சோமு சொன்னான் "மாப்பிள்ளே கவலைய விடுடா, இது ஒன்னுதான் வேலையா. Take it easy. இத மறந்துட்டு அடுத்த வேலையை தேடுவோம். அப்பத்தான் அடுத்தமுறை நல்லா செய்யமுடியும்"
ராமோ வெகு யோசனையுடன் வீடு வந்து சேர்ந்தான்.
அடுத்த நேர்முகத்தேர்வு. இருவருக்குமே அதிர்ச்சி, ஏனெனில் மீண்டும் அதே கேள்வி.
போனமுறை சொன்ன பதிலை வேறு விதமாக சொன்னான், சோமு.
பதிலையே மாற்றி தேர்வு நடத்துபவரையே அசர அடித்து வேலை வாங்கினான் ராமு.
வெளியே ஏமாற்றத்துடன் வந்த சோமு.
"மாப்ளே எப்படிடா வேலை கிடைச்சுது, என்னடா சொன்னே?"
"போனமுறை கேட்ட கேள்விக்கு என்ன பதில் சரியா இருக்கும்னு யோசிச்சுகிட்டே வீடு போய் சேர்ந்தேன். அதுதான் உதவுச்சு. இந்த வேலை போனதுக்கு வேணும்னா Take it easyன்னு சொல்லலாம். ஆனா கேட்ட கேள்விகளை அப்படி உதறிடக்கூடாது. அந்தக் கேள்வி எப்போ வேணுமின்னாலும், யார் வேணுமின்னாலும் கேட்கலாம், அதுக்கு சரியா பதில் சொல்லிட்டா வெற்றி நம் பக்கம்"ன்னு சொல்லி வேலையில் சேர்ந்தான் ராமு.
அதனால நேர்முகத்தேர்வோ, தொலைபேசித்தேர்வோ.. கேள்விகளை மறக்காதீங்க. அது காலத்துக்கும் உதவும். ”உங்க வாழ்க்கையின் லட்சியம் என்ன?” இதுதான் என்கிட்டையும் முதல் முறையா நேர்முகத்தேர்வுல கேட்டப்பட்ட கேள்வி. நானும் சோமுமாதிரிதான் சொதப்பிட்டு ‘பல்பு’ வாங்கிட்டு வந்தேன். இது கோவையில BPL Customer Careக்கு வேலைக்கு. அடுத்தது புளியங்குளம் ஆசுபத்திரியிலும் ஒரு கேள்வி. வாழ்க்கைக்கும் மறக்கவே முடியாது.
நெசமாலுமே வாழ்க்கையின் லட்சியம் என்னான்னு இன்னிக்கு வரைக்கும் எனக்குத்தெரியாது. அப்ப உங்களுக்கு?
Good one...
ReplyDelete2006ல போட்ட பதிவேதான், கொஞ்சம் ‘டச்சப்’ பண்ணியிருக்கேன்
ReplyDeleteஅதானே,எங்கேயோ படிச்ச மாதிரி இருக்கே என்று யோசித்துக்கொண்டிருந்தேன்.
ReplyDeleteநல்ல வேளை என்னிடம் யாரும் இது மாதிரி கேட்கவில்லை ஏனென்றால் எங்கள் தொழிலில் அந்த மாதிரி யோஜனையுடன் வேலைக்கு வரமுடியாது. :-))
நெசமாலுமே வாழ்க்கையின் லட்சியம் என்னான்னு இன்னிக்கு வரைக்கும் எனக்குத்தெரியாது. அப்ப உங்களுக்கு?
ReplyDelete.....அடுத்த முறை இந்த கேள்வி மீண்டும் வருவதற்குள், நான் யோசித்து வைக்கணும் போல. :-)
எல்லோரும் தெரிந்துகொள்ள வேண்டிய ஒன்று. நல்ல பகிர்வு.
ReplyDeleteவாங்க ராம்ஸ்.. செம வேகம்தான் போங்க
ReplyDeleteநல்ல கேள்வி.. எனக்கும் தெரியாது.. யோசிக்கிறேன்..
ReplyDelete//உங்கள் வாழ்க்கையின் லட்சியமென்ன?//
ReplyDeleteசாகுற வரைக்கும் உயிரோட இருக்கணும், இதுதான் என் லட்சியம்.
இதைவிட எளிதான, எல்லோராலும் சாதிக்கக் கூடிய லட்சியத்தை / லட்சியம் உடயவரை காட்ட முடியுமா??
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
நன்றி குமார்!
ReplyDeleteநன்றி சித்ரா!
நன்றி ஐயா!
நன்றி ஸ்டார்ஜன்!
நன்றி வெறும்பய!
sriram இப்படி ஒரு சுலபமான லட்சியத்தை பதிவுல சொல்லலாம். தேர்வுல சொல்ல முடியுங்களா? அதுவும் fresher நேர்முகத்தேர்வுல ..?
ReplyDelete//நெசமாலுமே வாழ்க்கையின் லட்சியம் என்னான்னு இன்னிக்கு வரைக்கும் எனக்குத்தெரியாது//
ReplyDeleteம்.............. தெரிஞ்சிட்டா நாமல்லாம் என்னா பண்ணுறது??????????//