காலை பால் பூத்தில் நைட்டிக்கும் லுங்கிக்கும்,
பேருந்தில் சிலவை headPhoneலும், SMSகளாகவும்,
இடுப்பில் கைவைத்தவுடன் நெளிந்தபடியும்,
சத்தமாகவும், கிசுகிசுப்பாகவும், குழைந்தும், குமறியும்,
சிட்டை கைமாறும்போதும்,பேருந்து சன்னல்களின் வழியேயும்,
பேருந்து நிறுத்ததில் காத்திருத்தலாயும்,
ஷேர் ஆட்டோக்களின் நெருக்கத்திலும்,
சிறுநீர் கழிக்குமிடத்தில் இதயத்தின் நடுவில்லாமல்
சற்றே ஓரமாய் அம்புவிட்டும்,
ஐஸ்கிரீம் கடைகளில் அனல் கக்கும் சூடாகவும்,
காஃபி கடைகளில் மெதுவாய் சூடு ஆறியபடியேயும்,
வயதைத் தாண்டியும்,
இன்னொருவன் மனைவி மீதேயும்,புளிய மரத்தின் தோலை செதுக்கியும்,
பள்ளி குட்டைப்பாவாடையிலும்,
அரும்பு மீசை துளிர்விடும் நேரத்திலும்,
IT tagகள் ஒன்றோடு ஒன்று உரசியும்,
இருசக்கர வாகனத்தில் தொத்தியபடியேயும்,
ட்விட்டரில் RT/DMஆகவும்,
ஃபேஸ்புக்கில் Likesஆகவும் புகைப்படங்களாகவும்,
பாட்டியின் நெற்றிச் சுருக்கத்திலேயும்,
தாத்தாவின் சைக்கிள் கேரியரிலும்,
அப்பாவின் திறக்காத ட்ரங்க் பெட்டியிலும்,
எனக்கான பெயரிலும்,
நண்பன் எனக்கு சரக்கு வாங்கி குடுக்கவும்,
சென்னையின் வெப்பத்திலும்,
ஊட்டியின் குளிருலும்,
எங்கெங்கும் காதல்!
பாவம்,
எனக்குத்தான் அமையவில்லை காதலும்
அதற்கான காதலியும்!
nalla kavithai...vaalthukkal
ReplyDeletetemplate testing
ReplyDelete// பாவம்,
ReplyDeleteஎனக்குத்தான் அமையவில்லை காதலும்
அதற்கான காதலியும்! //
வாழ்த்துக்கள்...
// பாவம்,
ReplyDeleteஎனக்குத்தான் அமையவில்லை காதலும்
அதற்கான காதலியும்! //
வீட்டுக்காரம்மா கண்ணுல படக்கடவது. 10 நாள் சோறு தண்ணி இல்லாம போடக்கடவது ! :)
Ila,
ReplyDeleteI think you married a gal whom you loved during your studies at CBT. I read your postings about this. Pl. check your archival post.
continue ...
ReplyDeleteYou wrote about the gal who book a seat for you at BVN bus stand etc ...
Santhose--> இது கவிதைதானுங்களே. நான் என்னோட கதைன்னா சொன்னேன், அதே மாதிரி பவானி ST ம் கதைதானுங்களே.. சொந்த அனுபவம் எதுவுமே இதுல இல்லைங்க. ஓஹ், கற்பனைன்னு tag போடனுமா?
ReplyDeleteகாதல் வாழ்க..
ReplyDelete@பிரபாகரன்--> நன்றி!
ReplyDelete@கவிதா --> பட்டாச்சு
@நன்றி- அமுதா
ReplyDelete