Friday, November 19, 2010

கிழிந்தது இந்தியாவின் முகத்திரை

இந்த இணையப்பக்கத்திலிருக்கும் ஒலிகளைக் கேட்டு முடிக்க சில மணிநேரங்கள் ஆகலாம், ஆனால் இதுதான் , இவர்கள்தான் நம்மால் ஆட்சி பீடத்தில் அமர வைக்கப்பட்டிருப்பவர்கள். Corporateகளின் வசம் அரசியல் மாறிவருவதை கண்கூடாக பார்க்கமுடிகிறது.

கீழ்காணும் தொடுப்புகளில் லஞ்சம், அரசவைக்கு திமுக ஆடிய ஆட்டம், மாறனின் double game, கனிமொழி மீது ராசாவிற்.. தமிழில் கொச்சையாக வருகிறது அதனால ஆங்கிலத்திலேயே இருக்கட்டும்..Rasa had crush on Kanimozhi, அழகிரியின் செல்வாக்கு.. இன்னும் இன்னும்


The Raja-Radia Tapes

The Kanimozhi-Radia Tapes

The Vir Sanghvi- Niira Radia Tapes

Personal - vote for this post

The Ratan Tata, Barkha Dutt & Other Tapes

இது விகடனில் வந்தது

இவை அனைத்தையும் சத்தமில்லாமல் மறைமுகமாக காங்கிரஸ் கட்சிதான் செய்து முடித்திருக்கிறது என்றும் விஷயமறிந்தவர்கள் சொல்கிறார்கள்.

''ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை சி.பி.ஐ. விசாரிக் கட்டும் என்று உத்தரவிட்டது பிரதமர்தான். இதைத் தொடர்ந்து வருமான வரித் துறையும் மத்திய அமலாக்கப் பிரிவும் தன்னுடைய விசாரணையைத் தொடங்கின. ராசாவின் நிழல் மனிதர்களை இந்த மூன்று அமைப்புகளும் கண்காணித்தன. காங்கிரஸ் நினைத்திருந்தால்... இதை ஆரம்பத்திலேயே தடுத்திருக்கலாம்.

அடுத்ததாக டெல்லி மீடியாக்கள் இந்த விஷயத்தை எடுத்தன. அவர்கள் எதுவும் அரசல் புரசலாக இல்லாமல் பல்வேறு ஆவணங்கள், தஸ்தாவேஜுகளை மீடியாக்களில் வெளியிட்டன. இந்த ஆவணங்கள் மத்திய அரசாங்கத்தின் வசம் மட்டுமே இருக்கக் கூடிய மிக மிக முக்கியமான ஆவணங்கள். அதைப் பத்திரிகைகளுக்கு சப்ளை செய்வதிலும் காங்கிரஸ் பிரமுகர்களின் கை இருக்கிறது.

மேலும் டெல்லி உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்துக்கு பொதுநல அமைப்புகள் சென்றன. அவர்களுக்கு இந்த ஆவணங்களைக் கொண்டு போய் வலியக் கொடுத்ததிலும் இவர்களது கை உள்ளது.

மூன்றாவதாக எதிர்க்கட்சிகள் ராசாவுக்கு எதிரான கோபத்தைக் கிளப்பியது. இதில் முக்கியமானது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.

அவர்கள் அமைச்சர்களின் கடிதங்களை வெளியிட்டு அதிர்ச்சியைக் கிளப்பினார்கள்! நிதி அமைச்சகம், சட்ட அமைச்சகம் ஆகியவற்றின் ஆவணங்கள் சரளமாக அவர்களது கையில் புழங்கியது. இவை அனைத்துமே மத்திய அரசில் அங்கம் வகிக்கும் சிலர் மூலமாகத்தான் தரப்பட்டது. எனவே, ராசாவை வீழ்த்த அனைத்து அஸ்திரங்களும் காங்கிரஸ் கொட்டடியில் தயாரானவைதான்!'' என்று சொல்லி மிரள வைக்கிறார்கள்.


பிற்சேர்க்கை:

இதை ரெண்டு விதமா பார்க்கவேண்டிய விசயத்தை எப்படி அரசியலாக்குறாங்க பாருங்க. பதவி பேரம் எப்பவுமே நடக்கிறதுதான். ஏன் நம்ம ஐயா பேசாத பேரமா? லஞ்சம் வேற பேரம் வேற. பேரம் சாதாரணமா நடக்கிறதுதான். என்ன பொதுவுல வெச்சிதனால கேவலமா இருக்கு. நல்லா கோர்த்துவிட்டிருக்காங்க. அதாங்க சூட்சுமமே. இன்னொன்னு லஞ்சம், அது தப்பு. சட்டம்தன் கடமையச் செய்யட்டும். செஞ்சா என்ன தண்டனை.
http://www.outlookindia.com/article.aspx?268078 . ஆனா நீரா ராடியாவுக்கு என்ன தண்டனை கிடைக்கும்னு நினைக்கிறீங்க? ஒன்னுமே இல்லே. ஏன்னா lobbiest வேலையே இது. ஏன் லாரி தரகு அலுவலகம், கல்யாணத் தரகர்னு இல்லையா அதுமாதிரிதான் இதுவும். Power brokerage, not a big deal. So Niira Radia is safe. ஏன்னா அதுதான் அவுங்க வேலையே. அதுக்குத்தானே குடுத்தாங்க ‘துட்டு’. எய்தவன் இருக்க அம்பை நோகலாமா? எயதவேனே காங்கிரஸ்தானே. அதுவுமில்லாம பேரத்துக்கு எல்லாம் தண்டனை சட்டத்துல இல்லவே இல்லை. லஞ்சம் குடுத்தவன் மாட்டலாம், வாங்கினவன் மாட்டலாம். தரகர்களுக்கு தண்டனை காங்கிரஸ் ஆட்சியில கிடைக்காது, ஏன்னா குட்ரோச்சி இல்லே?

என்னுடைய பார்வையில் இதெல்லாம் பேரத்திற்காக நடந்த பேரங்கள். இவர்கள் எல்லாம் படுத்திய பாட்டை சரியான நேரத்தில் போட்டு வாங்கியிருக்கிறது காங்கிரஸ். இதுவே திமுக மீது காங்கிரஸ்க்கு இருக்கும் வெறுப்பை காட்டுகிறது. ஆனால் இதையே வேற விதமாகவும் யோசிக்கலாம். உண்மையாவே இந்தக் குற்றச்சாட்டிற்கு காங்கிரஸ் உண்மையாக நடக்க வேண்டி நேர்மையாக நடந்திருக்கலாம். ஆனால் ஒன்று, காங்கிரஸை கண்டிப்பாக பாராட்டவே வேண்டும். எவ்வளவோ பிரச்சினை வருமென்று தெரிந்தே இதைச் செய்திருக்கிறார்கள்/அனுமதித்திருக்கிறார்கள். இந்த நேர்மை மற்ற ஆட்சிகளிலும் தொடரவேண்டும். குறிப்பாக தமிழகத்தில். நம்ம ஆட்சி எப்படி, ஆட்சிய புடிச்சவுடனே எதிர்கட்சி தலைவரை ‘தூக்கு’வாங்க. நல்லா கவனிங்க, மேல இருக்கிற இணைப்புல எல்லாம் பதவி பேரங்கள்தான். ஸ்பெக்ட்ரமோ, லஞ்சமே இல்லை. கீழே ஒரு தொடுப்பு குடுத்திருக்கேன் பாருங்க. அதுல கொஞ்சமா இருக்கும், ஆனா நேரடியா எதுவுமே இல்லே.

அதேமாதிரி, இந்த பேரங்கள் எல்லாம் Corp மாதிரி நடத்திருப்பது அருமை. பலநாடுகள் இதை ஏற்கனவே செய்திருச்சுருக்காங்களே. இந்தளவுல பார்த்தா ராகுலின் முனைப்பு நிறையவே தெரியுது. நல்லா கவனிச்சீங்க, இத்தனை மணிநேர தொலைபேசி உரையாடல்ல சோனியா, ராகுலின் பெயர்கள் வருவது என்னமோ 5க்குள் தான் இருக்கும். இதுலயே தெரியலீங்க எப்படி வேலை செஞ்சிருக்காங்கன்னு.

இந்த இணைப்புல இருக்குற அலைபேசி உரையாடல்கள் முன்னது போல அவ்வளவு சுவாரஸ்யமா இருக்காது, ஆனா லஞ்சம், Corp அநியாயங்கள் இதுலதான் இருக்கு. http://www.outlookindia.com/article.aspx?268069. அனில் அம்பானிக்கு 75ஆயிரம் கோடி கடன் இருக்காம், ராடியா சொல்றாங்க, திங்கட்கிழமை பங்குச் சந்தை பாருங்க, பாதாளத்துல நிக்கலாம்.

ஏற்கனவே தமிழ்காரன்னா வடக்கத்திக்காரனுக்குத் தொக்கு, இப்ப இதுவேறையா சொல்லவே வேணாம். 40 சீட்டை குடுத்ததுக்கு காங்கிரஸ்காரன் வெச்சான்ல ஆப்பை. சோனியா எப்பவுமே பொறுமையா பார்த்துதான் அடிக்கிறாங்க, அதாவது சாணக்கியத்தனமா. ஈழத்துலயும் அதுதான் ஆச்சு. ஆனா கலைஞருக்கே ஆப்பு வெச்சாங்க பாருங்க, அதுதான் அட்டகாசம்.

தயாநிதிமாறன் விளையாண்ட விளையாட்டப் பார்த்து அண்ணனும் தம்பியும் சேர்ந்திக்குவாங்க. மாறம் பாடு திட்டாட்டம்தான். அதுவுமில்லாம மாறனை மத்தியில யாருமே விரும்பலை. ஏன்னு தெரியல. சும்மா பதவிக்காக 600 கோடி ரூபாயை தயாளு அம்மாகிட்ட குடுக்கிறார்னா எவ்வளவுய்யா சம்பாரிப்பீங்க?

அப்புறம் லஞ்சம் லஞ்சம்னு சொல்றோமே, அது என்ன 1.75 லட்சம் கோடியா? இல்லவே இல்லை. நீங்க ஒரு கார் வாங்குறீங்க, அதுக்கு விலை ரூ10, அடுத்த வருசம் அதை ரூ10க்கே விக்கிறீங்க. இதைத்தான் ராசா பண்ணினாரு. ஆனா நீங்க வித்த வருசத்துல அந்த காரோட விலை ரூ20. அதாவது வித்தியாசம் ரூ10. அந்த ரூ10 தான் இந்த 1.75 லட்சம் கோடி. அதை ரூ10க்கே விக்க மாறின காசுதான் லஞ்சம்னு சொல்றோம். அதுவுமில்லாம சொல்லாம கொள்ளாம ஏலத்தையும் மூடியிருக்காங்க. இதெல்லாம்தான் சிக்கலே. புரிஞ்சுதுங்களா? 1.75 லட்சம் கோடி அரசுக்கு ஆன நஷ்டம்.

Media எல்லாம் இதைப் பத்தி பேசவே மாட்டாங்க. அப்படி ஒரு டீலிங் அது. அதனால நாம இங்கே கூவிக்குவோம். அப்ப இனி.....நமக்கு 500 ரூபாய் பத்தாது ஆளுக்கு 1 லட்சம்னு கேட்டு வாங்கனும், அதுதான் ஜனநாயகம்.

22 comments:

  1. தமிழன் செயத தவறினால் பலரும் மாட்டிக்கொள்ளப் போகிறார்கள் அதனால்தான் இந்தியான்னு தலைப்பு வெச்சிருக்கேன். கேவலாமா இருக்குய்யா இந்த கூத்துக்கள்

    ReplyDelete
  2. என்னுடைய இந்தியா பயனத்தில் எங்களுக்கு தெரிந்த ஒரு பிரபல அரசியல் புள்ளியின் ட்ரைவெர் மூலம் நாங்கள் அறிந்து கொண்டது ’கனிமொழி வீட்டில் தான் ராசா தங்கியிருகிறார்’ என்பதே. அது உண்மையோ பொய்யோ எனக்கு தெரியாது. ஆனால் அரசியல் வட்டாரத்தில் இது அனைவருக்கும் தெரிந்திருக்கிறது.

    ReplyDelete
  3. இந்த செய்திகளை எவ்வளவு பேருக்கு முடியுமோ அவ்வளவு பேருக்கு சென்று சேர்க்க வேண்டும். வாழ்க உங்கள் சேவை

    ReplyDelete
  4. பதவிக்காக கனி,ராஜா & மாறன் போன்றோரின் பேச்சுக்கள் கேட்கவே கூசுகிறது.. outlook saying that "India is on sale" in their headlines :-(

    ReplyDelete
  5. நானும் ஒரு தில்லாங்கடி பண்ணியிருக்கேன் இந்தப் பதிவுல. திராவிடன்டா

    ReplyDelete
  6. ம்ம், ஊழல்கள் அதிகமாகிவிட்டது

    ReplyDelete
  7. என்னய்யா நடக்குது இங்கே இந்தியாவில்!!!!!!!!!!

    மக்களைக் கவனிக்கமாட்டாங்களா யாரும்:(

    நாட்டு நலன்ன்னு ஒன்னு இருக்கே அதை அப்படியே மறந்துட்டாங்களே:(

    ReplyDelete
  8. // லஞ்சம் லஞ்சம்னு சொல்றோமே, அது என்ன 1.75 லட்சம் கோடியா? இல்லவே இல்லை. நீங்க ஒரு கார் வாங்குறீங்க, அதுக்கு விலை ரூ10, அடுத்த வருசம் அதை ரூ10க்கே விக்கிறீங்க. இதைத்தான் ராசா பண்ணினாரு. ஆனா நீங்க வித்த வருசத்துல அந்த காரோட விலை ரூ20. அதாவது வித்தியாசம் ரூ10. அந்த ரூ10 தான் இந்த 1.75 லட்சம் கோடி. அதை ரூ10க்கே விக்க மாறின காசுதான் லஞ்சம்னு சொல்றோம். அதுவுமில்லாம சொல்லாம கொள்ளாம ஏலத்தையும் மூடியிருக்காங்க. இதெல்லாம்தான் சிக்கலே. புரிஞ்சுதுங்களா? //

    இப்ப தான் தெளிவா புரிஞ்சுது! நன்றி

    ReplyDelete
  9. ம்.......... இன்னும் என்னல்லாம் நடக்கப்போகுதோ???

    ReplyDelete
  10. இந்த விஷயம் வெளிவந்ததில் 'கை'யின் கையும் இருக்கும் என்று நானும் யூகித்தேன்.

    ReplyDelete
  11. //Personal - vote for this post// ஏன்ன்ன்ன்ன்ன்?? :)))))))))

    ReplyDelete
  12. ”கோவிற்பூசை செய்வோர் சிலையைக்
    கொண்டு விற்றற் போலே
    வாயிற்காத்து நிற்போன் வீட்டை
    வைத்திழத்தல் போலே
    ஆயிரங்களான நீதி அவை
    உணர்ந்த தருமன்
    தேயம் வைத்திழந்தான்
    சீச்சீ,சிறியர் செய்கை செய்தான்”
    (பாஞ்சாலி சபதம்)

    இன்று அதுதான் நடக்கிறது.”சீச்சீ”

    ReplyDelete
  13. ///அப்ப இனி.....நமக்கு 500 ரூபாய் பத்தாது ஆளுக்கு 1 லட்சம்னு கேட்டு வாங்கனும், அதுதான் ஜனநாயகம்.///

    இது மேட்டரு!

    ReplyDelete
  14. தகவல்களுக்கு நன்றிண்ணே..!

    எருமை மாட்டு மேல மழை பேய்ஞ்ச கதையாத்தான் இருக்கானுக இந்தக் கபோதிக..

    நாம எவ்ளோதான் திட்டுறது..? சூடு, சொரணை வேணுமே?

    ReplyDelete
  15. காvவிரி பிரச்சனையை தீர்த்துட்டு வந்த தலைவரை வரவேற்கிற மாதிரி ராஜினாமா பண்ணிட்டு தலை குனிஞ்சு வர்ற ராசாவை தி.மு.க வினர் வரவேற்கினர்..வெட்கம் வெட்கம்

    ReplyDelete
  16. அட்ப்பாவி... கலக்கிப்புட்டே மக்கா...

    ReplyDelete
  17. விவாஜி,

    ரஜினிக்கு அடுத்த படத்துல ஜோடி யாருங்க? மண்டை கொடையுற கேள்வி. பதில் தெரிஞ்சா சொல்லுங்க.

    கமல் பட மன்மத சொம்பு பாடல் வெளியாயிடுச்சா? கவலையோட வெயிட்டிங்.

    இந்த வார கேடி நம்பர் ஒண்ணுக்கு ஓட்டுப் போட்டுட்டீங்களா?

    K.K Nagar Tasmac ல பத்தர மணிக்கு மேல வெரட்டுறானுங்க. இதுக்கு எதாவது பண்ணனும். வழியிருக்கா?

    தமிழர்களின் நலம் கருதி, மேற்கண்ட தலையாய பிரச்சினைகளைப் பற்றிப் பதிவுகள் எழுதவும்.

    ReplyDelete
  18. இளா!குரல் சுட்டிகள் இணைப்புக்கு நன்றி.

    உங்கள் தலைப்பைத் தவிர இடுகையிலும் ஆனந்த விகடன் கருத்திலும் எனக்கு உடன்பாடில்லை.

    எந்த ஒரு ஆளும் கட்சியும் தனது பதவிக்காலத்தையும் அந்த காலத்துக்குள் எவ்வளவு சுருட்ட முடியும் என்பதிலுமே குறியாக இருக்கும்.மாறாக காங்கிரஸே இந்த பிரச்சினையை கசிய வைக்கிறது என்பதெல்லாம் தவறானவை.

    2G விசயம் விசுவரூபம் எடுத்த பின் எதிர்க்கட்சிகள் கேட்கும் JPC க்கு ஒத்துக்கொள்ளாமல் PAC மட்டும் போதும் என்று பிரச்சினையை நீட்டி இழுக்க ஆளும் கட்சி நினைக்கிறது.இதுவரையிலும் எந்த பிரதமர் மீதும் எந்த நீதிமன்றமும் மௌனம சாதிப்பது ஏன்,Affidavit பிரதமர் சார்பாக தரவேண்டுமென்றெல்லாம் கேட்டதில்லை.பிரதமர் வாய் மூடி கடந்த ஒரு வாரமாக ஒழிந்துகொண்டு இன்று ஹிந்துஸ்தான் டைம்ஸ் பேச்சில் திருவாய் திறந்திருக்கிறார்.எதிர்க்கட்சிகள் முக்கியமாக சுப்பரமணிசாமி நாரதன் குறைந்தபட்சம் இடைக்கால ஆட்சிகவிழ்ப்புக்கு வழியை தேடுகிறார்கள்.கூடவே ராசாவுக்கும் உடன் சார்ந்தவர்களுக்கும் சிறை தண்டனைகளுக்கான வாய்ப்பையும் தேடுகிறார்கள்.இனியும் என்ன நிகழும் என்பதை பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.இங்கே சொல்லாதவைகளுக்கும் அப்பால் அவரவர் நிலையில் அதிகாரம் மிக்கவர்களின் காய் நகர்த்தும் படலமும் நமக்கும் தெரியாமல் நடந்து கொண்டிருக்கும்.இத்தனை இருந்தும் தன் தலையில் தானே கொள்ளிக்கட்டை எடுத்து காங்கிரஸ் சொரிந்து கொள்ள விரும்புமா?விகடனையெல்லாம் தாண்டி வரவேண்டிய காலகட்டமிது.நன்றி.

    ReplyDelete
  19. உண்மைத்தமிழனின் இடுகையும், உங்களின் இடுகையும் வாசித்தபிறகு, ’எங்கே போய்க்கொண்டிருக்கிறது இந்த நாடு?’ என்ற கேள்வி ஆக்கிரோஷமாக எழுகிறது.

    ReplyDelete

தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி

  தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை  -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை  காசி  எழுதியது தமிழோவியத்துக்காக  பாஸ்டன் பாலாஜி  க...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நாகேஷ் (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) வாலி (1) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)