போன வாரம் அப்படித்தான் ஒரு சம்பவம் ஆச்சு. அமெரிக்கா ஐயோவா மாநிலத்துல ஒரு அம்மணி காரை 30 மைல் ஓட்டிட்டு இருக்கும் போது, வண்டி அதா வேகமெடுத்திருக்கு, அம்மணி பிரேக் போட்டு பார்த்திருக்கு , நிக்கலை. வண்டி அது பாட்டு வேகமெடுக்க 110-120 மைல்ன்னு ஓட ஆரம்பிச்சிருச்சு. அம்மணியும் இடிக்காம இருக்க போற வண்டி சந்துல எல்லாம் பூந்து ஓட்ட ஆரம்பிச்சிட்டாங்க, உசுரு பயமாச்சுங்களே.
என்ன பண்றதுன்னு தெரியாம காவல்துறையை கூப்பிட்டிருக்க அம்மணி. அவுங்களையும் Neutralல போடு,.. அது இதுன்னு தெரிஞ்சதை சொல்ல, அம்மணியும் முயற்சி பண்ணிட்டே இருந்திருக்காங்க. ஆனாலும் வேகம் குறையாம சுமார் (59 மைல்) போயிருச்சு. அப்புறமா காவல் துறை சொன்னாப்ல Accelerator குடுத்து brake புடிச்சவுடனே நின்னுடுச்சு.
"I knew I was going to die ... I didn't have any doubt about. I really thought I was going to die ... and no matter what I did, I couldn't slow it down."
அம்மணி ஓட்டிட்டு போன வண்டி Kia Sorento SUV. Kia தொழில் நுட்பக்காரங்களோ "இது என்னான்னு எங்களால கண்டுபுடிக்க முடியலை"ன்னு சொல்லிட்டாங்க, எப்படியும் அம்மணிக்கு பெரிய நஷ்ட ஈட்டைத் தந்துடுவாங்கல்ல.
அடுத்த முறை வண்டியை எடுக்கும் போது பிரேக் புடிக்குதான்னு பார்த்துட்டு கிளம்புங்க.
ஐயோ... பயம்மா இருக்குங்க...
ReplyDelete/// இறங்கும்போது அம்மணியின் நிலை ////
முடிவு வரவில்லையே நண்பரே....
அஹா, அங்கயுமா? இங்கயும் ரெண்டு நாள் முன்னாடி, ஒரு Land Cruiser "cruise-control"-ல் 120கிமீ வேகத்தில் போய்க் கொண்டிருக்கும்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டில் வரமறுத்து ஓடிக்கொண்டேயிருக்க, ஓட்டுநர் காவல் துறையை அழைக்க, அவர்கள் முன்னும் பின்னும் பந்தோபஸ்து கொடுத்து, பல முயற்சிகள் செய்து, இறுதியில் (இங்கு அதிகம் காணப்படும்) sand dune-ல் இடிக்க வைத்து... எல்லாம் சுபம்!!
ReplyDeleteஇப்போ ஓட்டுநர், கார் கம்பெனி மீது புகார் கொடுத்திருக்கிறார். இதுபோல இன்னொரு சம்பவமும் சென்ற ஆண்டு நடந்தது. எங்கே பிரச்னை என்று தெரியவில்லை. சிலர் காரில் alterations பண்ணுவதால் வருகிறது என்று சொல்கிறார்கள். சிலர் technical snag என்று சொல்றாங்க. என்னவோ... நாம ஓட்டிகிட்டிருக்கிற கார் நம்ம கட்டுப்பாட்டில் இல்லைன்னா... ஆண்டவா...
http://khaleejtimes.com/kt-article-display-1.asp?section=nationgeneral&xfile=data/nationgeneral/2012/august/nationgeneral_august462.xml
தி.த --> Jammed 120 அப்படின்னு தேடிப்பாருங்களேன், வித விதமான காணொளிகள் கிடைக்கும்.
ReplyDeleteஹூஸைனம்மா --> நன்றி!
இளா,
ReplyDeleteஇதற்கு காரணம் என நான் நினைப்பது வெளிநாட்டுக்கார்களில் இருக்கும் "drive by wire" என "radio signal" மூலம் ஆக்சிலரேட்டர், பிரேக்குகள் இயங்குவதால் இருக்கலாம்.
அதவாது ஆக்சிலரேட்டரில் பெடல் மட்டும் தான் இருக்கும் அது நேரடியாக காரின் எஞ்சின் த்ராட்டில் உடன் இணைக்கப்பட்டிருக்காது அதற்கு பதில் பெடலை அழுத்தவற்கு ஏற்ப வயர்லெஸ் சிக்னல் அனுப்பும்,அதனை எஞ்சின் பெற்றுக்கொண்டு வேகம் கூட்டும் குறைக்கும். பிரேக்கிற்கும் அப்படியே எல்லாம் வயர்லெஸ் சிக்னல் மூலமே.
இதற்கான கண்ட்ரோலில் பிரச்சினை ஏற்பட்டு தானாக சிக்னல் அனுப்பி இருக்கலாம்,அப்புறம் கணினியை ஹேக் செய்வது போல யாரேனும் இந்த சிக்னலை இடைமறித்து ஹேக் செய்யவும் முடியும்,எனவே ஆக்சிலரேட்டரை அழுத்தாமல் இருக்கும் போதே ஓட வைக்கவும் முடியும்.
2 ஃபாஸ்ட் & ஃப்ரியஸ் படத்தில் போலிஸ் கார்களை தொறத்தும் போது ஒரு எல்க்ட்ரானிக் ஆரோ போல காரின் பானட் மீது செலுத்தியதும் கார் வேகம் குறைவது போல காட்டுவார்களே, அது இதனால் தான் அது ஒரு சிக்னல் ஜாமர் கருவி. அது காரின் எஞ்சினைக்கட்டுப்படுத்தும் கணினி மற்றும் ரேடியோ சிக்னலை தடை செய்து கார் ஓட விடாமல் செய்து விடும்.
இத்தகைய அமைப்பு எல்லா வெளிநாட்டு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கொண்ட காரிலும் இருக்கு,அதுவும் புதியகாரில் கண்டிப்பாக இருக்கும்.
கியர் அமைப்பும் அப்படித்தான் ,எனவே தான் நியுட்ரல் போட்டும் கியர் விழவில்லை.
ஏன் அந்தம்மா எஞினை நிறுத்த முயலவில்லை,அல்லது ஹேண்ட் பிரேக் போட முயலவில்லை, ஹேண்ட் பிரேக் மெக்கானிக்கல் வகையாகவே பெரும்பாலும் இருக்கும் ஏன் எனில் பார்க்கிங் போது பயன்ப்படுத்த அப்படி வைப்பார்கள்.
என்ன கொடுமை இளா, மாடரேஷன் :-))
ReplyDelete