சுருக்கமான நெளிவுகளுக்குள்
நீள்கோடாய்
ஒரு முற்றுப்புள்ளி!
இருட்டு வண்ண திரவம்,
வேறொரு நிற கலவை,
கலக்கமாய் பார்வை!
நிகழ்களுக்கிடையே ஓட்டம்,
கனவென்னும் கற்பனை,
சிறையில் அகப்படாத
என் ரோமம்,
தேடித் தேடியே
கலைந்து போகிறேன்
வக்கிரத்தை!
புணர்வென்னும் கலவையில்
ஒருமை காணும் தனிமை!
தொலையத் தொலைய
காண்கிற மாயை,
புகை மண்டலத்தில்
நீர் வேட்கை!
வெதும்புகிறேன் நான்!
மஞ்சள் படுக்கையில்
வெளிச்சம் தேடும் என் பார்வை,
பொய் சொல்லியே
ஏமாற்றுகிறதா
உவமை?
பு.த.செ.வி அல்லது கோனார் நோட்ஸ் தந்து உதவவும் :)
ReplyDeleteபுரியுதான்னு பாருங்க இல்லாட்டி நோட்ஸ் தந்துரலாம். இனிமேலாவது நானும் எலுத்தாலர்னு(பிழை இல்லை) நம்புங்கப்பா
ReplyDeleteமானே தேனே போடாத எதையும் நாங்க கவுஜன்னு ஒத்துக்கறதில்ல
ReplyDeleteஎன்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
நல்லாருக்கு இளா! :-)
ReplyDeleteசத்தியமா புரியல... ஆனாலும் அருமைன்னு ஒரு டெம்ப்ளேட் கமென்ட் மட்டும் போட்டுட்டு நான் கெளம்புறேன்...
ReplyDelete