Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Tuesday, June 27, 2017

சிறுவாட்டுக்காசு

நான் சிறுவனாக இருக்கையில்
செலவுக்கு காசு வேண்டி அப்பாவிடம் நிற்கும்போதெல்லாம்
அப்பா தன் காக்கி அன்ட்ராயரில் துழாவுவார்
கிடைக்கும் சில்லறைகளை அப்படியே தந்துவிடுவார்.
மாசக் கடைசியென்றால் முறைத்துப் பார்ப்பார்
இல்லையென்பதாக நான் எடுத்துக்கொள்ள வேண்டும்.
அவர் தரும் சில்லறைகளுக்கு பீடி நாற்றமிருக்கும்,
சில நேரங்களில்  வெற்றிலை வாசமிருக்கும்,
சில நேரங்களில் புகையிலை வாசமிருக்கும்,
சில நேரங்களில் திருநீறுவாசமிருக்கும்,
சில நேரங்களில் மல்லிகைப் பூ வாசமிருக்கும்,
சில நேரங்களில் சாராயம் வாசமிருக்கும்,
சில நேரங்களில் அழுக்கு வாசமும் இருக்கும்.

அப்பா கொடுக்க மறுத்த பணத்திற்குப்பின் அம்மா தரும் பணத்திற்கு பல வித வாசனைகள் இருக்கும்


சில நேரங்களில்  பொட்டுக்கடலை வாசனையிருக்கும்,
சில நேரங்களில்  பச்சரிசி வாசனையிருக்கும்,
சில நேரங்களில்  வர மிளகாய் வாசனையிருக்கும்,
சில நேரங்களில்  கடலைப் பருப்பு வாசனையிருக்கும்,
சில நேரங்களில்  கொத்தமல்லி வாசனையிருக்கும்,


சம்பாதிக்க ஆரம்பித்த பிறகு பணத்திற்கான வாசனை இருப்பதில்லை,
சட சடவென ஏடிஎம் ஓடும் சத்தம் கேட்கும்,
பிறகு அதனை பர்சில் வைப்பதை வழக்கமாகிவிட்ட எனக்கு
அதன் வாசனையை மட்டும்
ஏனோ நுகரத் தோணுவதே இல்லை...


ஆனாலும்

அம்மா தரும் பணத்திற்கும் என்றுமே வாசனையுண்டு!

Tuesday, February 14, 2017

சமாதி

எங்கள் அம்மா கட்டிக்காத்த கட்சி எங்களுக்கே சொந்தம்!

எங்கள் சின்னம்மா அம்மாவை அரவணைத்தார், கட்சியை பலப்படுத்தினார்!!

அம்மா சொல்படி எங்கள் கட்சி வளர்ந்தது, அவரால் மட்டுமே இந்தக் கட்சியை நல்வழியில் கொண்டு செலுத்த முடிந்தது!!

அம்மா மறைந்த பிறகு இந்தக் கட்சி உடைந்து போயிருக்கும், சின்னம்மாவால்தான் கட்சி இந்தளவுக்கு வளர்ந்திருக்கிறது!! 

அம்மாவின் சமாதியில் அனைவரின் மனசாட்சியும் பேசிக்கொண்டிருந்தது

அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தது எம்.ஜி.ஆர் சமாதி!!!

Friday, December 11, 2015

முண்டாசுக் கவி


பல வருடமாச்சு எங்க தேசம் உனை மறந்து!
ஆச்சர்யம் ஒன்றுமில்லை
நீ என்ன கட்சியா
ஆரம்பித்தாய்?










பேசினாய் எழுதினாய்,
கரடியாய் கத்தினாய்,
தமிழென்றாய், சுதந்திரமென்றாய்,
சமஉரிமை என்றாய், ஜாதியும் இல்லையென்றாய்,
எவனுக்கு வேணும் உன் வார்த்தை,
இடுப்பு மச்சம் தெரியுதாம்
கிளம்புகிறோம் வெண்திரைக்கு.



உனக்கும் ஜாதிமுலாம் பூசிவிட்டோம்
மறைத்துக்கொள் உன் முகத்தை,
முண்டாசு எதற்கு இருக்கிறது?
அன்பென்றால் கொட்டுவது முரசில்லை பைத்தியக்காரா,
தலைமேலே இடியே விழுகிறது.

உனக்கு இன்று பிறந்தநாளாமே
யாருக்குத் தெரியும்
எதற்கு தெரிய வேண்டும்?
தெரிந்துதான் என்ன ஆகப் போகிறது?
வாக்களித்தால் காசு கிடைக்கும்,
உனை வாழ்த்தினால் ஒரு சிங்கிள் டீ கிடைக்குமா?

அடைபட்டு போனோம் சிறுவட்டத்தில்
வேண்டாம் உனது கவிதைகள்
மனம் பிறழ்ந்தவர்கள் படிப்பார்கள், மகிழ்வார்கள்.
நாங்களெல்லாம் தினக்கூலிகள்,
மாரடித்தே பழக்கப்பட்டுவிட்டோம்.

உனது படைப்புகள் எல்லாம் வரலாற்றுப்
புத்தகத்தில் வருமென காத்திருப்பவர்கள்.
மனமேற்றி வாந்தியெடுத்தால் ஐந்து மதிப்பெண்ணுக்கு
மட்டுமே யோக்கியப்படும் உனது படைப்புகள்.

பாரதத்தில் பிறந்தாய்,
பாரதியாய் வாழ்ந்தாய்,
பாராமுகமாய் இருக்கிறாய்,
பத்திரமாய் மறக்கப்படுவாய்!

வாழ்க தமிழனும், தமிழும்!

Monday, April 13, 2015

சில்லுகளாய் அவள் சில்மிஷத்துடன் நான்

நீ அழகாய்ப் பிறந்தவள், வசதியானவள், வசீகரமானவள்
பளிச்சிடும் புன்னகையுடன் பிரம்மாண்டமாய் உருவெடுத்தவள்
முதலில் உன்னை நான் படங்களில் கண்டேன், சிலாகித்தேன்
ஒரே முறை உன்னை நேரில் கண்டேன்: உற்று நோக்கினேன்
உனக்கது தெரிய வாய்ப்பில்லை, நம்மூரில் இப்படி ஒரு அழகியென
மனதுள் ஒரு பேரானந்தத்துடன் உன்னைக் கடந்து போனேன்.

பிறகு உன்னைப் பற்றி வந்த செய்தியெல்லாம் சோகமானவை
உன் மீது வைத்திருந்த அபிப்பிராயத்தயெல்லாம் மாற்றியமைத்தவை
அழகியென ஆர்ப்பரித்த உள்ளங்களெல்லாம் 
காரணமறியாமல் உன்னை ஏச ஆரம்பித்த காலம்
நீ மட்டும் உன்னை மாற்றி கொள்ளவேயில்லை
மீண்டும் மீண்டும் உன் புத்தியைக் காட்டிக்கொண்டே இருந்தாய்.



 யிற்று இன்னும் இரண்டு நாட்கள்தாம்,
உன்னைக் காண எனக்கும் அமைந்திருக்கிறது ஒரு வாய்ப்பு
மனதில் திடம் வை, உன்னை அணைக்க  நான் ஆசைப்படவில்லை
கண்கள் நோக்குவோம், அழகில் கரைவோம்,
எல்லை தாண்ட நினையாமல் பயணம் தொடர்வோம்,
தொட்டுவிடாமல் இருவருமே கடந்துவிடுவோம்
அது உனக்கும் நல்லது எனக்கும் நல்லது.


மனதில் உறுதி பூண், உடலில் திடம் கொள்,
கட்டவிழும் ஆசையை உள்மனதில் வைத்து பூட்டு,
வந்து போவோரிடம் சொல்
“இவன் நல்லவன் இவனிடம் நான் என்னை இழக்க மாட்டேன்,
சில்லுகளாய் உடைய மாட்டேன்" என்று சொல்,
திரும்ப திரும்ப சொல்,
அழுத்திச் சொல்,
உன்மீது நம்பிக்கை வரும்வரை சொல்,




நான் வந்து திரும்பும் வரை உன்னைக் காத்துக்கொள்,
அதன் பிறகும் தீர்க்கமாய் இரு,
உன்னை ஏசும் ஊர் உலகத்துக்கு நீ உடையாதவள் என்று உரக்கச் சொல்
என்னைக் காணாமல் என்றும் உடைந்து விட மாட்டேன் என்று சத்தியம் செய்
என் இனிய அழகிய
சென்னை விமான நிலைய கூரையே!!!

Thursday, December 19, 2013

அஸ்தி

அவனை தெய்வமென்று கொண்டாடியது இந்த உலகம்,
கொண்டாட்டமெல்லாம் அவன்
உயிருடன் இருக்கும் வரைதான்
மரித்துப்போனான் அவன் - வயிற்றிலும்
வாயிலும் அடித்துக்கொண்டு அழுதது ஊர்.

மயானத்தில் எஞ்சியிருந்தது எரிந்து போன
அவனது சாம்பல்- ஆம், சாம்பல்தான்
தெய்வம் என்று கொண்டாடியதால்மட்டும்
அவனது சாம்பலொன்றும் திருநீறாகிவிடவில்லை.


ஆம்,
சாம்பல் என்றும்
திருநீறாகிவிடுவதில்லை !!!!

Sunday, March 17, 2013

டேய் காதலா-1

என்னை நேசித்த காதலிக்காக
அவள் பார்வையிலேயே
ஒர்
கவிதை!


                                                         


ன்னைப் பார்த்து
கண்சிமிட்டியபடி தெரு விளக்கு
விரல் நீட்டி மிரட்டிச்சென்றாய்
கோளாறு விளக்கிலா? உன்னிலா?






ன் காதுக்கும் இதழுக்கும்
இடையே பாலமாய் அலைபேசி,
யாரோ ஒரு சக்களத்திதான்
மறுமுனையில் சிரித்து,
கொஞ்சி,
பேசிக்கொண்டிருக்கிறாள்
கோவம்தான் - ஆனால்
நீ கொஞ்சுவதை
நான் எப்போதுதான் பார்ப்பதாம்
நீ என்னைக்
கொஞ்சும் போதுதான்
என் கண்கள்
திறக்கவே மாட்டேன் என்று
அடம்பிடித்து
தொலைக்கிறதே.


















பூவைத்து
என்னை அழகு பார்த்தபின்,
பூவோடு
என்னையும் சேர்த்து
கசக்கி போடுவதே
உனக்கு
வழக்கமாகிவிட்டது.
நீ என்ன குரங்கா? இல்லை
நான்தான் பூமாலையா?




ன் தீவிரவாதப்பார்வையால்
பார்த்தும் கொல்கிறாய்,
வேண்டாமென்றாலும்
அஹிம்சாவாதியைப்போல்
பார்க்காமலேயும் கொல்கிறாய்
இரண்டுமல்லாமல்
மூன்றாவதுக்கு
எங்கே போவேன்?



காதலிக்கும்போது
மனைவியாகச்சொன்னாய்,
மனைவியான போது
காதலியாகச் சொன்னாய்,
போடா லூசு,
உனக்கு ஒரே மாதிரியான புத்தி இல்லையா?




(தொடரும்)

Wednesday, August 29, 2012

6/365 அபியின் அப்பாவும் அம்முவின் அம்மாவும்

நாம் காதலித்தோம்,
ஆயிரம் ஆயிரம் கனவுகள்,
நாமே செய்துகொண்ட
கற்பனையில் பிறந்த குழந்தைகள் வளர்ந்திருக்குமா?
பள்ளிக்கூடம் சென்றிருக்குமா?
அவை,
நமக்காக முதல் நாளில் ஏங்கியிருக்குமா?
தம்பியோ, தங்கையோ வேண்டுமென கேட்டிருக்குமோ?
....
....
தெரியவில்லை...




னால் இன்று,
என் குழந்தைகளும், உன் குழந்தைகளும்
ஒன்றாகத்தான் விளையாடுகின்றன!
அவர்களால் அப்பா, அம்மா என்று விளிக்கப்படவேண்டிய
நாம்தான்,
அபி அப்பா என்றும்,
அம்மு அம்மா என்றும் தனித்தே அழைக்கப்படுகிறோம்,
சில நேரங்களில்
"மாமா" என்று உன் மகள் அழைக்கும்போதுதான்
தெறித்துவிடுகிறது மிச்சமிருந்த காதலும்!

Wednesday, January 4, 2012

RX100ம் நண்பனும்

[இது ஒரு மீள்பதிவுதான், புதுசா வந்தவங்க படிச்சிக்கோங்க, மூத்தப்பதிவர்கள் சோத்தாங்கை பக்கம் மேல் மூலையில் X அமுக்கிட்டு கிளம்பிருங்க]


கல்லூரி ஆரம்பிக்க இருந்த முந்திய நாள்,
எனக்கு ஒதுக்கப்பட்ட விடுதி சென்ற போதுதான்
அவனைப்பார்த்தேன்.
என் அறை நண்பன் என்ற
முறையில் ஹாய் சொன்னதோடு
எங்கள் அறிமுகம் முடிந்ததும் தூங்கிப்போனேன்.

மூத்தோருக்கு சல்யூட் அடித்த
அந்தக் கல்லூரியின் முதல்நாளில்தான்,
எந்த பிரிவு என மூத்தோர் கேட்க,
பதில், என்னுடைய பிரிவாக இருக்கையில்
மனதுள் ஒரு சந்தோசம்.
ஆக, இருவரும் ஒன்றாக மூத்தோருக்கு
மரியாதை செலுத்தி விட்டு
கடைசி வரிசையில் ஒன்றாக அமர்ந்தோம்.

அன்றுதான் எங்களை நெருக்கியது நட்பு!

பிறகு என்னிடம் இருந்து
சிகரெட் பழக்கத்தையும்,
இருவருமே தண்ணி பழக்கத்தையும்
பழகியது வெகு சீக்கிரம்.

இருவருக்கும் பொதுவானது
சட்டை, ஷூக்கள், ஒரே சிகரெட்,
ஒன்றாக சைட் என
முதல் செமஸ்டர் முடியும் முன்னே.

இன்னும் இருகியது எங்கள் நட்பு!

இணைபிரியா நண்பர்கள் என்று
நம்மை எல்லோரும் சொன்ன போது
காலர் தூக்கிவிட்ட படி,
நாம் விட்ட சிகரெட் புகைக்குக்கூட
ஒரு கர்வம்.

இரண்டாம் ஆண்டில்,
அப்பாக்களிடம் கெஞ்சி பணம் வாங்கி
பொதுவாக ஒரு பைக் வாங்கியதும்,
பல நேரங்களில் பெட்ரோலுக்கு பெண்களிடம்
அல்லு போட்டு ஊர் சுத்தியதும்,
குரங்கு அருவிக்கு போய்
திரும்பி வருகையில் பெட்ரோல் தீர்ந்து
விடுதி வரைக்கும்,
வண்டி தள்ளியே வேர்வையில்
மறுபடியும் குளித்துவிட்டு,
சிரித்த படி உறங்கிய போது
உடல் வலி மேலிட,
மனதுள் ஒரு திருப்தி.

விடுமுறையில்
உன் வீட்டுக்கு நான் வந்தேன்,
உன் அத்தைப்பெண்ணை
எனக்கு அறிமுகப்படுத்தி
நீ வெட்கப்பட்டாய்

"உனக்கு இதெல்லாம் கூட தெரியுமாட நண்பா"
அப்படின்னு கிண்டலடிச்சு
"நல்லா இருங்க"ன்னு சொல்லி
சிவாஜி கணக்கா வாழ்த்தினேன்.

டீ சாப்பிட
வண்டிய எடுத்துக்கிட்டு
ஊட்டிக்கு ஓவர் ஸ்பீடுல போய்
போலீஸ் மாமாகிட்டா மாட்டினது
யாருக்குமே இன்னும் தெரியாது.

ஆச்சு 4 வருசம்,
அரியர் இல்லாம தப்பிச்சுட்டு,
இண்டஸ்ட்ரியல் விசிட்டுக்கு
வீடே இல்லாத ஒரு காட்டுக்கு
போனது நாம் தான்.

கல்லூரியின் கடைசி நாள்,
எல்லார் கண்களிலும் கண்ணீர்,
அவனையும் என்னையும் தவிர.
"எங்கேடா நண்பா போயிருவா,
ஒரு பீர் அடிச்சுட்டு ராத்திரி கோவில்பட்டியில
பஸ் ஏறினா காலையில உன்னோட ஈரோட்டில்
ஒன்னா தம் அடிக்கப்போறேன்"
அப்படின்னு என்னைத்தேற்றிவனே
அவன்தான்.


பிறகு கணினி படிக்க
அவன் சென்னை போனதும்,
எனக்கு அவ்வளவு வசதியில்லாம
ஈரோட்டிலேயே படித்தேன்,
ஆனாலும் ஒரே கோர்ஸ்.

எப்படியோ அடிச்சு புடிச்சு
பெங்களூர்ல நீ
நல்ல வேலை வாங்கிட்ட,
ஈரோட்டுல,
சொற்ப சம்பளத்துல
நானும்தான்.

எத்தனையோ தடைவ
நீ என்னை
"பெங்களூருக்கே வந்துருடா" அப்படின்னு
கெஞ்சிய போதும்
"தோட்டத்த பார்த்துக்கனும் நண்பா"
அப்படின்னு சொல்லி
தட்டி கழிச்சுட்டே வந்தேன்.

பதிவுகள், செய்திகள், குறும்படங்களுக்கான புதிய திரட்டி, பதிவுகளை இணைத்துக்கொள்ளுங்கள்



வேலைப்பளு காரணமா
கொஞ்சம் கொஞ்சமா
பிடி தளர்ந்துகிட்டே போனது
நமது நட்பு.


நீ அமெரிக்கா போனது கூட
அங்கிருந்து நீ போட்ட
மின்னஞ்சல் மூலம்தான்
தெரிய வந்தது.

கொஞ்ச காலம்,
நம்மை மறந்து ஓடிப்போனது.
நாமும் வாழ்க்கையின் சீற்றத்தில்
காலத்தினையும் மறந்து போனோம்.

நானும் டில்லியில்
நல்ல வேலையில் சேர்ந்து,
குடும்பதோட
அங்கே போனபோதுகூட
உன்னை மறக்கவே இல்லைடா.
ஒரு 2வாரம் கழிச்சு
நான் உனக்கு போட்ட
மின்னஞ்சலுக்கு பதிலே வரலை.
அப்படியே மறந்தும்,
வேலையினால் மரத்தும் போனேன்.
சில மாசம் கழிச்சு
சென்னைக்கு வந்த போது
உனக்கு போட்ட மின்னஞ்சல்,
டிஸ்க் கோட்டா ஓவர்ன்னு
எனக்கே திரும்பி வந்துச்சு.

வீட்டுக்கு போன் பண்ணி
உன்னோட தொலைபேசி
எண்ணை வாங்கி வெச்சுகிட்டு,
ISDன்னா நெறையா ஆகுமேன்னு
நினைச்சு அடுத்த மாசம் சம்பளம்
வாங்கி பேசிக்குவோம்ன்னு விட்டுட்டேன்.
இப்படியே ஒரு 2 வருசம்
சம்பளம் வாங்கிட்டேன்.

அதுக்கும் ஒரு நாள்
முடிவு வந்துச்சு.
என்னோட அலுவலகத்துலயே
எனக்கு ISD வசதியோட
தொலைபேசி தர,
நண்பனுக்குதான் முதல்ல கூப்பிட்டேன்.

இந்த எண் விளங்காம போயிருச்சுன்னு
ஒரு வெள்ளக்காரமா சொன்னப்பதான்
நம் நட்பின் தூரம்
தெரிய ஆரம்பிச்சது.

நான் ஈரோடு வீட்டுக்கு போனபோதுதான்
உன்னோட
கல்யாணப் பத்திரிக்கையைப் பார்த்தேன்.
ஒரு வருசம் முன்னாடியே ஆன
கல்யாணத்துக்கு என்னன்னு
வாழ்த்து சொல்ல? எப்படியோ
உங்க வீட்டுக்கு போன் போட்டு
உன்னோட செல் போன் நம்பர் வாங்கி
பார்த்தா சென்னையிலேயே
இருந்து இருக்க 3 வருசமா.

பல வருசம் கழிச்சு
நான் கூப்பிட்ட முதல் போன்கால்
"என்னை கண்டுபுடின்னு" நான் சொல்ல,
நீ என் குரல் மறந்து
"எங்கையோ கேட்ட குரல் மாதிரி இருக்கே"
அப்படின்னு சொன்ன போது
நமது நட்புக்குள்
ஒரு பெரிய இடைவெளி தெரிஞ்சுது.


எதேச்சையாக,
டிராபிக் சிக்னலில் ஹாய் சொல்லும்போதும்,
தியேட்டரில அசந்தர்ப்பமாக பார்த்து
படம் ஆரம்பிச்சுருமுன்னு அவசரத்துல
"எப்படிடா இருக்கேன்னு" கேட்கும் போதும்,
யாஹூ அட்ரஸ் புக்,
Facebook என
உன்னோட பிறந்த நாள்
ரிமைண்டர் வரும்போதும்,
இன்னும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது நம்முடைய நட்பு.

Monday, September 12, 2011

எங்கெங்கும் காதல்

காலை பால் பூத்தில் நைட்டிக்கும் லுங்கிக்கும்,
பேருந்தில் சிலவை headPhoneலும், SMSகளாகவும்,
இடுப்பில் கைவைத்தவுடன் நெளிந்தபடியும்,
சத்தமாகவும், கிசுகிசுப்பாகவும், குழைந்தும், குமறியும்,
சிட்டை கைமாறும்போதும்,
பேருந்து சன்னல்களின் வழியேயும்,
பேருந்து நிறுத்ததில் காத்திருத்தலாயும்,
ஷேர் ஆட்டோக்களின் நெருக்கத்திலும்,
சிறுநீர் கழிக்குமிடத்தில் இதயத்தின் நடுவில்லாமல்
சற்றே ஓரமாய் அம்புவிட்டும்,
கடற்கரை மணலின் சூட்டிற்கு மேலும் தகிப்பாயும்,
ஐஸ்கிரீம் கடைகளில் அனல் கக்கும் சூடாகவும்,
காஃபி கடைகளில் மெதுவாய் சூடு ஆறியபடியேயும்,
வயதைத் தாண்டியும்,
இன்னொருவன் மனைவி மீதேயும்,
புளிய மரத்தின் தோலை செதுக்கியும்,
பள்ளி குட்டைப்பாவாடையிலும்,
அரும்பு மீசை துளிர்விடும் நேரத்திலும்,
IT tagகள் ஒன்றோடு ஒன்று உரசியும்,
இருசக்கர வாகனத்தில் தொத்தியபடியேயும்,
ட்விட்டரில் RT/DMஆகவும்,
ஃபேஸ்புக்கில் Likesஆகவும் புகைப்படங்களாகவும்,
பாட்டியின் நெற்றிச் சுருக்கத்திலேயும்,
தாத்தாவின் சைக்கிள் கேரியரிலும்,
அப்பாவின் திறக்காத ட்ரங்க் பெட்டியிலும்,
எனக்கான பெயரிலும்,
நண்பன் எனக்கு சரக்கு வாங்கி குடுக்கவும்,
சென்னையின் வெப்பத்திலும்,
ஊட்டியின் குளிருலும்,
எங்கெங்கும் காதல்!




பாவம்,
எனக்குத்தான் அமையவில்லை காதலும்
அதற்கான காதலியும்!

Monday, July 18, 2011

தொட்ட போதெல்லாம் சிணுங்கினாள்


அவளுக்கெல்லாம் வயதே ஆவதில்லை!
தொட்ட போதெல்லாம் சிணுங்கினாள்
தொடுதிரையும்,
தொட்ட திரையில் அவளும்!

---------------------------------------------------------------------------









அடடே,
ஆச்சர்ய குறி
ரெண்டையும் கையில்
வைத்துக்கொண்டு அலைகிறேன்..

ஜூஜூபி!
கவிதை மட்டும்தான் மிச்சம்..
நிரப்ப எழுத்துக்களை
மாற்றியமைத்து முயற்சிக்கிறேன்!

ஆங்,
சொல்ல மறந்துவிட்டேனே!
வார்த்தைகளை
ஒன்றன்
கீழ்
ஒன்றாகவும்
அடுக்கவும்
எனக்குத்
தெரியும்!

-------------------------------------------------------------------------------------------

அனாதையின் கையில்
விண்ணப்பப் படிவம்!
அம்மா, அப்பா பெயரை நிரப்புமிடத்தில்
தடுமாறுகிறது பேனா!
----------------------------------------------------------------------------------------------

நடுத்தெருவில் ,
குற்றவாளியைச் சுட்டுக்கொன்றது
காவல்துறை...
தெருவோரக் கடையில்
“ஸ்டாராங்கா ஒரு டீ”
என்றான் குற்றவாளி

Wednesday, May 4, 2011

ரண்டு மூனு ஒன்னு

ஈரோடு கதிரின் அசல் இங்கே இருக்கு.. இது நகல் மட்டுமே


1)
ல்லா ஆண்களின் கனவுகளிலும்
யாரோ ஒருத்தியின் முகம்
மங்கலாய் வந்துபோகிறது
சிலசமயம் தெரிந்த பெண்ணாகவும்
பலசமயம் தெரியாத ஃபிகராகவும்


2)
காதலியோடு ஷாப்பிங்
அவஸ்தைகளை அளக்க
கருவிகளும் இல்லை
கற்பனையிலும் முடிவதில்லை
கிரெடிட் கார்ட் பில்லில் மட்டுமே
டவுசர் கழடுகிறது

3)
யாரோ ஒருவரின்
ஏதோ ஒன்று
எல்லாப் ஆண்களின் வாழ்க்கையிலும்
கால்நீட்டிப் படுத்திருக்கிறது.
காதல் சக்சஸாகவோ,
பார்களில் ஃப்ளாட்டிகியோ,
திருமணமாகி மண்டை காய்ஞ்சோ,
காதல் பரத் மாதிரி
”ஙே..ஙே..ஙே..” என்று போவதோ
ஆண்களில் மட்டுமே!

Monday, December 27, 2010

புணர்வென்னும் கலவையில்

சுருக்கமான நெளிவுகளுக்குள்
நீள்கோடாய்
ஒரு முற்றுப்புள்ளி!

இருட்டு வண்ண திரவம்,
வேறொரு நிற கலவை,
கலக்கமாய் பார்வை!



நிகழ்களுக்கிடையே ஓட்டம்,
கனவென்னும் கற்பனை,
சிறையில் அகப்படாத
என் ரோமம்,
தேடித் தேடியே
கலைந்து போகிறேன்
வக்கிரத்தை!


புணர்வென்னும் கலவையில்
ஒருமை காணும் தனிமை!

தொலையத் தொலைய
காண்கிற மாயை,
புகை மண்டலத்தில்
நீர் வேட்கை!
வெதும்புகிறேன் நான்!

மஞ்சள் படுக்கையில்
வெளிச்சம் தேடும் என் பார்வை,
பொய் சொல்லியே
ஏமாற்றுகிறதா
உவமை?

Tuesday, December 14, 2010

கிட்டாத கில்லி

வாங்கினால் கட்டமுடியாதென
தெரிந்தே நண்பனின்
கியாரண்டியோடு வாங்குகிறோம்
கடன்!

-0-


நிதமும் அடித்தே பழகிய சரக்கு
எப்படியும் வீடு போய்விடுவோம்
என்றே நினைத்து அடிக்கிறேன்
ஆனாலும் தினமும்
தெருவிலேயே ஃப்ளாட்டு!

-0-


பக்கத்து டேபிளில்
கிட்டாத சைட்டிஷ்
ஏக்கப் போதையாய்!
தள்ளாடுகிறது
நாவிலும் மனதிலும்

-0-

சரக்கடித்து சண்டை போடும்போது
உற்றுப் பார்க்கிறேன்
பக்கத்து வீட்டிலிருந்து எல்லாம்
என்னை எட்டிப் பார்க்கின்றன
நானே அறிந்திராத ஃபிகர்கள்!

--00--
ஈரோட்டு கதிரின் வரையாத புள்ளிக்கு எதிர்வினை

Wednesday, December 8, 2010

சுவாரஸ்யமில்லாத கவிதைகள்

தலைக்குளித்து பொட்டிட்டு,
சாமி கும்பிட்டு அவள் வருகையில்
கேட்காத வரம் எனக்கே கிடைக்கிறது,
சாமிக்கு ஏனிந்த ஓரவஞ்சனை?
----00----


பூக்களெல்லாம் ஒன்றுகூடி
வண்ணத்துப்பூச்சி மேலமர்ந்து
தேன் குடித்தது
பூச்சூடி வருகிறாள் காதலி

----00----

அவசர அவசரமாய் நீ
ஒப்பனை செய்துகொள்வதை
உள்வாங்கி வெட்கம் கொப்பளிக்க
பிரதிபலித்தது ஸ்கூட்டியின் கண்ணாடி!

----00----


க்ரேயான் கொண்டு படம் வரையவும்,
கிதார் பழகவும், கராத்தேவும் கற்றுக்கொள்ள
ஆரம்பித்திருக்கிறேன்,
சின்னவயதில் ஆசைப்பட்டதெல்லாம் நிறைவேறியது
நன்றாக சம்பாதிக்க ஆரம்பித்ததும்
கேலியும் கிண்டலும் சரியாகவே காதில் விழுகிறது,
என்ன செய்ய இப்பவும் செய்யவில்லையெனில்
எப்பொழுது ஆசைப்பட்டதை செய்ய?

----00----



ஸ்கூட்டியில் நீ!
நான் உன்னைத் தொடர
கண்ணாடியில்,
நானறியாமல் நீயும்
நீயறியாமல் நானும் பார்த்துக்கொள்ள
இருவரையும் ஒருங்கே பார்த்து சிரித்தது கண்ணாடி

----00----

Thursday, December 2, 2010

பேப்பருல வந்த என் போட்டா

(inspired by காணமல் போனவனை பற்றிய அறிவிப்பு by இராமசாமி)
நான் வீட்டை விட்டு ஓடிவந்து
பல மாசம் ஆகிப்போச்சு
குடிச்சுப்புட்டு அப்பா அடிச்சானேன்னு
கட்டையெடுத்து நொங்கிப்போட்டு
திருட்டு ரயிலேறி இங்க வந்தேன்
நானிருக்கும் ஊரில்
என்னைத் தெரிஞ்சவங்க யாருமில்லை
எனக்குத் தெரிஞ்சவங்களும் யாருமில்லை
ஊர்திரும்பிப் போகவும் ஆசைதான் எனக்கு!

எச்ச எலை எடுத்தாலும் கூப்பிடாம போவ
பாலாப் போன கெளரவம் தடுக்குது.
மாட்டுத் தரகன் சித்தப்பா இந்த ஊருக்கு
அடிக்கடி சந்தைக்கு வருவாராம்
சந்தையன்னைக்கு நானும் போய்பார்த்துகிட்டுதானிருக்கேன்


லாரி கிளீனர் தங்கராசுவாச்சும் வருவான்னு
பாத்துகிடக்கேன், பாவி மவன்
இந்த ஊருக்கு எப்ப வருவானோ தெரியல.
யாராவது என்னைப் பார்த்து ஊரில்
என்னைப் பத்தி சொன்னால் கோவத்தோட அப்பாவோ,
கண்ணீரோட அம்மாவோ வருவாங்கன்னு பார்த்தேன்.

அறிஞ்சவரும் ஆருமில்லை, தெரிஞ்சவங்களும் ஆருமில்லை
கண்டவனெல்லாம் ஏசறாங்க இங்கே
இதுக்கு அப்பன்கிட்ட படிக்காததுக்கு மிதி வாங்கி சாவலாம்.
துரைக் கடையில படிய வாருன தலையோட, திருநீறு வெச்சி
எடுத்தப் போட்டா கண்ணாடி மூலையில சொறுகியிருக்கும்
பேப்பருல காணாம போன பக்கத்துல
அந்தப் போட்டோ வருமான்னு தெனமும் பார்ப்பேன்..

அந்தா நாளும் வந்திச்சு அப்பன் செல்போன் கூட போட்டிருந்துச்சு
பாவி மவன் ஒருத்தன் பஜ்ஜி எண்ணெயெடுக்க அதையும் கிழிச்சுபுட்டான்.
அப்பனுக்கு நானே போன் பண்ணி சொல்லிபுட்டேன்,
வந்த அப்பன் நேரா மொதலாளிகிட்ட போனான்
“சம்பளத்தன்னிக்கு வந்து காச வாங்கிக்கிறேன்”ன்னு சொல்லிபுட்டு
என் கணக்குல பஜ்ஜி தின்னுட்டு போனான்.
தீவாளிக்கு வீட்டுக்கு வரச் சொன்னான் வக்காளி,
மொதல்ல அந்தப் போட்டாவை கிழிச்சுப் போடனும்..

Friday, November 5, 2010

வலிகளோடு தீபாவளி

அன்றுமட்டும் யாரும் எழுப்பாமல் எழுவான் தம்பி
”தலைக்கு எண்ணைய் தேய்ச்சி குளிடா”
அம்மாவின் கத்தல் தாளாமல்
ஒற்றை விரல் தொட்டு தலையில்
தேய்த்துக்கொண்டு குளியலறைக்கு ஓடுவான்
அப்பாவோ, சதசதவென எண்ணையிலேயே
துணிதுவைக்கும் கல்லின் மீது ஊறிக்கொண்டிருப்பார்


அம்மா எண்ணைய் பிசுக்கோடு
அன்றும் சமையலறையில பரபரப்பா இருப்பாள்
குளிப்பதென்னவோ மதியம் ஆகிவிடும்
எனக்கோ அலங்காரம் செய்து தோழிகளோட
கோவில் போய்வருவதே வேலை.
தாவணியின் சரசரப்போடு மிடுக்கோடு
நடந்து பழகும் நாள் அதுதானாயிருக்கும்,
போட்டிருக்கும் துணிகளைக் காட்டத்தான்
தோழிகளோட சேர்வதே அன்று.


புதுப்படம் பார்த்து துவைத்து கசங்கி
பசியோட வேகமாய் வருவான் தம்பி,
படம் பார்த்த கதை சொல்லி அடுத்தக் காட்சிக்கு
போக அப்பாவிடன் நைஸ் செய்வான்.
குளித்து புத்தாடை அணிந்து ஜம்மென்று
சாப்பிட உட்காருவார்கள் அப்பாவும் அம்மாவும்.
முறுக்கு, ஜிலேபி என்றும்
இட்லியும் கறிக்கொழம்பும் ஆவி பறக்கும்.

சாப்பிடும்போதே தொலைக்காட்சிக் நிகழ்ச்சிகளுக்கு
போர் ஒன்று மூளும், இறுதியில் வெல்வார் அப்பா,
யார் வீட்டுப் பட்டாசில் சத்தம் அதிகம் என்பதில் ஆரம்பித்து யார் வீட்டின் முன் அதிகம் குப்பையென காண்பதில்
முடியும் எங்களின் கெளரவம்.




அயல்நாட்டு வரனைக் கட்டிக்கொண்டதற்காக
தீபாவளி வராமலாப் போகும்?

இன்றும் தீபாவளியாம்...
நேற்று வைத்த சாப்பாட்டைக் கட்டிக்கொண்டு

வேகவேகமாய் அலுவலகம் செல்லும் வழியில்
அலைபேசியில் வாழ்த்துச் சொல்ல அழைத்தால்
வெடிச்சத்தம் இந்த ஊர் வரைக்கும் கேட்கிறது.
மனசு முழுசும் கொண்டாட்டத்துடன் அலுவலகம்
வந்தால் வெள்ளையனுக்கும் கருப்பனுக்கும்
அவனவன் வேலையை வாங்குவதில் கெட்டி.

பகலில் பதிவு செய்த தொலைக்காட்சி
நிகழ்ச்சிகளை இரவில் பார்த்தும்,
காப்பிசெய்த வாழ்த்துக்களை மின்னரட்டை,
முகநூல், நுண்ணிடுகை, தனி மடல், குழு மடல்
எல்லாவிடத்துலேயும் தூவி,
முகம் தெரியா மக்களுடன் கோவிலில் சாமி கும்பிடுகிறேன்.



கொண்டாட்டமில்லாத இந்த ஊரில் அவன் விசேசம் எனக்கில்லை
என் விசேசம் அவனுக்கில்லை,
ஆக மொத்தத்தில்
மனசில் ஆரம்பித்து மனசில்லாமலே முடிகிறது
எங்களுக்கும் தீபாவளி!

Saturday, August 14, 2010

ஆன்சைட்டும் ஆகஸ்டு 15ம்

விமான நிலையம்
கடக்கும் போதும்,
வானத்தில சப்தம்
எழுப்பிய படி
விமான செல்லும் போதும்,

நண்பனை வெளிநாட்டுக்கு

வழியனுப்ப அதே நிலையம்
வரும்பொழுதும்,

நண்பனிடம் நெட் சாட்டிங்கில்
பேசியபடி என்
ரெசியும்மை அவனிடம் நைசாக
தட்டிவிட்ட போதும்

டாலரும், பவுண்டும்,
ஏன் ஒரு ஆன் சைட் கூட
கிடைக்காதா என்ற ஏக்கத்தில்,
ஆதங்கத்தில், வருத்தத்தில்.....


சொல்கிறேன்
சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்!

*அஞ்சு வருசத்துக்கு முன்னாடி எழுதி, பதிஞ்சதுங்க. ஒரு மீள்பதிவு

Friday, June 18, 2010

அதுக்கென்ன?

விடிய விடிய அடித்து
பார்த்துப் பார்த்துச் சேர்த்த போதை
விடிந்ததும் கியாராக
------------------------

கழிவறைச் சுவர்களில்
எதிரொலிக்கிறது; படுக்கைறையின்
நிறைவேறாத பக்கங்கள்

-----------------------------

எந்த ஃபிகரும் மடிவதில்லை
பலரின் மனதை கலைத்து
விளையாடும் வீணனுக்கு

பிற்சேர்க்கை:
எந்த ஃபிகரும் நல்லா
இருப்பதில்லை; காலங்காத்தால
மேக்கப் இல்லாமல் பார்க்கும்பொழுது


---------------------------
மலை உச்சியில்
அடித்த தம் விட்டுச்செல்கிறது
அடிவாரம் வரை ’க’ப்பை

---------------------------
இதன் எதிர்மறைகள் கதிர் இங்கே! பழமைபேசி இங்கே!

Monday, May 31, 2010

அலைபேசியும் முதலிரவும்


என்னுடைய அலைபேசியில்
சிணுங்குவதைப் போலிருந்தது ரிங்டோன்,
முதலிரவில் அலைபேசி சிணுங்கியபடியே இருக்க,

சிணுங்க வேண்டியவள்
வெறுத்து, அயர்ந்து தூங்கினாள்
அலைபேசியையும், அவளையும்
ஒருங்கே அணைத்தேன்
விடியும் வரை
அவள் சிணுங்கிக்கொண்டே இருந்தாள்
தூங்கி வடிந்தது அலைபேசி!

-----------------------------------------------------------------------------------




”அலைபேசியும் நானும் ஒன்றா?”
எப்படி என்றாள்
இரண்டையுமே இரவில் ரீசார்ஜ் செய்ய வேண்டியிருக்கிறது
இல்லையெனில்,
அலைபேசி Battery out,
உனக்கு மூட் அவுட்.
’போடா இடியட்’ என்றாள்.



------------------------------------------------------------------------
என்ன கோபமோ தெரியவில்லை,
திட்டியபடியே சாப்பாடு பரிமாறினாள்,
திட்டியபடியே தொலைகாட்சியினை அணைத்தாள்,
திட்டியபடியே படுக்கையை சரிசெய்தாள், பிறகு
என்னைக் கொஞ்சிக்கொண்டே இருந்தாள்!
-----------------------------------------------------------------------




தினமும் திட்டிகொண்டே இருப்பவளுக்கு
'ஒரு விடுமுறை தாயேன்' என்றேன் - சண்டை
முற்றியதும் தாய் போகிறேன் என்றாள்
அவள் பேருந்தில் அமர்ந்தவுடன்,
அவளுக்கு நேரெதிர் திசையை நோக்கியபடி கீழே நான்.
குண்டுமணியாய் கண்ணீர் திரண்டிருந்தது,
திரும்ப அழைத்து வந்துவிட்டேன் வீட்டிற்கு,
தொலைக்காட்சியை உயிர்பித்தேன்,
”எந்நேரமும் அதேதான், நான் ஒருத்தி இங்கே....”
மறுபடியுமா?
--------------------------------------------------------------------------------------

முதலிரவில்,
அரசியல் தெரியுமா? எனக் கேட்டாள்
மேலவையில் ஆரம்பிப்போமா என்றேன்,
அவளுக்குத்தான்
என்னுடைய அரசியல் புரியவில்லை!

Tuesday, February 9, 2010

Feb-14ம் 140ம்

சிற்பங்களைப் பற்றிய
கவிதை எழுதச் சொன்னார்கள்.
உன்னை வரைந்து விட்டுப்போனான்
ஓவியன்!

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

உன்னைப்பற்றிய கவிதைகளை போட்டுடைத்தோம்,
சிதறி ஓடியது ஒரு கும்பல்

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

பின்நவீனத்துவ கவிதயொன்றை கேட்டாய்.
நீ என்றேன்.
ஏன் என்றாய்.
எந்தகாலத்தில் உன்னைப்
புரிந்துகொள்ள முடிந்தது!

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

நல்ல வேளை
தபூசங்கர் உன்னைப்பார்க்கவில்லை-பார்த்திருந்தால்
கவிதை எழுதுவதை மறந்துவிட்டு,
உன்னை காதலிக்க மட்டுமே செய்திருப்பார்

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

உலர்ந்த ஆடைகளை
எடுக்க வந்தவளை sight அடித்தேன்- என்னைத்
துவைத்து காயவைத்து விட்டு போனான்
உன் அண்ணன்

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

சுருட்டு பிடித்தபடி அஜித்,
கேட்டார் அன்புமணி,
என் வாழ்க்கையயே சுருட்டியபடி நீ
கேட்பார் யாருமில்லையே!

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

140 எழுத்திற்குள்
உன்னைப்பற்றி கவிதை எழுதவேண்டுமாம்.
I quit twitter!

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

கண்கள் மூடி கும்பிட்டபடி நீ
ஹ்ம்ம் அம்மனுக்கு ஏனிந்த
Proxy வேலை!

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

ஒரு அம்மனே!
இன்னொரு
அம்மனை
தரிசிக்கச்
சென்றதே!
அடடே..
ஆச்சர்யகுறி!

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

காதலித்துபார்...
உன்னைச் சுற்றி ஒளி வட்டம் தோன்றும்
என்றார் வைரமுத்து.
காதலித்தேன்,
வட்டம் பெரிதாகியது,
ஒளியாக நீ!
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி

  தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை  -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை  காசி  எழுதியது தமிழோவியத்துக்காக  பாஸ்டன் பாலாஜி  க...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நாகேஷ் (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) வாலி (1) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)