எனக்குப் பிடித்த இரு ஆதர்ச நாயகர்கள் ஒன்றிணைந்த படம் என்ற எதிர்பார்ப்பைத்தவிர வேறெதுவும் இந்தப் படம் பார்க்கும் வரை வரவில்லை. காரணம், பாடல்கள், நான் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாததும் ஒரு காரணமாய் இருக்கலாம்
படத்தோட ஆரம்பமே “புடிக்கலை”.. அதாங்க ’புடிக்கலை மாமு’ பாட்டு. கேட்பதை விட பாட்டை பார்க்க பிடித்தது. சமந்தாவின் அறிமுகத்தில் சந்தானத்தின் Counterஅபாரம். முதல் 20 நிமிடம் சந்தானத்தின் Counter மற்றும் 'அவளைப் பார்த்தேன், அழகாயிருந்தா’ வகையறாக்களும் GVM டிபிக்கல் டச்.
படத்தில் பாராட்டப் படவேண்டியவர் சமந்தா.. அண்ணனிடம் மாட்டிவிட்டது நீதான் என்று சொல்லுபோது சமந்தாவின் நடிப்பு, அழகு.. போதும்டா குடுத்த காசு தீர்ந்து போச்சு, அந்த இடத்தில் மொட்டையின் பின்னணி குரல்..(ராஜாவின் பின்னணியை பாராட்டி பாராட்டி சலிச்சுப் போச்சு)
சில பல பத்தாண்டுகளுக்கு முன் நடந்த, வெளியே சொல்ல முடியாத விசயங்களை திரையில் காணும் போது நம்மை அங்கே பொருத்திப்பார்க்கவே தோணும். அப்படியாப்பட்ட காட்சிகள்தான் இந்தப் பள்ளிப்பருவ காட்சிகள். ராஜாவின் ஒற்றை வாத்தியம், Has driving through the whole segment. பள்ளிக்காலங்களில் நாமும் ஒரு கதாநாயகனாத்தான் இருந்திருக்கிறோம் என உணர்த்தும் சில காட்சிகள். அதுதான் படத்திற்கான பலமும்.
காதலித்த தருணங்களை நினைத்துப்பார்க்கும் விதமாக மீண்டும் அந்த இடங்களுக்கு போவதெல்லாம் சுகந்தம். எல்லா காதலர்களும் நினைப்பதுதான்..
”போகாதன்னு சொல்லு வருண்”, ”எனக்காக சந்தோசமா இருக்கிறா மாதிரி நடிக்கலாம்ல?”. இதெல்லாம்தானே பெண்கள் மனசை கண்ணாடி மாறி காட்டுது, எல்லோருக்குமான ஒரு வாக்கியம்.
இருவரும் தொலைபேசி, அலைபேசியில் பேசிக்கொள்ளும் லைட்டிங்ஸ் அருமை(எந்த கேமராமேன் யாருன்னு தெரியல)
VTV remix - சந்தானத்துக்கு சரியா ஒத்துவருது. அதே சமயம் அவுங்களுக்கு ராஜா போட்ட அந்தப் பாட்டை எப்படியும் யாராவது ஒருத்தர் ரீ மிக்ஸ் பண்ணிடுவாங்க, 2 வருசம் கழிச்சு முழுப்பாட்டையும் கேட்டுக்குவோம் விடுங்க.
ராஜாங்கம்: இருவரும் சந்திக்க வருகையில் பின்னணி இசை எதுவுமில்லாமல் மெளனமாக்கிவிட்டு பிறகு கோரஸ்ஸை ஒலிக்கவிட்டது, சமந்தாவின் முதல் வெட்கம், சத்தமேயில்லாம நம்மை அந்த வசனங்களூடே நம்மை அழைத்துச் சென்றது என்றது என எங்கெங்கு காணினும் ராஜாங்கம்.
பள்ளிக்கூட பகுதியில் ஜீவாவின் குரல் பல மாற்றங்கள். எதுல பிரச்சினைன்னு தெரியல. ஆனா ஒரு Consistencyஏ இல்லை. சமந்தாவின் குரலும் பல இடங்களில் பிசிறடிக்குது, அதுவும் அழும் தருணங்களில். ரவிச்சந்தருக்கும் பின்னணி குரல் சரியா பொருந்தி வரலை.
நானியின் ஒரு காட்சி, சந்தானம் சொல்லும், ’டேட் தான் பிரச்சினை, நானில்லாம இனிமே நிறைய சீன் வரும்’, ’ஒரு தெலுங்குப் படத்தின் பாடல் பாடுறேன்’ என்று சொல்லிப்பாடுவது, Trailerஐ இடையில் இணைத்தது எனப் பல insider சமாச்சாரங்கள். எல்லோருக்கும் புரியுமா என்றுதான் தெரியவில்லை. கெளதம்(இயக்குனர்) பாடிய நீதானே என் பொன் வசந்தம் பாடலை ஏன் CDயில் சேர்க்கவில்லை என்பது சிதம்பரம் ரகசியம் :).
படம் எனக்கு ரொம்பப் பிடிச்சது. ஒரு பெளர்ணமி இரவில், அடர் கானகத்தின் நதியின் மேல், காதலியின் கையை இறுக்கிப் பிடித்தபடி, சிறு பரிசலில் பயணிப்பது போலிருந்தது. அந்தத் தனிமையும், காதலும், அதை உணர்ந்தவர்களுக்கானது. மீண்டும் ஒரு முறை அந்த இனிமையான காலங்களுக்கே பயணிப்பது போன்றதோர் உணர்வு.
”சின்னத்தம்பி” படத்தில், வெளியுலகையே பார்த்திராத கதாநாயகி முதல்முதலாக நாயகனுடன் வெளியே வந்து சுற்றிப்பார்ப்பதுபோல ஒரு காட்சி. இந்தப் பாடலின் கம்போஸிங்கின்போது யாருமே உடனில்லை. ராஜா சார் மட்டும்தான் இருந்தார். நான் Situation சொல்லிமுடித்த அடுத்த நிமிடமே, உடனடியாக தனது ஆர்மோனியத்தில் பாடலின் மெட்டை வாசித்து, ஆர்மோனியத்திலேயே விரல்களால் தாளமும் போட்டுக்கொண்டு, ‘போவோமா ஊர்கோலம்…? என்று Lyric’ஆகவே ஆரம்பித்து’ முழு பாடலையும் Compose செய்து முடித்துவிட்டார். Recordingம் முடிந்தது. பின்னர் நான் பாடலை Picturise பண்ணிமுடித்தேன்.
கதாநாயகி முதன்முதலாக வெளியே வந்து பறவைகளைப் பார்ப்பதோ, சேற்றில் கால்வைப்பதோ… அவர் எனக்குக் கொடுத்த இசைக்கு நான் Shots எடுத்திருந்தேன் அவ்வளவுதான். பாடலைப் பார்த்தார்…!! ‘கதாநாயகி முதல்முதலாக வெளியுலகைப் பார்க்கிறாள்..!! பறவைகளின் ஒலியுடன், Keyboard’ல் துவங்கி, புல்லாங்குழலுடன் பாடலின் Prelude பயணிக்கிறது. படமாக்கிக் கொண்டு சென்றிருந்த பாடலைப் பார்த்துவிட்டு…
“இல்லை.. இவள் முதல்முதலாக வெளியுலகைப் பார்க்கிறாள்.. அதற்கு இந்த Prelude மட்டும் போதாது. இன்னும் கொஞ்சம் Extra’வாக ஏதாவது இருந்தால் நன்றாக இருக்கும்..!! நீ ஒரு 100 அடிக்கு ஏதாவது காட்சிகள் Add பண்றியா..?” என்றார்.
உடனே நான் ப்ரசாத்தில் இருந்து, வாகினி ஸ்டுடியோவிற்குச் சென்று, இந்தப் பாடலின் நிறைய Shots’ஐ Edit பண்ணி ஒரு 80 அடிக்குக் காட்சிகளை எடுத்துக்கொண்டுபோய் அவரிடம் கொடுத்தேன்.
அப்படி நான் கொடுத்த காட்சிகளுக்கு அவர் ஒரு Violin Score எழுதி அமைத்துத்தந்தார். படத்தில், அந்த வயலின் இசை முடிந்து அதன்பின்னர் ’போவோமா ஊர்கோலம்’ பாடலின் Prelude துவங்கும். பாடலின் முன்னர் வரும் அந்த வயலின் இசையுடன் அதைப் பார்த்தவுடன் எனக்கு உடலெல்லாம் சிலிர்த்துவிட்டது.
- இயக்குனர் திரு. பி.வாசு அவர்கள் விஜய் டி.வி.யின் ”இதயம் தொட்ட இசைஞானி” நிகழ்ச்சியில் பகிர்ந்துகொண்டது.
’போவோமா ஊர்கோலம்’ பாடலின் Prelude’ஐயும், Prelude’க்கு முன்வரும் அந்த இசையையும் இதில் கேளுங்கள். நிச்சயம் உங்களுக்கும் உடல் சிலிர்க்கும்.
இத்தாலியில்
இருக்கும் Bologna என்ற ஊரில் உள்ள கடைவீதி ஒன்றில்
நடந்துபோய்க்கொண்டிருந்த ஒருவன், கடையில் இருந்து ஒலித்த ஒரு பாடலைக்
கேட்கிறான். கேட்டதும் அவனுக்கு மிகவும் பிடித்துவிடுகிறது. ஆனால் எந்தக்
கடையிலிருந்து பாடல் வந்தது என்று அவனுக
்குத்
தெரியவில்லை. ஒவ்வொரு கடையாக விசாரிக்கிறான். ஒரு வழியாகக் கடையைக்
கண்டுபிடித்து, ”ஐந்து நிமிடங்களுக்கு முன்னால் ஒரு பாடலைப் போட்டீர்களே?
அந்தப் பாடலை மறுபடியும் கேட்கவேண்டும்” என்று சொல்லி தேடித் தேடி
ஒருவழியாகப் பாடலையும் கண்டுபிடிக்கிறான். ‘இது எந்த ஊர் பாடல்?
எங்கிருந்து வந்தது இந்த இசை?’ என்று கடைக்காரரிடம் விசாரிக்கிறான். ‘இது
சென்னையில் இருந்து வந்தது’ என்கிறார் கடைக்காரர். விமானம்
ஏறுகிறான். வந்திறங்குகிறான் சென்னையில். அந்தப் பாடலை உருவாக்கியவரைச்
சந்தித்தே தீருவது’ என்று எண்ணி அவர் வீட்டு வாசலில் தவம் கிடந்து, ஒரு
வழியாய் சந்திக்கிறான். Bologna’வில் வருடா வருடம் தான் நடத்தும் Angelica
Music Festival’க்கு அவரை அழைக்கிறான். அவரும் அவன் வேண்டுகோளை ஏற்று,
Italyல் Concert நடத்தித் தந்தார். ஏதோ ஒரு தேசத்தில் எதற்காகவோ
சுற்றிக்கொண்டிருந்த ஒருவனை அப்படிச் சுண்டி இழுத்து இங்குக் கூட்டி வந்த
அந்தப் பாடல் ‘புத்தம் புது காலை பொன்னிற வேளை”. - ”யூகியுடன் யூகியுங்கள்” நிகழ்ச்சியில் திரு. யூகிசேது கூறியது. நன்றி: FB: இசைஞானி பக்தர்கள் (The Maestro’s Devotees)
‘இல்ல சார்..! சில விஷயங்கள் தோணும்போது பண்ணனும்’..!
‘ஓ! தெளிவா பேசுறதா நெனப்போ ஒனக்கு? சரி என்ன படம்..?’
“சார்..! ஒரு சின்ன கிராமத்துக்கதை.. தெருக்கூத்தை வைத்து… …”
“தெருக்கூத்தா..? என்னய்யா? நான் வேற Journey-ல இருக்கேன்..! ம்ம்ம்..?? சரி..! பார்க்கலாம்’ என்றார். நான் ஏமாற்றம் அடையவில்லை. படப்பிடிப்பிற்குச் சென்றேன். படம் எடுத்தேன். தொகுத்தேன். பின்னணிக்குரல் சேர்த்தேன். பின்னணி ஒலிகள் சேர்த்தேன். ஒரு நாள்..
“சார் நான் படத்தை முடிச்சுட்டேன்..”
“என்ன அதுக்குள்ளேயா?”
‘ஆமா சார்..! நீங்க படம் பார்க்கணும்”
“சரி” என்றவர் படம் பார்த்தார். அந்தப் படம் ‘அவதாரம்’..! படம் முடித்துக் காரில் ஏறி, ‘வீட்டுக்கு வா’ என்றார். எனக்கு ஒரே பயம். பல நூறு படங்களைக் கண்ட ஒரு மாபெரும் கலைஞன் என் படத்தைப் பார்க்கிறான். ஒரு விமர்சனம், ஒரு பாராட்டுதல் இல்லாமல் ‘வீட்டுக்கு வா’ என்றால் என்ன அர்த்தம்? ஒரு வேளைத் திட்டப் போகிறாரோ? என்று பயந்துகொண்டே சென்றேன். அவருடைய வீடு சாத்வீகமாக, ஒரு கோயில் போல இருந்தது.
‘எப்படிய்யா இப்படி ஒரு படம் பண்ணியிருக்க..? நல்லாயிருக்கே..! சரி நாளைக்கு ரெக்கார்டிங் வச்சுக்கலாம்’
உங்கள் எல்லோருக்கும் தெரியும். சினிமாவில் அட்வான்ஸ் என்ற ஒன்று இல்லாமல் ஒரு காரியமும் நடக்காது. பலவிதமான Excitement-க்கு நடுவே இதனால் எனக்குத் தலைகால் புரியவில்லை. அடுத்த நாள் ஆறு மணிக்கு வரச்சொன்னார். பதைபதைப்புடன் போனேன்.
வெள்ளை வெளேர் என்ற ஒரு அறை. கருப்பு வெள்ளையில் ரமண மகரிஷியின் ஒரு புகைப்படம். அதனருகில் அம்மா என்கிற ஒரு ஆத்மாவின் புகைப்படம். அதே கருப்பு வெள்ளை 3D Animation போல அருகில் இளையராஜா, அவர் பக்கத்தில் ஒரு கோப்பையில் இறக்குமதி செய்யப்பட்ட சாக்லேட்டுகள்..! இவைகளைத் தவிர அந்த அறையில் இருந்த மற்றொரு முக்கியமான விஷயம் ”அமைதி”. நான் சென்றபோது ஏதோ எழுதிக்கொண்டிருந்தார். நான் உட்காரவா வேண்டாமா என்று தயங்கி நின்றுகொண்டிருந்தேன். உட்காரச் சொன்னார். உட்கார்ந்தேன். ஒரு சாக்லேட்டை எடுத்து என்னிடம் போட்டார். நான் அதைப் பிடித்தேன். அந்த சாக்லேட் பேப்பரின் ஒலிதான் அந்த அறையில் நான் நுழைந்து ஐந்து நிமிடங்களில் நான் கேட்ட முதல் ஒலி. ”இதைப்பிரித்தால் சாக்லேட் பேப்பரின் ஒலி இவரை Disturb செய்துவிடுமே..? இதைப் பிரிக்கலாமா வேண்டாமா? சாப்பிடுவதா இல்லையா?” என்று எனக்கு யோசனை.
அவர் எழுதிக்கொண்டே இருக்கிறார். எழுதிக்கொண்டே இருக்கிறார். வேகமாக எழுதுகிறார். கோபத்துடன் எழுதுகிறாரா, பாசத்துடன் எழுதுகிறாரா, யாருக்கு எழுதுகிறார், என்ன எழுதுகிறார், எதுவும் தெரியவில்லை. நான் உட்கார்ந்துகொண்டே இருக்கிறேன். மெதுவாக எனக்குக் கோபம் வரத்துவங்குகிறது. ”என்ன இது? நான் ஒரு டைரக்டர்..! என்னை வரச்சொல்லிவிட்டு இவர் எழுதிக்கொண்டிருக்கிறார்..! அவர் சொந்த விஷயத்தை எழுதுவதற்கு என்னை எதற்கு வரச்சொன்னார்? ஒரு பத்து நிமிடங்கள் கழித்து வரச்சொல்லியிருக்கலாமே?”
பக்கம் பக்கமாக வேகமாக எழுதியவர், நிமிர்ந்து ‘புரு...’ என்றார். அவர் கூறியது ஒரு நான்கு அடி தள்ளி அமர்ந்திருந்த என் வரைக்கும்தான் கேட்டிருக்கும். ஆனால் வெளியில் இருந்து ‘புரு’ என்கிற ஆறடி உயர ‘புருஷோத்தமன்’ வந்தார். அவர்கள் இருவருக்குள்ளும் அப்படி ஒரு Intimate communication..! Sheets எல்லாம் அவரிடம் கொடுத்துவிடுகிறார். ‘இதை Distribute பண்ணிடு’ என்கிறார்.
”சரி..! அவர் வேலை முடிந்தது..! இனி நம் வேலைக்கு வருவார்” என்று நினைத்தேன்.
‘என்ன சார்..?”
‘அது போய்டுச்சுய்யா’
'சார்.. ..'
‘அதுதான்.. அந்த first பாட்டு..! போய்டுச்சுய்யா..’
‘சார் .. எந்த Scene?’
‘யோவ்..! அதான் உன் படம் சொல்லிடுச்சேய்யா..! எந்தெந்தப் பாட்டு எங்கெங்க வரணும்னு’
‘என்னய்யா? என்னய்யா யோசிக்கிற? கேளு..!’ என்றவர் மறுபடி ‘தன்னனன’ பாடத் துவங்கினார்.
அப்போதான் தெரிகிறது. நான் எவ்வளவு பெரிய ஞானசூன்யம் என்பது. ’நல்லாயிருக்குது என்று சொன்னால் எது நல்லாயிருக்குது என்று கேட்பார். நல்லாயில்லை என்று சொன்னால் என்னய்யா நல்லாயில்ல என்பாரே’ என்ற யோசனையுடன்..
‘இல்ல சார்..! இதற்கு முன்னால் வரும் பாடலில் காட்சிகள் கொஞ்சம் வேகம் குறைந்ததாக இருக்கும். இது கொஞ்சம் வேகமான பாட்டா இருந்தா நல்லா இருக்கும்.’
‘அதுதான்யா இது..! நல்லா வரும்யா..!’
’சார்..! கொஞ்சம் Tempo-வாவது ஏத்த முடியுமா?’
............ என் மேல் உள்ள அன்பா அல்லது ரீரெக்கார்டிங்கின்போது என்னுடைய நடிப்பைப் பார்த்துவிட்டு என் மேல் ஏற்பட்ட நல்ல ஒரு உணர்வா எதுவென்று தெரியவில்லை. வேறு எந்த மியூசிக் டைரக்டரிடம் நான் இதைச் சொல்லியிருந்தாலும் என்னை அடித்து ‘போடா வெளியே’ என்று துரத்தியிருப்பார்கள். ஒரு ஞானியிடம் சென்று ஒரு ஞானசூன்யம் சொல்கிறது ‘கொஞ்சம் Tempo ஏத்துங்க’..!
அவர் சிரித்தார். எனக்கு வேலை இருக்கிறதா என்று கேட்டு பின்னர் நாலு மணிக்கு வரச்சொன்னார்.
நான் சென்றவுடன் என்னுடைய Assistant Directors எல்லாம் டியூன் எப்படி இருந்தது என்று கேட்டார்கள். 'ஏதோ இருந்தது' என்று சொன்னேன். அதற்கு அவர்கள் ‘அவர் அப்படித்தான் சார் போடுவார். நாமதான் சார் நாலஞ்சு டியூன் போடச் சொல்லிக் கேட்டு வாங்கணும்’ என்றார்கள். நான் அதற்கு, ‘விடுங்கய்யா.. நாலு மணிக்கு வரச்சொல்லியிருக்கிறார். நான் Tempoவை கூட்டச்சொல்லியிருக்கிறேன்” என்றேன்.
நாலு மணிக்குச் சென்றேன். ரெக்கார்டிங் ஸ்டுடியோ ஒரு கல்யாண மண்டபம் போன்று இருந்தது. பலவிதமான வாத்தியக்கருவிகளின் பலவிதமான சப்தங்கள்..! பரவாயில்லை. நம் பாட்டுக்கு இவ்வளவு பேர் வேலை செய்கிறார்கள் என்று ஒரு சந்தோஷம். சரியாய் நாலரை மணிக்கு சொல்கிறார்…
’…புரு….!’ (இம்முறை கொஞ்சம் சத்தமாக). சரி ஒரு மானிட்டர் பார்க்கலாம்’
I cried..... நான் அழுதேன். பக்கத்தில் அவர் முழங்கால்கள் இருந்தன. அவற்றைப் பற்றிக்கொண்டு.. ‘சார்..! தயவுசெய்து என்னை மன்னிச்சுடுங்க சார். நான் தெரியாம எதோ சொல்லிட்டேன்’ என்றேன்.
‘இருய்யா..! முழுசாக் கேளுய்யா’ என்றார்.
அப்படி உருவானதுதான் ‘தென்றல் வந்து தீண்டும்போது’ பாடல். எனக்கு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் எப்படி ஒரு மனிதன் சரளமாக, ஒரு கவிஞன் கோபத்தில், காதலில் அல்லது வீரத்தில் எழுதுவது போல இவ்வளவு வேகத்தில் இசையை எழுதமுடியும் என்பதுதான் (கைகளால் காற்றில் வேகவேகமாக எழுதிக்காட்டுகிறார்).
இளையராஜாவின் வெற்றிக்கு மற்றொரு காரணம் ‘கற்றல்’. எப்போதும் கற்றுக்கொண்டே இருக்கிறார். அவதாரம் திரைப்படத்தின் ஒரு மூன்று காட்சிகளை..
‘யோவ்..! இந்த மூணு சீன் ரொம்ப திராபையா இருக்கேய்யா’ என்றார்.
‘இல்ல சார்..! அவன் திரும்பத் திரும்ப எப்படியாவது என்னைக் கூத்துக்குழுவில் சேர்த்துக்கொள்ளுங்கள் என்று கெஞ்சுகின்றான். அதை விளக்குவதற்காகத்தான் அந்த மூணு சீனையும் வைத்திருக்கிறேன். அது எனக்கு ரொம்ப தேவை சார்’ என்றேன்.
‘உனக்குத் தேவைய்யா..! ஆனால் பார்க்கிறவனுக்கு Interesting-ஆக இருக்கணும் இல்லையா?’ நீ அரை நாளில் ஷூட் பண்ணுவது போல இந்த இடத்தில் ஒரு பாட்டு போட்டுக்கொடுத்துவிடுகிறேன்’ என்றார். அந்தப் பாடல்தான் ‘அரிதாரத்தப் பூசிக்கொள்ள ஆசை’. அதாவது ஒரு ஏழரை நிமிஷத்து வறட்சியான மூன்று காட்சிகளை மிக அழகாகக் கொண்டுவந்து விட்டார். அவதாரம் படத்தின் ஒவ்வொரு பாட்டும் முத்தான பாடல்கள். அந்த ஐந்து பாடல்களும் இரண்டரை நாட்களில் பதிவு செய்யப்பட்டவை. இன்றைக்கு மாதங்கள் ஆகின்றன. சிலருக்கு வருடங்கள் ஆகின்றன.
போன வருடம் ஒரு படப்பிடிப்பிற்காக சென்னையில் இருந்து சிதம்பரத்திற்கு ரோடு வழியாகச் செல்லவேண்டியிருந்தது. அது ஒரு விழாக்காலம் என்று நினைக்கிறேன். ஒவ்வொரு ஊரைக் கடக்கும்போதும் டீ கடைகளிலும், கோவில் விழாக்களிலும் பாடல்கள் ஒலித்துக்கொண்டு இருந்தன. சரி.. மக்கள் யாருடைய பாடல்களை கேட்கிறார்கள் என்று ஒரு கணக்கெடுக்கலாம் என்று நினைத்தேன். மேடைக்காக மிகைப்படுத்திச் சொல்லவில்லை. நான் கேட்டதில் ஏழு எம்.எஸ்.வி. பாடல்கள், மூன்று ஏ. ஆர். ரகுமான் பாடல்கள், இருபத்தெட்டு இளையராஜா பாடல்கள். தமிழ் சமூகம் இளையராஜாவின் பாடல்களுடன் வாழ்ந்துகொண்டிருக்கிறது."
இசை என்பது வியாபாரம் மட்டுமே அல்ல. இந்தியா கிராமங்களில் வாழ்கிறது என்று காந்திஜி கூறினார். கிராமங்களில் வாழும் மனிதர்களின் மனதில் இன்னும் இளையராஜா பாடல்கள்தான் கேட்டுக்கொண்டிருக்கின்றன. இப்படி ஒரு விழா இளையராஜாவுக்கு மிகச் சிறியது. ஆனால் எங்கள் மனது பெரியது” என்றார்