Showing posts with label விவசாயம். Show all posts
Showing posts with label விவசாயம். Show all posts

Wednesday, June 5, 2013

அழிந்துவரும் விவசாயம்

தமிழ்நாட்டு விவசாயிகளில் 9 லட்சம் பேர் விவசாயத்தைவிட்டு வெளியேறிவிட்டனர் என்ற அதிர்ச்சி தகவல் ஒன்று தமிழக மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் தெரிய​வந்துள்ளது. 

கடந்த 2001 தொடங்கி 2011-ம் ஆண்டுவரை​யிலான 10 ஆண்டு காலத்தில் வேளாண் தொழிலை விட்டு நகரங்களை நோக்கி இடம்​பெயர்ந்துவிட்ட விவசாயிகளின் எண்ணிக்கை, 8 லட்சத்து 67 ஆயிரம் பேர் என்கிறது அந்தப் புள்ளிவிவரம்.

''விவசாயிகள் மட்டுமல்ல... விவசாயமும் சேர்ந்து வெளியேறும் காலம் நெருங்கிவிட்டது. இதைத் தடுத்து நிறுத்தி விவசாயத்தைக் காப்பாற்ற வேண்டிய அரசாங்கம், அதை அழித்துவருகிறது'' என்று ஆதங்கப்பட்டார் இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார்.


''ஒரு காலத்தில் விவசாயம் மரியாதைக்குரியதாக இருந்தது.  ஆனால்,உணவுப் பயிர் விவசாயத்தை அழித்துப் பணப் பயிர் விவசாயத்தைக் கொண்டுவந்து விவசாயிகளிடம் திணித்ததன் விளைவு, அவர்களைக் கிராமங்களைவிட்டே ஓடவைத்துவிட்டது. அரசாங்கம் விவசாயத்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டது. விளைபொருளுக்கான விலையை வழங்காமல், அதை லாபம் இல்லாத தொழிலாக மாற்றிவிட்டது.
செலவு இல்லாத பாரம்பரிய விவசாயம் செய்து வெற்றிகரமாக வாழ்ந்துவந்த நம் விவசாயிகளை, பசுமைப் புரட்சி என்ற பெயரில் பணப் பயிர் சாகுபடிக்கு விரைவாகத் தாவவைத்து வீரிய விதைகளை அவன் தலையில் கட்டியது. உரம், பூச்சிமருந்து என்று ரசாயனங்களைக் கொடுத்துக் கடனாளி ஆக்கியது.
ராகி, சோளம், கம்பு, தினை, கொள்ளு, பாசிப் பயறு, தட்டை என்று உணவுப் பயிர்கள் செய்து 'வரவு’ விவசாயியாக இருந்தவனுக்கு, பணக்கார நாடுகளின் வேளாண் முறைகள்  செலவை அதிகரித்ததுதான் மிச்சம்.


1970-களில் நான்கு மூட்டை நெல் விற்று ஒரு பவுன் தங்கம் வாங்கினோம். இன்று ஒரு மூட்டை நெல் 6,000 ரூபாய்க்கு விற்றால் மட்டுமே, நான்கு மூட்டை நெல்லைப் போட்டு பவுன் தங்கம் வாங்க முடியும். ஆனால், ஒரு மூட்டை நெல் 1,000 ரூபாய்கூட விற்பது இல்லை. அன்று ஒரு தேங்காய் விற்று ஒரு லிட்டர் டீசல் வாங்கினோம். இன்று டீசல் விலை 50 ரூபாய். ஆனால், தேங்காய் விலையோ அதே 5 ரூபாய்தான். விவசாயப் பொருட்களின் விலையை யாரும் கண்டுகொள்வதே இல்லை. கட்டுப்படியாகாத விலை, ஆட்கள் பற்றாக்குறை, காணாமல்போன மானாவாரி விவசாயம் போன்ற பல காரணங்கள்தான் விவசாயிகளை 'டவுன் பஸ்’ ஏறவைத்தது'' என்றார் நம்மாழ்வார்.

கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும் வேளாண் பொருளாதார வல்லுனரும் அமெரிக்காவின் கார்வெல் விவசாயப் பல்கலைக்கழகத்தின் இப்போதைய ஆலோசகருமான முனைவர் சி.ராமசாமியிடம் கேட்டபோது, '40 வயதுக்கும் கீழ் உள்ளவர்கள் யாரும் விவசாயத்தில் இப்போது இல்லை. அடுத்த தலைமுறை விவசாயக் குழந்தைகள் படித்து நிரந்தர ஊதியம் கிடைக்கும் பணிகளுக்குச் சென்றுவிட்டனர். குறைவாகப் படித்தவர்கள் பஞ்சாலை, பனியன் கம்பெனி, பட்டாசுத் தொழிற்சாலை போன்ற சிறுதொழில் கூடங்களின் தினக்கூலியாகிவிட்டனர். சிறு விவசாயிகள் பலரும் விவசாயக் கூலிகளாகவும் கட்டட வேலையாளாகவும் மாறிவிட்டனர். பல்லாயிரக்கணக்கில் இருந்த மேய்ச்சல் நிலங்கள் கல்லூரிகளாகவும் தொழிற்சாலைகளாகவும் உருமாறிவிட்டன. முப்போகம் விளைந்த பூமியில் ரியல் எஸ்டேட்காரர்களின் கலர் கொடிகள் பறக்கின்றன. வாழ்வாதாரத்துக்குக் கைகொடுத்துவந்த கால்நடைகள் மேய்வதற்கு இடமின்றிப் போய்விட்டன. விவசாயம் செய்வதைவிட விவசாயக் கூலியாக இருப்பது நிரந்தர வருமானத்தைக் கொடுக்கும் என்ற நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுவிட்டனர்.


ஆட்கள் பற்றாக்குறைகளைப் போக்கிட சிறுசிறு வேளாண் கருவிகள் கண்டுபிடிக்கப்பட வேண்டும். துண்டுதுண்டாக இருக்கும் விவசாய நிலங்களை ஒன்றாக்கி, பல ஏக்கரில் ஒரே பயிர் சாகுபடியை நடைமுறைப்படுத்த வேண்டும். விவசாய விளைபொருட்களுக்கான குளிர்பதன சேமிப்புக் கிடங்குகள் கிராமங்கள்தோறும் அமைக்க வேண்டும். பாரம்பரிய விவசாயத்தை நவீன முறையில் மேற்கொள்ள, விவசாயிகளுக்கு ஊக்கம் கொடுக்க வேண்டியது அவசியம்'' என்கிறார் ராமசாமி.
தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பேராசிரியர் தர்மபுரி சின்னசாமி, ''கஷ்டப்பட்டு நஷ்டப்படுகிற தொழிலாக விவசாயம் மாறிவருகிறது. கட்டுப்படியாகாத விலை, கடுமையான வறட்சி, பயிர்களைத் தாக்கும் மர்ம நோய்கள் போன்ற இடர்பாடுகள் விவசாயிகளைக் கடனாளியாக்குகிறது. சொகுசு கார் வாங்க உடனே கடன் கொடுக்கிற பல வங்கிகள், விவசாயி ஒரு கறவைமாடு வாங்க கடன் தரத் தயங்குகிறது. பல கோடி ரூபாய் கடன் பாக்கி வைத்திருக்கும் பெரும் தொழிலதிபர்களின் கடன்தொகை வாராக் கடன் என்று தள்ளுபடி செய்கிறது. 1,000 ரூபாய் கடன் வைத்திருக்கும் விவசாயி வீட்டுக் கதவில் 'ஜப்தி’ நோட்டீஸ் ஒட்டுகிறது'' என்றார் சின்னசாமி.

ஏர் நடந்தால் பார் நடக்கும் என்றாள் ஒளவை. ஆனால், போகிற போக்கைப் பார்த்தால் தமிழ்நாட்டில் 'பார்’ மட்டும்தான் நடக்கும்போலும்!
- ஜி.பழனிச்சாமி 

படங்கள்: தி.விஜய், ரமேஷ் கந்தசாமி

விகடனில் வந்த கட்டுரை. ஒரு கோப்புக்காக இங்கே பதிவிட்டுள்ளேன். நன்றி விகடன்

Thursday, September 6, 2012

14/365 நீங்க மாடு மேய்க்கத்தான் லாயக்கா?

ள்ளிக்கூடத்துல படிக்காத மாணவர்களைப் பார்த்து அதிகம் சொல்லப்படுவதுதான் இது "நீ மாடு மேய்க்கத்தான் லாயக்கு". எந்த ஆசிரியருக்காவது  தெரியுமா, மாடு மேய்க்கிறது எவ்வளவு கஷ்டம்னு?

ங்க ஐயன், மாடு மேய்ச்சிதான் ஆசிரியர் ஆனார். அந்தப் பரம்பரையில் வருவதாலும், நானும் மாடு மேய்ச்சிருக்கேன் என்பதாலுமே கேட்கிறேன் மாடு மேய்க்கிறது அவ்வளவு சுலபமா?

  1. உங்களுக்குத் தாளி வெக்கத் தெரியுமா? தவிடும் ,தண்ணியும் கலந்து  காலையில பால் கறக்கிறதுக்கு முன்னாடியே வெச்சிடனும், காளை மாடுன்னாலும். நான் சொல்றது 5 மணிக்கு முன்னாடி, எழுந்திருச்சிருவீங்களா?
  2. சாணி அள்ள முடியுமா?  அதுவும் காலையில ஒரு தரம், சாயங்காலம் ஒரு தரம்னு ரெண்டு தரம் சாணி அள்ளனும். அள்ளுவீங்களா?
  3. மூக்கனாங்கயிறு முடிச்சு போடத் தெரியுமா?
  4. கொம்பு சீவி விடத் தெரியுமா?
  5. கட்டுத்தாரையை கூட்டி அள்ள முடியுமா?
  6. மாட்டுக்கு கொசு கடிக்காம இருக்க, சும்மா ஏஸி ரூம்புல குட்-நைட் தட்டற மாதிரி இல்லீங்க. நாய்த்துளசியைத் தேடிப் புடிச்சாந்து, பொவப் போட்டு கொசுவை ஓட்டனும், முடியுமா?
  7. வாரத்துக்கு ஒரு தபா தண்ணியூத்தி வுட முடியுமா?
  8. காளை மாடுன்னா 6 மாசத்துக்கு ஒரு தடவை லாடம் கட்டனும், (பசு மாடுன்னா வருசத்துக்கு ஒரு தபா "ஜிங் சாக்" பண்றதை வேடிக்கைப் பார்க்கலாம்.)
  9. பருத்திக்கொட்டையும், புண்ணாக்கும் சரியான நேரத்துல வெக்க முடியுமா?
  10. தீனி வெச்சாலும் மாடு மேய்க்க ஓட்டிப்போவனும், ரெண்டு மாட்டை ஒன்னா மேய்க்க வெக்கவே முடியாது, இதுல பத்து, பதினைஞ்சு இருந்தா டவுசர் அவுந்துரும்.
  11. மாட்டுக்கு ஏதாவது ஆச்சுன்னா உடனே மருத்துவரைக் கூட்டியார முடியுமா?
  12. இதை எல்லாத்தையும் விடுமுறை இல்லாம 7 நாளும், வருசம் முழுக்கவும் செய்ய முடியுமா?


[எங்க மாடு]

னிமே மாடு மேய்க்கத்தான் லாயக்கு அப்படிங்கிறவங்ககிட்ட இதைக் கேட்டுடுங்க....இதெல்லாம் முடியும்னா நீங்க மாடு மேய்க்கவே போலாம், அப்படின்னும் சொல்லிடுங்க.

மாடு மேய்க்கிறதுன்னா சும்மா இல்லீங்க, ரெம்ப கஷ்டம்

Tuesday, September 11, 2007

தமிழ்ப் பதிவுகளில் விவசாயம்




  1. தமிழ்ப் பதிவர்களின் விவசாய கூட்டுப் பதிவு

  2. ஆழியூரான் - வேலை இருக்கு ஆனா ஆள் இல்லை

  3. மா.சிவகுமார்- விவசாயி - ஒரு சிறு முயற்சி

  4. மா.சிவகுமார்- விவசாயி - என்னதான் தீர்வு? -Part- 1 & Part-2

  5. அசுரன் - இந்தியாவின் ஜனநாயகமும் - விவசாயமும், சிறு தொழில் துறையும்
  6. சம்சாரியின் இயற்கை விவசாயம்

  7. அசுரன் - விவசாயத்தின் பேரழிவும் - உயிர்ம எரிபொருளும்!
  8. சந்தோஷ் - விவசாயிகளின் தேவதை
  9. சதுக்க பூதம் -விவசாயிகளின் உடனடி தேவை- நவீன உழவர் சந்தை
  10. சுடுவது சுகம்- விளை நிலங்களைச் சாகடித்து விடடோம்! - - இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்
  11. வின்ஸென்ட்- "உலக வெட்டிவேர் வலைஅமைப்பில் The Vetiver network (international)முதல் பக்கத்தில் எனது "ஐடியா" ."
  12. http://dgtirupur.wordpress.com/2008/11/23/தள்ளாடும்-தமிழக-விவசாயம்/

Wednesday, August 24, 2005

விவசாயி

கடவுள் என்னும் முதலாளி
கணடெடுத்த தொழிலாளி

விவசாயி ..... விவசாயி .....

முன்னேற்ற பாதையிலே மனசை வைத்து
முழு மூச்சா அதற்காக தினம் உழைத்து

மண்ணிலே முத்து எடுத்து பிறர் வாழ
வணங்கும் குணம் உடையோன் விவசாயி ....

விவசாயி ..... விவசாயி .....

என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்?
ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்?

ஒழுங்காய் பாடுபடு வயல் காட்டில்
உயரும் உன் மதிப்பு அயல் நாட்டில்

விவசாயி ..... விவசாயி .....

கருப்பு என்றும் சிவப்பென்றும் வேற்றுமையா
கருதாமல் எல்லாரும் ஒற்றுமையாய்
பொறுப்புள்ள பெரியோர்கள் சொன்னபடி!
உழைத்தால் பெருகாதோ சாகுபடி!

விவசாயி ..... விவசாயி .....

இருந்திடலாம் நாட்டில் பல வண்ண கோடி
எத்தனையோ கட்சிகளின் எண்ண படி
பறக்க வேணும் எங்கும் ஒரே சின்ன கொடி
அது பஞ்சம் இல்லை என்னும் அன்ன கொடி
பஞ்சம் இல்லை என்னும் அன்ன கொடி

விவசாயி ..... விவசாயி .....




இந்த பாடல் எனக்கு என்றுமே ஒரு வேதம் போல. இருப்பதோ வெளியூரில், ஆனாலும் விவசாயம் மீது எனக்கு அளவுகடந்த மோகம். விவசாயக் குடும்பத்தில் பிறந்த நான் விவசாயம் செய்ய ஆசைப்பட்டு, முடியாமல் வேறு ஊருக்கு பஞ்சம் பிழைக்க வந்தவன்.
விவசாயி என்ற எண்ணம் என்றும் என் மனதில் இருந்தே இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்தப்பதிவு. நன்றி!

Edited Several Times

தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி

  தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை  -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை  காசி  எழுதியது தமிழோவியத்துக்காக  பாஸ்டன் பாலாஜி  க...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நாகேஷ் (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) வாலி (1) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)