Friday, November 5, 2010

வலிகளோடு தீபாவளி

அன்றுமட்டும் யாரும் எழுப்பாமல் எழுவான் தம்பி
”தலைக்கு எண்ணைய் தேய்ச்சி குளிடா”
அம்மாவின் கத்தல் தாளாமல்
ஒற்றை விரல் தொட்டு தலையில்
தேய்த்துக்கொண்டு குளியலறைக்கு ஓடுவான்
அப்பாவோ, சதசதவென எண்ணையிலேயே
துணிதுவைக்கும் கல்லின் மீது ஊறிக்கொண்டிருப்பார்


அம்மா எண்ணைய் பிசுக்கோடு
அன்றும் சமையலறையில பரபரப்பா இருப்பாள்
குளிப்பதென்னவோ மதியம் ஆகிவிடும்
எனக்கோ அலங்காரம் செய்து தோழிகளோட
கோவில் போய்வருவதே வேலை.
தாவணியின் சரசரப்போடு மிடுக்கோடு
நடந்து பழகும் நாள் அதுதானாயிருக்கும்,
போட்டிருக்கும் துணிகளைக் காட்டத்தான்
தோழிகளோட சேர்வதே அன்று.


புதுப்படம் பார்த்து துவைத்து கசங்கி
பசியோட வேகமாய் வருவான் தம்பி,
படம் பார்த்த கதை சொல்லி அடுத்தக் காட்சிக்கு
போக அப்பாவிடன் நைஸ் செய்வான்.
குளித்து புத்தாடை அணிந்து ஜம்மென்று
சாப்பிட உட்காருவார்கள் அப்பாவும் அம்மாவும்.
முறுக்கு, ஜிலேபி என்றும்
இட்லியும் கறிக்கொழம்பும் ஆவி பறக்கும்.

சாப்பிடும்போதே தொலைக்காட்சிக் நிகழ்ச்சிகளுக்கு
போர் ஒன்று மூளும், இறுதியில் வெல்வார் அப்பா,
யார் வீட்டுப் பட்டாசில் சத்தம் அதிகம் என்பதில் ஆரம்பித்து யார் வீட்டின் முன் அதிகம் குப்பையென காண்பதில்
முடியும் எங்களின் கெளரவம்.




அயல்நாட்டு வரனைக் கட்டிக்கொண்டதற்காக
தீபாவளி வராமலாப் போகும்?

இன்றும் தீபாவளியாம்...
நேற்று வைத்த சாப்பாட்டைக் கட்டிக்கொண்டு

வேகவேகமாய் அலுவலகம் செல்லும் வழியில்
அலைபேசியில் வாழ்த்துச் சொல்ல அழைத்தால்
வெடிச்சத்தம் இந்த ஊர் வரைக்கும் கேட்கிறது.
மனசு முழுசும் கொண்டாட்டத்துடன் அலுவலகம்
வந்தால் வெள்ளையனுக்கும் கருப்பனுக்கும்
அவனவன் வேலையை வாங்குவதில் கெட்டி.

பகலில் பதிவு செய்த தொலைக்காட்சி
நிகழ்ச்சிகளை இரவில் பார்த்தும்,
காப்பிசெய்த வாழ்த்துக்களை மின்னரட்டை,
முகநூல், நுண்ணிடுகை, தனி மடல், குழு மடல்
எல்லாவிடத்துலேயும் தூவி,
முகம் தெரியா மக்களுடன் கோவிலில் சாமி கும்பிடுகிறேன்.



கொண்டாட்டமில்லாத இந்த ஊரில் அவன் விசேசம் எனக்கில்லை
என் விசேசம் அவனுக்கில்லை,
ஆக மொத்தத்தில்
மனசில் ஆரம்பித்து மனசில்லாமலே முடிகிறது
எங்களுக்கும் தீபாவளி!

19 comments:

  1. வலி சொல்லும்பதிவு......அடுத்த் தடவையாவது வழி ..பிறக்க வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  2. அய்யே, நமெக்கெல்லாம் தீபாவளி, "தேங்க்ஸ்கிவிங்" தான். ஃபுட்பால் பார்த்துட்டு, ஷாப்ப்பிங் பண்ணிட்டு, டர்க்கி டின்னர் சாப்பிடுங்க!

    ReplyDelete
  3. ரொம்ப டச்சிங்கா இருக்கு, குறிப்பா
    "மனசில் ஆரம்பித்து மனசில்லாமலே முடிகிறது
    எங்களுக்கும் தீபாவளி!" ஆனாலும் இதெல்லாம் மீறி சந்தோஷமா தீபாவளி கொண்டாட வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. எப்படிங்க, எனக்கும் இன்னைக்கு பூரா இது தான் தோனிட்டு இருக்கு.

    என்னவோ போங்க, இனிமெ வருண் அவங்க சொல்லுற மாதிரி, தேங்க்ஸ்கிவிங் தான் போல :((

    ReplyDelete
  5. அருமை...இதுவும் ஒருவித புலம் பெயர்தல்தானே நண்பரே!

    ReplyDelete
  6. பணம் சார்ந்த சந்தோஷம் வேண்டாம், மனம் சார்ந்த சந்தோஷம் போடும் என்று முடிவு எடுத்து இங்கே வந்து விடுங்கள்

    ReplyDelete
  7. Come on Ila, இதெல்லாம் கிடைக்காதுன்னு தெரிஞ்சுதானே அமெரிக்கா வர்றோம், அப்புறம் புலம்பல் எதுக்கு? நம்ம கண்ட்ட்ரோல்ல இருக்கும் இந்தியா விசிட்டைக் கூட நாம் தீபாவளி சேர வைத்துக் கொள்வது கிடையாது ஆனா புலம்பல் மட்டும் தவறவே தவறாது.

    என்றும் அன்புடன்
    பாஸ்டன் ஸ்ரீராம்.

    ReplyDelete
  8. புலம்பலுக்கு தொடர்பில்லாத முதல் படம். மாத்துங்களேன்

    அப்புறம், இங்க ஒண்ணும் தீபாவளி பெருசா இருக்கிறது இல்ல.. எங்க வீட்டுக்கு இன்னும் யாரும் ஸ்வீட் கொடுக்கல. நான் தான் போய் போய் கொடுத்து, வாங்கிட்டு வறேன்

    ReplyDelete
  9. //.அடுத்த் தடவையாவது வழி//
    இது சத்தியமா புனைவுங்க. எனக்கு எந்த ஃபீங்கும் இல்லே, தொகா நிகழ்ச்சிகளை பார்க்காம விட்டதைத் தவிர.

    ReplyDelete
  10. வருண்-->நீங்க வெள்ளைக்காரரு. நாம அப்படியா? அதுவுமில்லாம இந்தக் கவிதை ஒரு பொண்ணோட பார்வையில இருக்கு. So this wont apply for me.

    UVMP--> என்ன நடந்துச்சுன்னு 2ஐ அழிச்சுட்டு போயிட்டீங்க?

    முகுந்த அம்மா--> பின்னூட்டத்துக்கு நன்றின்னு கூட சொல்ல முடியாத நிலைமை எனக்கு :)

    ReplyDelete
  11. அன்பரசன், சுரேகா--> நன்றி.

    ராம்ஜி யாஹூ--> இது ஒரு திரிசங்கு நிலைமைங்க. ஒரு விசேசமா இல்லே மத்த நாட்களாங்கிற மாதிரி

    ReplyDelete
  12. ஸ்ரீராம்--> சாமீ, இது ஒரு புனைவே.

    கார்க்கி--> ஒரு பொண்ணோட பார்வையால இந்தப் புனைவு இருக்கிறதாலதான் பொண்ணோட படம். நம்மளை மாதிரியே மாறிட்டீங்க போல.

    ReplyDelete
  13. கவிதை டாப்’

    என்னைக்கவர்ந்த வரிகள்>>>


    யார் வீட்டுப் பட்டாசில் சத்தம் அதிகம் என்பதில் ஆரம்பித்து யார் வீட்டின் முன் அதிகம் குப்பையென காண்பதில்
    முடியும் எங்களின் கெளரவம்.>>>

    சூப்பர்

    ReplyDelete
  14. எந்த ஒரு பண்டிகை என்றாலுமே, எல்லாருக்கும் பழசைப் பற்றிய ஏக்கம் வந்து விடுகிறது,அனிச்சையாய்!



    அன்புடன்,

    ஆர்.ஆர்.ஆர்.

    ReplyDelete
  15. அயல் நாட்டில் வாழும் நம்மவர்களின் உணர்வுகளை ஒரு கவிதையாக்கி விட்டீர்கள்.மிக அருமை.

    ReplyDelete

தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி

  தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை  -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை  காசி  எழுதியது தமிழோவியத்துக்காக  பாஸ்டன் பாலாஜி  க...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நாகேஷ் (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) வாலி (1) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)