Friday, August 16, 2013

நம் நாடு - கதையென்ன?

லைப்பு(Title) போடு போதே எம்.ஜி.ஆர் அவர்களை  ஒரு கதாநாயகனாக காட்டும் படலம். பெண்களை கிண்டல் செய்வோரை தட்டி கேட்கிறார், வயதான அம்மாவுக்காக பேருந்தில் போராடுகிறார், திருடனை பிடிக்கிறார் இப்படி பல நல்ல விசயங்கள் ஆரம்ப காட்சியிலேயே. அறிமுகத்துக்காக தனியாக காட்சி வெக்காமல் தலைப்பு போடும்போதே முடிச்சிட்டாரு இயக்குநர் ஜம்பு.

ளநீர் விற்பவராக, நடிகை ஜெயலலிதா, குடிகார அண்ணன் ஆர்.எஸ்.மனோகர். ”நான் ஏழு வயசுல இளநி வித்தவ, பத்னேழுல நிறைஞ்சு நின்னவ” என்று ஆரம்பித்ததும் பகீரென்றது எனக்கு. இது கில்மா பாட்டு வேற யாரோவுக்கு நினைச்சா ஜெயலலிதாவுக்காம். எப்படி அனுமதித்தார் எம்.ஜி.ஆர்? அதிலும் எம்.ஜி.ஆர் செல்லமாகக் கூப்பிடும் அம்முவாகவே நடித்திருக்கிறார் ஜெ. யாருக்காகவோ உதவப்போக காசு இல்லாமல் தன்னுடைய கடிகாரத்தை ஜெவிடம் கொடுக்கிறார் எம்.ஜி.ஆர். அண்ணன் ஆர்.எஸ்.மனோகர், குடிப்பதற்காக  ஜெவிடமிருந்து கடிகாரத்தை எடுத்து விற்றுவிடுகிறார். இதற்காக பெரும் போராட்டத்துடன் ரூ.200 சேர்க்கிறார் ஜெ. இதனைப் பார்த்த எம்.ஜி.ஆர் கலங்கிப் போய்விடுகிறார்.


 கரசபையில் வேலை பார்க்கும் எம்.ஜி.ஆர் ஒரு இடப்பிரச்சினைக்கு உதவப் போக, ஒரு லட்சாதிபதியை எதிர்க்கிறார். இதனால் வேலையும் இழக்கிறார். ரங்காராவ், தங்கவேலு, அசோகன் எப்பவுமே தண்ணியடிச்சிட்டே இருக்காங்க, வில்லன்கள் ஆயிற்றே. எம்.ஜி.ஆர்’ன் அண்ணன் ரங்காராவின் பெரும் விசுவாசி, அவரிடம் வேலை பார்க்கிறார். ரங்காவீட்டை விட்டு எம்.ஜி.ஆரை வெளியே போகச் சொல்லிவிடுகிறார் அண்ணன்.




 வீட்டை விட்டு வெளியே வந்த எம்.ஜி.ஆருக்கு உதவிக்கரம் நீட்டுகிறார் ஜெ. சேரி மக்களிடம் கொண்டு சேர்க்கிறார். காசு குடுக்கிறவங்களுக்கு ஒட்டு போடாதீங்க, பசியை தீர்க்கிறவங்களுக்கு ஓட்டு போடுங்க என்பது எம்.ஜி.ஆர் வைக்கும் பஞ்ச்.

கரசபை தலைவர் பதவிக்கான தேர்தல் வருகிறது, இதில் அசோகனுக்கும், தங்கவேலுக்கும், ரங்காராவுக்கும் இடையில் பனிப்போர் நடக்கிறது, அதே சமயம் எம்.ஜி.ஆர் இந்தப் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுகிறார். தேர்தல் வெற்றி பெற்றுவிட்டார் என்று அறிவிக்கிறார் நாகேஷ். இவ்வளவு நேரமும் இல்லாதவர் திடீரென வருகிறார். கால்ஷீட் பிரச்சினையாய் இருந்திருக்குமோ?

   ழைய தவறுகளை எல்லாம் கண்டுபிடிக்கிறார் எம்.ஜி.ஆர். இதனால பாதிக்கப்படும் வில்லன்கள் எம்.ஜி.ஆரை பழிவாங்க முயற்சிக்கிறார்கள். இதனால பொது மக்களின் பணத்தை எம்.ஜி.ஆரின் அண்ணன் எடுத்து ஓடிவிட்டதாக செய்தி பரப்புகிறார்கள். மக்கள் பிரதிநிதிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து எம்.ஜி.ஆரை பதவி விலக வைக்கிறார்கள். அதுவுமில்லாமல் எம்.ஜி.ஆரின் அண்ணனின் வீட்டையும் காலி செய்துவிடுகிறார்கள். எம்.ஜி.ஆரையும் அடித்துப் போட்டுவிடுகிறார்கள்.

பிறகு பணக்காரர் வேடமிட்டு மீண்டும் உள்ளூருக்கு வருகிறார் எம்.ஜி.ஆர். தன்னுடைய அண்ணனை கண்டுபிடிக்கிறாரா? அவரின் மீதிருக்கும் பழியைத் துடைக்கிறாரா? ஜெ.வை கைப் பிடிக்கிறாரா? வில்லன்கள் எல்லாம் திருந்தினார்களா? வில்லன்களிடமிருந்த பணம் என்னாயிற்று? அந்த CBI அலுவலர் யார்? என்பதே இறுதிக்காட்சிகள்.

திடீர் பணக்காரனாக வரும் எம்.ஜி.ஆருக்கு எங்கேயிருந்து அவ்வளவு பணம் வந்தது? ஒரு நகர சபை தலைவருக்கு அவ்வளவு அதிகாரம் உள்ளதா? மச்சம் மரு எல்லாம் கண்டு புடிக்கவே முடியாதா? இப்படி நிறைய கேள்விகளுக்கு பதிலில்லை.

கதாநாயகன் துரையாக நடித்திருப்பவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள். கதாநாயகி அம்முவாக நடித்திருப்பவர் நமது தற்போதைய முதலமைச்சர் செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்கள். அண்ணனாக டி.கே.பகவதியும், அண்ணியாக பண்டரிபாயும், அண்ணன் மகள்களாக குட்டி பத்மினியும் ஸ்ரீதேவியும் நடித்திருக்கிறார்கள்.  படத்தின் அனைத்துப் பாடல்களை எழுதியவர் மறைந்த கவிஞர் வாலி அவர்கள். படத்திற்கு இசை MSV அவர்கள்.

படத்தின் மூன்று பாடல்கள் செம ஹிட். நல்ல பெயரை வாங்க வேண்டும் பிள்ளைகளே, நினைத்ததை நடத்தியே முடிப்பவன் நான், வாங்கய்யா வாத்யாரைய்யா. தாறுமாறான  ஹிட் 7 வயசுல எளநி வித்தவ, நேரடியாவே தப்பான அர்த்தம் கொண்ட பாடல் அது.

Note: குடிகாரன் பேச்சு என்ற பாடல் இணையத்தில் எங்குமேயில்லை. விக்கியில் அதைப் பற்றிய தகவலை இப்பொழுதுதான் சேர்த்தேன். 

பி.கு. இதுபடத்துக்கான விமர்சனமில்லை 

Monday, August 12, 2013

கோச்சடையான் - கதை என்ன?

நன்றாக கவனித்துப் பார்த்தீர்கள் என்றால், ஒரே காட்சி, ஒரே போல கதாப்பாத்திரங்களுக்கு, அதுவும் ரஜினியின் படங்களிலேயே பயன்படுத்தியிருப்பார் கே.எஸ். ரவிக்குமார்.
  • முத்து படத்தில் ஒரு காட்சி, சொத்துக்காக அண்ணனிடமிருந்து சொத்துக்களை பறிக்க முயற்சிப்பார் தம்பி ரகுவரன். இதனையறிந்த அப்பா-ரஜினி அனைத்து சொத்துக்களையும் ரகுவரனுக்கு எழுதி வைத்துவிட்டு, சாமியாராகப் சென்றுவிடுவார்.
  • சொத்துக்களைப் பிரித்துத் தரச்சொல்லி அண்ணன் சிவாஜியிடம் முறையிடுவார் தம்பி மணிவண்ணன். சொத்துக்களைப் பிரிக்க மனமில்லாத சிவாஜி, தனக்கு சொந்தமான அனைத்து சொத்துக்களையும் மணிவண்ணனுக்கே கொடுத்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறிவிடுவார், இது படையப்பாவில்.

இரு காட்சிகளும், சூழ்நிலைகளும், ஒன்று போலவே இருக்கும். அதுவும் ரஜினிக்கே வைத்திருப்பார் கே.எஸ்.ரவிக்குமார். துணிச்சல்தான். விடுங்க, விசயம் அது இல்லை இப்போ. இன்று இணையத்தில் பரவலாக ஒரு செய்தி அடிபடுகிறது. அதாவது கோச்சடையானின் கதை என்னவென்பதே அது. இது உண்மையாகக் கூட இருக்கலாம்.



கதை இதோ.

தந்தை ரஜினிகாந்த் ஒரு நாட்டை திறம்பட நல்லமுறையில் ஆண்டு வருகிறார். நாட்டின் செல்வங்களை மக்களுக்குப் பகிர்ந்தளிக்கிறார். ஆனால், நல்ல ஆட்சியை நடக்கவிடுவார்களா துரோகிகள்? அவரது அமைச்சரவையில் இருக்கும் சிலர் அவருக்கு எதிராக சதி செய்கின்றனர். அசிங்கமான உத்திகளைக் கையாண்டு தந்தை ரஜினியின் ஆட்சியைக் கவிழ்த்து விடுகிறார்கள். அப்போதுதான் மகன் ரஜினிகாந்த் பிறக்கிறார். திறமையான தந்தையின் பயிற்சியில் திறமைசாலியாக வளர்கிறார் மகன் ரஜினிகாந்த். பிறகு காட்டில் மறைவாக தனிக்குழு ஒன்றை அமைக்கிறார்.  தந்தையின் ஆட்சியைக் கவிழ்த்த துரோகிகளின் கையிலிருக்கும் நாட்டைப் புரட்சி செய்து வெல்கிறார்.

இயக்குநர் செளந்தர்யா ரஜினிகாந்த் என்றாலும், கதையிலும், மற்ற தயாரிப்பு  பின்னணியிலும் கே.எஸ்.ரவிக்குமாரின் முழுப் பங்கு இருக்கிறது என்பது பலரும் அறிந்த விசயம்தான். ஆனாலும், படத்தின் கதை வசீகரிக்கத்தான் செய்கிறது. அதுவும் Motion Capturing மூலம் படமாக்கப்படும் முதல் முழு நீள தமிழ்த் திரைப்படம் என்கிற போதே ஒரு ஈர்ப்பு வரத்தான் செய்கிறது. சும்மாவே ரஜினி கார்ட்டூன் அளவுக்கு படம் காட்டுவாரு, இதுல கார்ட்டூன் படமென்றால், எப்படியிருக்குமென்று யோசித்துப்பாருங்க. ரஜினி என்றாலே மேஜிக்தானே, அந்த மாதிரியான ரஜினியைப் பார்க்கத்தான் ரசிகர்கள் ஆவலாக இருக்கிறார்கள். சமீபகாலமா வெளிவந்த அனைத்து ரஜினி திரைப்படங்களும், ரசிகர்கள் எதிர்பார்க்கும் "அந்த மேஜிக்" கொண்ட ரஜினி இல்லாமல்தான் வந்திருக்கிறது.

பல தடைகள், பல வருடங்கள், ஆனாலும் படத்திற்காக காத்திருக்கிறார்கள் ரசிகர்கள், அதில் நானும் ஒருவன். ரகுமானின் இசை, வைரமுத்துவின் பாடல் வரிகள்...

கோச்சடையானே வா! வீறு கொண்டு வா! சரித்திரமே வா!

தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி

  தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை  -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை  காசி  எழுதியது தமிழோவியத்துக்காக  பாஸ்டன் பாலாஜி  க...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நாகேஷ் (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) வாலி (1) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)