இசையமைப்பாளருங்க எல்லாம் முழுமையான இசை தெரிஞ்சவங்கன்னு சொல்ல முடியாது. அதாவது எல்லா வாத்தியத்துக்கும் Notes எழுதி குடுக்க. கார்த்திக் ராஜாவுக்குதான் தமிழ்ல அதிகமான வாத்தியத்துக்கு குறிப்பு(Notes) எழுதித்தர முடியும். இசையமைப்பாளருங்களே குறிப்ப எழுதிக் குடுத்தாதான் அவுங்க அனுபவிச்ச உணர்வு கிடைக்கும்.
சில இசையமைப்பாளருங்க Sound Engineering பின்புலத்துல இருந்து வந்தவங்க. உதாரணம் ஆதித்யன், இமான். இவுங்களுக்குத்தான் இந்த மாதிரி காப்பி விளையாட்ட விவரமா பண்ணத்தெரியும். Sound Eng இல்லாட்டி காப்பி அடிக்கிறது 'ஈ அடிச்சான் காப்பி' மாதிரி ஆகிரும். அதுக்கு உதாரணம் தேவா. அப்படியே சுட்டுப் போடுறது. சரி, எப்படி எல்லாம் மெட்டுக்களைச் சுடுவாங்க (என் அறிவுக்கு எட்டிய வரையில)
- பழைய பாட்டுக்களை கேட்டு அப்படியே சரணத்தை பல்லவியா போடுறது(Vice Versa). இதுக்கு காரணம் தமிழ் Nativity கெடைக்கும்னு சொல்லிக்கிறது (திருடா திருடி- வண்டார் குழலி)
- ஆங்கிலப் பாட்டுக்களை கேட்டு அப்படியே தமிழ்ல சுட்டுப்போடுறது. ஆதாரத்தோட கேட்டா Inspirationனு சொல்லிடறது, இது பக்கா குழந்தைத் தனம்(முகவரி- ஆண்டே நூற்றாண்டே..)
- இதுக்கு மேல ஒரு புத்திசாலித்தனம் இருக்கு. அதாவது ஸ்பானிஸ், சீனா, அல்ஜீரியா, இப்படி நம்ம ஊர் மக்கள் கேட்காத பாட்டுக்களை சுட்டுத்தர்றது. இதுக்கு ஒரு தனி கலை வேணும். இது பெரும்பாலும் உதவியாளருங்கத்தான் பண்ணுவாங்க. சீக்கிரம் பண்ணிடலாம், காசும்தான். நான் இதுல செம கில்லாடி, பல பாட்டுக்களை அள்ளித்தந்திருக்கேன். MP3 தேட மட்டும் திறமை வேணும். நாம தான் கூகிளு, யாஹூ, அல்டாவிஸ்டா எல்லாத்துலேயும் U டர்ன் அடிச்சவங்களாச்சே. FYI, altavista is the best of mp3 search.
- அடுத்தது உதவியாளருங்ககிட்டே இருந்து வாங்கிக்கிறது/புடிங்கிக்கிறது. இதுதான் நம்ம ஊர்ல ஜாஸ்தி, காரணம் புதுசாவும் இருக்கும், மாட்டிக்கவும் மாட்டோம். என்ன அந்த நாசமா போன மெட்டு போட்டவங்களுக்கு கொஞ்சம் பணம் தரனும், யார்கிட்டேயும் சொல்லிடாம பார்த்துக்கனும். (ஹாரிஸ் உருவான காரணம் இது)
- Freelanceஆ தரவங்க கிட்ட காசு குடுத்து வாங்கிக்கிறது. அதாவது ஒரு குப்பன் நல்ல மெட்டு வெச்சிருந்தாருன்னா 5 ஆயிரத்தை குடுத்து வாங்கிக்கிறது. அவ்ளோதான். குப்பனும் பேச முடியாது, copy rights பிரச்சினையுமில்ல. இதுல காசு குடுக்காம ஏமாத்தினா சங்கர்(கணேஸ்) மாதிரி சில சம்பவங்கள் நடக்கும், கலீஜ் கூட ஆவும், குப்பனுக்கு காசு குடுக்கலைன்னா கோவம் வரத்தானே செய்யும்?
- இப்போ Sound Eng வெச்சிகிட்டே மெட்டு போடுறது. அதாவது ஒரு பாட்டை எடுத்து ரிவர்ஸுல ஒட விடறது, அப்புறமா ஒட்டு போட்டு ரெடி பண்ணிட வேண்டியது. இது ரொம்ப நல்லா வர மேட்டரு. அதான் Sound Eng சீக்கிரமா இசையமைப்பாளருங்க ஆகுற ரகசியம். (முத்து-ஒருவன் ஒருவன் முதலாளி- சன் டிவி theme music , relatedஆம். பசங்க சொன்னாங்க)
- கடைசியா இருக்கிறது ரொம்பச் சுலபம், வேத்து மொழியில ஹிட் ஆன பாட்டுகளோட மெட்டை இங்கே போட்டுக்கிறது. Globalisationல சீக்கிரம் கண்டு புடிச்சிடறாங்க.
இது ஒரு மீள்பதிவு.. http://vivasaayi.blogspot.com/2008/10/how-music-directors-survive.html
ReplyDeleteithai pathi nam pesiyirukkom. gnabagam irukka ILA???
ReplyDeletesound engineer வேலை என்னாங்கோ? (உண்மையான வேலை, copy அடிக்கறதுன்னு சொல்லிடாதிங்க)
ReplyDeleteகடைசியா இருக்கிறது ரொம்பச் சுலபம், வேத்து மொழியில ஹிட் ஆன பாட்டுகளோட மெட்டை இங்கே போட்டுக்கிறது. Globalisationல சீக்கிரம் கண்டு புடிச்சிடறாங்க.
ReplyDelete.....ஆஹா.... எல்லாத்தையும் இப்படி போட்டு உடைச்சிட்டீங்களே! :-))
ம்ம்ம்
ReplyDeleteவழிப்போக்கன் - யோகேஷ் said...
ReplyDeleteithai pathi nam pesiyirukkom. gnabagam irukka ILA??//
இல்லையே, ஆரம்பத்துல இருந்து சொல்லுங்க, பின்னூட்டத்துல கேட்டுகிறோம்..
//sound engineer வேலை என்னாங்கோ?//
ReplyDeleteகேபிளார்கிட்ட ஏற்பாடு பண்ணினாத்தான் உண்டுங்க. இல்லாட்டி ரசூல் பூக்குட்டி அச்சன்கிட்டதான் கேட்கனும்.
கண்ணாடி வீட்டுக்குள்ள இருந்து என்னால கல் எறிய முடியலை :))
ReplyDelete