னா ரொம்ப விஷேசமுங்க. பள்ளிகூடத்துக்கு விடுமுறையெல்லாம் வுடுவங்க. காவேரி, இந்த சமயத்துல தான் கரை புரண்டோடுமாம். போன வருசம் பரவையில்லீங்க, அதுக்கு முன்னாடி வருசத்துல கரைதான் புரண்டு புரண்டு ஆடுச்சு, தண்ணியே இல்லே.
  • பாரதப்போர் ஆடி 1 ஆரம்பிச்சு, ஆடி 18 முடிஞ்சதாவும் சொல்லுவாங்க. அதுக்கும் ஒரு கொண்டாட்டம் இருக்கும்.

  • காவேரி, செந்தண்ணியா ஓடும். இந்த சமயத்துல வயலடிச்சு நெல் விதைக்க ஆரம்பிப்போம், அதுக்கும் ஒரு கொண்டாட்டம்.

  • பள்ளிகூடம் விடுமுறை வேறயா அதுவே ஒரு கொண்டாட்டம்.

  • புதுசா கல்யாணம் ஆன புருசன்மார்ங்க எல்லாம் மாமியார் வீட்ல இருந்து பொண்டாட்டிய கூட்டிட்டு வர சந்தோசம்.

  • எந்தத் தொழிலும் இந்த மாசத்துல ஆரம்பிக்க மாட்டாங்க. காரணம் பீடை மாசமாம். இன்னும் அதுக்கு என்ன வெவரம்னு தெரியலீங்க.

  • சின்ன வயசுல ஆடி 18ன்னாவே திருச்சி வானொலியில 7:30 மணிக்கு சினிமாப் பாட்டு போடும்போது நீச்சல் குளம் படத்துல இருந்து "ஆடி-18.. ஆடி வரும் பொங்கிட்டு" அப்படின்னு கண்டிப்பா பாட்டு வரும். இப்பவும் வருதுங்களா??

சின்ன வயசுல அம்மா சொல்ற படியே காவேரி ஆத்துல தலையில ஒரு அஞ்சு காசு வெச்சு தலைமுங்கி எந்திருப்போம். எந்திரிக்கும் போது காசு இருக்காது. ஆத்தோட போயிருக்கும். தண்ணி வத்திபோச்சுன்னா, எங்க கையிலும் காசு இருக்காது, அப்போ ஆத்துல இருந்து காசு எடுத்துக்கலாம்னு சொல்லிக்குவோம். வயக்காட்டுக்கு தண்ணி தர காவேரித்தாய்க்கு காணிக்கை'னும் சொல்லிக்குவோம். இப்போ கர்நாடகாதான் காவேரியவே தருது இப்போதான் புரியுது.

படம்: பவானி கூடுதுறை- 2006ம் வருசம் ஆத்துல நல்லா தண்ணி வந்துச்சுங்க. அப்போ எடுத்த படம். 

நீச்சல் குளம் அப்படிங்கிற படத்துல வந்த ஆடி பத்தின பாடல்

Wednesday, July 16, 2008

ஆடி-1

இன்னைக்கு ஆடி-1.

அதாவது பாரதப் போர் ஆரம்பிச்ச நாள். நிறைய அக்கப்போரும் இருக்குங்க. புருஷன்மாருங்க எல்லாரும் பர்ஸ கெட்டியா புடிச்சுக்கனும் இல்லைன்னா கவுத்திருவாங்க இல்லே. பின்ன நிமிஷத்துக்கு ஒரு தரம் டி.வில ஆடித்தள்ளுபடி விளம்பரம். "எடுத்துக்கோ, எடுத்துக்கோ அண்ணாச்சி கடையில எடுத்துக்கோ"ங்கைறாங்க. அப்புறம் வுட்டுக்காறம்மாங்கல்லாம் என்ன பண்ணுவாங்க. அதுவுமில்லாம ஆடி மாசம்'ன்னா புருஷன், பொஞ்சாதிங்களை பிரிச்சு வேற வெச்சுருவாங்கலாமில்லை. பிரிச்சு வெக்கிறது தான் வெக்கிறீங்க கல்யாணம் ஆகி கொழந்த குட்டிங்க இருக்கிறவங்களா பார்த்து பிரிச்சி வெக்கிறது. அப்படி பிரிச்சு வெச்சுட்டா இந்தக் கருமம் புடிச்ச தள்ளுபடி இருக்காதுல்ல. அது என்னய்யா புதுசா கண்ணாலம் ஆனவங்களை மட்டும் பிரிக்கிறது? அது பாவமில்லையா?

சரி, ஆடி-1 என்ன விஷேசம் தெரியுங்களா? தேங்காய் சுடுறதுதான். அட அடுத்தவங்க காட்டுல இருந்து இல்லீங்க. நம்ம தோட்டத்து தேங்காயதாங்க. பள்ளிகூடம் போகுறப்போ எல்லாம் பசங்களும், பொண்ணுங்களும் பள்ளிகூடத்துலயே தேங்காய் சுடுவோம். அது ஒரு கனாக்காலம்.

அட, இத எப்படி சொய்யறது சொல்லிறேங்க. அநேகமா, யாரும் சொல்லாத சமையல் குறிப்பு இது, அதனால குறிச்சு வெச்சுக்குங்க. நல்லா முத்தின தேங்காய், சோளம், ஒரு 10 கிராம், கம்பு ஒரு 10 கிராம், வெல்லம், எள்ளு ஒரு 10 கிராம். சுடுறதுக்கு குச்சி + எரிக்க சுள்ளி. தேங்காய நல்ல மட்ட உரிச்சு, குடுமி எடுத்துடனும். தேங்காய்க்கு புள்ளி மாதிரி 3 வடு இருக்கும். அதுல ஒண்ண மட்டும் ஓட்ட போட்டு பாதி தண்ணியை எடுத்துரனும். அப்புறமா, எள்ளு, கம்பு, சோளம், வெல்லம் எல்லாத்தையும் திணிச்சு, ஒரு பெரிய குச்சியில சொருகிட்டு சுடனும். அந்த குச்சி ஒரு 5 அடியாவது இருக்கனும், அப்போதான் தீ சுடாது. அப்படியே தேங்காய் சுடும்போது எவனாவது எகத்தாளம் பேசினா அந்த குச்சியாலையே ஒரு போடு போடலாம் பாருங்க.

Camp Fire மாதிரி ஒரு நெருப்பு மூட்டி எல்லாரும் உக்காந்து சுட வேண்டியதுதான். தேங்காய் நல்லா வெந்த பிறகு வெடிக்கும், எடுத்து உடச்சு திங்கவேண்டியதுதான். என்னா ருசி தெரியுங்களா? அம்புட்டுதான் தேங்காய் சுடுறது. சுடும்போதுதான் ஊர் கதையெல்லாம் பேசுவோம். எவனாவது கடுப்பு ஆகி சுட்டுகிட்டு இருக்கிற தேங்காயால அடிப்பான், அதுவும் தனி கலாட்டா. இதெல்லாம் நகரத்து பக்கம் இருக்குமா? தெரிஞ்சா சொல்லுங்க..

ரெண்டு வருசத்துக்கு முன்னாடியே போட்ட பதிவுதானுங்க... [நன்றி]

Monday, December 17, 2007

வெலை போவுது எங்கூரு

எங்க ஊர் பேரு கொழிஞ்சிக்காட்டூருங்க. அந்த ஊர்ல ஒரு 500 ஏக்கராவுக்கு மேட்டாங்காடும், கொஞ்சம் வயலும் இருக்கு. வானம் பார்த்த ஊரு எங்களுது. ஒரு 500 குடும்பங்க இருக்காங்க. இது பாதி, இந்த தலைமுறை யாருமே உள்ளூருல இல்லை(என்னையும் இதுல சேர்த்துக்கிடுங்களேன்). எல்லாரும் படிச்சு வேலைக்கு போயிட்டாங்க. கூலி வேலை செஞ்சவங்களும் ஏதோ ஒரு தொழிலோ, இல்லே குத்தகைக்கோ, இல்லீன்னா மில்லுக்கோ வேலைக்கு போயிட்டு இருக்காங்க. எங்க தாத்தா 20 வருஷத்துக்கு முன்னாடி மாஞ்செடி வாங்கி எங்க தோட்டத்துல நட்டு வெச்சாரு. அவருக்கு நல்லாவே தெரிஞ்சு போச்சு, எங்கயைனோ நானோ வெவாசாயம் பார்க்க போறதில்லைன்னு.

ஞாயித்துக்கிழமை நானோ, எங்கையனோ கோழி திங்கவாவது ஊருக்கு போயிட்டு இருந்தோம். அதனால எங்களுக்கு தேவையான நெல்லு வெளைய வெச்சுக்குவோம். எந்த தாத்தா ஆணடவன் கிட்டே போனப்புறம் தோட்டத்தை குத்தகைக்கு விட்டு நெல்லு வாங்கிகிட்டோம். அதாவது எப்படியோ வெவசாயம் நடந்துச்சு.

ஒரு மாசத்துக்கு முன்னாடி எங்க ஊருக்கு 4 சுமோவுல ஆளுங்க வந்தாங்களாம். எல்லாரும் கரை வேட்டி வேற கட்டி இருந்தாங்களாம். நேரா ஊர்கவுண்டர் வூட்டுக்கு போன காரு கொஞ்சம் நேரம் கழிச்சு போயிருச்சு. அப்புறம்தான் எங்க ஊர்ல ஒரு திருப்பமே உண்டாகியிருக்கு. எங்கய்யனும் வாரம் ஒரு முறைதான் ஊருக்கு போறதால விஷயம் எங்க காதுக்கு ரொம்ப தாமசமாத்தான் எட்டியிருக்கு. அதாவது எங்க ஊரை யாரோ(?!) வெலை பேசிட்டு இருக்காங்களாம். அப்படி ஓ.பி அடிச்சு பன்னீரா குடிச்சு செல்வத்த சேர்த்தவருக்கு எங்க ஊர்மேல என்ன மோகமோ தெரியல? கருப்ப வெள்ளயாக்கிறதுன்னு பேசிக்கிறாங்க. பக்கத்து ஊருல இருந்த 600 ஏக்கராவையும் அவுங்க(?) வாங்கிட்டாங்களாம். எங்க ஊரையும் வாங்கிடலாம்னு வெலை பேச ஆரம்பிச்சுட்டாங்க.

தடமில்லாத 3 ஏக்கரை நாங்களும் விக்க வேண்டியதா போயிருச்சு. பங்காளிங்களுக்குள்ள தடம் எல்லாம் தேவை இல்லாம இருந்துச்சு. அந்த 3 ஏக்கராவ போவ மீதிய விக்க முடியாது கண்டீசனா சொல்லீட்டாரு எங்கய்யன். இன்னும் கொஞ்ச நாள்ல எங்க வீட்ட சுத்தி இருக்கிற பங்காளிங்க எல்லாம் சங்ககிரிக்கு போயிருவாங்க. அவுங்க எல்லாருக்கு ஒன்னு ரெண்டு லாரி இருக்கு. வாடகை வீடு பார்த்துகிறதா சொல்லிட்டாங்க. எங்க தாத்தா ஆசை ஆசையா எங்க ஊரு முழுக்க வண்டிகட்டியே மாஞ்செடி வாங்கி வந்து குடுத்தாரு. வாங்கியார போயி வர ஒரு வாரம் ஆவும். அப்படி கஷ்டப்பட்டு வளர்த்த மாஞ்செடிங்க எல்லாம் என்ன ஆவுமோ தெரியல. ஊர காப்பாத்துற முனியப்பனும், கருப்பனும் எல்லையில சும்மா உக்காத்து இருக்க காசுக்கு ஆசைப்பட்டு சனம் எல்லாம் ஊரை வீட்டு அடுத்த மாசம் போவப்போவுது. என்னத்த சொல்ல?

Sunday, August 5, 2007

* சில சிதிலங்கள்!


வாழ்க்கையில சில விஷயங்களை நாம மறந்துட்டு போய்ட்டே இருக்கோம்.
மறப்பதுதான் மனிதன் இயல்பு. இன்று நான், நாளே நீ, நாளை மறுநாள் இன்னொரு முகம். ஞாபகம் வெச்சுக்க முடியுங்களா? கண்டிப்பா முடியாது. என்னை ஞாபகம் வெச்சுக்க முடியலைன்னா நானும் ஒரு நாள் சிதிலமடைஞ்சிதானே போறேன். அதுதாங்க வாழ்க்கை.


"என்ன ஆனாலும் பரவாயில்லை, உனக்கு மட்டும் என் பொண்ணைத் தர மாட்டேன். ஒரே ஜாதி, நல்ல வேலை, சரியான அந்தஸ்த்து இருந்துட்டா மட்டும் பொண்ணை குடுத்துரனமா என்னா? பார்ப்போம்".
"சரிங்க, நீங்க ரெண்டு பேரும், இப்படி அடம் புடிக்கிறீங்க. கல்யாணம் பண்ணி வெச்சுடறேன். ரெண்டு பேரும் நல்லா இருந்தாவே எனக்கு போதும். பொண்ண பெத்தவனுக்கு பொண்ணு நல்லா இருந்தா மட்டும் போதும். வேற என்ன வேணும்."
"உனக்கு என்னப்பா பொண்ணும், மாப்பிள்ளையும், பேரனும் உலகமெல்லாம் சுத்துறாங்க. பெரிய இடத்துல கட்டி குடுத்துட்டே, உன் கடமைய சரியா பண்ணிட்டே. யாருக்கு இப்படி வாய்க்கும் சொல்லு. இதுக்கு எல்லாம் குடுத்து வெச்சு இருக்கனும். ஹ்ம்ம்"
"அட, கண்ணு போடாதீங்கய்யா. என் பொண்ணு நல்லா இருக்கனும் இல்லே"


"டேய். பேராண்டி. இப்ப எல்லாம் என்ன பாட்டு. பாகவதர் பாடுவாரு பாரு. அது பாட்டு. இப்ப பாடுறது எல்லாம் பாட்டா?"
"யாரு தாத்தா பாகவதர்?"


"ஹேய், இளா என்னை ஞாபகம் இருக்கா? Botany டா. என்னை கூட நீ கிளின்னு சொல்லி கூப்பிடுவியே!"
"அட ஆமா. மறந்தே போச்சு. ஹிஹி"


"இந்த இடத்துலதான் நாங்க அப்போவெல்லாம் பேசி கூத்தடிப்போம். இப்போ அது இல்லே, வேற ஏதோ கட்டடம் இருக்கு. அப்போ பெரிய படிக்கட்டு இருந்துச்சு, எங்களுக்கு பேச வசதியா இருந்துச்சு""




மேலே இருக்கும் படம் நான் பிறந்த வளர்ந்த வீடு. மேலும் ஒரு சிதிலம்.

Friday, August 4, 2006

ஆடி 18

கூடுதுறை

நேத்து ஆடி 18, இன்னைக்கு வரலட்சுமி விரதம்/ஆடி வெள்ளி.
நம்ம ஊரு பக்கம் ஆடி 18 ரொம்ப விஷேசம்ங்க. பள்ளிகூடத்துக்கு விடுமுறையெல்லாம் வுடுவங்கன்னா பார்த்துக்குங்க. காவேரி, இந்த சமயத்துல தான் கரை புரண்டோடுமாம். போன வருசமும், இந்த வருசமும் பரவையில்லீங்க, அதுக்கு முன்னாடி வருசத்துல கரைதான் புரண்டு புரண்டு ஆடுச்சு, தண்ணியே இல்லே.

* பாரதப்போர் ஆடி 1 ஆரம்பிச்சு, ஆடி 18 முடிஞ்சதாவும் சொல்லுவாங்க. அதுக்கும் ஒரு கொண்டாட்டம்,
* காவேரி, செந்தண்ணியா ஓடும். இந்த சமயத்துல வயலடிச்சு நெல் விதைக்க ஆரம்பிப்போம், அதுக்கும் ஒரு கொண்டாட்டம்.
* இஸ்கூலு விடுமுறை வேறயா அதுவே ஒரு கொண்டாட்டம்.
* புதுசா கல்யாணம் ஆன புருசன்மார்ங்க எல்லாம் மாமியார் வீட்ல இருந்து பொண்டாட்டிய கூட்டிட்டு வர சந்தோசம்

சின்ன வயசுல அம்மா சொல்ற படியே தலையில ஒரு அஞ்சு காசு வெச்சு தலைமுங்கி எந்திருப்போம். எந்திரிக்கும் போது காசு இருக்காது. ஆத்தோட போயிருக்கும். தண்ணி வத்திபோச்சுன்னா, எங்க கையிலும் காசு இருக்காது, அப்போ ஆத்துல இருந்து காசு எடுத்துக்கலாம்னு சொல்லிக்குவோம். வயக்காட்டுக்கு தண்ணி தர காவேரித்தாய்க்கு காணிக்கை'னும் சொல்லிக்குவோம். இப்போ கர்நாடகாதான் காவேரியவே தருது இப்போதான் புரியுது.

இந்த வருசம் தண்ணி(காவேரி ஆத்துல தாங்க) நல்லா ஓடுதுங்க. கையைக்கடிக்காம இந்த வருசமும் மகசூல் ஆச்சுன்னா அடுத்த வருசமும் தலையில காசு வெச்சு முங்குவேன் சாமி..

படம்: பவானி கூடுதுறை

Monday, July 17, 2006

தேங்காய் சுடுற நோன்பி

இன்னைக்கு ஆடி-1.

அதாவது பாரதப் போர் ஆரம்பிச்ச நாள். நிறைய அக்கப்போரும் இருக்குங்க. புருஷன்மாருங்க எல்லாரும் பர்ஸ கெட்டியா புடிச்சுக்கனும் இல்லைன்னா கவுத்திருவாங்க இல்லே. பின்ன நிமிஷத்துக்கு ஒரு தரம் டி.வில ஆடித்தள்ளுபடி விளம்பரம். "எடுத்துக்கோ, எடுத்துக்கோ அண்ணாச்சி கடையில எடுத்துக்கோ"ங்கைறாங்க. அப்புறம் வுட்டுக்காறம்மாங்கல்லாம் என்ன பண்ணுவாங்க. அதுவுமில்லாம ஆடி மாசம்'ன்னா புருஷன், பொஞ்சாதிங்களை பிரிச்சு வேற வெச்சுருவாங்கலாமில்லை. இதையெல்லாம் பார்த்தா ஆடி மாசம் ஒரு பெரிய வில்லத்தனமான் மாசம்'ன்னு தான் நமக்கு தோணுதுங்க.

சரி, ஆடி-1 என்ன விஷேசம் தெரியுங்களா? தேங்காய் சுடுறதுதான். அட அடுத்தவங்க காட்டுல இருந்து இல்லீங்க. நம்ம தோட்டத்து தேங்காயதாங்க. பள்ளிகூடம் போகுறப்போ எல்லாம் பசங்களும், பொண்ணுங்களும் பள்ளிகூடத்துலயே தேங்காய் சுடுவோம். அது ஒரு கனாக்காலம். ஹ்ம்ம். சனிக்கிழமையே எல்லா கூட்டாளிங்களுக்கு சொல்லிவிட்டோம். திங்கள் காலையில தேங்காய் சுடறதா. இப்ப பசங்க கழுதமாதிரி ஆகி, தொப்பைய வெச்சுக்கிட்டு வந்துட்டாங்க. கையில ஒண்ணு, ரெண்டுன்னு குழந்தைங்க வேற. என்ன பண்ண காலம் வேகமா உருண்டு ஓடுது.

அட, இத எப்படி சொய்யறது சொல்லிறேங்க. அநேகமா, யாரும் சொல்லாத சமையல் குறிப்பு இது, அதனால குறிச்சு வெச்சுக்குங்க. நல்லா முத்தின தேங்காய், சோளம், ஒரு 10 கிராம், கம்பு ஒரு 10 கிராம், வெல்லம், எள்ளு ஒரு 10 கிராம். சுடுறதுக்கு குச்சி + எரிக்க சுள்ளி. தேங்காய நல்ல மட்ட உரிச்சு, குடுமி எடுத்துடனும். தேங்காய்க்கு புள்ளி மாதிரி 3 வடு இருக்கும். அதுல ஒண்ண மட்டும் ஓட்ட போட்டு பாதி தண்ணியை எடுத்துரனும். அப்புறமா, எள்ளு, கம்பு, சோளம், வெல்லம் எல்லாத்தையும் திணிச்சு, ஒரு பெரிய குச்சியில சொருகிட்டு சுடனும். அந்த குச்சி ஒரு 5 அடியாவது இருக்கனும், அப்போதான் தீ சுடாது. அப்படியே தேங்காய் சுடும்போது எவனாவது எகத்தாளம் பேசினா அந்த குச்சியாலையே ஒரு போடு போடலாம் பாருங்க.

Camp Fire மாதிரி ஒரு நெருப்பு மூட்டி எல்லாரும் உக்காந்து சுட வேண்டியதுதான். தேங்காய் நல்லா வெந்த பிறகு வெடிக்கும், எடுத்து உடச்சு திங்கவேண்டியதுதான். என்னா ருசி தெரியுங்களா? அம்புட்டுதான் தேங்காய் சுடுறது. சுடும்போதுதான் ஊர் கதையெல்லாம் பேசுவோம். எவனாவது கடுப்பு ஆகி சுட்டுகிட்டு தேங்காயால இருக்கிற அடிப்பான், அதுவும் தனி கலாட்டா. இதெல்லாம் நகரத்து பக்கம் இருக்குமா? தெரிஞ்சா சொல்லுங்க

Thursday, April 6, 2006

வரி கட்டலையோ வரி


"சார்! பெரிய வீடு, புது கார், புது நெக்லெஸ். நல்லா இருக்குங்க. இது வருமான வரி மக்களுக்கும் தெரியும், அதனால வரி மார்ச்- 31 க்குள் கட்டிருங்க"ன்னு கூவி கூவி டிவில ரேடியோல எல்லாம் சொன்னாங்க. நம்ம ஊர்லயும் வரி உண்டுங்க. கோவிலுக்குன்னு சொல்லி வருஷா வருஷம் வாங்குவோம். அது எவ்வளவு பெரிய மிராசா இருந்தாலும் ஏமாத்த முடியாது, எல்லாருக்கும் ஒரே வரி தான். இந்த வருஷம் 1000 ரூபா வாங்கினோம். வீடு வீடா போய்தான் வரி வசூல் செய்றது எங்க வழக்கம்.இப்படிதாங்க எங்க ஊர்ல எல்லாம் வரி வாங்க வருவோம்.

இன்னொரு முறை படத்த பாருங்க.
அட, இன்னொரு முறைதான் படத்த பாருங்க. அந்த படத்துல நான் இருக்கேன், முடிஞ்சா என்னை கண்டுபுடிங்க. கண்டுபுடிச்சுட்டா அடுத்த வருஷம் உங்களுக்கு இளாவோட செல்வாக்குல எங்க ஊர்ல வரி விலக்கு அளிக்கிறோம்.

Wednesday, March 22, 2006

வண்டிமாடு எட்டு வெச்சு...


கத்தாழங்காட்டு வழி கள்ளிப்பட்டி ரோட்டு வழி...
வண்டி கட்டிப் போறவளே வாக்கப்பட்டுப் போறவளே...
வண்டிமாடு எட்டு வெச்சு முன்னே போகுதம்மா
வாக்கப்பட்ட பொண்ணு மனம் பின்னே போகுதம்மா ..
எட்டுமேல எட்டு வெச்சு முன்னே போகுதம்மா
பொட்டு வெச்ச பொன்னு மனம் பின்னே போகுதம்மா

தாயி விருமாயி மனசு மருகுதம்மா
உழுத புழுதியிலும் ஒம்மொகமே தெரியுதம்மா
தங்கம்போல் நான் வளர்த்த தங்கச்சி பிரியகண்டு
கத்தாழங்காட்டுக்குள்ள காளைகளும் கதறுதம்மா
வாசப்படி கடக்கயிலே வரலையே பேச்சு
பல்லப்பட்டி தாண்டிவிட்டா பாதி உயிர் போச்சு

கத்தாழங்காட்டு வழி கள்ளிப்பட்டி ரோட்டு வழி...
வண்டி கட்டிப் போறவளே வாக்கப்பட்டுப் போறவளே...


அண்ணே போய் வரவா அழுது போய் வரவா
மண்ணே போய் வரவா மாமரமே போய் வரவா
அணில்வால் மீச கொண்ட அண்ணே ஒன்ன விட்டு
புலிவால் மீச கொண்ட புருஷனோட போய் வரவா
சட்டப்படி ஆம்பளைக்கி ஒத்த எடம்தானே
தவலைக்கும் பொம்பளைக்கும் ரெண்டு எடம்தானே

கத்தாழங்காட்டு வழி கள்ளிப்பட்டி ரோட்டு வழி...
வண்டி கட்டிப் போறவளே வாக்கப்பட்டுப் போறவளே...

வண்டி மாட்டப்பத்தி எழுத ஆரம்பிச்சு இப்படி பாட்டுல முடிஞ்சு போச்சேன்னல்லாம் நான் கவலப்படல, நான் ஓட்டின வண்டிமாடும், நான் விழுப்புண் வாங்கின கதையும் அப்புறமா வரும், வரும், வரும், வரும், வரும்..

Wednesday, March 15, 2006

மஞ்சள் நீராட்டு விழா


"மஞ்ச குளிச்சு அள்ளி முடிச்சு,
மெட்டி ஒலிக்க மெல்ல சிரிச்சு.
எஞ்சோட்டு பொன்னுகளே
இள மாந்தர் கன்றுகளே
வாழ குருத்துகளே
மாமன் மச்சான் தேடி புடிங்க"

மஞ்சள் நீராட்டு விழான்னு ஒண்ணு நம்ம ஊர்ல இருக்குதுங்க, எப்போ வரும் தெரியுங்களா? நம்ம ஊர்ல மாரியம்மன் திருவிழா அநேகமா மாசி மாசம் வரும். கம்பம் போட்ட 15வது நாள் திருவிழா வரும். மாரியம்மன் பொங்கலுக்கு கடை, தூரி எல்லாம் இன்னும் கூட உண்டு. பொங்கலுக்கு அப்புறமா சாயங்காலம் சாமிய பல்லக்குல வெச்சு ஒவ்வொரு வீட்டுக்கு எடுத்துட்டு போவோம். பெரும்பாலும் இளவட்டங்க தான் தூக்கிட்டு போவோம்(நாம இன்னும் இளவட்டம் தானுங்களே)

சாமிய பல்லக்குல வெச்ச உடனே ஊத்திருவாங்க மஞ்ச தண்ணிய, பூசாரி தாங்க. அப்புறமா ஒவ்வொரு வீட்டுக்கு போகும்போதும் எல்லா வீட்டுலையும் சாமிக்கு முன்னாடி வந்து தண்ணி கொண்டு வந்து ஊத்துவாங்க. அதுவும் நல்ல தண்ணியாத்தான் இருக்கும். சில குசும்பு புடிச்சவங்க மட்டும் மஞ்சல தண்ணியில கலந்து சாமிய தூக்கிட்டு வரவங்க மேல ஊத்துவாங்க. அதுவும் எண்ணைய் கலந்து ஊத்துவாங்க, மஞ்சல் கறையே போகாது, அதுவும் எண்ணை கலந்துட்டா சுத்தம், கழட்டி கடாசிர வேண்டியதுதான். சில பொண்ணுங்களும் ஊத்துவாங்க(அவங்க எல்லாம் வாயாடியாத்தான் இருப்பாங்க).

இருங்க, சாமி தூக்கரவங்க யாருன்னு சொல்லிடரேன். எல்லாம் ஊர்ல பெரிய தலைங்க பசங்களாதான் இருப்பாங்க. பின்னாடி ஒரு 20 பேராவது வருவாங்க. அவுங்க பண்ற அலும்புதான் ஜாஸ்த்தியா இருக்கும். ஒவ்வொரு வீட்டுக்குள்ளையும் பூந்து ஒரு ஆம்பிளபுள்ளை விட்டாம மஞ்ச தண்ணிய ஊத்திருவாங்க. பொண்ணுங்களுக்கெல்லாம் ஊத்துர அளவுக்கு இன்னும் எங்க ஊர் முன்னேறல. இதுக்கு பயந்துகிட்டே சில பேர் மோட்டார் ரூமுக்கெல்லாம் ஓடிருவாங்க, விட்டுருவாங்களா நம்ம பசங்க, தண்ணி ஊத்தாம அந்த இடத்த வீட்ட விட்டு நகர மாட்டோம். சினிமால காட்டுன மாதிரியெல்லாம் இருக்காது.

எதுக்கு இதெல்லாம் கேப்பீங்களே பின்னே காலையிலிருந்து NDTVla ஹோலி பத்தியே பேசறாங்க அதனால தான் நம்ம ஹோலி பத்தி சொன்னேன். ஹ்ம் கொடுத்து வெச்ச வடக்கத்திக்காரங்க.

Friday, February 24, 2006

Willys ஜீப்

12வது மார்க் பார்த்துட்டு அவ்வளவுதான் நம்ம பையனுக்கு அறிவுன்னு அப்படின்னு எங்கப்பாரு முடிவு பண்ணியிருப்பார். ஆனா நம்ம ஒண்ணு கண்டுபுடிச்சோம் "படிப்புக்கும் அறிவுக்கும் சம்பந்தமேயில்லை" (நல்லா படிக்காத எல்லாரும் சொல்றதுதான்).

இருக்கிற மாடுகளை வித்துட்டு ஒரு 10 இல்லைன்னா 20 டில்லி மாடு வாங்கி, கிணத்துல இருந்து 100 அடி தள்ளி ஒரு பெரிய கொட்டாய் போட்டு, மாட்டு பண்ணை வெக்கலாம்னு முடிவு இருந்துச்சு. அப்படியே ஊட்டி-கூடலூர் போய் ஒரு Willys ஜீப் வாங்கி பின்னாடி இருக்கிற சீட்டையெல்லாம் கழட்டி தூக்கிகடாசிட்டு, செமத்தியா ஆல்டர் பண்ணி வெச்சா பால் சொசைட்டில பால் கொண்டு போய் ஊத்த உதவும், சமயத்துல ஊர் சுத்தவும் உபயோகப்படும்(ஒரு மைனர் கணக்கா சுத்தலாம்), ஊர்லையும் நமக்கு ஒரு கெத்தாவும் இருக்கும், அப்படியே வாழ்க்கையில செட்டிலாகலாம்ன்னு ஒரு பெரிய கனவு கண்டேங்க. அதுவுமில்லாம ரிலீசன்னைக்கே கூட்டாளிங்க எல்லாரையும் அள்ளிப் போட்டுகிட்டு சினிமா பார்க்க போயிடலாம் பாருங்க.



இதைப் போயி அப்பாருகிட்ட நேரா சொல்ல தைரியமில்லை. அப்போ அவர் என்ன படிக்க வைக்கணும்னு கனவு கண்டுட்டு இருந்தகாலம். எப்படியோ அம்மாகிட்ட கெஞ்சி கூத்தாடி அப்பாருகிட்ட சொல்ல வைச்சுட்டேன். அப்பாரு என் முதுகில டின் கட்டப் போறார்ன்னு நெனச்சேன். ஆனா அவரோ "பையன் நல்லா படிக்கிற பையந்தான், கூட்டாளிங்கதான் சரியில்லை. இம்ப்ரூவ்மென்ட் எழுதட்டும், நல்ல மார்க் வரலைன்னா அவரு இஷ்டப்படியே அடுத்த வருஷம் செஞ்சிரலாம். ஒரு டிகிரி கூட வாங்கலைன்னா ஊர்ல மதிக்க மாட்டாங்க. பார்த்து படிக்க சொல்லு" அப்படின்னு அம்மாகிட்ட சொல்லிட்டு போய்ட்டார்.
அப்புறமா அந்த ஜீப் வாங்க காலம் அமையவேயில்லை. காலேஜ் முடிச்சப்புறம் புதுசா ஸ்ப்லென்டர் வாங்கி ஒரு மாசம் ஊர்க்கடைல, கிரிக்கெட் விளையாடன்னு சுத்தினது அப்பாருக்கு ஒரு பெருமைதான். 2 வருஷட்துக்கு முன்னாடி அல்டோ வாங்க போனபோது கூட Willys ஜீப் வாங்கலாம்னு அம்மாகிட்ட சொல்லப் போக ஒரே ஒரு மொறப்புதான், அப்புறம் என்ன பண்ண.

இப்பவும் Willys ஜீப்பை எங்க பார்தாலும் வாங்கலாமான்னு தோணும். ஆனா....இன்னும் Willys ஜீப் எனக்கு ஒரு நிறைவேறாக் கனவாகவே இருக்கு.

Thursday, February 23, 2006

3*(13*4)+6=0

சீட்டாட்டம், நான் 11வது படிக்கும் போது அறையாண்டு லீவுல ஒரு நல்ல ஞாயித்துக்கிழமை சாயங்காலமா எங்கப்பாரு எனக்கு பொறுமையா சொல்லிக்கொடுத்தார். அவர் சொல்லித்தரலைன்னா நான் வேற எங்காவது, வேற யாரோ எனக்கு சொல்லித்தந்து கத்துக்கபோறேன்னு எங்கப்பாருக்கே தெரியும்.

ஞாயித்துக்கிழமை கிரிக்கெட் விளையாடபோனாக்கூட கட்டோடதான் போவோமுங்க. கிரிக்கெட் முடிஞ்சா சீட்டுல களம் இறங்கிருவோம். கல்யாணம்னா மாப்பிள்ளைப்பையன் எங்களுக்கு ஒண்ணும் பெரிசா செய்யவேண்டியதில்லை. சீட்டுதான் மொதல்ல, அப்புறம்தான் மீதியெல்லாம். சீட்டு விளையாட இடம் போட்டுத்தருவது, கட்டு ஏற்பாடு எல்லாம் கல்யாணப்பயனோட வேலைங்க. இல்லைன்னா கல்யாணத்துக்கு வரவேமாட்டோம்னு நேராவே சொல்லிருவோம். நாங்க இல்லாம தாலி கட்டிருவானா மாப்பிள்ளை? மண்டபத்தையே இரண்டு பண்ணிரமாட்டோம்? அதே பொண்ணுக்கு கல்யாணம்னாக்கா பொண்ணுக்கு தம்பியோ, அண்ணனோ இந்த ஏற்பட்டெல்லாம் செய்வாங்க.


எங்க ஊர்ல, ராத்திரி கல்யாணத்துக்கு மாப்பிள்ள வீட்லையும், பொண்ணுவீட்லையும் மதியமே மண்டபத்துக்கு போய்ருவாங்க, அப்பவே நம்ம பட்டாளமும் கூடவே கெளம்பிரும். போன உடனே சாப்டுருவோம், கை கழுவும்போதே குசு குசுன்னு பேச்சு ஆரம்பிக்கும். பேச்சு முடியறதுக்குள்ள கட்டு கைக்கு வந்துரனும், இல்லாட்டி பொண்ணுகிட்ட ஏதாவது சொல்லி போட்டு கொடுத்துருவோம்னு மிரட்டறதும் உண்டு. கைக்கு கட்டு வந்தா மறு நிமிஷம் எஸ்கேப்தான். எதாவது நல்ல ரூமா தேடி செட்டில் ஆகிருவோம். விளையாட தெரியாத பசங்கதான் அன்னிக்கு பூரா ரூம்பாய்ஸ். டீ, காபியெல்லாம் சமையல் கட்டிலிருந்து நேரா கொண்டுவந்டுவாங்க. அக்கம் பக்கம் ஊர்ல எல்லாம் இதே கதைதான்.
ரம்மி, 3 சீட்டுதான் விளையாடுவோம். அதுவும் 2, 3 குரூப்பா பிரிஞ்சு விளையாடுவோம். சின்ன பசங்க எல்லாம் ஒரு கேங், பெரியவங்க எல்லாம் ஒரு கேங். ராத்திரி சாப்பாடு ஆச்சுன்னா, குரூப் திரும்பியும் சேர்ந்துரும். அப்புறம் தான் ஆட்டம் கலை கட்ட ஆரம்பிக்கும்.

ரம்மி விளையாடுற இடம் எப்பவுமே அமைதியாவே இருக்கும், கூட்டமும் கம்மியா இருக்கும்(நம்ம இடமும் இதுதான்). நம்மதான் ஆரம்பகாலத்திலிருந்தே பாயின்ட் எழுதற ஆள். 3 சீட்டு நடக்கிற இடம் சந்தகடை மாதிரி சத்தமாவே இருக்கும். சண்டையெல்லாம் நடக்காது. நடந்ததுமில்லை, ஏன்னா விளையாடுற எல்லாமே மாமன், மச்சானா தான் இருப்பாங்க. முன்ன பின்ன ஊர்ல மூஞ்சில முழிக்கனுமில்ல?

ஒரு 3 மணி இல்லைன்னா 4 மணிக்கெல்லாம் பாதி பேர் கெளம்பிருவாங்க, பணம் எல்லாம் காலியாகியிருக்கும். அவுங்க எல்லாம் வீட்டு போய்ட்டு காலையில முஹூர்த்தத்துக்கு டீசன்ட்டா வந்துருவாங்க. மீதியெல்லாரும் செம வேகத்துல இருப்பாங்க. மாபிள்ள தாலி கட்டுறது கூட தெரியாம விளையாண்டதும் உண்டு. மொய் வைக்க கொண்டு போன பணமெல்லாம் சீட்டுல விட்டுட்டு மாபிள்ளைக்கிட்டையே பஸ்ஸுக்கு காசு வாங்கிட்டு வரதெல்லாம் ரொம்ப சகஜம்.

gain, loss எல்லாம் அடுத்த நாள்ல மறந்துருவோம். மறுபடி அடுத்த கல்யாணம் வரைக்கும் காத்திருப்போம். எல்லாம் ஒரு நாள் கூத்துதான்.


காலேஜ்க்கு சேர்ந்த புதுசுல நாம தான் ராஜா. இருந்த வித்தையெல்லாம் காட்டி சீனியர்களை எல்லாம் சீக்கிரம் நம்ம சைடுல இழுத்துட்டேன். பெரும்பாலும் சனி ஞாயிறு ஊருக்கு போயிருவேன், இல்லாட்டி வெள்ளிக்கிழமை ராத்திரியே ஆட்டம் ஆரம்பிச்சிரும். இரண்டு நாளும் சீட்டும் கையுமாத்தான் இருப்போம். காலேஜ் முடிஞ்ச சமயம் ஒரு தடவை 3 நாள் தொடர்ந்து விளையாடி இருக்கோம். குளியலாவது, ஒண்ணாவது விளையாட்டுதான். இன்னமும் நம்ம காலேஜ் கூட்டாளிங்க வந்தால் கட்டுதான் மொதல்ல.


அதென்ன 3*(13*4)+6=0 கேக்கறீங்களா? யாரவது சொன்னா ஒரு சீட்டு கட்டு parcella அனுப்பி வைக்கபடும்.

Saturday, September 24, 2005

(ஹ)அரிக்கேன்

(ஹ)அரிக்கேன்.

(ஹ)அரிக்கேன்,நமக்கு தெரிஞ்சதெல்லாம் ஊர்ல, கரண்டு இல்லாத வீட்ல, ராவுக்கு (ராத்திரிக்கு) வெளிச்சத்துக்காக ஏத்தி வைப்பாங்க. அதுக்கு பட்டணத்துல சிம்னின்னும், எங்க ஊர்ல ராந்தல்ன்னும் பேரு. 2 வாரமா அரிக்கேன்'ங்ர வார்த்தை அடிக்கடி தொலைகாட்சியில், செய்தித்தாள்களிலும் தலைப்புச்செய்தியாய் வருது. அட என்னடா நம்ம ஊர் மேட்டரு எல்லாம் அமெரிக்காவுல அடிபடுதே என்னான்னு பார்க்கலாம்னு கொஞ்சம் விளக்கம் தெரிஞ்சவங்ககிட்ட கேட்டாதான் தெரியுது, அது அமெரிக்காவுல வர்ற புயலோட பெயராம். கத்த்ரீனா, ரீட்டான்னெல்லாம் பேர் வெச்சுருக்காங்க.

அரிக்கேன் அப்படின்னா துர்தேவதைன்னு அர்த்தமாம். இதனால அதிகம் பாதிக்கபடறது கடலோரத்துல இருக்கிற மட்டும் இல்லை, மத்திய அமெரிக்காவும் சூறாவளின்னால பாதிக்கபடுது. ஒவ்வொரு வருஷமும் உயிகளின் இழப்பு அதிகமாயிட்டே வருது. இதுக்கு என்னதான் முடிவு? கடவுள்தான் சொல்லனும்.

அதிகப்படியான தமிழ் மக்களை கொண்ட நகரம் ஹுஸ்டன். முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக ஹூஸ்டன் நகர மக்களை வெளியேர அமெரிக்க அரசு சொல்லிருக்காங்க. உயிருக்கு பயந்து மக்கள் எல்லோரும் ஒரே நேரத்துல மூட்டை முடிச்சுகளுடன் வெளியேர, வரலாறு காணாத போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு இருக்கு. இன பாகுபாட்டோடுதான் சேவை செய்யறாருன்னு கத்ரீனாவால கெட்ட பேர் வந்துருச்சு, ரீட்டாவ எப்படி சமாளிக்க போறாரோ?

ஆமா ஹரிக்கேன்னுக்கு துர்தேவதைன்னா அர்த்தம்ன்னா, நம்ம ஊர்ல ஏன் விளக்குக்கு இப்படி ஒரு பேர்? இருட்டை துரத்திறதனால இந்த பேர்ன்னா, இருட்டுக்கு துர்தேவதைன்னா பேர்? தெரிஞ்சா சொல்லுங்களேன்.

தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி

  தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை  -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை  காசி  எழுதியது தமிழோவியத்துக்காக  பாஸ்டன் பாலாஜி  க...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நாகேஷ் (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) வாலி (1) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)