எங்க ஐயன், மாடு மேய்ச்சிதான் ஆசிரியர் ஆனார். அந்தப் பரம்பரையில் வருவதாலும், நானும் மாடு மேய்ச்சிருக்கேன் என்பதாலுமே கேட்கிறேன் மாடு மேய்க்கிறது அவ்வளவு சுலபமா?
- உங்களுக்குத் தாளி வெக்கத் தெரியுமா? தவிடும் ,தண்ணியும் கலந்து காலையில பால் கறக்கிறதுக்கு முன்னாடியே வெச்சிடனும், காளை மாடுன்னாலும். நான் சொல்றது 5 மணிக்கு முன்னாடி, எழுந்திருச்சிருவீங்களா?
- சாணி அள்ள முடியுமா? அதுவும் காலையில ஒரு தரம், சாயங்காலம் ஒரு தரம்னு ரெண்டு தரம் சாணி அள்ளனும். அள்ளுவீங்களா?
- மூக்கனாங்கயிறு முடிச்சு போடத் தெரியுமா?
- கொம்பு சீவி விடத் தெரியுமா?
- கட்டுத்தாரையை கூட்டி அள்ள முடியுமா?
- மாட்டுக்கு கொசு கடிக்காம இருக்க, சும்மா ஏஸி ரூம்புல குட்-நைட் தட்டற மாதிரி இல்லீங்க. நாய்த்துளசியைத் தேடிப் புடிச்சாந்து, பொவப் போட்டு கொசுவை ஓட்டனும், முடியுமா?
- வாரத்துக்கு ஒரு தபா தண்ணியூத்தி வுட முடியுமா?
- காளை மாடுன்னா 6 மாசத்துக்கு ஒரு தடவை லாடம் கட்டனும், (பசு மாடுன்னா வருசத்துக்கு ஒரு தபா "ஜிங் சாக்" பண்றதை வேடிக்கைப் பார்க்கலாம்.)
- பருத்திக்கொட்டையும், புண்ணாக்கும் சரியான நேரத்துல வெக்க முடியுமா?
- தீனி வெச்சாலும் மாடு மேய்க்க ஓட்டிப்போவனும், ரெண்டு மாட்டை ஒன்னா மேய்க்க வெக்கவே முடியாது, இதுல பத்து, பதினைஞ்சு இருந்தா டவுசர் அவுந்துரும்.
- மாட்டுக்கு ஏதாவது ஆச்சுன்னா உடனே மருத்துவரைக் கூட்டியார முடியுமா?
- இதை எல்லாத்தையும் விடுமுறை இல்லாம 7 நாளும், வருசம் முழுக்கவும் செய்ய முடியுமா?
[எங்க மாடு]
மாடு மேய்க்கிறதுன்னா சும்மா இல்லீங்க, ரெம்ப கஷ்டம்
இதெல்லாம் நான் செஞ்சு இருக்கேன் என்பதை சொல்லி கொள்ள ஆசை படுகிறேன்..
ReplyDeleteமாட்டை மேச்சலுக்கு ஒட்டிகிட்டு போறபோது எருமை மேல் உட்கார்ந்து சென்றது உண்டா..?நான் போய் இருக்கறேன்..
idhayellam neengal seidhirupeer endraal ungalai vida koduththuvaiththavar ipooulagil illai ennaiporuththavarai padhivu nandru
ReplyDeletesurendran
சபாஷ்
ReplyDeleteசரியான
கேள்விகள்
ஏம்பா
இனி
யாராவது
சொல்வீங்க
சரி இன்னிமே பன்னி மேய்க்கத்தான் லாயக்குன்னு மாற்றிடச் சொல்லலாம், பன்னிக்கு அள்ளத் தேவையில்லை, (உரத்துக்கு சிலர் அள்ளுவாங்க) யாரும் பிடிச்சிட்டு போகாமல் பார்த்துக் கொண்டால் போதும்.
ReplyDelete:)
சரியான கேள்விகள். என்னிடம் பதில் இல்லை. உண்மைதான் எந்த வேளையிலும் சிரமம் உள்ளது.
ReplyDeleteஎச்சூஸ்மீ... நான் நாலாப்பு பெயிலானதே எருமைமாடு மேய்க்கப்பானதாலதான் :)
ReplyDeletehttp://pattikattaan.blogspot.in/2010/07/blog-post_16.html
சரியான கேள்விகள். மாடு மேய்ப்பது கூட ஒரு கலை தான்.
ReplyDeleteரொம்ப கஷ்டம் தான்.நான் இரண்டு நாய் வளர்க்கிறேன்.ஆகவே இந்த கஷ்டம் அப்படியே புரிகிறது.
ReplyDeleteஒவ்வொரு தொழிலின் அருமை... அவரவர்களுக்கு தான் தெரியும்...
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteno. 8
ReplyDeleteகாளை கன்னுகளுக்கு காயடிக்கணும்.
no.9
பருத்திக்கொட்டையும், புண்ணாக்கும் ஆட்டுக்கல்லில் அரைத்து மாட்டுக்கு கொடுக்கணும்.
no.13. வைக்கோல் வைத்து தேய்த்து குளிப்பாட்டனும். இப்ப எது ஆறு?
no.14.
தண்ணி வண்டியில் வீட்டுக்கு ஆத்துல இருந்து தண்ணி கொண்டுவரணும். எப்ப? அதிகாலையில். எந்த கிராமத்தில் நல்ல குடி தண்ணீர் இருக்கு!
நல்ல பதிவு..:):)
ReplyDeleteசவுக்கடி கேள்விகள் :):)
இளா,
ReplyDeleteஹி..ஹி நீங்களும் நம்மளை போல அனுபவஸ்தர் போல.
ஸ்கோல் விட்டு வந்ததும் ... கொள்ளையில மாடு கட்டியிருக்கு போய் புடிச்சு வான்னு அனுப்பிவைப்பாங்க...அவ்வளவு நேரம் கட்டிக்கிடந்த மாடு நான் கயிர அவுத்ததும் கால் ஊரல் எடுத்து ஓட்டம் பிடிக்கும், நான் வறப்புல தடுக்கி விழுந்து எழுந்துப்பார்தா மாடு ஓடியே போயிருக்கும், மாடு ஓடிப்போயிடுச்சேன்னு தலைய சொறிஞ்சுக்கிட்டே ஊட்டுக்கு போனால் மாடு அப்பவே ஊட்டுக்கு வந்துடுச்சு நீ எங்கடா சுத்திட்டு வரன்னு அம்மா திட்டுவாங்க,சும்மா மாட்ட கொஞ்ச நேரம் சமாளிக்கிறதே முடியாது எனக்கு, ஆனால் ஸ்கோல் வாத்தியாருங்க மட்டும் மாடு மேய்க்கத்தான் லாயக்கு சொல்லிடுவாங்க :-((
Adsense and tamil blog? Good combination. :)
ReplyDelete***"நீ மாடு மேய்க்கத்தான் லாயக்கு".***
ReplyDeleteஎன்ன அவன் ஒரு படிப்பறிவில்லாத வாத்தியாரா (மாடு பத்தி) இருப்பான்!
முன்னப்பின்ன மாடு மேச்சிருந்தால்த் தானே அந்த கஷ்டம் தெரியும்?
நம்மதேன் வாத்தியாருனா தெய்வம், அவரு சொல்றதெல்லாம் தெய்வ வாக்குனு மூடத்தனமா நம்பிக்கிட்டு சொல்லிக்கிட்டு திரிகிறது. உள்ள தெய்வங்கள் போதாதா??
அட!!! எத்தனை ஈஸியா சொல்லுற வார்த்தையில இவ்வளவு கஷ்டங்கள் இருக்கான்னு நினைக்க வைக்கிற பதிவு. மேலாக படிக்கையில் நகைச்சுவை தெரிந்தாலும் உள்ளூர சுடும் கேள்விகள்...
ReplyDelete