Friday, September 30, 2011

USA- Dish network வைத்திருக்கும் மக்களுக்கு எச்சரிக்கை

தினேஷ் Buzzல் பகிர்ந்து கொண்டதை இங்கே பதிவில் அவர் அனுமதியோடு வெளியிடுகிறேன்

Dish network வைத்திருக்கும் மக்களுக்கு ஒரு எச்சரிக்கை. (அமெரிக்க பஸ்ஸர்களுக்கு மட்டும்)

இன்னைக்கு ஒரு ஃபோன்கால். ஒரு இந்தியப் பெண் குரல், “You have dish network for your television right?”னு கேட்டது. நானும் “யெஸ்” என்றேன். டிஷ் நெட்வொர்க்கோட சேட்டிலைட் ஆர்பிட் மாத்தப்படுறதாவும். அதனால பல ரீசிவர்கள் இன்கம்பேட்டிபிளாகிடும்னும் சொன்னாள். உங்க ரீசிவர் கம்பேட்டிபிளானு பாக்கணும்னு சொல்லி, ரீசிவர் மாடலும், ரீசிவர் ஐடியும் கேட்டா. எனக்கு அப்பவே முதல் டவுட்டு வந்தது. ஏன்னா ஃபோன் நம்பரை வச்சே டிஷ் நெட்வொர்க் ஆளுங்க என் ஜாதகத்தையே எடுத்துருவாங்க. இவ ஏன் இந்த டீட்டெயில்ஸ் கேக்கறான்னு. அடுத்து உங்க அக்கவுண்ட் செக் பண்ணிட்டு சொல்றேன்னு சொல்லிட்டு, கொஞ்ச நேரம் கழிச்சி உங்க ரீசிவர் கம்பேட்டிபிள் இல்லை சார் நான் என்னோட சூப்பர்வைசர்கிட்ட கனெக்ட் பண்றேஎன்னு சொன்னா.

நானும், வெயிட் பண்ணேன். சூப்பர்வைசர் வந்து, புது ரீசிவர் அனுப்பி வைக்கிறேன். பழைய ரீசிவரை ப்ளக் அவுட் பண்ணிட்டு இதை ப்ளக் இன் பண்ணா போதும். வொர்க் ஆகிடும். பழைய ரீசிவரை 15 நாளைக்குள்ள எங்களுக்குத் திருப்பி அனுப்பனும். ப்ரிபெயிட் ரிட்டர்ன் லேபிளும் சேர்த்து அனுப்புவோம். அப்புறம் $80 டாலர் சார்ஜ் பண்ணுவோம். ஆறுமாசம் கழிச்சி அதை ரிட்டர்ன் பண்ணிடுவோம். அக்கவுண்ட்ல இருக்கிற உங்க க்ரெடிட் கார்டுக்கு சார்ஜ் பண்ணுவோம்னு நிறுத்தாம பேசினான். இப்ப எனக்கு ரெண்டாவது டவுட்டு. சேட்டிலைட் ஆர்பிட் மாத்தினா ஆண்டெனாவைத் திருப்ப வேண்டியிருக்குமே, இவன் ரீசீவரை மாத்தினாப் போதும்னு சொல்றானேன்னு.

அதோட, நீங்க மாசா மாசம் கரெக்டா பில் கட்டுறதால, 12 மாசத்துக்கு $5 டிஸ்கவுண்ட் குடுக்குறேன் அப்பிடின்னான். ”நான் நிறுத்துப்பா, ஒரு நிமிசம். உங்க சேட்டிலைட் சேஞ்ச் பண்றதுக்கு நான் எதுக்கு $80 டாலர் குடுக்கணும்?”னு கேட்டதும், நீங்க இப்பவே குடுக்க வேண்டாம், ரீசிவர் கைக்கு வந்ததும், உங்களுக்கு ஃபோன் பண்ணி நான் சார்ஜ் பண்ணிக்கிறேன்னு சொன்னான்.

அதுக்கடுத்ததா அவன் கேட்டதுதான் எனக்கு டவுட்டை கன்ஃபர்ம் பண்ணிருச்சி. இந்த ஆர்டரை கன்ஃபர்ம் பண்றதுக்கு உங்க கிரெடிட் கார்டோட முதல் 12 டிஜிட் மட்டும் சொல்லுங்க, கடைசி டிஜிட் வேண்டாம்னு சொன்னான். நான் முழிச்சிக்கிட்டேன். என்கிட்ட கிரெடிட் கார்ட் இப்ப இல்லை, நீ நாளைக்கு இதே நேரத்துக்கு ஃபோன் பண்ணு நான் தர்றேன்னு சொன்னேன். உடனே அவன், இருங்க சார் அது தேவையில்லை. நான் ரிசீவரை அனுப்பி வைக்கிறேன். அப்பிடின்னு சொல்லிட்டு அவனோட ஃபோன் நம்பர் & ஏஜண்ட் நம்பர் குடுத்தான்.

அவன் ஃபோனைக் கட் செஞ்சதும், நான் டிஷ் நெட்வொர்க் கஸ்டமர் கேருக்கு ஃபோன் பண்ணேன். அவங்க அப்பிடியெல்லாம் எதுவும் மாத்தலை. நீங்க அந்த காலை இக்னோர் பண்ணிடுங்கன்னு சொல்லிட்டான்.

உடனே நான் அந்த சூப்பர்வைசருக்கு ஃபோன் பண்ணி, டிஷ் நெட்வொர்க்குக்கு ஃபோன் பண்ணி கேட்டேன், அது தேவையில்லைன்னு சொன்னாங்க, எனக்கு புது ரீசீவர் அனுப்ப வேண்டாம்னு சொல்லிட்டேன். அவனும் சரி நான் ஆர்டரைக் கேன்சல் பண்ணிடுறேன்னு சொல்லிட்டான்.

அவன் என்ன செஞ்சிருக்கணும்னா, என் அக்கவுண்டுக்குள்ள ரீசிவர் ஐடி வச்சி லாகின் பண்ணியிருக்கான். அதுல என்னோட கிரெடிட் கார்ட் லாஸ்ட் ஃபோர் டிஜிட்ஸ் மட்டும் தெரியும் இல்லையா, அதுனால ஃபர்ஸ்ட் 12 டிஜிட்ஸ் கேட்டிருக்கான். நான் குடுத்துருந்தா, இன்னேரம் என்னைய போண்டி ஆக்கியிருப்பானுங்க.

தலைக்கு வந்தது தலைப்பாகையோட போச்சி. இது மாதிரி ஃபோன் வந்தா எச்சரிக்கையா இருங்க. ரீசிவர் ஐடியையே குடுக்காதீங்க. என்னோட அக்கவுண்ட்ல இருக்குமேன்னு கேட்டு மடக்குங்க.

8 comments:

  1. Romba nandri Ila. Ethula ethula emathurathunnu okkanthu yosipanugalo.. enakku credit card lock aaiduchunnu niraya thadava phone pannunvanga bank kooptomna apdiellam onnum illa just ignore the call nnu sooolduvanga.. thanks for the information. enakku call vantha koncha ushara irunthukkuren.

    ReplyDelete
  2. Tamil manathula inaichachi and vote um potachu.

    ReplyDelete
  3. இந்த மாதிரி உபத்திர கால் எல்லாம் வரும்போது ஃபோனை எடுப்பதே இல்லை! ஏதாவது இப்படித்தான் எழவைக்கூட்டுவானுக! :)

    ReplyDelete
  4. நல்ல எச்சரிக்கை பதிவு.
    எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. நேற்றே பஸ்ஸில் படித்தேன். இந்தப் பதிவு மேலும் பலருக்கு பயனுள்ளதாய் இருக்கும்.

    ReplyDelete
  6. I changed it to Roku.. i can watch when i want what i want...instead of, all the time only serials...

    ReplyDelete
  7. //அவன் என்ன செஞ்சிருக்கணும்னா, என் அக்கவுண்டுக்குள்ள ரீசிவர் ஐடி வச்சி லாகின் பண்ணியிருக்கான். //

    ஐடிய கேட்டா பாஸ்வர்ட்டையும் சேத்துக் குடுத்துருவாங்களோ என்னமோ? காலம் கலிகாலந்தான்.

    ReplyDelete

தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி

  தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை  -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை  காசி  எழுதியது தமிழோவியத்துக்காக  பாஸ்டன் பாலாஜி  க...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நாகேஷ் (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) வாலி (1) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)