
"சார்! பெரிய வீடு, புது கார், புது நெக்லெஸ். நல்லா இருக்குங்க. இது வருமான வரி மக்களுக்கும் தெரியும், அதனால வரி மார்ச்- 31 க்குள் கட்டிருங்க"ன்னு கூவி கூவி டிவில ரேடியோல எல்லாம் சொன்னாங்க. நம்ம ஊர்லயும் வரி உண்டுங்க. கோவிலுக்குன்னு சொல்லி வருஷா வருஷம் வாங்குவோம். அது எவ்வளவு பெரிய மிராசா இருந்தாலும் ஏமாத்த முடியாது, எல்லாருக்கும் ஒரே வரி தான். இந்த வருஷம் 1000 ரூபா வாங்கினோம். வீடு வீடா போய்தான் வரி வசூல் செய்றது எங்க வழக்கம்.இப்படிதாங்க எங்க ஊர்ல எல்லாம் வரி வாங்க வருவோம்.
இன்னொரு முறை படத்த பாருங்க.
அட, இன்னொரு முறைதான் படத்த பாருங்க. அந்த படத்துல நான் இருக்கேன், முடிஞ்சா என்னை கண்டுபுடிங்க. கண்டுபுடிச்சுட்டா அடுத்த வருஷம் உங்களுக்கு இளாவோட செல்வாக்குல எங்க ஊர்ல வரி விலக்கு அளிக்கிறோம்.
இத்துனூன்டு ஒரு படத்தை போட்டு கண்டுபுடின்னா..? எதாவது 'இள' படம்னா கூட உத்து உத்து பார்க்கலாம்.. 'இளா' படத்துக்கெல்லாம் அப்படி கஷ்டப்பட முடியாதுங்க.. ;)
ReplyDeleteபெரிய படமா போட்டா கண்டுபிடிக்கிறது சுலபம் ராசா, அதுவுமில்லாம நம்ம கைபோன்ல இவ்வளவுதான் வருமாம், நோக்கியோ சொல்லுது
ReplyDeleteநேத்து சானியா படம் போட்டுட்டு விளையாட்டுன்னு சொன்னீக.... நம்பிட்டோம்...
ReplyDeleteஇன்னிக்கு உம்ம படத்தப் போட்டு கண்டுபிடிங்கன்னு விளையாட்டு காட்டுனா எப்படி?
ஒரே சின்னப்பில்லத் தனமால்ல இருக்கு......
வேணாம் இத்தோட எல்லாத்தையும் நிறுத்திக்கிடுவோம்... கண்டதுல்ல கவனத்தைச் சிதற விடாம ஒழுங்கா வெவசாயாம் பாக்கணும் சொல்லிப்புட்டேன் ஆமா...
என்னாது இது இவ்வளவு பெரீய்யயய படமா போட்டா எப்படி கண்டுபிடிக்கிறது?.
ReplyDeleteதேவு-->//வேணாம் இத்தோட எல்லாத்தையும் நிறுத்திக்கிடுவோம்... கண்டதுல்ல கவனத்தைச் சிதற விடாம ஒழுங்கா வெவசாயாம் பாக்கணும் சொல்லிப்புட்டேன் ஆமா...//
ReplyDeleteசரிங்க ஷாமி. நிப்பாட்டிறலாம். ஆனா அதுக்கு முன்னாடி அவுங்களை யெல்லாம் நிப்பாட்ட சொல்லுங்க.