Wednesday, December 29, 2010

இங்கே கிள்ளிப் போட்டா அங்கே வெடிக்குமா?

கிறிஸ்துமஸ் தினம்னு 3 நாள் விடுமுறை விட்டுட்டாங்க. வீட்ல இருந்தா கடுப்பா இருக்கும்னு எங்கே போலாம்னு யோசிச்சப்ப, வடிவேலை ’வா வா’னு கூப்பிட்டு கிட்னிய புடுங்கிற பையனாட்டம் “வா வா”னு ரெண்டு குடும்பங்க கூப்பிட்டாங்க. அவுங்க ஊர் இருக்குறதோ 270 கிமீ தள்ளி. சரி, வண்டிய மிதிச்சா போவுதுன்னு கிளம்பும் போதே சொனனாங்க. என்ன சொன்னாங்கன்னு கடைசியில் தெரிஞ்சுக்குவீங்க. இந்தியாவில் பிறந்து அமெரிக்காவில் வாழும் ஒரு அமெரிக்க குடும்பத்தையும், இந்தியாவில் பிறந்து அமெரிக்காவில் வாழும் இன்னொரு இந்திய குடும்பத்தையும் சந்திக்கலாம்னு திட்டம் போட்டு கிளம்பி வண்டிய மிதிச்சா, சரியான நேரத்துக்கு போய்ட்டோம். ஒரு காபி/டீ ஹ்ம்ம், உச்சா .. நோஓஒ. ஒரே மிதி. அங்கே போன பின்னாடிதான் தெரிஞ்சது. இனிமே வீரபாகு கணக்கா படிச்சுக்குங்க. போன உடனே பல விதமான சாப்பாட்டோடு போட்டாங்க. சரி, அதான் பகல் முடிஞ்சிருச்சேன்னு நினைச்சா உடனே பலகாரம்.. காபி. அப்பாடா விட்டுட்டாங்கன்னு நினைச்சா உடனே ராத்திரி சாப்பாடு. ஒரு மனுசன் 6 மணிநேரமாவா சாப்புடுவான். அடுத்த நாள் இவர் இன்னொருத்தருக்கு போனைப் போட்டு “மாப்பிள்ளை ஒருத்தன் இங்கே சிக்கியிருக்காண்டா, அனுப்பவா” கேட்க, அவரும் சரியா 11 மணிக்கே வாசப்படிக்கே வந்து கூட்டிகிட்டு போனாரு. அங்கே அவுங்க எவ்வளவு முடியுமோ அவ்வளவும் போட்டாங்க. அதுல ஒரு விசயம்.. பனிப்புயல் 12 மணிக்கு ஆரம்பிக்கும்னு சொல்றத எல்லாம் மறந்துட்டு பாத்திகட்டி தின்னா.. சரியா மாட்டினோம். அன்னிக்குத்தாங்க லேசா உதறலோட வண்டி ஓட்டுனது. டவுசர் எல்லாம் வர்ற வழியிலேயே கழண்டிருச்சு. ஒரே இருட்டு, சாலையும் தெரியல, 4 வழித்தடத்துல 2 தடத்தை பனி பெய்ஞ்சு கிடக்கு, மீதி இருக்குற ரெண்டுலயும் கடற்கரை மணலாட்டம் பனி.. வண்டி லேசான அமுக்கினா சிலுக்காட்டம் தனியா இடுப்ப ஆட்டுது வண்டி.  சுலபமா சொல்லிட்டேன், ஆனா கஷ்டம் அனுபவிச்சாத்தான் தெரியுது. இந்தியாவுல இருக்கும் போது பனியில கதாநாயகி ஆடும்போது.. ‘சே சூப்பர்டா’ அப்படின்னு பனியப்பார்த்து சொல்லுவோம். இங்கே வந்தாதான் தெரியுது கஷ்டமே. ரொம்ப கொடுமைங்க. வெயில்காலம் அருமை இப்போதான் தெரியுது. ஒரு வாய் சோத்துக்கு ஆசைப்பட்டு இவ்வளவு கஷ்டப்படனுமான்னு கேட்டாலும்.. இந்த ஒரு வாய் சோறுதான் ஒரு உலகத்தையே தரும்கிறதை இன்னொரு பதிவுல சொல்றேன். படத்தைப் பாருங்க, இப்படி இருக்கும்போதுதான் வண்டிய ஓட்டிகிட்டு வந்தேன். செவுப்பு வெளிச்சம் பக்கமா வந்தா வண்டி பக்கத்துல வந்துட்டேன்னு அர்த்தம்னு நினைச்சிகிட்டே செவுப்பா பார்த்துகிட்டே தட்டி தடவி வீட்டுக்கு வந்து சேர 6 மணிநேரம் ஆச்சுங்க..
--0--


ஈரோடு சங்கமம். நம்ம ஊர்ல விசேசம், போகாட்டா எப்படி மனசு அடிச்சுக்குமோ அப்படித்தான் அடிச்சுக்கிச்சு. நேரலையில் பார்க்கலாம்னா அதுவும் சரியா இல்லே. போட்ட சாப்பாட்டுல தூக்கம் வந்தாலும் கண்ணை முழிச்சு பார்த்து ஏமாந்து போனதுதான் மிச்சம். இதுல சாப்பாட்டு இலை போட்டு கறி கடுப்புடா.. சே. ரொம்ப மிஸ் பண்றேன். என்ன ஆனாலும் விழா முடிஞ்சப்புறம்தான் கூப்பிடனும், நடுவால கூப்பிடக்கூடாதுன்னு இருந்தேன். அப்படியே முடிஞ்சப்புறம் கூப்புட்டா செல்லா கிட்ட அலைபேசிய குடுத்தாரு கதிர். நான் அவர்கிட்ட பேச, அவர் செமையா டாக்கினாரு, டாக்கினாரு டாக்கிட்டே இருந்தாரு. அத்தனையும் இங்கிலி பீசுல. விளங்கினாப்ல ம்ம் ம்ம்ம் கொட்டியே பொழப்ப ஓட்டினேன். எப்படியோ நல்லபடியா முடிஞ்சது. சந்தோசத்துலயும் என்னால போவ முடியலையேங்கிறதுதான் வருத்தம். சில பேர் என்கிட்ட கேட்டாங்க. சங்கமம் திரட்டிய ஈரோட்டு மக்கள் நடத்துறாங்களான்னு. அது வேற இது வேறைங்க. அசந்தர்ப்பதமாய் ரெண்டுக்கும் ஒரே பேராய் அமைஞ்சிருச்சு. கனிமொழி கூட ஒரு ஆட்டம் நடத்தினாங்களே சங்கமம்னு.. அப்போ ஈரோட்டு மக்களும் கனிமொழிகிட்ட பேசி இருப்பாங்களா? அதுவும் டேப்புல வருமா? அடுத்த வருசமாவது கலந்துக்க சந்தர்ப்பம் கிடைக்கனும், இல்லாட்டி நேரலையாவது சரியா அமையனும். ஆமா சென்னையில பதிவர்கள் சந்திப்பெல்லாம் இல்லியா? பாலபாரதி மாம்ஸ் குடும்பஸ்தான் ஆன பின்னாடி ஒரு பெரிய சந்திப்பையே காணோமே.  ஏன்?  ஏதோ குறையுதே? தமிழேண்டா (ச்சும்மா, இங்கே கிள்ளிப் போட்டா அங்கே வெடிக்குமான்னு பார்க்கிறதுதான்)
--0--


அய்யனார் பாடல்கள்: வெயில் காலத்துலேயே வந்த பாட்டுங்க. இப்பத்தான் படம் வெளியாகியிருக்கு. ரொம்ப கஷ்டப்பட்டு படத்தை வெளியிட்டு இருக்காங்க போல. இப்போ அது மேட்டர் இல்லே. அப்துல்லா இங்க வரும் போதே சொன்ன விசயம்தாங்க இது. அய்யனார் படத்துல ஒரு பாட்டு, அதுவும் செம குத்து. பாட்டே “குத்து குத்து கும்மாங்குத்து”. கரகாட்டகாரன்ல வருமே ‘ஊரு விட்டு ஊரு வந்து’ அந்தப் பாட்ட அப்படியே உருவி போட்ட பாட்டுதான் இந்தப் பாட்டு. ரெண்டு பாட்டையும் கேட்டுப்பாருங்க புரியும்.

--0--


தமிழ்ப் படங்களைப் பத்தின Curtain Raiserஆ மக்கள் போட்டு அசத்துறாங்க. நான் போனவருசத்தோட சிறந்த ஆங்கிலப் படம்னு ஒரு பத்திரிக்கை போட்ட தை இங்கே தந்திருக்கேன்.

1. The Social Network

2. Inception

3. The Fighter

4. Kick-Ass

5. Black Swan

இதுல எதுவுமே இன்னும் பார்க்கலைங்க, இனிமேதான் பார்க்கனும். நீங்க பார்த்துட்டீங்களா?அமெரிக்காவுல சிறந்த பாடல்களா அதே பத்திரிக்கை சொன்னது,

1. Kanye West- My Beautiful Dark twisterd fantasy

2. Arcade Fire- The Suburbs

3. Sleigh Bells- Treats

4. The walkman- Lisbon

5. Best Coast- Crazy for you

6. Titus Andronicus- The Monitor

7. Girls Talk- All day

8. Big Boi- Sir Lucious Left Foot

--0--


2010ல இருந்தே அர்த்தாஷ்டமம் நடக்குதாம். ரொம்ப மோசமா இருக்குன்னு சொன்னாங்க. அதே மாதிரி கொஞ்சம் கஷ்டமாத்தான் ஓடுது வாழ்க்கை. கடந்த வருசங்களோட பதிவு எண்ணிக்கையப் பார்த்தா 2008 போட்ட பதிவுகளை விட அதிகம் பதிவுகளை போட்டிருக்கேன்.

► 2010 (54)

► 2009 (39)

► 2008 (54)

► 2007 (80)

► 2006 (92)

► 2005 (15)


இது 2008ன் எண்ணிக்கைய விட அதிகமாக்குற பதிவுங்க இது (55 வது). ஆனாலும் இந்த வருசம் பதிவுல அவ்வளவு திருப்தியில்லை. அடுத்த  வருசமாவது நல்ல பதிவுகளா போடனும்னு நினைக்கிறேன். இப்படித்தான் ஆரம்பகாலத்துலேயே இருந்து நினைச்சுகிட்டு இருக்கேன். பல விசயங்களை ட்விட்டர்ல கொட்டிடறதுனால சரியா பதிவுகள் போட முடியறது இல்லே. ஒரே ஒரு Script மட்டும்தான் இந்த வருசத்துல நான் எழுதினதுல நலலதா சொல்ல முடியும். என்ன கொடுமை, அதையும் பதிவுல போட முடியாது
--0--

8 comments:

 1. என்ன மெனுன்னு சொல்லவே இல்லியே..

  நான் 5 படத்துல 3 பாத்துருக்கேன், அதெப்புடி இன்செப்ஷன் பார்க்காம ஒருத்தர் இங்க இருக்க முடியும்?? :)

  ReplyDelete
 2. நாங்களும் நியூஜெர்ஸி போயி ரெண்டு நாளும் ஒவ்வொரு உணவு விடுதியா போயி சாப்பிட்டுட்டு கடேசியா ஜெர்ஸி சிடி சப்தகிரியிலிருந்து ஏழு மணி நேரம் ஓட்டிக்கிட்டு வந்தோம்..

  //அதெப்புடி இன்செப்ஷன் பார்க்காம ஒருத்தர் இங்க இருக்க முடியும்??//

  ஏன் பொற்கேடி, நானிருக்கேனே??

  என்றும் அன்புடன்
  பாஸ்டன் ஸ்ரீராம்

  ReplyDelete
 3. //இந்தியாவில் பிறந்து அமெரிக்காவில் வாழும் ஒரு அமெரிக்க குடும்பத்தையும், இந்தியாவில் பிறந்து அமெரிக்காவில் வாழும் இன்னொரு இந்திய குடும்பத்தையும் சந்திக்கலாம்னு //

  ஹிஹி...

  ReplyDelete
 4. .//அதெப்புடி இன்செப்ஷன் பார்க்காம ஒருத்தர் இங்க இருக்க முடியும்?? //
  அதான் இருக்கேனுங்களே. அந்தப் படத்தைப் புரிஞ்சிக்கிறது கஷ்டம்னாங்க. அதான் பார்க்கலை

  ReplyDelete
 5. //கடேசியா ஜெர்ஸி சிடி சப்தகிரியிலிருந்து //
  எல்லாம் ஒரு ஜான் வயித்துக்குத்தானே எசமான்?

  ச்சின்னப்பையன் -- > ஹிஹின்னு சொல்லி இந்தியாவில் பிறந்து அமெரிக்காவில் வாழும் ஒரு அமெரிக்க குடும்பங்கிறது ஏத்துக்கிறீங்கதானே?

  ReplyDelete
 6. // அதெப்புடி இன்செப்ஷன் பார்க்காம ஒருத்தர் இங்க இருக்க முடியும்?? :) //

  நானும் இருக்கிறேனே....

  ReplyDelete
 7. புத்தாண்டு வாழ்த்துக்கள் இளா............

  கிறிஸ்துமஸ் அன்று கனடாவில் இருந்து வரும்போது நானும் ஸ்னோவில் மாட்டிக்கிட்டேன்.............

  ReplyDelete
 8. நம்ம ஓடைக்கு வந்தாலும் ஸ்னோவில் மாட்டுப் படுவீங்க..

  அன்புச் சகோதரன்...
  மதி.சுதா.
  பிரபல பாடகரின் பிரபலமில்லாத மறைவு - Bobby Farrel

  ReplyDelete

WhatsApp DP - சிறுகதை

கா லை எழுந்தவுடனே சுந்தரியின் WhatsApp DP யைத் தேடிப் போய் பார்ப்பதே எனக்கு வழக்கமாகிவிட்டது. என் பெயர் தாரணி, நானும் சுந்தரியும் ஒரே அப்பா...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (3) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (30) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (3) காதல் (14) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)