Sunday, September 23, 2012

25/365 துணுக்கு எழுத்தாளர் சி.பி.செந்தில்குமார் - பேட்டி -2

சி.பி.செந்தில்குமாரின் பேட்டி: பாகம் 1 
 
1) என் அனுபவத்தில், பதிவுலகத்திற்கு வந்தவர்கள் மூன்று  அல்லது நான்கு ஆண்டுகள் பரபரப்பாக இயங்கிவிட்டு, பிறகு பதிவுகளை (அதுவும் சொற்பமாக) படிக்க ஆரம்பித்துவிடுவார்கள். இதிலிருந்து நீங்கள் மீள முடியும் என நம்புகிறீர்கள்? வாழ்நாள் முடியும் வரையில் பதிவிடுவேன் என நீங்கள் நம்புகிறீர்களா?

    (வெகு சொற்பமான மக்களே இன்னும் 2003/4'ல் இருந்து பதிவிடுகிறார்கள்)

ஆசை 60 நாள் , மோகம் 30 நாள் என்பது எல்லாத்துக்கும் பொருந்தும். லவ் பண்றவரை உயிரையே குடுக்கறேம்பான். அதே பெண்ணை மேரேஜ் பண்ணிக்கிட்டா  அதிக பட்சம் 3 வருஷம் தான்.. சலிப்பு வந்துடும், சண்டை ஆரம்பிக்கும்.. சில விதி விலக்குகள் இருக்கலாம். பெரும்பான்மை அப்படித்தான்.

சினி ஃபீல்டுல கே பாக்யராஜ், டி ராஜேந்தர் நல்ல உதாரணம். 2 பேரும் டாப்ல இருந்தாங்க.. இப்போ இல்லை.எல்லாம் ஒரு சீசன் தான்./. சரக்கு குறைஞ்சுடும், அல்லது நீர்த்துடும்

Every Hero Becomes bore at a Time

இதையும் மீறி  ஆர்வமுடன், வெறியுடன் எழுதுறவங்க இருக்காங்க,  என்னை பொறுத்தவரை  பதிவுலகத்தை  என்னை ஏற்றி விடும் ஏணியாக, லட்சியக்கடலை அடைய உபயோகப்படுத்தும் பரிசலாக  நினைக்கிறேன்.

என் லட்சியம் மீடியாவில் பணி புரிவது. பேக் டூ த ஸ்க்ரீன். அதனால அந்த இடத்துக்கு போய்ட்டா பதிவு இரண்டாம் பட்சம் ஆகி விடலாம்.


===00oo00===

2) பதிவுகளில் எழுத இலக்கிய ஆர்வம் வேண்டுமென நினைக்கிறீர்களா? அல்லது நாளேடுகள், வாரயிதழ்கள் மட்டும் படித்தால் போதும் என்று நினைக்கிறீர்களா?

பதிவுகளில் எழுத இலக்கிய ஆர்வம் வேணும்னு சொல்லலை, இருந்தா நல்லா இருக்கும்னு சொல்றேன் ( நன்றி - தசாவதாரம் கமல்).

பொதுவா அனுபவப் பகிர்வுகள் தான் இப்போ அதிகம் விரும்பப்படுது. பயணக்கட்டுரைகள், காலேஜ், ஸ்கூல் ஃபிளாஸ்பேக் அனுபவங்கள், இந்த மாதிரி.. இதுக்கு இலக்கிய வாசிப்பு தேவை இல்லை.. டைரி எழுதற மாதிரி நடந்ததை அப்படியே எழுத வேண்டியதுதான்.

சிறு கதை எழுதும்போது தான் சுவராஸ்யமான நடைக்காக மற்ற படைப்புகள் படிச்சா யூஸ் ஆகும்.. நடைல ஒரு ஸ்பீடு கொண்டு வர இலக்கிய வாசிப்பு தேவை.. என் சிபாரிசு . சுஜாதா , கு அழகிரி சாமி கதைகள்

இதெல்லாம் போக பரப்பரப்பான நியூஸ் அப்டேட்டிங்க் பண்ணலாம். ஆனா அது காலத்துக்கும் நிலைத்திருக்காது,. அப்போதைக்கு  படிப்பாங்க.. அவ்ளவ் தான்


===00oo00===3) ஆரம்பத்தில் பத்திரிக்கைகள் பதிவுகளை வெகுவாக மட்டம் தட்டியே வந்தன.  சில எழுத்தாளர்களும் பதிவுகளை குற்றம் கூறினர். இப்பொழுது அது சற்றே மாறியுள்ளது. அடுத்து என்ன நடக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். பதிவுகள் கண்டிப்பாக மாற்று ஊடகமாக மாறிவிடுமா?


முன்னணி வார இதழ்கள் 4 இருக்குன்னா அதுல இருக்கற , அதுல எழுதறவங்க சராசரியா மொத்தமே 40 பேருதான் திருப்பி திருப்பி எழுதிட்டு வர்றாங்க.. காலப்போக்கில் அது போர் அடிச்சுடுச்சு.. வெரைட்டி ரைட்டிங்க் தர முடியல.. பதிவுகள் பார்த்தீங்கன்னா  ஏகப்பட்ட பேர் பட்டாசை கிளப்பறாங்க..

சூடான இடுகைகளில் வராத, சினிமா விமர்சனம் எழுதாத அதிகம் பேரால் படிக்காத பல மண்ணுக்குள் வைரங்கள் பதிவுலகில் நடமாடிட்டு இருக்காங்க..  என்னை கேட்டா வலை உலகுக்கென ஒரு வார இதழ் நடத்துனா பட்டாசா இருக்கும்.. அப்படி ஒரு முயற்சியை யாராவது எடுத்தா எந்த வித சன்மானமும் எதிர்பார்க்காம  நான் அதில் பணி புரிய தயாரா இருக்கேன். என் வேலை அதில் திற்மைசாலிகளை அடையாளங்காட்டுவதாக இருக்கும்..

எதிர் காலத்துல பத்திரிக்கை உலகுக்கு வலை உலகம் டஃப் ஃபைட் கொடுக்கும் என நம்பலாம். உதாரணமா இப்போ சினிமா விமர்சனங்கள்  வார இதழ்களில் வருவதை விட 4 மடங்கு கலக்கலா பலர் எழுதறாங்க..

செங்கோவி, உண்மைத்தமிழன்,கேபிள் சங்கர், ஜாக்கி சேகர் , அதிஷா , லக்கிலுக் யுவகிருஷ்ணா,கார்க்கி, ராஜன் என இவங்க விமர்சனம் எல்லாம் படிக்கும்போது அவங்க எங்கேயோ போய்ட்டாங்க எனவும் வார இதழ் விமர்சகர்கள் கடந்து வர வேண்டிய தூரம் நிறைய இருக்குன்னும் தோணுது

===00oo00===

4) ட்விட்டர், ஃபேஸ் புக், பதிவுகள் - பாவிக்க, பாராட்ட, திட்டு வாங்க, எவை எவை சுலபமாக இருக்கிறது.


ட்விட்டர்  பதிவு போட்டதும் மார்க்கெட்டிங்க் யூஸ் ஆகுது.. அப்பப்ப நம்ம படைப்பின்  ரிசல்ட் தெரிஞ்சுடுது..

 ஃபேஸ் புக் பற்றி எனக்கு அதிகம் பரிச்சயம் இல்லை.. ஃபோட்டோ ஷேரிங்க் , க்டலை தான் அங்கே அதிகம்னு சொல்லிக்கறாங்க..  திட்டு வாங்க, அடிச்சுக்க சண்டை போட வேடிக்கை பார்க்க பதிவு தான் பெஸ்ட்..

ஆனா ஜாலியான சண்டைகள் இப்போ காணோம். பயங்கர வெட்டுக்குத்து தான் நடக்குது.. இப்போ புதுசா இந்து முஸ்லீம் பிரச்சனை, ஈழத்தமிழர் பிரச்சனைனு போய்ட்டு இருக்கு.. :((

==00oo00===

5) பதிவுகள் மூலம் ஒத்த அலைவரிசை கொண்டோரை அடையாளம் காண்பது எளிது. இதனால காதலிக்க ஏதுவான ஊடகமா இருக்கிறது. இதைப்பற்றி உங்கள் கருத்து என்ன?

ம் ம் அங்கங்கே அதுவும் நடந்துட்டுதான் இருக்கு.. நான் பத்திரிக்கைத்துறையில் இருந்தப்போ மு முருகேஷ் - அ வெண்ணிலா காதல் பெரிய அளவில் பேசப்பட்டுது.. அதே போல் வலை உலகில் காதல் வளரலாம்.. அங்கங்கே கள்ளக்காதலும்

==00oo00===

6) "சமூக வலைதளங்களால் பதிவுகள் அழியும் காலம் வெகு தொலைவில் இல்லை" - இதற்கு  உங்களது கருத்து?

பதிவுகள் முற்றிலும் அழியாது. ஆனா பாதிப்பு இருக்கு என்பது உண்மைதான். ஒரு வேளை பதிவு எழுதுவது குறைந்து போகலாம்.

6 comments:

 1. Suji Sittampalam · Said

  எனது ஆர்வம் குன்றியதன் காரணம்: ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் என்ற பழமொழியில்க் கூறியது போலல்ல...

  எழுத, எழுத எழுதும் ஆர்வம் அதிகமாகும்.

  எழுத்துக்களை அப்படியே ஒற்றியெடுத்து தமது வலைப்பதிவில் அல்லது இணையத்தளத்தில் பதித்து விட்டு அதைத் தாமே எழுதியதாக தம்பட்டமடித்துக்கொள்கிறார்கள்... இதனால்த்தான் ஆர்வம் குன்றிப் போகிறது...

  எழுதுவதற்கு இலக்கியத்தில் ஆர்வம் இருக்க வேண்டுமென்பதில்லை, ஆனால் நல்ல உதாரண உவமேயத்தை அங்கிருந்து கொண்டு வரலாம்.

  ஆனால் நல்ல இலக்கண அறிவு எழுதப்போகும் மொழியில் இருந்தே ஆக வேண்டும். பலரும் பேச்சு வழக்கில் எழுதுவதாலும் வேற்று மொழிச் சொற்களை தாம் எழுதப் போகும் மொழி அகரவரிசையில் எழுதுவதாலும் வாசிப்போருக்கு மூச்சு திணற வைக்கும்.

  இதனால் வாசிப்போர் வருகை குறையும். வாசிப்போர் வருகை குறையக் குறைய எழுதும் ஆர்வமும் குன்றிப் போகும். இங்கே ஒரு மூன்று வசனங்கள் எழுதுகிறேன் ஏதாவது புரிகிறதா பாருங்கள்.

  டார்லிங், அந்த புக் கில்லே ல மேல் றக்கில பெரிய டிச்சனரிக்கும் வேய் காட்டுக்கும் இடையில ஒரு ஸ்தூர் எம்பலப்பு இருக்கு... அதுக்க செல்வாங்கலி போம் இருக்கு அத எடுத்தாரும். இந்த வரியமாகிலும் உந்த செல்வாங்கலியால காசெடுக்க வேணும். ஸ்கத்து அம்பது புறசென்த்தெல்லே கட்டின்னான்.

  மேலே உள்ள வசனங்களில் மூன்று மொழிகளுக்கு மேல் கலப்படம் உள்ளது.

  ReplyDelete
 2. //டார்லிங், அந்த புக் கில்லே ல மேல் றக்கில பெரிய டிச்சனரிக்கும் வேய் காட்டுக்கும் இடையில ஒரு ஸ்தூர் எம்பலப்பு இருக்கு... அதுக்க செல்வாங்கலி போம் இருக்கு அத எடுத்தாரும். இந்த வரியமாகிலும் உந்த செல்வாங்கலியால காசெடுக்க வேணும். ஸ்கத்து அம்பது புறசென்த்தெல்லே கட்டின்னான்.//

  ஆங்கிலம் & தமிழ் கலந்து எழுதுபவர்கள் அதிகம் தான். (என்னையும் சேர்த்துக்கறேன்)

  இப்படி ஏகப்பட்ட மொழிகள் கலந்து தமிழில் எழுதுபவர்களும் உண்டா? இருந்தால் சுட்டிக்கொடுங்கள்.

  ReplyDelete
 3. கிர்ர்ர்ர்ர்..

  //Follow-up comments will be sent to //

  இதை க்ளிக் செய்து வைத்தால், என்னோட பின்னூட்டம் எனக்கே வருது.. எகொஇஇ?!!

  ReplyDelete
 4. சுட்டி நான் தந்து,
  கிட்டி தடி நீங்கள் கொண்டு
  தட்டிக் கேட்க - அவர்கள்
  திட்டித் தீர்ப்பர் என்னை...

  வேண்டாம் கவிதா...

  மேலே நான் எழுதிய வசனங்கள் உண்மையில் வருமான வரி படிவம் நிரப்ப, ஒருவருக்கு உதவச் சென்ற நேரம் அவர் தனது மனைவிக்குச் சொன்னது. மனைவியின் பெயரை நான்தான் 'டார்லிங்' என மாற்றினேன்.

  நான் கூற வந்தது என்னவெனில், பிற மொழிச் சொற்களை தமிழில் எழுதும் போது அந்தச்சொற்களுக்குரிய ஒலி வடிவத்தை ஒழுங்கான முறையில் தமிழில் கொடுக்க இயலாது.

  இலத்தீன் அகரவரிசை (ஆங்கில அகரவரிசை)யைப் பயன் படுத்தி அந்த வேற்று மொழிச் சொல்லை எழுதினால் வாசிப்போர்க்கு இலகுவாக இருக்கும் எனத்தான் சொல்ல வந்தேன்.

  வேறு மொழிகளைக் கலந்து எழுதுவதைச் சொல்ல வரவில்லை.

  அங்கே பல மொழிகள் தமிழோடு கலந்திருக்கிறது என எழுதியதன் காரணம் அந்த வசனங்களை வாசித்து என்னதான் இங்கே எழுதப்பட்டிருக்கிறது எனக் குழம்பாமல் இருப்பதற்காகவே.

  // அன்பே, அந்தப் புத்தக 'அலுமாரி'யில் மேல் தட்டில் பெரிய அகராதிக்கும் வீதி வரைபடப் புத்தகத்திற்கும் இடையில ஒரு பெரிய கடித உறை இருக்கிறது... அதனுள், வருமானவரிப் படிவம் இருக்கிறது அதை எடுத்து வாரும். இந்த வருடமாவது அந்த வருமான வரித் திணைக்களத்திடமிருந்து பணம் திரும்பப் பெற வேண்டும். வருமான வரி ஐம்பது வீகிதம் கட்டினேன்.// என்பது தான் அங்கே கூறியது.

  இவ்விதம் நோர்வேஜிய (norwegian language)மொழியைக் கலந்து இணையத்தில் எழுதுவோர் இல்லைத்தான். இணையத்தில் எழுதுவோர் இதில் மிகவும் அவதானமாக இருக்கிறார்கள்

  இங்கே பேச்சுத்தமிழ் இப்படித்தான் இருக்கும் என உதாரணம் காட்டினேன்.

  வெளிநாடுகளிலிருந்து உறவினர் நோர்வேயிற்கு வந்தால், அவர்கள் திரு திருவென முழிப்பதை நான் பார்த்திருக்கிறேன்.

  அதைவிட இங்கே வெளியாகும் சிறு எழுத்து பிரதிகளில் இப்படிப்பட்ட நம் பேச்சுத் தமிழைப் பார்த்தேன்...

  ReplyDelete
 5. //நான் கூற வந்தது என்னவெனில், பிற மொழிச் சொற்களை தமிழில் எழுதும் போது அந்தச்சொற்களுக்குரிய ஒலி வடிவத்தை ஒழுங்கான முறையில் தமிழில் கொடுக்க இயலாது.

  இலத்தீன் அகரவரிசை (ஆங்கில அகரவரிசை)யைப் பயன் படுத்தி அந்த வேற்று மொழிச் சொல்லை எழுதினால் வாசிப்போர்க்கு இலகுவாக இருக்கும் எனத்தான் சொல்ல வந்தேன்.
  //

  ம்ம்ம்.. புரியுது.
  நன்றி.

  ReplyDelete

WhatsApp DP - சிறுகதை

கா லை எழுந்தவுடனே சுந்தரியின் WhatsApp DP யைத் தேடிப் போய் பார்ப்பதே எனக்கு வழக்கமாகிவிட்டது. என் பெயர் தாரணி, நானும் சுந்தரியும் ஒரே அப்பா...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (3) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (30) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (3) காதல் (14) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)