விடுதலை கிடைப்பதற்கு முன், அதாவது 1932-ம் ஆண்டு இரும்புக் கரம் கொண்டு இந்திய சுதந்திர உணர்வுகளை அடக்கிக்கொண்டி ருந்த பிரிட்டிஷ் வைஸ்ராய் லார்டு வில்லிங்டன் பிரபுவுடன், 'ஹிந்துஸ் தான் டைம்ஸ்' நாளிதழில் கார்ட் டூன்கள் மூலம் மோதிக்கொண்டிருந்தார் சங்கர். ஒரு நாள் வைஸ்ராயிடமிருந்து சங்கருக்கு அழைப்பு வந்தது.

தான் சொந்தமாக 'சங்கர்ஸ் வீக்லி' இதழை நடத்தியது பற்றி, "அது ஒரு கஷ்டமான போராட்டம்! ஆனால், சுவாரஸ்யமான, நான் விரும்பிய போராட்டம்" என்பார்.
சங்கர் வக்கீல் தொழிலை விட்டுவிட்டுத் தூரிகையைப் பிடித்தவர். "பொதுவாக அனைத்து அரசியல்வாதிகளுக்கும் நகைச்சுவை உணர்வு குறைவுதான். அதனால் தான் கார்ட்டூன் சொல்லும் செய்தியை உணர்ந்துகொள்ளாமல் பர்சனலாக எடுத்துக் கொள்கிறார்கள்" என்ற சங்கரின் கணிப்பில், நேருஜி மட்டும் விதிவிலக்கு! நேருஜி, சங்கரின் பரம விசிறி.
"தலைவர்களில் பலருக்கு நாளடைவில் தலைக்கனம், கர்வம், ஆடம்பரம், அதிகாரம் வந்துவிடும். அதைக் குறைப்பதற்கு கார்ட்டூன்கள் தேவைதான். உங்களது கார்ட்டூன்கள் எனக்கு மிகவும் பிடித்தமானவை. அந்த கார்ட்டூன்கள் மூலம் என்னை நான் அலசிப் பார்த்துக்கொள்கிறேன். அதனால், என்னை விட்டுவைக்காதீர்கள். வரைந்து தள்ளுங்கள்' என்று சங்கருக்கு நேருஜியே தன் கைப்பட ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
சங்கருக்குக் குழந்தைகள் மேல் பிரியம் அதிகம். எனவே, குழந்தைகளுக்கான நூல்களை வெளியிட 'குழந்தைகள் நூல் டிரஸ்ட்' மற்றும் டில்லியில் 'சர்வதேச பொம்மைகள் மியூசியம்' போன்றவை ஏற்பட முக்கிய காரணகர்த்தாவாக விளங்கியவர் சங்கர்.
நன்றி: ஆனந்த விகடனிலிருந்து அப்படியே சுட்டதுதாங்க.
No comments:
Post a Comment