Wednesday, December 8, 2010

சுவாரஸ்யமில்லாத கவிதைகள்

தலைக்குளித்து பொட்டிட்டு,
சாமி கும்பிட்டு அவள் வருகையில்
கேட்காத வரம் எனக்கே கிடைக்கிறது,
சாமிக்கு ஏனிந்த ஓரவஞ்சனை?
----00----


பூக்களெல்லாம் ஒன்றுகூடி
வண்ணத்துப்பூச்சி மேலமர்ந்து
தேன் குடித்தது
பூச்சூடி வருகிறாள் காதலி

----00----

அவசர அவசரமாய் நீ
ஒப்பனை செய்துகொள்வதை
உள்வாங்கி வெட்கம் கொப்பளிக்க
பிரதிபலித்தது ஸ்கூட்டியின் கண்ணாடி!

----00----


க்ரேயான் கொண்டு படம் வரையவும்,
கிதார் பழகவும், கராத்தேவும் கற்றுக்கொள்ள
ஆரம்பித்திருக்கிறேன்,
சின்னவயதில் ஆசைப்பட்டதெல்லாம் நிறைவேறியது
நன்றாக சம்பாதிக்க ஆரம்பித்ததும்
கேலியும் கிண்டலும் சரியாகவே காதில் விழுகிறது,
என்ன செய்ய இப்பவும் செய்யவில்லையெனில்
எப்பொழுது ஆசைப்பட்டதை செய்ய?

----00----



ஸ்கூட்டியில் நீ!
நான் உன்னைத் தொடர
கண்ணாடியில்,
நானறியாமல் நீயும்
நீயறியாமல் நானும் பார்த்துக்கொள்ள
இருவரையும் ஒருங்கே பார்த்து சிரித்தது கண்ணாடி

----00----

13 comments:

  1. ஏங்க இதையா சுவாரஸ்மில்லாததுன்னு சொல்றீங்க.. ரசிக்க பழகின மனதுக்கு எல்லாமே அற்புதமாப்படுது. கடைசியில இருவரையும் நோக்கிச்சிரித்த கண்ணாடியாகட்டும், ‘எப்போது ஆசைப்பட்டதை செய்ய?’ வாகட்டும் நிலைத்து நிக்குதுல்ல..

    ReplyDelete
  2. அருமைங்க‌ இளா அதிலும் அந்த‌ ஸ்கூட்டி க‌ண்ணாடி ஏ ஒன்..

    ReplyDelete
  3. கவிதை சாக்லேட்டுக்கள்

    ReplyDelete
  4. சுவாரஸ்யமான கவிதைகள்

    ReplyDelete
  5. அருமைங்க நண்பரே...

    ReplyDelete
  6. //ஏங்க இதையா சுவாரஸ்மில்லாததுன்னு சொல்றீங்க//
    இதைப் படிக்காதீங்கன்னு புஸ்தகம் போட்டா மக்கள் படிக்க ஆவல் அதிகமாச்சு இல்லீங்களா? அதுமாதிரிதான் இதுவும்

    ReplyDelete
  7. டெம்ப்ளேட் எல்லாம் மாத்தியாச்சா.. சூப்பரு.

    ReplyDelete
  8. இந்த கேபிள் கூட சேராதீங்கன்னா கேட்டீங்களா, எண்டர் கவுஜ வியாதி இப்போ உங்களுக்கும் வந்திடுச்சு

    என்றும் அன்புடன்
    பாஸ்டன் ஸ்ரீராம்

    ReplyDelete
  9. //டெம்ப்ளேட் எல்லாம் மாத்தியாச்சா.. சூப்பரு.//
    யக்கோவ், இது எல்லாம் ஓவரு. இந்த டெம்ப்ளேட் எல்லாம் வருசக் கணக்கா இருக்கு..

    ReplyDelete
  10. //இந்த கேபிள் கூட சேராதீங்கன்னா கேட்டீங்களா/
    அட, ஒரு நாள்தாங்க பேசினேன். இதுக்கே இப்படின்னா? நீங்க எத்தனை கவிதைப் பதிவு போடவேண்டியிருக்கும்னு நினைச்சா.. வயித்தைக் கலக்குது.

    ReplyDelete
  11. ***ILA(@)இளா said...

    //ஏங்க இதையா சுவாரஸ்மில்லாததுன்னு சொல்றீங்க//
    இதைப் படிக்காதீங்கன்னு புஸ்தகம் போட்டா மக்கள் படிக்க ஆவல் அதிகமாச்சு இல்லீங்களா? அதுமாதிரிதான் இதுவும்***

    அப்படியா?! கவிதைகள் எல்லாம் புரிஞ்சவரைக்கும் நல்லாத்தாங்க இருக்கு :)

    ReplyDelete
  12. அலாவ் நான் இங்கன நின்னுட்டு இருக்கேன் நீங்க எந்த அக்கா கிட்ட பேசிட்டு இருக்கீங்க.. :))) நான் வரப்பை இதோட குழப்பிட்டேன்.

    ReplyDelete

தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி

  தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை  -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை  காசி  எழுதியது தமிழோவியத்துக்காக  பாஸ்டன் பாலாஜி  க...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நாகேஷ் (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) வாலி (1) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)