மகசூல் - 30-11-09

ஒரு சின்ன வேளை விசயமா 3 நாளைக்கு மட்டும் இந்தியா வந்திருந்தேங்க. பெங்களூருல இருந்து எங்க ஊருக்கு 4 மணிநேரத்துல போயிட்டோம். சாலை எல்லாம் அருமை. அமெரிக்காவுல இருக்கிற மாதிரி இருக்குங்க இந்த புது சாலை, ஒன்னும் வித்தியாசமே தெரியலீங்க. என்ன? மரம் எல்லாம் இல்லாம ரோடெல்லாம் மொட்டையா இருக்கு. அதுவுமில்லாம, மரமே சிக்காம எங்கப் பார்த்தாலும் ஊடுங்க. மழை பெய்யலைன்னா, எங்கப் பெய்யும்? வரேன்னு சொல்லிப்புட்டு வரமுடியல, அதனால ஈரோடு பதிவர்கள் எல்லாம் மன்னிச்சுங்கப்பா..

விண்ணைத் தாண்டி வருவாயா, படம் நியூயார்க்/நியூ ஜெர்சின்னு வளைச்சு வளைச்சு எடுத்தாங்க. படம் புடிக்க வந்தவங்க எங்க ஊட்ல இருந்து 1 மைல் தொலைவுலதான் தங்கி இருந்தாங்க. நான் யாரையும் பார்க்கப் போவலை. அந்த சனத்துல ஒருத்தர் மட்டும் எங்கூட 4 நாள் ஊர் சுத்தினாரு.

இந்தப் படத்துக்குப் பேரு வெச்சது ஒளிப்பதிவாளராம். பாட்டெல்லாம் கேட்டேன், ரொம்ப நாள் கழிச்சு ரகுமான் கலக்கி இருக்காரு, கெளதம் மேனன் ஆச்சே. படத்தோட பாட்டு டிசம்பர் 18ம் தேதி, லண்டன்ல வெளியாவுதாம். என்ன காரணமா லண்டன்ல வெளியிடறாங்கன்னு யாருக்காவது தெரிஞ்சா சொல்லுங்க.

சொந்தப் பேர்ல பதிவு/டிவிட்டர் எழுதறது எவ்வளவு தப்புன்னு இப்போதாங்க தெரியுது. ஒருத்தர வேலைய விட்டுத் தூக்க HR மக்கள் முடிவு பண்றாங்கன்னு வெச்சுக்குங்க, மொதல்ல performance சரியில்லீம்பாங்க, இப்போ? அவரு எங்கே எவ்ளோ ட்விட்டராரு, பதிவு போடறாருன்னு அவரு சொந்தப் பேரைப் போட்டு தேடிப்பார்த்துட்டு “ராசா, நீ வேலை பார்க்கிற லட்சணம் இதுதான், கெளம்பு’ன்னு சொல்றாங்களாம். நாமதான் பதிவு எழுதறது வேலையாவே வெச்சிருக்கோமே, அதுவும் பெரிய கெளரவம் சிவாஜி மாதிரி சொந்தப் பேர்ல வேற எழுதி வெச்சுறோம். மாட்டிக்கிறது சுலமாச்சே. இப்படியுமா HR மக்கள் வேலை பார்ப்பாங்க? இவுங்க எல்லாம் ரூம்ல ஏசி போட்டுத்தான் யோசிக்கிறாங்க..இனிமே சொந்தப் பேர்ல எழுதாதீங்கப்பூ.

வேட்டைக்காரன் - விளம்பரம் எல்லாம் பார்த்தேங்க. ரொம்ப சப்பையான விளம்பரங்கள். ரொம்பத் தெளிவா சன் டிவி செய்யுறாங்க. விஜய், பார்த்து சூதானமா இருந்துக்கோங்க. கவுக்க பெரிய கும்பலே இருக்கு. கோடிய குடுத்து இடம் புடிக்கத் தெரிஞ்சவங்களுக்கு, கோடிய குடுத்து உங்க இடத்தை காலி பண்ணிறப் போறாங்க. எதுக்கும் ஒரு மஞ்சத் துண்ட போர்த்தி பிரச்சினைய முடிச்சுக்குங்க.

26/11

நம்ம மக்களுக்கு மறதி ஜாஸ்திங்க..எதுக்கும் இருக்கட்டுமே.




மேலே ஒரு நிகழ்படம் இருக்குங்க. பார்க்க முடியாதவங்க இந்த இடுகையில பாருங்க.

கொஞ்சம் கூட ஈவு இரக்கம் இல்லாத இந்த மாதிரியான குழுக்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறவங்க இன்னும் இருக்கத்தான் செய்யறாங்க. இந்துத் தீவிராவாதிங்க பண்றது சரியில்லைன்னு இந்த வன்முறை சரின்னு சொன்னவங்க நிறைய பார்த்திருக்கேன். இரண்டு பேரும் பண்றது தப்புதான். இதுல ’A’ கிரேடு ’பி’ கிரேடு எல்லாம் இல்லீங்க. சுஜாதா எழுதின மாதிரி “தப்பு என்ன பனியன் சைஸா.. தப்பு தப்புதான்”..

அகில இந்திய முஸ்லிம் கட்சிக்கு பாராட்டுக்கள். அப்சல் கசாப் செத்தா இந்தியாவுல புதைக்கவோ, எரிக்கவோ கூடாது சொல்லி இருக்காங்க. இந்த மாதிரி 4 பேர் செய்யுறதால எத்தனை எத்தனை அப்பாவி முஸ்லிம்கள் பாதிக்கப்படறாங்க??? இந்திய இனிமேலாவது முழிச்சுக்கலாம். அப்சல் கசாப் வெச்சு இந்தியா உலக அளவுல ஒரு மயித்தையும் புடுக்கப்போறதில்லை.. அது மட்டும் நிச்சயம்..

சாராயம், சர்தார்

டிஸ்கி: இது பக்கா காப்பி - பேஸ்ட் மேட்டருங்க. வாரமலர்ல ஒரு நாள் போட்டிருந்தாங்க. பதிவு போடாத போது உபயோகப்படுத்திக்கலாமேன்னு சேமிச்சது. நன்றி வாரமலர்.

"சாராயத்தில் பலவகை உண்டாம் ஓய்... "அடுகள்'ங்கற பெயருல சங்க காலத்திலேயே சாராயம் புழக்கத்தில் இருந்து தாம். பல வகைப் பழங்கள ஊறலாக்கி, அதை வடிச்சு சாராயம் குடிக்கும் பழக்கம் 17ம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் இருந்துதாம்... "விறலி விடு தூது'ன்ற புஸ்தகத்துல இத எழுதி இருக்கா... "சாரம்'ங்கறது தான் சாராயம் ஆச்சாம்...


"பிராந்தி, விஸ்கி இதெல்லாம் முதல்ல, நெதர்லாந்து நாட்டிலிருந்து தான் இந்தியாவுக்கு இறக்குமதி செஞ்சாளாம்... "நாட்டுச் சாராயம், கருப்பட்டி, வெல்லம், பேரீச்சம்பழம், வாழைப்பழம், தேங்காய், பனை - தென்னையிலிருந்து வடிக்கப்படும் கள், அரிசி ஊறல், கரும்புச்சாறு இதெல் லாம் ஊற வெச்சு நம்மூர்ல சாராயம் காய்ச்சினாளாம்...
"பட்டைச் சாரயம்ங்கறது என்ன தெரியுமா? "பழவகை, இனிப்புகள போட்டு, அந்த ஊறல் நாத்தமெடுத்து, சுவை கெட்டுப் போகாம தடுக்க, ஊறலோட, கருவேலம்பட்டை, வேப்பம்பட்டை போன்ற மரப்பட்டைகள் சேர்த்துப் போடுவாளாம்...


"அதனால தான் இது பட்டை சாராயம் ஆனதாம்... தேங்கா சாராயமும், பட்டைச் சாராயமும் உயர்ந்த சரக்குகளாம்... இலுப்பப் பூவை ஊற வைச்சு இலுப்ப சாராயமும் செய்தாளாம்...' என்றார்!


"இத்தோட, இப்பெல்லாம், ஊருக்கு ஊர், சுடுகாட்டிலும், வயற்காட்டிலும் காய்ச்சப்படும் கள்ளச் சாராயத்தையும் சேர்த்துக் கொள்ளுங்க... அப்பத் தான் சாராயப் பட்டியல் நிறைவு பெறும்...' என நான் கூற, வீரப்பா சிரிப்பு சிரித்தார் குப்பண்ணா!


சர்தார்:


இந்தியா சுதந்திரம் பெற்ற சமயம் அது. அப்போது இந்தியாவில் விளைந்த அரிசிக்கு உலகச் சந்தையில் கிராக்கியே இல்லை. ஏனென்றால் பாகிஸ்தானின் பாஸ்மதி அரிசி அதை விடச் சுவைமிக்கது. பிரிவினையின் போது பாஸ்மதி விளைந்த நிலப்பகுதிகள் பாகிஸ்தான் வசம் சென்று விட்டன. இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் விவசாயத்துக்குப் புகழ் பெற்றது. அவர்களின் அடிப்படைத் தொழிலே விவசாயம்தான். தங்களின் அரிசிக்கு உலக மார்க்கெட்டில் மதிப்பில்லாதது அவர்களை ரொம்பவே பாதித்தது. ஆனால் அவர்களிடம் பாஸ்மதி அரிசியின் விதைகள் கூட இல்லை. என்ன செய்வது? பஞ்சாப் மாநில சர்தார்ஜி விவசாயிகள் ரகசியமாக ஒன்று கூடினார்கள். எல்லை தாண்டி உள்ள பாகிஸ்தானிலிருந்து பாஸ்மதி விதை நெல்லைக் கொண்டு வருவது என்று முடிவு செய்தார்கள். அது அத்தனை சுலபமான காரியம் அல்ல. எல்லையில் உள்ள இருதரப்பு ராணுவத்துக்கும் கொடுக்கக் கூடிய லஞ்சப் பணமே கோடிக்கணக்கில் ஆகும்.

சர்தார்ஜிக்கள் அசரவில்லை. பஞ்சாபின் அனைத்து விவசாய கிராமங்களிலும் இதற்கான நிதி ரகசியமாகத் திரட்டப்பட்டது. தேவைப்பட்ட பணம் வசூலாகச் சில வருடங்கள் பிடித்தன..ஒரு நாள் நள்ளிரவு, பாகிஸ்தானிலிருந்து நாற்பது லாரிகளில் பாஸ்மதி விதை நெல் மூட்டைகள் எல்லை கடந்து பஞ்சாப் வந்தன. பாஸ்மதி விவசாயமும் கோலாகலமாக ஆரம்பித்தது. சர்தார்ஜிக்கள் உடனடி லாபத்தை எண்ணி அறுவடையை சந்தைக்கு அனுப்பவில்லை. எதிர்காலத்தை மனதில் வைத்து விதை நெல்லை சேமிப்பதற்காக அடுத்த சில வருடங்கள் பொறுமையாகக் காத்திருந்தார்கள். அடுத்த சில வருடங்களில் அந்த மகத்தான மாற்றம் நிகழ்ந்தது. உலக அரிசிச் சந்தையில் இந்திய பாஸ்மதி அரிசி விற்பனையில் பாகிஸ்தானை ஓரம் கட்டியது. ராங் ரூட்டில் சென்றாலும் சர்தார்ஜிக்கள் சாமர்த்தியமாய் செய்துகாட்டிய பெரும் சாதனை இது. அப்படிப்பட்ட புத்திசாலி காரியக்காரர்களை சகட்டுமேனிக்கு கிண்டல் அடித்துக் கொண்டே இருப்பது நியாயமா? நீங்களே சொல்லுங்கள்!

முதுகு வலியோட நடிகர் போட்ட செம ஆட்டம்

படம் எல்லாமே எடுத்தாச்சு. ஒரு பாட்டு மட்டும் எடுத்தா போதும் படம் முடிஞ்சிரும். கதாநாயகனுக்கோ முதுகுல பிரச்சினை. மருத்துவமனையில கதாநாயகனுக்கு சிகிச்சை. 2 வாரம் தரையில படாம தோல்வாருல கட்டி பறக்குறமாதிரி கதாநாயகனை தொங்க விட்டிருந்தாங்க. நாயகனுக்கோ உயிர் போற மாதிரி வலி. ஆயிரம் வலி இருந்தாலும் மனசுல வெச்சுகிட்டு அப்பா அம்மாகிட்ட நல்லா இருக்குன்னு சொல்லிட்டு சமாளிச்சுட்டு இருக்காரு. அம்மாவோ, வர்ற அழுகைய பல்ல கடிச்சிகிட்டு பையன் கிட்டே தைரியமா பேசிட்டு வெளியே வந்து கதறி அழுறவங்க.

ஆக தயாரிப்பாளருக்கு கையறுநிலை. தாயாரிப்பாளர் ரொம்ப நாசுக்கா, நாயகன்கிட்ட ”மீட்டர் வட்டி கிமீ ஆவுது, அதனால .. இந்தப் படம் வராட்டா தெருவுக்கு வந்துவேன்”னு சொல்லிட்டு போயிட்டாரு. மருத்துவரோ 3 மாசம் கதாநாயகனை நடமாட விடக்கூடாதுன்னு சொல்லிட்டாரு. நாயகன், யோசிச்சாரு..ஒரு வாரம் கழிச்சு பாட்ட எடுக்கலாம்னு சொல்லியனுப்ப சொல்லிட்டாரு.

மருத்துவர், அம்மா, அப்பா யார் சொல்லியும் கேட்கல. பாட்டு எடுத்தாங்க. அது கதாநாயகனோட சிறந்த ஆட்டத்துல ஒன்னா அமைஞ்சது, படம் வெளியே வந்தும் சரியாப் போகலை. ஆனா மேலும் கடன் ஆகாம தப்பிச்சாரு தயாரிப்பாளர். படம் ரொம்பச்சுமாராத்தான் போச்சு. பெரிய லாபம் மட்டுமில்லே, கடனுமில்லாம தப்பிச்சுட்டாரு. கடுமையான முதுகுவலியோட ஆடுன, அந்தப்பாட்ட பார்த்து ரசிங்க.

Vettaikaran Songs Review

வெறும் குத்துப்பாடல்கள் மட்டுமே இருக்கு, அதுலயும் கேட்கற மாதிரியே இல்லே. விஜய் ஆண்டனிக்கு இது ஒரு கரும்புள்ளி. நினைத்தாலே இனிக்கும் அப்புறம் இப்படியா ஒரு ஆல்பம்.. .. அடப்போங்கய்யா..

குத்துப்பாடல்களை மட்டும்

1) நான் அடிச்சா தாங்க மாட்ட, நாலு மாசம் தூங்க மாட்ட

பாடியவர்: சங்கர் மகாதேவன்

ஏத்த இறக்கத்தோட பாடி இருக்காரு, பாவம். இது ஒரு குத்துப்பாடல்-தத்துவப்பாடல்

’ஆலமரத்து பள்ளிக்கூடம் ஆக்ஸ்போர்டா மாறனும்’ ’வீண்பேச்சு பேசாதே’ கனவு ஜெயிக்க வேணுமின்னா கண்ண மூடி தூங்காதே’

ஒன்னும் விசேசமில்லே.- கடுப்பு எண்-1

2) கரிகாலன் காலப் போல

பாடியவர்கள்:சுசித்ரா, சங்கீத், ராஜேஸ்வரன்

குத்துப்பாடல்- ஒன்னும் விசேசமில்ல-கடுப்பு எண்-2.

3) ஒரு சின்ன தாமரை

பாடியவர்கள்: கிருஷ், சுசித்ரா.

மனசுக்கு இதம், பாடல் வரிகள் செம விளையாட்டு. இதமான ஒரு பாடல்னு சொல்ல முடியாது. ஆனா ஒரே நல்ல பாட்டு.

4) என் உச்சி மண்டை சுர்ருங்குது

பாடியவர்கள்: கிருஷ்ணா ஐயர், ஷோபா சேகர்.

பாறை படத்துல கூட இப்படு ஒரு பாட்டு இருக்குன்னு ஞாபகம்-குத்துப்பாடல்-கடுப்பு எண்-3

5)புலி உறுமுது

பாடியவர்: அனந்து, மகேஷ் விநாயக்ராம்.

ஓப்பனிங் பாட்டு, திருப்பாச்சியில வர்ற மாதிரி ஒரு உறுமி சத்தம்-கடுப்பு எண்-4

4 பாட்டில கண்டிப்பா ஒரு ஆங்கில பிட்டு- ஹிப் ஹாப் உண்டு.. கீழே இருக்குற படத்தை மட்டும்தான் விமர்சனமா போடலாம்னு இருந்தேன். ஒன்னுமே எழுதலைன்னு நல்லா இருக்காதுன்னு கொஞ்சமா எழுதி வெச்சிருக்கேன்.




Related Posts with Thumbnails

ILAMURUGU.COM