இது ஒரு பெண் கடவுள்கிட்ட பாடுற தோத்திற பாடல்..
ஓ..நீங்க பக்திமானா?
ஆ...அதெல்லாம் இல்லீங்க, நான் புத்திமானாங்கிறங்கிறதே கேள்விகுறியா இருக்கு..
ஓ..நீங்க பக்திமானா?
ஆ...அதெல்லாம் இல்லீங்க, நான் புத்திமானாங்கிறங்கிறதே கேள்விகுறியா இருக்கு..
கலவி செய்கையில் காதில் பேசி
கனிவாய் மெலிதாய் கழுத்தைக் கவ்வும்
வெள்ளை பளிச்சிடும் பற்கள் வேண்டும்
குழந்தை வாயை முகர்ந்தது போல கடும் நாற்றமில்லாத வாயும் வேண்டும்
காமக்கழிவுகள் கழுவும் வேளையில் கூட நின்றவன் உதவிட வேண்டும்
சமையலின் போதும் உதவிட வேண்டும்
சாய்ந்து நெகிழ்ந்திட திண் தோள் வேண்டும்
மோதி கோபம் தீற்க வசதியாய், பாறை பதத்தில் நெஞ்சும் வேண்டும்
அதற்குப்பின்னால் துடிக்கும் இதயமும் அது ரத்தம் பாய்ச்சி நெகழ்த்திய சிந்தையும்
மூளை மடிப்புகள் அதிகமுள்ள மேதாவிலாச மண்டையும் வேண்டும்
வங்கியில் இருப்பு, வீட்டில் கருப்பென வழங்கிப் புழங்கிட பணமும் வேண்டும் நேர்மை வேண்டும் பக்தியும் வேண்டும்
எனக்கென சுதந்திரம் கேட்கும் வேளையில் பகுத்தறிகின்ற புத்தியும் வேண்டும்
இப்படி கணவன் வரவேண்டும் என நான் ஒன்பது நாட்கள் நோன்பிமிருந்தேன் வரந்தருவாள் என் வரலட்சுமியன் கடும் நோம்பு முடிந்ததும் தேடிப்போனேன்...
தேடி எங்க போனா அந்தப் பொண்ணு?
பீச்சுக்குத்தான்
பொடி நடைபோட்டே இடை மெலியவனென கடற்கரைதோறும் காலையும் மாலயுமென
காலையும் மாலையும் தொந்திகணபதிகள் தெரிவது கண்டேன்
முற்றும் துறந்த மங்கையரோடு அம்மண துறவிகள் கூடிடக் கண்டேன்
மூத்த அக்காள் கணவனுக்கு முக்கால் தகுதிகள் இருந்தும் கூட அக்காள் இல்லா வேளையிலே அவன் சக்காளத்தி வேண்டுமென்றான்
எக்குலமானால் என்ன என்று வேற்று மதம் வரை தேடிப்பார்த்தேன்
வர வர புருச லட்சணம் உள்ளவர் திருமணச் சந்தையில் மிகமிகக் குறைவு
வரந்தரக் கேட்ட லட்சுமி உனக்கு, வீட்டுக்காரர் அமைந்தது எப்படி?
நீ கேட்ட வரங்கள் எதுவரை பலித்தது?
உறங்கிக்கொண்டே இருக்கும் உந்தன் அரங்கநாதன், ஆள் எப்படி?
பிரபந்தம் சொல்லும் அத்தனை சேட்டையும் வாஸ்தவமாக நடந்தது உண்டோ?
இதுவும் ஒதுவும் அதுவும் செய்யும் இனிய கணவர் யார்க்கும் உண்டோ?
உனக்கேனும் அது அமையப் பெற்றால் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலிதான் நீ அதுபோல எனக்கும் அமையச் செய்யேன் ஸ்ரீவரலடசுமி நமோஸ்துதே!!!
இப்படியெல்லாம் ஒரு ஆணைத் தேடினா பொண்ணுங்களுக்கு எப்ப கல்யாணம் நடக்குறது. இது உங்களுக்கே அடுக்குமா கமலஹாசரே? ஆசைக்கும் ஒரு அளவில்லையா?
ReplyDelete:))
ReplyDelete:))
ReplyDeleteஎன்ன சிரிப்பு வேண்டிகிடக்கு? ஓஹ் இது லிவிங் டுகெதர் மேட்டர்னு நினைச்சிட்டீங்களே. ஐயோ, இல்லவே இல்லை. இது மன்மதன் அம்புவுல வர்ற கவிதைங்க மக்களே!
ReplyDeleteஐயா, நேஸ், சுகந்தியக்காவுக்கு நன்றி!
மூத்தார்காள் = மூத்த அக்காள் ; உகந்தது = முகர்ந்தது - என இருக்க வேண்டுமோ ?
ReplyDelete//
ReplyDeleteஎன்ன சிரிப்பு வேண்டிகிடக்கு? ஓஹ் இது லிவிங் டுகெதர் மேட்டர்னு நினைச்சிட்டீங்களே. ஐயோ, இல்லவே இல்லை
//
ஹா ஹா .....
:)))
ReplyDelete