Wednesday, December 26, 2012

நீதானே என் பொன் வசந்தம் - விமர்சனம்

எனக்குப் பிடித்த இரு ஆதர்ச நாயகர்கள் ஒன்றிணைந்த படம் என்ற எதிர்பார்ப்பைத்தவிர வேறெதுவும் இந்தப் படம் பார்க்கும் வரை வரவில்லை. காரணம், பாடல்கள், நான் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாததும் ஒரு காரணமாய் இருக்கலாம்


படத்தோட ஆரம்பமே “புடிக்கலை”.. அதாங்க ’புடிக்கலை மாமு’ பாட்டு. கேட்பதை விட பாட்டை பார்க்க பிடித்தது. சமந்தாவின் அறிமுகத்தில் சந்தானத்தின் Counterஅபாரம். முதல் 20 நிமிடம் சந்தானத்தின் Counter மற்றும்  'அவளைப்  பார்த்தேன், அழகாயிருந்தா’ வகையறாக்களும் GVM டிபிக்கல் டச்.

படத்தில் பாராட்டப் படவேண்டியவர் சமந்தா.. அண்ணனிடம் மாட்டிவிட்டது நீதான் என்று சொல்லுபோது சமந்தாவின் நடிப்பு, அழகு.. போதும்டா குடுத்த காசு தீர்ந்து போச்சு, அந்த இடத்தில் மொட்டையின் பின்னணி  குரல்..(ராஜாவின் பின்னணியை பாராட்டி பாராட்டி சலிச்சுப் போச்சு)

சில பல பத்தாண்டுகளுக்கு முன் நடந்த, வெளியே சொல்ல முடியாத விசயங்களை திரையில் காணும் போது நம்மை அங்கே பொருத்திப்பார்க்கவே தோணும். அப்படியாப்பட்ட காட்சிகள்தான் இந்தப் பள்ளிப்பருவ காட்சிகள். ராஜாவின் ஒற்றை வாத்தியம், Has driving through the whole segment. பள்ளிக்காலங்களில் நாமும் ஒரு கதாநாயகனாத்தான் இருந்திருக்கிறோம் என உணர்த்தும் சில காட்சிகள். அதுதான் படத்திற்கான பலமும்.



காதலித்த தருணங்களை நினைத்துப்பார்க்கும் விதமாக மீண்டும் அந்த இடங்களுக்கு போவதெல்லாம் சுகந்தம். எல்லா காதலர்களும் நினைப்பதுதான்..

போகாதன்னு சொல்லு வருண்”, ”எனக்காக சந்தோசமா இருக்கிறா மாதிரி நடிக்கலாம்ல?”. இதெல்லாம்தானே பெண்கள் மனசை கண்ணாடி மாறி காட்டுது, எல்லோருக்குமான ஒரு வாக்கியம்.

இருவரும் தொலைபேசி, அலைபேசியில் பேசிக்கொள்ளும் லைட்டிங்ஸ் அருமை(எந்த கேமராமேன் யாருன்னு தெரியல)

VTV remix - சந்தானத்துக்கு சரியா ஒத்துவருது. அதே சமயம் அவுங்களுக்கு ராஜா போட்ட அந்தப் பாட்டை எப்படியும் யாராவது ஒருத்தர் ரீ மிக்ஸ் பண்ணிடுவாங்க, 2 வருசம் கழிச்சு முழுப்பாட்டையும் கேட்டுக்குவோம் விடுங்க.



ராஜாங்கம்: இருவரும் சந்திக்க வருகையில் பின்னணி இசை எதுவுமில்லாமல் மெளனமாக்கிவிட்டு பிறகு கோரஸ்ஸை ஒலிக்கவிட்டது, சமந்தாவின் முதல் வெட்கம், சத்தமேயில்லாம நம்மை அந்த வசனங்களூடே நம்மை அழைத்துச் சென்றது என்றது என எங்கெங்கு காணினும் ராஜாங்கம்.


பள்ளிக்கூட பகுதியில் ஜீவாவின் குரல் பல மாற்றங்கள். எதுல பிரச்சினைன்னு தெரியல. ஆனா ஒரு Consistencyஏ இல்லை. சமந்தாவின் குரலும் பல இடங்களில் பிசிறடிக்குது, அதுவும் அழும் தருணங்களில். ரவிச்சந்தருக்கும் பின்னணி குரல் சரியா பொருந்தி வரலை.

நானியின் ஒரு காட்சி, சந்தானம் சொல்லும், ’டேட் தான் பிரச்சினை, நானில்லாம இனிமே நிறைய சீன் வரும்’, ’ஒரு தெலுங்குப் படத்தின் பாடல் பாடுறேன்’ என்று சொல்லிப்பாடுவது, Trailerஐ இடையில் இணைத்தது  எனப் பல insider சமாச்சாரங்கள். எல்லோருக்கும் புரியுமா என்றுதான் தெரியவில்லை. கெளதம்(இயக்குனர்) பாடிய நீதானே என் பொன் வசந்தம் பாடலை ஏன் CDயில் சேர்க்கவில்லை என்பது சிதம்பரம் ரகசியம் :). 

படம் எனக்கு ரொம்பப் பிடிச்சது. ஒரு பெளர்ணமி இரவில், அடர் கானகத்தின் நதியின் மேல், காதலியின் கையை இறுக்கிப் பிடித்தபடி, சிறு பரிசலில் பயணிப்பது போலிருந்தது. அந்தத் தனிமையும், காதலும், அதை உணர்ந்தவர்களுக்கானது.  மீண்டும் ஒரு முறை அந்த இனிமையான காலங்களுக்கே பயணிப்பது போன்றதோர் உணர்வு.

I love You Gautham Sir!

Friday, December 21, 2012

தமிழ் இனி - குறும்படம்


நான் பாஸ்டனுக்கு வந்த புதிது. நண்பர்கள் யாருமில்லாத நிலையில், வேறு என்ன செய்வதென்று தெரியாமல், குறும்படங்களுக்கான கதைகளை எழுத ஆரம்பித்தேன். அதில 10-15 தேறியது, பிறகு அதைக் கொஞ்சம் கொஞ்சமாக மெருகேற்றிய போது. மொத்தம் 9 கதைகள் கிடைத்தது. வசனம், திரைக்கதைகளை எழுத ஆரம்பித்தேன்.

இப்படியாக போய்க்கொண்டிருந்த போதுதான், சம்பந்தமேயில்லாமல் குறும்படம் “அப்பாடக்கர்”ஐ எடுத்துத் தொலைத்தேன். அது நான் எழுதிய கதைகளில் இல்லாத ஒன்று. பரீட்ச்சார்த்த முயற்சி. 

ழுதும் கதைகளை எல்லாம், நண்பர்களிடத்தில் சொல்லி “எப்படியிருக்கு” எனக் கேட்பது வழக்கம். இன்னொருவர் கோணத்தில் நிறைய மாறுதல்கள் கிடைக்கும் என்பது என் அனுபவம். இப்படி ஒரு நாள் மொத்தக் கதைகளையும் ஒரு பள்ளிக்கால நண்பனிடம் சொல்லிக்கொண்ண்ண்ண்டிருந்தேன். இருக்காதுங்களா 3 மணி நேரம், தொடர்ச்சியா கதையே சொல்லிட்டிருந்தா, அதுவும் மத்தியானம் சாப்பிட்டதுக்கு அப்புறமா? மனுசன் நொந்துட்டான். எல்லாக் கதைகளையும் சொல்லி முடிச்சவுடனே அவன் அசட்டையாய் சொன்னதுதான் திருப்பமே. “மாப்ளே! இதுல 4 கதைகளைச் சேர்த்தா ஒரு பெரிய படம் வந்துருமே” அப்படின்னான்.

அப்பத்தான் தோணுச்சி, பயபுள்ள வெவரமாத்தான் கேட்டிருக்கான் அப்படின்னு. அப்புறம், அவன் சொன்ன கோணத்துல இருந்து ஆரம்பிச்சி திரைக்கதையை எழுதி முடிச்சிட்டேன். போன வாரம் அதே நண்பன் கூப்பிட்டான் “என்னடி மாப்ளே, பெரிய படமா பண்றேன்னு சொன்னே? குறும்படமா வந்திருக்கு”

படம் பார்த்தவுடனே ஆச்சர்யம், என்னுடைய கதையில் ஆரம்பக்காட்சி அப்படியே இந்தக் குறும்படத்தில் வந்திருந்ததுதான். அதுவும் என் படத்தின் தலைப்பும் இதுல வந்திருந்ததுதான். (உடனே காப்பி அப்படின்னு சொல்லிடாதீங்க மக்கா. வெளிநாட்டுக்கு வந்தா எல்லாருக்கும் தோணுற விசயம்தான் படமா வந்திருக்கு. ஒத்த அலைவரிசை.. அஷ்டே)



டடே! என்னை மாதிரியே ஒருத்தர் சிந்திச்சிருக்காரு அப்படின்னு மூச்சடைச்சுப் போயிட்டேன். டுமீலன்ஸ் அப்படின்னு ஒரு குறும்படம் எடுக்கலாம்னு ஆரம்பிச்சு Casting பிரச்சினையினால அப்படியே நின்னுப் போச்சு. அந்தக் கதையின் சாரமும் இதுவும் கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான், ஆனால் திரைக்கதை அப்படியே வேற.. இன்னொரு நண்பர் சொன்னார், ”ஆமாய்யா அதேதான்,,, என்ன நாம பேசி ரெண்டு வருசம் இருக்குமா? என்று சொன்ன போதுதான் உரைச்சது :) நாம லேட்தானுங்களே”

மெரிக்காவில் வசிக்கும் ஒவ்வொரு தமிழனின் அடி மனசுல இருக்கும் வலியை ஆழமாவும்,  தமிழன் மட்டுமில்லை, எல்லா இந்திய மொழிக்காரர்களுக்கும் இருக்கும் பயத்தைத் தெளிவாச் சொல்லியிருக்கு இந்தக் குறும்படம். முக்கியமா, தமிழ் வாழ வேண்டிய தமிழ்நாட்டுல இருக்கிற ஒவ்வொருத்தரும் பார்க்க வேண்டிய படம். மொழி என்பது ஒரு கலாச்சாரத்தின் பாலம் என்பதை தெளிவாச்சொல்லியிருக்கு.

யக்குநர் மணிராம் - நாளைய இயக்குனர் வாழ்த்துகள்! மென்மேலும் இது போல நல்ல நல்ல படமாச் செய்ங்க. வாழ்த்துகள்! இந்தப்பதிவை படிக்க நேர்ந்தால் இந்த வாழ்த்தை நான் நேராச் சொன்னது போலவே எடுத்துக்குங்க.

Sunday, December 9, 2012

நவக்கிரகம் சுத்துறப்ப நீங்க என்ன பண்றீங்க?

  • மது அருந்தத் தொடங்கினாள் அவள், போதையேறத் தொடங்கியது, மதுவுக்கு 
  • சனிக்கிழமை ஆனாவே பகீருங்குது. வீட்டைச் சுத்தப்படுத்தனும், கழுவனும், துடைக்கனும் #புருசலட்சணம்


  • அந்த பத்திரிக்கை எனக்கு சம்பளம் எல்லாம் தரலை. ஆனா வாழ்க்கையைவே தந்துச்சு. அதான்பா கல்யாணப்பத்திரிக்கை

  • ராத்திரி அடிச்ச ’ரம்’மிடம் தோற்றுவிடுகிறது, காலையில் அடிக்கும் அலா’ரம்’

  • எனக்கெல்லாம் சிம்பொனியாக இருந்தது, தெருமுக்கு ஆர்கெஸ்ட்ராக்கள்தான்

  • நம்மையெல்லாம் மகிழ்வித்திருந்த ஆர்கெஸ்ட்ரா என்னும் மிகப்பெரும் கலை, கம்ப்யூட்டர் இசை(?!) வந்தபிறகே அழியத்தொடங்கியது

  • கள் இரு நேரங்களில் மிகவும் அழகாகயிருக்கிறார்கள். 1. ஒன்று கட்டும்போது. 2. கேட்கும்போது #சாரி

  • பேங்கைத்தவிர மற்ற எல்லாயிடத்திலும் அக்கவுண்ட் வைத்திருப்பவனை இந்த உலகம் மதிப்பதேயில்லை

  • இந்தியாவின் தற்போதைய மிகப்பெரிய சவால், தீவிரவாதமோ, ஊழலோ இல்லை. Its, Just Twitter and Facebook.

  • மாப்பிள்ளைக்கு Twitter & FB A/C இருக்காம். எதுக்கு பொண்ணைக் குடுத்து ரிஸ்க் எடுக்கனும். மாப்பிள்ளையைப் பிடிக்கலைன்னு சொல்லிடுங்க

  • நவக்கிரகம் சுத்துறப்ப எல்லாம், சுத்துக் கணக்கைத்தான் எண்ணிட்டிருக்கேன். கும்புடுறதே மறந்துடுது. 1..2...3...4..

Saturday, December 8, 2012

யார் யாரெல்லாம் பரதேசி?




  • உலகத்துலியே பாதுகாப்பில்லாத ஒரே இடம் - இணையம்தான்
  • ”மாப்பிள்ளை, என் மகளோட சண்டை. கொஞ்சம் பேசி சமாதானப்படுத்துங்களேன். பேசனும் போலிருக்கு” எனும் மாமனார்- மருமகன் உறவு Blessed
  • இந்தியாவின் மிகப்பெரிய தூக்குத் தண்டனை கைதி IRCTC. தினமும் தொங்குகிறது.
  • நாம் விரும்பும் இரவுப்பொழுதையெல்லாம் உறங்கியே கழித்துவிடுகிறோம். அப்புறம், விரும்பி என்ன பிரயோஜனம்?
  • ஆமாம், அவள் வெட்டுக்கிளிதான். பார்ப்பவர்களின் மனங்களை எல்லாம் வெட்டி வெட்டி செல்வதால்
  • பரதேசிகள் என்றால் கூட்டமாக இன்னொரு ஊருக்குப் போய் தேயிலை பறிப்பார்கள் என்றில்லை. அமெரிக்காவிலோ, துபாயிலோ கூட இருக்கலாம்
  • என்முன் அவள். வேகமாக வீசத்தொடங்கியது காற்று. விலகத்தொடங்கியது..... என் கண்ணியம்
  • குழந்தைகள் எல்லாம் “இப்ப” ராமசாமிகளாகவே இருக்கிறார்கள். அப்புறம் என்ற வார்த்தையே பிடிப்பதில்லை. #இப்பவே வேணும், இப்பவே வேணும்
  • பரதேசி என்றால் ஊர் விட்டு பிழைப்பு தேடி பரதேசம் போகக்கூடியவர்கள் #அப்ப நானும் ஒரு வகையில பரதேசிதான்

Friday, December 7, 2012

அழகான பெண்ணுக்கு மேக்கப் தேவையா?



  • இத்தனை இன்வெர்ட்டர் பேட்டரிகளையும் Re-Cycle செய்யும் வசதி இருக்கிறதாயென யோசனை செய்யாத நாம்தான் சுற்றுச்சூழலைப் பேணிக் காக்கிறோமா?



  • வெளிநாட்டிலிருந்து தமிழ்நாட்டைப் பத்தி புதுசா கருத்துச் சொல்றதா நெனச்சுகிட்டு சொல்றது நேரங்களில் பழசாவே இருக்கு #அனுபவம்



  • குடும்பத்தலைவியாக உணர வைப்பது.. கணவன், குழந்தைகள், குடும்பம்னு நினைச்சா.. அது தப்பு ... அது பொம்மீஸ் நைட்டிகள்



  • ஆண்களே,பெண்கள் மாராப்பைச் சரி செய்யும்போது அவர்களது கண்களை கவனியுங்கள். அப்ப அவுங்க உங்க கண்களைத்தான் நோட்டம் விட்டுட்டு இருப்பாங்க



  • அழகாயிருக்கிற பொண்ணுங்களுக்கு மேக்கப் தேவையில்லை, அழகில்லாத பொண்ணுங்களுக்கு மேக்கப் போட்டாலும் தேறப்போறதில்லை - 1989ல் விவேக்



  • அட்ஜீஸ் பண்ணிக்கோ சார். - இது ஆட்டோக்காரர் சொன்னா மட்டும் கோவம் வருது. ஆனாலும் வாழ்க்கை முழுக்க அதைத்தான் பண்ணிட்டிருக்கோம்




  • இப்போதெல்லாம் ராமன்களை எந்தப் பெண்ணும் காதலிப்பது இல்லை #பழம்டீ அவன்


Thursday, December 6, 2012

லஞ்சத்துக்கும் கொள்ளைக்கும் வித்தியாசம் என்ன?


  • தொப்பை வளர்வதற்கு முன்னாடியே திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்பதே இன்றைய இளைஞர்களின் லட்சியமாக இருக்கிறது.




  • வாழ்க்கையின் லட்சியமென்ன? கல்யாணத்திற்கு முன் பட்டியல் பெருசா இருந்துச்சு. கல்யாணத்துக்குப்பின், இந்தக் கேள்விக்கு பதில் தெரியல




  • ஒரு காலத்துல விமர்சனம் படிக்க அலைவோம். இப்போ படத்தைப் பார்த்துட்டு விமர்சனத்தை Blog, Twitter, Facebookல போட அலைபாயறோம்



  • அம்மா இந்த ஆட்சியில் மக்களுக்கு அருளியிருக்கும் வரம் "சகிப்புத்தன்மை"



  • அதட்டலாக சொல்லிவிட்டேன் "நான் உனக்கு அடங்கித்தாண்டி போவேன், உன்னாலானதைப்பார்த்துக்கோ" அடங்கிப்போய்விட்டாள் பாவம் #இல்லறம்



  • அண்ணி கொண்டு வந்த வரதட்சனையை வெச்சி கடை ஆரம்பிச்சான் என் அண்ணன். அதான் அண்ணிய முதலீடு.



  • லஞ்சத்துக்கும் கொள்ளைக்கும் ஒரே ஒரு வித்தியாசம்தான். கொள்ளையடிச்சா தண்டனை கிடைக்கும், லஞ்சத்துக்கு கிடைக்கவே கிடக்காது

Wednesday, December 5, 2012

போவோமா ஊர்கோலம் Prelude -IR

சின்னத்தம்பி” படத்தில், வெளியுலகையே பார்த்திராத கதாநாயகி முதல்முதலாக நாயகனுடன் வெளியே வந்து சுற்றிப்பார்ப்பதுபோல ஒரு காட்சி. இந்தப் பாடலின் கம்போஸிங்கின்போது யாருமே உடனில்லை. ராஜா சார் மட்டும்தான் இருந்தார். நான் Situation சொல்லிமுடித்த அடுத்த நிமிடமே, உடனடியாக தனது ஆர்மோனியத்தில் பாடலின் மெட்டை வாசித்து, ஆர்மோனியத்திலேயே விரல்களால் தாளமும் போட்டுக்கொண்டு, ‘போவோமா ஊர்கோலம்…? என்று Lyric’ஆகவே ஆரம்பித்து’ முழு பாடலையும் Compose செய்து முடித்துவிட்டார். Recordingம் முடிந்தது. பின்னர் நான் பாடலை Picturise பண்ணிமுடித்தேன்.



கதாநாயகி முதன்முதலாக வெளியே வந்து பறவைகளைப் பார்ப்பதோ, சேற்றில் கால்வைப்பதோ… அவர் எனக்குக் கொடுத்த இசைக்கு நான் Shots எடுத்திருந்தேன் அவ்வளவுதான். பாடலைப் பார்த்தார்…!! ‘கதாநாயகி முதல்முதலாக வெளியுலகைப் பார்க்கிறாள்..!! பறவைகளின் ஒலியுடன், Keyboard’ல் துவங்கி, புல்லாங்குழலுடன் பாடலின் Prelude பயணிக்கிறது. படமாக்கிக் கொண்டு சென்றிருந்த பாடலைப் பார்த்துவிட்டு…


 “இல்லை.. இவள் முதல்முதலாக வெளியுலகைப் பார்க்கிறாள்.. அதற்கு இந்த Prelude  மட்டும் போதாது. இன்னும் கொஞ்சம் Extra’வாக ஏதாவது இருந்தால் நன்றாக இருக்கும்..!! நீ ஒரு 100 அடிக்கு ஏதாவது காட்சிகள் Add பண்றியா..?” என்றார்.

டனே நான் ப்ரசாத்தில் இருந்து, வாகினி ஸ்டுடியோவிற்குச் சென்று, இந்தப் பாடலின் நிறைய Shots’ஐ Edit பண்ணி ஒரு 80 அடிக்குக் காட்சிகளை எடுத்துக்கொண்டுபோய் அவரிடம் கொடுத்தேன்.





அப்படி நான் கொடுத்த காட்சிகளுக்கு அவர் ஒரு Violin Score எழுதி அமைத்துத்தந்தார். படத்தில், அந்த வயலின் இசை முடிந்து அதன்பின்னர் ’போவோமா ஊர்கோலம்’ பாடலின் Prelude துவங்கும். பாடலின் முன்னர் வரும் அந்த வயலின் இசையுடன் அதைப் பார்த்தவுடன் எனக்கு உடலெல்லாம் சிலிர்த்துவிட்டது.

- இயக்குனர் திரு. பி.வாசு அவர்கள் விஜய் டி.வி.யின் ”இதயம் தொட்ட இசைஞானி” நிகழ்ச்சியில் பகிர்ந்துகொண்டது.

’போவோமா ஊர்கோலம்’ பாடலின் Prelude’ஐயும், Prelude’க்கு முன்வரும் அந்த இசையையும் இதில் கேளுங்கள். நிச்சயம் உங்களுக்கும் உடல் சிலிர்க்கும்.


தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி

  தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை  -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை  காசி  எழுதியது தமிழோவியத்துக்காக  பாஸ்டன் பாலாஜி  க...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நாகேஷ் (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) வாலி (1) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)