Monday, September 3, 2012

11/365 தமிழ்நாட்டில் முதல் அச்சுக்கூடமும், கெயிட்டி தியேட்டரும்

தமிழ்நாட்டில் முதல் அச்சுக்கூடம் காரைக் காலை அடுத்த தரங்கம்பாடியில், 1712ல் அமைக்கப் பட்டது. டச்சுக்காரர்கள் அமைத்த இந்த அச்சகத்தில் பைபிளின் தமிழ் மொழிபெயர்ப்பு அச்சிடப்பட்டது. இது, அச்சு எழுத்துக்கள் வார்க்கும் வார்ப்பட சாலையும் கூட. (இந்தியாவிற்கு இதற்கு முன்னரே அச்சகம் வந்து விட்டது. கோவாவில், 1556ம் ஆண்டு ஏசு சபையினர் ஓரு அச்சகத்தை நிறுவினர்!)



அச்சுத் தொழில், முற்றிலும் கிறிஸ்தவ பாதிரி களின் கைகளில் இருந்தமையால், எழுத்தறிவு பெற்றிருந்த தமிழ்நாட்டு மேல்தட்டு வர்க்கத்தினர், அவர்கள் வெளியிட்ட கிறிஸ்தவ சமய நூல்களை, "பரங்கிப் புத்தகங்கள்' என்று தூஷித்து, கையால் கூட தீண்டுவதில்லை. கிறிஸ்தவ சமயப் பரப்பிகள் தம்முடன் கொண்டு வந்த, காகிதம் செய்யும் கலையையும் நம் நாட்டு மக்கள் இழிவானதும், தீட்டுப்படக் கூடியதுமான தொழில் என்று ஒதுக்கி விட்டனர். உலகில் முதலில் மரப்பட்டைகள், பின்னர், கன்றுக் குட்டியின் தோல், அப்புறம் பட்டுத் துணி, பிறகு ஒருவித நாணலில் செய்த, "பரப்பிரஸ்' என்ற தாள் முதலியன எழுது பொருள்களாக இருந்து வந்தன. சீனர்கள் கி.பி., 105ம் ஆண்டில் காகிதம் செய்யக் கற்றுக் கொண்டனர். பட்டுத் துணியில் எழுதி வந்த சீனரிடையே, காகிதம் இரண்டாம் நூற்றாண்டில் எங்கும் பரவி விட்டது.
அராபியர்கள், சீனரிடமிருந்து அந்தத் தொழிலை, கி.பி., 751ம் ஆண்டில் அறிந்தனர். அதன்பின், காகித உற்பத்திக் கலை உலகெங்கும் சிறுக, சிறுகப் பரவியது. ஐரோப்பியர் அதை அராபியரிடமிருந்து, 12ம் நூற்றாண்டில் தான் கற்றனர். கன்றின் தோல் மறைந்து காகிதம் தயாரிக்கப்பட்டது.
இந்தியர்களாகிய நமக்கு, சீனருடன் கிறிஸ்தவ சகாப்தம் துவங்குவதற்கு முன்பிருந்தே உறவு இருந்தது. பல்லவரும், சோழரும், சீனர்களுடன் தூதுவர் உறவு கொண்டிருந்தனர். அதுபோலவே அரபிகளுடனும் நமக்கு நெடுங்கால உறவு உண்டு. ஆனால், நாம் இவ்விருவரிடமிருந்தும் காகிதம் செய்யும் தொழிலை ஏன் அறிந்து கொள்ளாமல் போனோம்? 19ம் நூற்றாண்டின் இறுதி வரையிலும் ஏன், ஏடும் எழுத்தாணியுமாக உட்கார்ந்திருந்தோம்?
கிறிஸ்தவ பாதிரியார்கள், பழைய கந்தல் துணிகளைக் கூழாக அரைத்து காகிதம் செய்தனர். நம் ஆச்சார மக்கள், இது, சமய ஆச்சாரங்களுக்குப் புறம்பான இழி தொழில் என்று கருதி, தள்ளி விட்டனர். (பழைய கந்தல் துணிகளில் கீழ் ஜாதியினர் பயன்படுத்திய துணிகளும் அடங்குமே என்பதால்!)

— ப.சிவனடி எழுதிய சரித்திர நூலிலிருந்து...

தென்னிந்திய சினிமா வரலாற்றில், முதல் இருபது ஆண்டுகளில் வர்த்தக ரீதியாக ஒரு படமும் தயாரிக்கப்படவில்லை. இன்று விரிந்து, பரந்து வளர்ந்துவிட்ட இந்த சினிமாத் துறையை - தயாரிப்பு, விநியோகம், காட்சிப்படுத்துதல் என்று பிரித்தால், காட்சிப்படுத்துதல் மட்டுமே முதல் இருபது ஆண்டுகளில் வளர்ந்தது எனலாம். மற்ற இரு அம்சங்களும் அப்போது ஆரம்பமாகவில்லை.
சென்னை மவுண்ட் ரோடில் ஒரு போட்டோ ஸ்டுடியோ வைத்திருந்த வெங்கையா என்பவரை, வேகமாகப் பரவி வந்த சலனப் படத்துறை ஈர்த்தது. சென்னையில் இரண்டு நிரந்தரக் கொட்டகைகளும், பல டூரிங் சினிமாக்களும் வெற்றிகரமாக சலனப் படங்களைத் திரையிட்டுக் கொண்டிருந்தன. இவரும் ஒரு குரோனா மெகபோன் (கிராமபோன் ஒன்றுடன் இணைக்கப்பட்ட புரொஜக்டர்) ஒன்றை வாங்கி, விக்டோரியா பப்ளிக் ஹாலில் படங்களைத் திரையிட ஆரம்பித்தார். அவை, 500 அடி நீளமே கொண்ட அமெரிக்கத் துண்டுப் படங்களே. படம் திரையில் விழ ஆரம்பித்ததும் ரெகார்டு சுழல ஆரம்பித்து, ஒலி பிறக் கும், படங்கள் பேசுவது போன்ற பிரமை ஏற்படும்.

வசூல் நன்றாகவே ஆனது. பிறகு இவர் இலங்கைக்கும், பர்மாவிற்கும் சென்று, படங்களைத் திரையிட்டார். கணிசமான தொகையுடன் திரும்பிய வெங்கையா, ஒரு நிரந்தரக் கொட்டகையைக் கட்டி சென்னையிலேயே தங்க முடிவு செய்தார்.

மவுண்ட் ரோடில், 1913ல், "கெயிட்டி' தியேட்டரைக் கட்டினார். முதன் முதலாக இந்தியர் ஒருவரால் தென்னிந்தியாவில் கட்டப்பட்ட இந்தத் திரையரங்கு தான் கடைசி வரை தியேட்டர்களில் எல்லாம் மூத்தது. அது மட்டுமல்ல, முதலில் வைத்த பெயரே நிலைத்திருந்தது.
— தியோடர் பாஸ்கரனின், "தமிழ் சினிமா வளர்ந்த கதை' நூலிலிருந்து...

Source & Thanks : http://www.dinamalar.com/Supplementary_detail.asp?id=7733&ncat=2

6 comments:

  1. கெயிட்டி தியேட்டெர் தான் முதலாக வந்ததா.
    தகவலுக்கு மிகவும் நன்றி இளா.

    ReplyDelete
  2. //தூஷித்து//

    :)))

    கூகிளில் இதுக்கெல்லாம் அர்த்தம் வரமாட்டேங்குது.

    ReplyDelete
  3. கோவைநகரம், வல்லி அம்மா -> நன்றி!

    தூஷித்து --> இந்த தமிழ் தில்லாங்கடி கேள்விக்கெல்லாம் பதில் சொல்லுவதாய் இல்லை.(கிரந்தம் பிரச்சினை விடாது போலிருக்கே..)

    ReplyDelete
  4. இரண்டும் சிறப்பானதகவல்கள்! அரிய தகவல்கள்! நன்றி!

    இன்று என் தளத்தில்
    பேய்கள்ஓய்வதில்லை!பகுதி7
    http://thalirssb.blogspot.in/2012/09/7.html

    ReplyDelete
  5. தூஷித்து = கேவலமாக திட்டறது.

    (முத்துலட்சுமி அர்த்தம் சொல்லிட்டாங்க)

    ReplyDelete

தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி

  தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை  -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை  காசி  எழுதியது தமிழோவியத்துக்காக  பாஸ்டன் பாலாஜி  க...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நாகேஷ் (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) வாலி (1) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)