Thursday, December 29, 2005

சண்டக்கோழி-விமர்சனம்


படத்துக்கு, வேகம்னு பேர் வெச்சு இருக்கலாம், அவ்வளவு வேகம். படம் ஆரம்பிச்சதுக்கும், இடைவேளைக்கும் என்னமோ ஒரு நிமிஷம்தான்கிற மாதிரி முதல் பாதி சரியான வேகம்.

படத்தின் கதை நாம எப்போங்கோ சொல்லிருக்கோம் இத சொடுக்கி பார்த்துக்கோங்க.

படத்துல குறைன்னு சொன்னா அது CLIMAX௯தான். நட்சத்திர அந்தஸ்த்து இல்லைன்கிற குறை CLIMAXல தெரியுது. படம் முடிஞ்சப்புறம் "சே! CLIMAX௯ல விஜய்யோ, ஜெயம் ரவியோ நடிச்சிருந்தா இன்னும் சூப்பரா இருந்திருக்குமே" அப்படிங்கிற குறை இருக்கத்தான் செய்யுது. சண்டை காட்சிகளில் ரொம்ப சிரமப்பட்டு இருக்காங்க, அதுக்கான பலனும் தெரியுது.

விஷாலும் சரி, மீரா ஜாஸ்மினும் சரி, ராஜ்கிரணும் சரி நடிப்புல பின்னி பெடல் எடுத்திருகாங்க. யுவன் இசை ரசிக்கிற மாதிரி இருக்கு, "இரவு" பாடல் படம் முடிஞ்சாலும் முணுமுணுக்க வைக்குது. 'ஜி' படத்துக்கப்புறம் இந்த படம் அப்படிங்கிறதுனால கடுமையாவே உழைச்சிருக்கார் லிங்குசாமி. மறுபடியும் ஜெயிச்சு காட்டியிருக்கார்.

குடும்பத்தோட பார்க்கலாம், நல்ல படம்ங்க

Friday, December 23, 2005

சிறந்த இந்தியர் 2005

இந்த வருடத்திய சிறந்த இந்தியருக்கான் தேர்வு பட்டியலை ஏர்டெல் , NDTV நிறுவனமும் இணைந்து நடத்துகிறது. ஒரு 10 பேர் பட்டியலையும் அது குடுத்து இருக்கிறது (அதில் ஏன் கலா நிதி மாறன் பெயர் இல்லை?)

ராகுல் டிராவிட் - வழக்கம்போல பொறுப்புகளை தோல்மேல் சுமந்து விளையாடுவதில் எந்த மாற்றமும் இல்லை, டால்மியா-பாவார் அரசியலில் "தாதா" ஓரங்க்கட்ட பட இவருக்கு அடித்தது யோகம்.

சானியா மிர்சா - ஒரு காலத்தில் பி.டி.உஷா பெற்ற புகழை விட அதிகமாக குறுகிய காலத்தில் பெற்றார், சச்சரவும் கூட. பெண்கள் டென்னிசுக்கு அம்மணி போட்டதுதான் பிள்ளையார் சுழி. இப்பொழுது அம்மணி தரப்பட்டியலில் இடம் குறைந்து வருகிறார், பார்த்துக்கோங்க.

சோனியா காந்தி, மன்மோகன் சிங் - அரசியலில் பெரிய மாற்றம் ஒன்றும் தெரியவில்லை.

நிதிஷ் குமார் - உண்மைய சொன்னேன் சீட்டு கெடச்சது அப்படின்னு பாட்ஷாவுல தலைவர் சொல்வார். அது மாதிரி சொல்லி கில்லி மாதிரி வெற்றி பெற்றவர். என்ன செய்வார் என பொறுத்து இருந்து பார்ப்போம். பீஹாரின் தலை எழுத்த மாத்திட்டா அடுத்த வருஷம் என்னுடையா ஓட்டு இவருக்குதான், இப்போ இல்லே.

நாரயண மூர்த்தி - இவரால வாழ்ற மக்கள் நிறைய, இருந்தாலும் பெங்க்ளூருக்கு ஏதாவது செய்ங்க.

S. மஞ்சு நாத் - பாவபட்ட ஜென்மமம், ஒரு காலத்தில் சத்யஜித் தூபே, இப்போ இவர், பீஹாரின் ரத்தப்பசிக்கு பலியாகும் IIT. IIMகள் பட்டியலில் இவருக்கும் இடம் கிடைத்து இருக்கிறது. என்னுடையா ஓட்டு இவருக்கு கண்டிப்பாக உண்டு.

அத்வானி, அருணா ராய், லக்ஷ்மி மிட்டல், சச்சின் டெண்டுல்கர், அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய் எல்லாம் எதுக்கு இந்த பட்டியலில்?

Thursday, December 15, 2005

தொடர்பு எல்லை

இன்னிக்கு என்னோட நண்பர் ஒருவர் அலுவலக மடல்ல தன்னோட சந்தோசத்தைப் பகிர்ந்துகிட்டார். அது அவருக்கு சந்தோசம், எனக்கு கவலையாய் பட்டுச்சு. அது தானுங்க இந்தப் பகிர்வுக்குக் காரணம்.



நண்பர் கன்னடிகர், Onsite போயி 3 வருசம் ஆச்சு. அமெரிக்காவுல பிள்ளைப் பெற்றுக்கொண்டால், அமெரிக்காவோட குடியுரிமை கிடைச்சிருமாம். அதனால அவரும், அவர் மனைவியும் மட்டுமே பேறு காலம் மட்டுமில்லைங்க, பிரசவத்தையும் சமாளிச்சுட்டாங்க. பிரசவம் ஆகி 4 மாசம் இருக்கும். நிற்க.



இந்த மாதிரி புலம் பெயர்ந்து வாழ்வதால்(நண்பருக்கு தற்காலிக பெயர்வுதானுங்க) வாழும் தலைமுறைக்கு எந்தப் பிரச்சினையும் இருப்பதில்லை. வெளிநாட்டில் வாழும் வாரிசுகளால், மூத்த தலைமுறையினருக்கு பெருமையாய் இருந்தாலும் அவர்கள் இழப்பது ஏராளம். ஏனெனில் இந்த நண்பரின் எடுத்துக்காட்டைப் பாருங்களேன்.



இப்ப முதல் பத்தியைப் படிங்க புரியும், சந்தோசத்துக்கான காரணம், தன்னோட குழந்தையை பெற்றோர்கள் இணையம் வழியாய் பார்த்துட்டாங்களாம்.(Yahoo Messenger- Video Chat). பெற்றோர்களும் சந்தோசப் பட்டுட்டதா சொன்னாரு. எனக்கென்னமோ அப்படித் தெரியலைங்க. இந்த மாதிரி மாய உலகத்துல வாழ எதற்கு உறவுகள், ஒரு எட்டு அவங்களோ இல்லே இவுங்களோ பார்த்துட்டு வந்திருக்கலாமே?



கொஞ்சம் வருசம் கழிச்சு அந்தப் பையன், தாத்தா பாட்டியோட யாஹூவிலயே பேசிட்டு இருப்பான். கண்ணியில வந்தா மட்டும்தான் தாத்தா பாட்டியைத் தெரியும், நேரில் பார்த்தால் தெரியாது.

அதே மாதிரி பெற்றோரை நினைச்சுப் பாருங்க.அள்ளியெடுத்து, உச்சி முகர்ந்து, முத்தமிட்டு, குழந்தைக்கு சேவை செய்யுற அந்த சந்தோசம் இந்த கண்ணாடித்திரையில் கிடைச்சிடுமா, என்ன?

 வருங்காலத்துல யாஹூ மாதிரி இன்னும் நிறைய வரலாம். எல்லாம் மாயை தானுங்களே. இந்த மாதிரி காட்சியை சினிமாவுல கூட இன்னும் நாம பார்க்க ஆரம்பிக்கலை. ஆனா உண்மையா நடந்துட்டு வருது. எனக்கு மட்டும் சினிமா எடுக்கிற சக்தி இருந்தா இதையே ஒரு படம் கண்டிப்பா எடுப்பேன்.



சரி, நம்ம புராணம் விடுங்க. வீட்லயே இணைப்பு வாங்கித்தந்து பெற்றோரை தினமும் பார்க்க வெக்கனுமாம். அதுதான் நமக்கு குடுத்த assignment, மேலாளர் ஆச்சே. Indicomஓ, ரிலையன்ஸோ தயார் பண்ணிட்டு வந்து பதில் சொல்றேங்க!

Tuesday, December 13, 2005

தத்துவம்

சில நேரங்களில் தத்துவம் நல்லாதான் இருக்கும், இப்போ இருக்குற கொஞ்ச நேரத்துல சிரிக்க வைச்ச சில மகத்துவமான தத்துவங்களை உங்களுக்கு சமர்பிக்கிறேன். நன்றி Junker

1) ரயில் எவ்வளவு வேகமா போனாலும், கடைசி பெட்டி கடைசியாதான் போகும்

2) Cell Phoneல balance இல்லைன்னா call பண்ண முடியாது....ஆனா மனுஷனுக்கு கால் இல்லைன்னா balance பண்ண முடியாது

3) பஸ் போயிட்டா பஸ் ஸ்டேண்ட் அங்கையே தான் இருக்கும், ஆன cycle போயிட்டா cycle stand கூடவே போகும்

4) Filesன்னா உட்கார்ந்து பார்க்கனும், ஆன Piles ன்னா பார்த்து உட்க்காரனும்

5) கட்டில் உடைஞ்சால் படுக்க முடியாது, கண்ணாடி உடைஞ்சால் பார்க்க முடியாது. ஆனால் முட்டைய உடைச்சால் தான் ஆம்லெட் போட முடியும்

6) அரிசி கொட்டினா வேற அரிசி வாங்கலாம், பால் கொட்டினா வேற பால் வாங்கலாம் ஆனா தேள் கொட்டினா வேற தேள் வாங்க முடியாது

7) வாயால "நாய்"ன்னு சொல்ல முடியும் ஆனா... நாயால "வாய்"ன்னு சொல்ல முடியுமா?

8) நேரம் சரி இல்லைன்னா ஒட்டக்கத்துக்கு மேல ஏறி உக்கார்ந்தாலும் நாய் கடிச்சு வைக்கும்

நாளை என் மனதை உலுக்கிய "தவமாய் தவமிருந்து" படத்தை விமர்சிக்கிறேன்

தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி

  தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை  -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை  காசி  எழுதியது தமிழோவியத்துக்காக  பாஸ்டன் பாலாஜி  க...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நாகேஷ் (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) வாலி (1) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)