சாமி கும்பிட்டு அவள் வருகையில்
கேட்காத வரம் எனக்கே கிடைக்கிறது,
சாமிக்கு ஏனிந்த ஓரவஞ்சனை?
----00----
பூக்களெல்லாம் ஒன்றுகூடி
வண்ணத்துப்பூச்சி மேலமர்ந்து
தேன் குடித்தது
பூச்சூடி வருகிறாள் காதலி
----00----
அவசர அவசரமாய் நீ
ஒப்பனை செய்துகொள்வதை
உள்வாங்கி வெட்கம் கொப்பளிக்க
பிரதிபலித்தது ஸ்கூட்டியின் கண்ணாடி!
----00----
க்ரேயான் கொண்டு படம் வரையவும்,
ஆரம்பித்திருக்கிறேன்,
சின்னவயதில் ஆசைப்பட்டதெல்லாம் நிறைவேறியது
நன்றாக சம்பாதிக்க ஆரம்பித்ததும்
கேலியும் கிண்டலும் சரியாகவே காதில் விழுகிறது,
என்ன செய்ய இப்பவும் செய்யவில்லையெனில்
எப்பொழுது ஆசைப்பட்டதை செய்ய?
----00----
ஸ்கூட்டியில் நீ!
நான் உன்னைத் தொடர
கண்ணாடியில்,
நானறியாமல் நீயும்
நீயறியாமல் நானும் பார்த்துக்கொள்ள
இருவரையும் ஒருங்கே பார்த்து சிரித்தது கண்ணாடி
----00----
ஏங்க இதையா சுவாரஸ்மில்லாததுன்னு சொல்றீங்க.. ரசிக்க பழகின மனதுக்கு எல்லாமே அற்புதமாப்படுது. கடைசியில இருவரையும் நோக்கிச்சிரித்த கண்ணாடியாகட்டும், ‘எப்போது ஆசைப்பட்டதை செய்ய?’ வாகட்டும் நிலைத்து நிக்குதுல்ல..
ReplyDeleteஅருமைங்க இளா அதிலும் அந்த ஸ்கூட்டி கண்ணாடி ஏ ஒன்..
ReplyDeleteகவிதை சாக்லேட்டுக்கள்
ReplyDeleteசுவாரஸ்யமான கவிதைகள்
ReplyDeleteஅருமைங்க நண்பரே...
ReplyDeleteஆஹா...!
ReplyDelete//ஏங்க இதையா சுவாரஸ்மில்லாததுன்னு சொல்றீங்க//
ReplyDeleteஇதைப் படிக்காதீங்கன்னு புஸ்தகம் போட்டா மக்கள் படிக்க ஆவல் அதிகமாச்சு இல்லீங்களா? அதுமாதிரிதான் இதுவும்
டெம்ப்ளேட் எல்லாம் மாத்தியாச்சா.. சூப்பரு.
ReplyDeleteஇந்த கேபிள் கூட சேராதீங்கன்னா கேட்டீங்களா, எண்டர் கவுஜ வியாதி இப்போ உங்களுக்கும் வந்திடுச்சு
ReplyDeleteஎன்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
//டெம்ப்ளேட் எல்லாம் மாத்தியாச்சா.. சூப்பரு.//
ReplyDeleteயக்கோவ், இது எல்லாம் ஓவரு. இந்த டெம்ப்ளேட் எல்லாம் வருசக் கணக்கா இருக்கு..
//இந்த கேபிள் கூட சேராதீங்கன்னா கேட்டீங்களா/
ReplyDeleteஅட, ஒரு நாள்தாங்க பேசினேன். இதுக்கே இப்படின்னா? நீங்க எத்தனை கவிதைப் பதிவு போடவேண்டியிருக்கும்னு நினைச்சா.. வயித்தைக் கலக்குது.
***ILA(@)இளா said...
ReplyDelete//ஏங்க இதையா சுவாரஸ்மில்லாததுன்னு சொல்றீங்க//
இதைப் படிக்காதீங்கன்னு புஸ்தகம் போட்டா மக்கள் படிக்க ஆவல் அதிகமாச்சு இல்லீங்களா? அதுமாதிரிதான் இதுவும்***
அப்படியா?! கவிதைகள் எல்லாம் புரிஞ்சவரைக்கும் நல்லாத்தாங்க இருக்கு :)
அலாவ் நான் இங்கன நின்னுட்டு இருக்கேன் நீங்க எந்த அக்கா கிட்ட பேசிட்டு இருக்கீங்க.. :))) நான் வரப்பை இதோட குழப்பிட்டேன்.
ReplyDelete