கணவன் - கணிணியில் வேலையாய் இருக்க, சமயலறையில் மகள், மனைவியிடையே ஏதோ வாக்குவாதம்.
கணவன்: என்ன இங்க சண்டை உங்க ரெண்டு பேருக்குள்ளேயும்?
மனைவி : அதான் இவ்ளோ நேரம் பேசிக்கிட்டிருந்தோம்ல. அதான்.
கணவன்: ஏதோ புஸ்தகம்னு காதுல விழுந்துச்சு, அதுக்கும் மேல ஒன்னும் கேட்கலயே
மனைவி : இவ்ளோ நேரம் அதைப் பத்திதானே பேசிக்கிட்டிருந்தோம். இப்ப வந்து என்னான்னு கேட்டா?
கணவன்: கவனிக்கலைம்மா.
மனைவி : அதான, நாங்க பேசும் போது நீங்க எங்கே கவனிச்சிருக்கீங்க?
கணவன்: வேற வேலையா இருந்தேன்மா. அதான் கவனிக்கலை
மனைவி : நாங்க பேசினா மட்டும் உங்களுக்கு வேற வேலை வந்திரும்ல?
கணவன்: சரி, விடு நான் கேட்கலை.
மனைவி : அதான? வீட்டு மேல அக்கறை இருந்தா என்ன பேசியிருப்போம்னு கேட்டிருப்பீங்கள்ல?
கணவன்: அக்கறை இல்லாமத்தான் கேட்க வந்திருப்பேனா?
மனைவி : அக்கறை இருந்திருந்தா முதல்லயே வந்திருக்கமாட்டீங்களா? அதான் இல்லைன்னு தெரியுமே.
கணவன்: ஷ்ஷ்ஷ், நான் கேட்டதுதான் குத்தமா?
மனைவி : ஓ, அப்ப நான் சண்டை போட்டதுதான் குத்தமா?
கணவன்: என்னான்னு தெரியாம நான் எப்படி குத்தம்னு சொல்லுவேன்.
மனைவி : எனக்கு வேறை வேலையில்லாம நாந்தான் உங்க ரெண்டு பேர் மேலையும் குத்தம் சொல்லிக்கிட்டிருக்கேனா?
கணவன்: சரி, விடு, எனக்குத் தெரிய வேண்டியது எல்லாம் ....
[மறுபடியும் சிகப்பிலிருக்கும் வரியில இருந்து படிக்கவும்..]
Showing posts with label பெற்றோர். Show all posts
Showing posts with label பெற்றோர். Show all posts
Monday, October 1, 2012
Wednesday, September 12, 2012
20/365 தெய்"Weak"கக் காதல்
- மனோ நிலை அப்படிங்கிறாங்களே, ஏன் SPB நிலை, யேசுதாஸ் நிலைன்னு இல்லை..?
--00o00--
- Cat வாக் அப்படின்னு சொல்லிட்டு துணி போட்டுகிட்டு நடந்து வராங்க.. எந்த பூனை துணி போட்டுகிட்டு நடக்குது?
--00o00--
- கூடங்குளம், 20 நாட்களில் மின்சாரம் உற்பத்தி தொடங்கும். - மத்திய மந்திரி நாராயணசாமி #டீ தூள் பழசாவே இருக்கே, மாத்த மாட்டீங்களா?
--00o00--
- இளையராஜா - ஐபோன். ஏ.ஆர்.ரகுமான் - அண்ட்ராய்ட் போன். நான் LandLine. எதுல இருந்து Call வந்தாலும் பேசுவேன்.
--00o00--
- புல்ஸ்கேப் நோட்டை மாரோட அணைச்சுட்டு வருகிற அதே பாணியைத்தா இப்பவும் பெண்கள் செய்கிறார்கள். ஆனா நோட்டுக்குப் பதில் iPad, Laptop
--00o00--
- பிரபாகரன் அறிமுகமாகும் படத்திற்கு பொருத்தமான தலைப்பு “கேப்டன் மகன்”
--00o00--
- என்னுடைய முதல் படத்தில் இருந்தே ****டன் வொர்க் பண்ண ஆசை.- Default Template for Directors.
--00o00--
- நமக்கெல்லாம், பெண்கள் கதாநாயகிகளாகவும், ஆண்கள் எல்லாம் காமெடியன்களாகவும் தெரியும் மாநிலம், கேரளம் மட்டும்தான் #ஓணம்
--00o00--
- பயத்திற்கும், பாசத்திற்கும் இடையில்தான் ஊசலாடுகிறது அப்பா-மகன் உறவு
--00o00--
- பிரியும் வேலையில்தான் புரிகிறது "நாம இன்னும் கொஞ்சம் அன்பை காட்டியிருக்கலாமோ?" என்று
--00o00--
- ஆரம்பத்தில் தெய்வீகக் காதலாக இருப்பதெல்லாம் கொஞ்ச நாள் கழிச்சு தெய்”வீக்” காதலா மாறிடுவதுதானே வழக்கம்
--00o00--
- "இன்னிக்கு சாயங்காலம் என்ன சமைக்கிறது?" - இந்தக் கேள்விக்கு முதல் நிமிசத்தில பதில் சொல்லிட்டான்னா அவன்தான் உண்மையான புருசன்
Thursday, September 6, 2012
13/365 பிரியும் பிஞ்சு மனசுகள்
நண்பனின் மகனுக்கு 6 வயது. இன்னொரு நண்பனின் மகனுக்கு 5 வயது. இருவரும் உற்ற தோழர்கள். அமெரிக்காவில் ஒரு குடும்பமே நட்பாய் இருப்பது என்பது அபூர்வம். அதாவது அப்பா- அப்பா, அம்மா-அம்மா, மகன் - மகன்.
மகன்கள் இருவருமே விட்டுக்குடுக்க மாட்டார்கள், அப்பா என்ன சொன்னாலும் “இல்லேப்பா, அவன் சொன்னான் சரியாத்தான் இருக்கும்” என்று சின்ன வயசே ஆனாலும் இருவருக்குமான நட்பு அப்படியாகத்தான் இருந்தது. போன வாரம் வரையில். ஆமாம், ஒரு குடும்பம் For Good இந்தியா கிளம்ப, பசங்களுக்கும் ஒரு குடும்பம் இந்தியா போவதாகச் சொன்னாங்க. பசங்க ரெண்டு பேருக்குமே அதனோட விபரீதம் புரியல, ஊருக்கு போயிட்டு வந்துடற மாதிரி நினைச்சிகிட்டே இருக்காங்க.
போனவாரம், பிரிஞ்சுப் போற குடும்பத்துக்காக, ஒரு Get toghether நடந்துச்சு. எல்லார் முகத்துலையும் கவலை தாண்டவமாடுது. பல வருடங்கள் பழகிய நட்பு, பிரியப் போவுதேங்கிற கவலை. பரிசுப் பொருட்கள் கை மாறுது. ஆனாலும் பசங்க எப்பவும் போல விளையாடுறாங்க, அடிச்சுக்கிறாங்க.
கிளம்புற நேரத்துல, எல்லாருக்கும் கண்ணுல தண்ணீர் வராத குறை, பசங்களுக்கு அது புரியவே இல்லை. “எப்போப்பா அவன் வீட்டுத் திரும்ப வருவோம்?” அப்படின்னு ஒரு பையன் கேட்க பதில் சொல்ல முடியாம அப்பா முழிக்கிறாரு. ரெண்டு பசங்களும், வழக்கம் போல, ”அப்புறம் வரேன், உன்னோட இந்த பொம்மை எடுத்துட்டுப் போறேன், அப்புறம் தந்துடறேன்” இப்படியே பேசிட்டு கிளம்பிட்டாங்க. அவுங்களுக்குத் தெரியலை, பசங்க சந்திக்கப்போறது இதுதான் கடைசின்னு.
நான், இந்தப் பசங்களைப் பார்த்துதான் ரொம்ப சோகமானேன். விவரம் தெரியாத வயசுல, ஒருத்தன் பிரிஞ்சு போறான்னு தெரியாம, விளையாண்டு, பை பை சொல்லிட்டுப் போறாங்க. வாழ்வுக்காக எத்தனையோ பேரை பிரியறோம். ஆனா பிரிச்சும் வைக்கிறோம்ங்கிறது எத்தனைப் பேருக்குத் தெரியுது?
நம்மோட வாழ்க்கைக்காக பிரியும் இந்த பிஞ்சு மனசுகளோட பாவத்துக்கு யார் பொறுப்பு?
மகன்கள் இருவருமே விட்டுக்குடுக்க மாட்டார்கள், அப்பா என்ன சொன்னாலும் “இல்லேப்பா, அவன் சொன்னான் சரியாத்தான் இருக்கும்” என்று சின்ன வயசே ஆனாலும் இருவருக்குமான நட்பு அப்படியாகத்தான் இருந்தது. போன வாரம் வரையில். ஆமாம், ஒரு குடும்பம் For Good இந்தியா கிளம்ப, பசங்களுக்கும் ஒரு குடும்பம் இந்தியா போவதாகச் சொன்னாங்க. பசங்க ரெண்டு பேருக்குமே அதனோட விபரீதம் புரியல, ஊருக்கு போயிட்டு வந்துடற மாதிரி நினைச்சிகிட்டே இருக்காங்க.
போனவாரம், பிரிஞ்சுப் போற குடும்பத்துக்காக, ஒரு Get toghether நடந்துச்சு. எல்லார் முகத்துலையும் கவலை தாண்டவமாடுது. பல வருடங்கள் பழகிய நட்பு, பிரியப் போவுதேங்கிற கவலை. பரிசுப் பொருட்கள் கை மாறுது. ஆனாலும் பசங்க எப்பவும் போல விளையாடுறாங்க, அடிச்சுக்கிறாங்க.
கிளம்புற நேரத்துல, எல்லாருக்கும் கண்ணுல தண்ணீர் வராத குறை, பசங்களுக்கு அது புரியவே இல்லை. “எப்போப்பா அவன் வீட்டுத் திரும்ப வருவோம்?” அப்படின்னு ஒரு பையன் கேட்க பதில் சொல்ல முடியாம அப்பா முழிக்கிறாரு. ரெண்டு பசங்களும், வழக்கம் போல, ”அப்புறம் வரேன், உன்னோட இந்த பொம்மை எடுத்துட்டுப் போறேன், அப்புறம் தந்துடறேன்” இப்படியே பேசிட்டு கிளம்பிட்டாங்க. அவுங்களுக்குத் தெரியலை, பசங்க சந்திக்கப்போறது இதுதான் கடைசின்னு.
நான், இந்தப் பசங்களைப் பார்த்துதான் ரொம்ப சோகமானேன். விவரம் தெரியாத வயசுல, ஒருத்தன் பிரிஞ்சு போறான்னு தெரியாம, விளையாண்டு, பை பை சொல்லிட்டுப் போறாங்க. வாழ்வுக்காக எத்தனையோ பேரை பிரியறோம். ஆனா பிரிச்சும் வைக்கிறோம்ங்கிறது எத்தனைப் பேருக்குத் தெரியுது?
நம்மோட வாழ்க்கைக்காக பிரியும் இந்த பிஞ்சு மனசுகளோட பாவத்துக்கு யார் பொறுப்பு?
Monday, July 16, 2007
அப்பா!

நான் நடை பழகும் போது
பல முறை விழுந்து இருக்கிறேன்.
அன்றெல்லாம் என் கால்களுக்கு
உங்கள் கரம் கொண்டு பலம் கொடுத்து
பெருமிதப் பட்டவரே நீங்கள்தான்,
இன்று நெடுந்தொலவில்,
சொந்த காலில் நிற்கும்போதோ
"வேண்டாம் ராஜா!
வந்துருடா, பார்க்காமல் இருக்க முடியல"
என்று தொலைபேசியில் கதறும் போது
பல முறை விழுந்து இருக்கிறேன்.
அன்றெல்லாம் என் கால்களுக்கு
உங்கள் கரம் கொண்டு பலம் கொடுத்து
பெருமிதப் பட்டவரே நீங்கள்தான்,
இன்று நெடுந்தொலவில்,
சொந்த காலில் நிற்கும்போதோ
"வேண்டாம் ராஜா!
வந்துருடா, பார்க்காமல் இருக்க முடியல"
என்று தொலைபேசியில் கதறும் போது
என் கால்கள் பலமிழக்கின்றன அப்பா!
தந்தையின் பிறந்த நாளில் கண்ணீரோடு விவசாயி
Tuesday, June 13, 2006
ஜனனம்
(விவசாயத்தில விதைத்ததுதான், இங்கேயும் ஒரு முறை)
அலறியது என்னுடைய தொலைபேசி
அழைத்தது எனது அருமை
துணைவி-என்னவென வினவ
வலி ஆரம்பித்ததாக முனகியது
அவளது குரல்-வாழ்க செல் போன்
என வாழ்த்தி ஆயத்தமானேன்
மாமனார் ஊரிலிருக்கும் மருத்துவமனைக்கு
6 மணி நேர வண்டிப் பயணம்
மனம் போகும் வேகத்தில் செல்லவில்லை
நான் சென்ற வண்டி, கண்களில் நீரோட
மனம் சொல்லியது "இன்னும் அறிவியல் வளரவில்லை"
மனதில் லேசான பயம், இடையிடையே
துணைவியின் நலம் விசாரித்ததில்
நலமேயென பதிலினால் சிறு ஆறுதல்.
இருப்பினும் அவளது சிரம் காண உந்துதல்;
தடுமாற்றத்துடன் மருத்துவமனையின்
வாசற்படி மிதித்தேன்: என்னை
எதிர்பார்த்தபடி பெற்றோர், நண்பர்கள்
மற்றும் உறவினர்கள்-யாரும்
தெரியவில்லை கண்ணுக்கு
துணைவி இருந்த அறைக்கு
அழைத்து செல்லப்பட்டேன் - மனதிற்குள்
வேண்டினேன் "அவளுக்கு ஆறுதல் சொல்ல
என் மனதிற்கு திடம் கொடு ஆண்டவா"
"இன்னும் 3 மணி நேரத்தில் பிரசவம்
ஆகிவிடும்" செவிலி கூறியது மட்டும்
செவியில் விழுந்தது - அறையில் அவள்
தணித்து படுத்திருக்க அவள் கண்களில்
வலியும், வழியும் கண்ணீரும் - மனம் பத பதைக்க
அறிவு அடித்தது மண்டையில்
"ஆறுதல் மட்டுமே சொல்லு"
வாஞ்சையுடன் கைதொட்டு ஆறுதல் சொல்ல
எல்லாம் கிடைத்தது போல
மனம் தேறினாள்
வலி இருந்தும்.
செவிலியின் பணி தொடர வெளியே
தள்ளப்பட்டேன், மனம் உள்ளேயும்
உடல் வெளியேயும் என 5 நிமிடம்;
மீண்டும் 15 நிமிட ஆறுதல்
5 நிமிடம் வெளியே என 3 மணி நேரம்.
மருத்துவர் வர புரிந்தது எனக்கு;
இன்னும் சில நிமிடமே
துணைவியோ பல்லைக்கடித்து
வலியை மறைத்தது கண்களில் தெரிந்தது,
மனதுல் பயமும் கண்களின் ஓரம் நீருமாய்
வெளியே வந்தேன் - மணி 9:30 இரவு
சுற்று பார்த்தேன், மருத்துவமனை
நிறைந்து எங்கெங்கும் உறவினர்கள்
ஆரவாரத்திலிருந்து சற்று தள்ளி இருந்த
பிரசவ அறை பூட்டப்பட,
வாயிலின் ஓரத்தில் நாற்காலி எனக்காக,
நிசப்தம்; சுற்றி யாரும் இல்லை;
பிரசவ அறையிலிருந்து
சிறு ஒலியாவது கேட்குமா என
ஏங்கியது மனம்
அக்கணமே கேட்டது
துணைவியின் அலறல்
என் ஆணவம், கெளரவம் தொலைத்து
உற்றார் உறவினர் நினைப்பேயில்லாமல்
கண்ணீர் பெருக்கெடுத்தது
ஆறுதல் கூற அருகில் யாருமில்லை
இருப்பினும் கண்ணீர் துடைக்க தோணவில்லை
பத்து நிமிடம் விட்டு விட்டு
அலறல் சப்தம் - நின்றது ஒரு கணத்தில்
கழன்று விழுவது போல
கணத்தது என் இதயம்.
நிமிர்ந்து பார்த்தால் தோல் தட்டி
சுற்றி ஒரு கூட்டம் - வீறிட்டு அழும்
பிஞ்சின் சப்தம்; இது சந்தோஷமா?
வலி குறைந்த திருப்தியா?
எதுவும் தோணவில்லை
கை குலுக்கும் வாழ்த்துக்களுக்கு இடையில்
முகம் கழுவி திரும்பினேன் - சிறு சல சலப்பு
செவிலியின் கையில் புது மொட்டு
அப்பா ஜாடையா? அம்மா ஜாடைய?
பட்டிமன்றம் நடத்தியது மகளிர் கூட்டம்
கூட்டத்திற்கு நடுவே என் பிஞ்சு - துணைவியின்
முகம் காண ஏக்கம்
இடையே என் வாரிசையும்;
பாட்டிக்கு என் ஞாபகம் - கூட்டம் விலக்கி
காட்டினார் "ஆனந்தம், பேரானந்தம்"
சில கணம்
என்னிடம் இல்லை என் மனம்
தனியறைக்கு துணைவி தள்ளி வரப்பட்டாள்
என்றுமே நான் காணாத வாடி, வதங்கிய சிரம்;
பாதம் தொட்டு மனதில் நன்றி சொன்னேன்
அதுதானே என்னால் முடியும்
என் வாரிசை பத்து மாதம் சுமந்து
பத்திய சோறு தின்று பெற்று எடுத்தவளுக்கு
ஜென்மம் பல எடுத்து நன்றி சொன்னாலும் தகும்!
மார்கழி திங்கள் கடைசி தினம்
ஒரு ஆண் வாரிசுக்கு தகப்பன்
ஸ்தானத்திற்கு உயர்ந்தேன்
ஆயிற்று பல மாதம் கடந்தும்
மறக்க முடியவில்லை அக்கணத்தினை -
மறக்கவே முடியாது என்றும்
பொறுப்புகள் பல கூடினாலும் மனதில்
ஆயிரமாயிரம் மத்தாப்புக்கள் - எனக்காகவே
எங்கோ ஒலித்தது ஒரு பாடல்
"எனக்கு ஒரு மகன் பிறப்பான் அவன் என்னை போலவே இருப்பான்"
அலறியது என்னுடைய தொலைபேசி
அழைத்தது எனது அருமை
துணைவி-என்னவென வினவ
வலி ஆரம்பித்ததாக முனகியது
அவளது குரல்-வாழ்க செல் போன்
என வாழ்த்தி ஆயத்தமானேன்
மாமனார் ஊரிலிருக்கும் மருத்துவமனைக்கு
6 மணி நேர வண்டிப் பயணம்
மனம் போகும் வேகத்தில் செல்லவில்லை
நான் சென்ற வண்டி, கண்களில் நீரோட
மனம் சொல்லியது "இன்னும் அறிவியல் வளரவில்லை"
மனதில் லேசான பயம், இடையிடையே
துணைவியின் நலம் விசாரித்ததில்
நலமேயென பதிலினால் சிறு ஆறுதல்.
இருப்பினும் அவளது சிரம் காண உந்துதல்;
தடுமாற்றத்துடன் மருத்துவமனையின்
வாசற்படி மிதித்தேன்: என்னை
எதிர்பார்த்தபடி பெற்றோர், நண்பர்கள்
மற்றும் உறவினர்கள்-யாரும்
தெரியவில்லை கண்ணுக்கு
துணைவி இருந்த அறைக்கு
அழைத்து செல்லப்பட்டேன் - மனதிற்குள்
வேண்டினேன் "அவளுக்கு ஆறுதல் சொல்ல
என் மனதிற்கு திடம் கொடு ஆண்டவா"
"இன்னும் 3 மணி நேரத்தில் பிரசவம்
ஆகிவிடும்" செவிலி கூறியது மட்டும்
செவியில் விழுந்தது - அறையில் அவள்
தணித்து படுத்திருக்க அவள் கண்களில்
வலியும், வழியும் கண்ணீரும் - மனம் பத பதைக்க
அறிவு அடித்தது மண்டையில்
"ஆறுதல் மட்டுமே சொல்லு"
வாஞ்சையுடன் கைதொட்டு ஆறுதல் சொல்ல
எல்லாம் கிடைத்தது போல
மனம் தேறினாள்
வலி இருந்தும்.
செவிலியின் பணி தொடர வெளியே
தள்ளப்பட்டேன், மனம் உள்ளேயும்
உடல் வெளியேயும் என 5 நிமிடம்;
மீண்டும் 15 நிமிட ஆறுதல்
5 நிமிடம் வெளியே என 3 மணி நேரம்.
மருத்துவர் வர புரிந்தது எனக்கு;
இன்னும் சில நிமிடமே
துணைவியோ பல்லைக்கடித்து
வலியை மறைத்தது கண்களில் தெரிந்தது,
மனதுல் பயமும் கண்களின் ஓரம் நீருமாய்
வெளியே வந்தேன் - மணி 9:30 இரவு
சுற்று பார்த்தேன், மருத்துவமனை
நிறைந்து எங்கெங்கும் உறவினர்கள்
ஆரவாரத்திலிருந்து சற்று தள்ளி இருந்த
பிரசவ அறை பூட்டப்பட,
வாயிலின் ஓரத்தில் நாற்காலி எனக்காக,
நிசப்தம்; சுற்றி யாரும் இல்லை;
பிரசவ அறையிலிருந்து
சிறு ஒலியாவது கேட்குமா என
ஏங்கியது மனம்
அக்கணமே கேட்டது
துணைவியின் அலறல்
என் ஆணவம், கெளரவம் தொலைத்து
உற்றார் உறவினர் நினைப்பேயில்லாமல்
கண்ணீர் பெருக்கெடுத்தது
ஆறுதல் கூற அருகில் யாருமில்லை
இருப்பினும் கண்ணீர் துடைக்க தோணவில்லை
பத்து நிமிடம் விட்டு விட்டு
அலறல் சப்தம் - நின்றது ஒரு கணத்தில்
கழன்று விழுவது போல
கணத்தது என் இதயம்.
நிமிர்ந்து பார்த்தால் தோல் தட்டி
சுற்றி ஒரு கூட்டம் - வீறிட்டு அழும்
பிஞ்சின் சப்தம்; இது சந்தோஷமா?
வலி குறைந்த திருப்தியா?
எதுவும் தோணவில்லை
கை குலுக்கும் வாழ்த்துக்களுக்கு இடையில்
முகம் கழுவி திரும்பினேன் - சிறு சல சலப்பு
செவிலியின் கையில் புது மொட்டு
அப்பா ஜாடையா? அம்மா ஜாடைய?
பட்டிமன்றம் நடத்தியது மகளிர் கூட்டம்
கூட்டத்திற்கு நடுவே என் பிஞ்சு - துணைவியின்
முகம் காண ஏக்கம்
இடையே என் வாரிசையும்;
பாட்டிக்கு என் ஞாபகம் - கூட்டம் விலக்கி
காட்டினார் "ஆனந்தம், பேரானந்தம்"
சில கணம்
என்னிடம் இல்லை என் மனம்
தனியறைக்கு துணைவி தள்ளி வரப்பட்டாள்
என்றுமே நான் காணாத வாடி, வதங்கிய சிரம்;
பாதம் தொட்டு மனதில் நன்றி சொன்னேன்
அதுதானே என்னால் முடியும்
என் வாரிசை பத்து மாதம் சுமந்து
பத்திய சோறு தின்று பெற்று எடுத்தவளுக்கு
ஜென்மம் பல எடுத்து நன்றி சொன்னாலும் தகும்!
மார்கழி திங்கள் கடைசி தினம்
ஒரு ஆண் வாரிசுக்கு தகப்பன்
ஸ்தானத்திற்கு உயர்ந்தேன்
ஆயிற்று பல மாதம் கடந்தும்
மறக்க முடியவில்லை அக்கணத்தினை -
மறக்கவே முடியாது என்றும்
பொறுப்புகள் பல கூடினாலும் மனதில்
ஆயிரமாயிரம் மத்தாப்புக்கள் - எனக்காகவே
எங்கோ ஒலித்தது ஒரு பாடல்
"எனக்கு ஒரு மகன் பிறப்பான் அவன் என்னை போலவே இருப்பான்"
Subscribe to:
Posts (Atom)
தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி
தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை காசி எழுதியது தமிழோவியத்துக்காக பாஸ்டன் பாலாஜி க...
Labels
18+
(1)
365-12
(33)
Adverstisement
(1)
aggregator
(1)
BlogOgraphy
(2)
book review
(1)
Buzz
(1)
cinema
(6)
Comedy
(6)
Computing
(1)
Controversial
(1)
cooking
(1)
Copy-Paste
(10)
corruption
(1)
cricket
(1)
Doctor
(1)
Drama
(1)
experience
(4)
GVM
(1)
Indli
(1)
Information
(3)
Interview
(2)
IR
(1)
Job Interview
(1)
Jokes
(1)
KB
(3)
kerala
(2)
kids
(1)
Language
(1)
manoj paramahamsa
(2)
Movie Review
(15)
Movies
(39)
music
(6)
Music Review
(1)
News
(8)
NJ
(2)
nri
(1)
NYC
(2)
Oscars
(1)
Personal
(31)
Photo
(5)
Photos
(4)
Politics
(7)
Quiz
(10)
rumour
(1)
Sevai Magik
(1)
Short Film
(8)
Social
(46)
song
(4)
Songs review
(2)
songs.
(1)
Story in blogging world.
(3)
sujatha
(1)
tamil
(2)
Tamil Blog awards
(1)
Tamil Kid
(2)
TamilmaNam Star
(16)
TeaKadaiBench
(13)
technology
(5)
train
(2)
twitter
(28)
USA
(13)
Video Post
(11)
Vivaji Updates
(9)
webs
(4)
Wish
(1)
WorldFilm
(1)
Xmas
(1)
அப்பா
(1)
அப்பாட்டக்கர்
(1)
அரசியல்
(6)
அலுவலகம்
(2)
அனுபவம்
(11)
இசை
(2)
இயற்கை
(3)
இளையராஜா
(4)
ஈழம்
(9)
எதிர்கவிதை
(1)
ஏரும் ஊரும்
(8)
கடிஜோக்ஸ்
(1)
கதை
(9)
கலவரம்
(1)
கலைஞர்
(1)
கவிதை
(42)
கற்பனை
(4)
காதல்
(15)
கிராமம்
(20)
குத்துப் பாட்டு
(1)
குறள்
(1)
சங்கிலி
(5)
சமுதாயம்
(12)
சமூகம்
(21)
சிபஎபா
(11)
சிறுகதை
(7)
சினிமா
(1)
சுட்டது
(1)
சுயம்
(1)
தமிழ்
(4)
திரைத்துறை
(1)
திரைப்படம்
(2)
துணுக்ஸ்
(17)
தொடர்கதை
(6)
நகைச்சுவை
(7)
நட்பு
(1)
நாகேஷ்
(1)
நிகழ்வுகள்
(12)
நினைவுகள்
(4)
படிச்சது
(1)
பண்ணையம்
(7)
பதிவர் வட்டம்
(35)
பதிவுலகம்
(11)
பத்திரிக்கைகள்
(2)
பயணம்
(1)
பாரதி
(1)
புலம்பல்
(10)
புனைவு
(8)
பெற்றோர்
(5)
பொங்கல்
(2)
மீட்டரு/பீட்டரு
(1)
மீள்பதிவு
(8)
மொக்கை
(2)
ரஜினி
(3)
வாலி
(1)
விமானம்
(1)
வியாபாரம்
(3)
விவசாயம்
(4)
விவாஜியிஸம்
(1)
ஜல்லி
(8)
-
'சிறகிலிருந்து பிரிந்த இறகு ஒன்று காற்றின் தீராத பக்கங்களில் ஒரு பறவையின் வாழ்வை எழுதிக்கொண்டிருக்கிறது...' & பிரமிளின் புகழ்பெற...


