Wednesday, September 19, 2012

24/365 துணுக்கு எழுத்தாளர் சி.பி.செந்தில்குமார் - பேட்டி -1

உங்களுக்குத் தெரியுமோ தெரியாதோ, பத்திரிக்கை துணுக்குகளுக்காக  சி.பி. செந்தில்குமாரின் பெரிய ரசிகன் நான். அவரிடம் பேட்டி என்றதும், ஒற்றை வரியில் பதில் வந்தது.

அவரைப் பற்றி அறிமுகமெல்லாம் தேவையில்லையென்பதால் நேரடியாக கேள்வி - பதில்களுக்கு. 

உண்மையாகவே சி.பி.செந்தில்குமார் யார் என்று அறியாதவர்களுக்கு

இவர் சென்னிமலை சி.பி.செந்தில்குமார் என்ற பெயரில் பத்திரிக்கைகளுக்கு துணுக்குகள், விமர்சனங்கள் போன்றவற்றை எழுதி வருபவர். அவருடைய Bio பின்னொரு பகுதியில் வரும். 2000ம் ஆண்டின் குமுதம் தீபாவளி மலரில் சிறந்த துணுக்கு எழுத்தாளர்கள் பட்டியலில் இடம் பெற்றவர்.

பதிவின் முகவரி http://www.adrasaka.com
கே1: பத்திரிக்கை துணுக்குகளால் பிரபலமான நீங்கள், பதிவுலகத்துக்கு வந்ததால் அடைந்த பலன்கள் என்னென்ன?பத்திரிக்கைகளால் 8 லட்சம் மக்களுக்கு அறிமுகம் ஆனாலும் பிளாக்கில் சினிமா விமர்சனம் மூலம் பல இயக்குநர்கள், பட தயாரிப்பாளர்கள் அறிமுகம், நட்பு , விரோதம் எல்லாம் கிடைத்தது.. இது எனக்கு பிற்கால திரை உலக வாழ்வுக்கு பயன் அளிக்கும் என நினைக்கிறேன் .அது போக வெளி நாட்டு வாசகர்கள் பலர் அவ்வப்போது அலைபேசியில் தொடர்பு கொண்டு நிரை குறைகளை சொல்வார்கள். அது மனதுக்கு மகிழ்ச்சி


===00oo00===


கே2: பத்திரிக்கைகளில் எழுதும்பொழுது, பணம் மற்றும் அது சென்று சேரும் மக்களின் எண்ணிக்கையும் அதிகம், பதிவில் பணம் ஈட்டுதலும் குறைவு, வாசிப்பவர்களின் எண்ணிக்கையும் குறைவு. இதை  நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? அதாவது வித்தியாசம்.


உண்மைதான்.. பதிவில் அதிக பட்சம் 1000 பேர் மட்டுமே ரெகுலரா படிக்கறாங்க. சினிமா விமர்சனம் என்றால் மட்டும் அதை 12,000 பேர் படிக்கறாங்க.. பத்திரிக்கை என்றால் மினிமம் 5 லட்சம் பேர் படிப்பாங்க.. பண ஈட்டுதல் பிளாக்கில் குறைவுதான். ஆனாலும் இது மியூச்சுவல் ஃபண்ட் போல இன்சூரன்ஸ் போல நீண்ட கால வைப்புத்திட்டம் போல பிற்காலத்தில் உபயோகம் ஆகும் என நினைக்கிறேன்.. .


 ===00oo00===


கே3: பத்திரிக்கைகளுக்கு எழுதுகையில் சச்சரவுகள் குறைவாக இருக்கும். பதிவுகளில் அது அதிகம். பதிவுலக சச்சரவுகளில் சந்திக்கும் பொழுது, பத்திரிக்கைக்கே எழுதியிருக்கலாம் எனத் தோன்றியது உண்டா? பதிவுலம் விட்டுச் சென்றுவிடலாம் என்றும் எண்ணியது உண்டா? உண்டெனில்,. விவரிக்கவும்.


பல சமயம் தனி மனித தாக்குதலுக்கு உண்டானபோது மனம் வருத்தப்பட்டது உண்டு, ஆனால் பதிவு உலகத்தை விட்டு போக வேண்டும் என நினைத்ததில்லை.. சவாலாக எடுத்து சாதிக்க நினைக்கிறேன். உதாரணமாக நான் வந்த புதிதில் ஹிட்ஸுக்காக சி பி எழுதுகிறார் என தாக்கி பதிவு போட்டவர் சில மாதங்கள் கழித்து தன் பிளாக்கில் கட்டுரை எழுதவும், தன் தள விளம்பரத்தை தன் தளத்தில் போடவும் கேட்டுக்கொண்டார். இதில் எனக்கு பெரும் மகிழ்ச்சி===00oo00===


கே4 : பத்திரிக்கைகளில் நல்ல படைப்புகளுக்கு மட்டுமே முன்னுரிமை அளித்து படைப்புகள் வெளியிடப்படும். அந்த நேரத்தில அவர்கள் புறந்தள்ளிய படைப்புகளை பதிவுகளில் வெளியிட்டுள்ளீர்களா? அப்படி வெளியிட்ட படைப்புகள் பதிவுகில் பாராட்டப்படும்பொழுது எப்படி உணர்ந்தீர்கள்?


பத்திரிக்கைகளால் நிராகரிக்கப்பட்ட படைப்புகள் பெரும்பாலும் சரக்கு கம்மியா இருக்கும்.. நம்மை விட ஒரு எடிட்டருக்கு  மக்களின்.. வாசகர்களின் பல்ஸ் நல்லா தெரியும்.. ஏன்னா எழுதுறவங்க ளுக்கு தன் படைப்பு எல்லாமே  பிரமாதம் என்ரே தோன்றும். எடிட்டர் தான் சுப்பீரியர். ஆனா எல்லா பத்திரிக்கை எடிட்டர்களும் ஒரே மாதிரி இல்லை. அவங்கவங்க டேஸ்ட்க்கு தக்க படி நம் படைப்பை பிரிச்சு அனுப்பனும். இதுக்கு அர்த்தம் அவங்க டேஸ்ட்க்கு தக்கபடி எழுதனும் என்று அர்த்தம் அல்ல. முதல்ல  படைப்பை எழுதிட்டு இது எந்த புக்குக்கு மேட்ச் ஆகும் என தேர்வு செய்து அனுப்பனும்..

 பத்திரிக்கையால் நிராகரிக்கப்பட்ட ஒரு படைப்பு பதிவில் நான் போட்டது - கற்புக்கரசி காஞ்சனாவுடன் ஒரு பேட்டி ( நடிகை குஷ்புவை கிண்டல் பண்ணீய நகைச்சுவை ) இது பிளாக்கில் போடப்பட்ட போது பலர் அதை ரசிக்கவில்லை

நீங்களும் சி.பி.செந்தில்குமாரிடம் கேள்விகள் கேட்கலாம் என்றிருந்தால் மறுமொழியிடவும்

5 comments:

 1. உங்க ப்ளாக்ன்னு தான் நினைக்கிறன், நாளு அஞ்சு மாசத்துக்கு முன்னாடி செந்திலை "தரம் கெட்டவர்" என்று சொல்லி நீங்க தானே பதிவு போட்டீங்க ? அதை எல்லாம் நீங்க மறந்தது அவரோட பேட்டியை வெளியிட்டது நல்ல விஷயம். :)
  பதிவுலத்தில் நிரந்தர எதிரியும் இல்லை, நிரந்தர நண்பனும் இல்லை.. :)

  ReplyDelete
 2. ராஜ், தலைப்புலேயும் பின் ஆரம்பத்துலேயும் சொல்லிட்டேன். துணுக்கு எழுத்தாளரா நான் சி.பி'யின் பெரிய ரசிகன். ஆனால் பதிவுலகத்துல சி.பி'யின் செயல்பாடுகள் எனக்கு வேற மாதிரியான அபிப்ராயம். இங்கே சி.பியை ஒரு துணுக்கு எழுத்தாளர் என்ற பார்வையிலேயே பார்க்கிறேன்

  ReplyDelete
 3. இளா,

  // ஆனால் பதிவுலகத்துல சி.பி'யின் செயல்பாடுகள் எனக்கு வேற மாதிரியான அபிப்ராயம். இங்கே சி.பியை ஒரு துணுக்கு எழுத்தாளர் என்ற பார்வையிலேயே பார்க்கிறேன்//

  பதிவுலக பண்பாடு!

  அரசியல் நாகரீகம் என்பது போல .

  என்னைப்பொறுத்த வரையில் ரொம்ப ஆர்வக்கோளாரா இருப்பாரோன்னு நினைச்சுப்பேன்.

  ReplyDelete
 4. நல்லதொரு பேட்டி! சி.பி.யின் அனுபவங்கள் வளரும் எழுத்தாளர்களுக்கு உதவும்! நன்றி!

  ReplyDelete
 5. nanbar cp senthilkumarukku vazhthukal. ungal pathivu arumai

  ReplyDelete

WhatsApp DP - சிறுகதை

கா லை எழுந்தவுடனே சுந்தரியின் WhatsApp DP யைத் தேடிப் போய் பார்ப்பதே எனக்கு வழக்கமாகிவிட்டது. என் பெயர் தாரணி, நானும் சுந்தரியும் ஒரே அப்பா...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (3) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (30) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (3) காதல் (14) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)