
வாரிசு வந்ததுக்கு அப்புறம், வீட்டுல வாரிசுக்கும் சந்தனம் வைக்க ஆரம்பிச்சுட்டாங்க. பையன பார்க்க வந்த ஒரு பெரியம்மா சந்தனக்கட்டி கரைச்சு வைக்க வேணாம் சந்தனக் கட்டைய உரசி வைங்க அதான் நல்லதுன்னு சொல்லி, ஈரோட்டுல- சங்கீதாவுல் சந்தக்கட்டை கெடைக்குது வாங்கிகோங்கன்னு அம்மணி கிட்ட கொளுத்திப் போட அம்மணி அடம் பிடிக்க ஆரம்பிச்சுட்டாங்க. சரின்னு நானும் போன வாரம் ஒரு நாள் மொட்ட வெயில்ல கிளம்பிட்டோம். கொளுத்துற வெயிலுல மண்டை காய்ஞ்சு 3 ஜூஸ், 2 கறும்பு சாறு, சிந்தாமணியில ஒரு ஆப்பிள் ஜூஸ் குடிச்சதுதான் மிச்சம். சங்கீதா, கண்ணன் ஏன் நாட்டு மருந்து விக்கறவன்கிட்ட கூட விசாரிச்சு பார்த்ததுல ஒண்ணு மட்டும் நல்லா தெரிஞ்சுது.
அது "ஈரோட்டுல சந்தனக்கட்டை கடையில கிடைக்காது".
அடுத்த பதிவு தலைப்பு என்ன நாட்டுக்கட்டையா!!!:)
ReplyDeleteஅத பத்தி நம்ம ஜொள்ளு பாண்டிக்கிட்ட கேட்ட கேள்விக்கு தெளிவா பதில் சொல்லிட்டாரே. அதனால வேற கட்டைய பத்தி வேணுமின்னா பதியலாம்.
ReplyDeleteஇங்கே இருக்கு //http://jollupet.blogspot.com/2006/04/blog-post.html//
சர்வோதயா'வுல விசாரிச்சு பார்த்தீங்களா??
ReplyDelete//3 ஜூஸ், 2 கறும்பு சாறு, சிந்தாமணியில ஒரு ஆப்பிள் ஜூஸ// முழாம்பழ ஜூஸ் சாப்பிடாம ஈரோட்டுல உலா வரலாமா??
கட்டைன்னு எங்க கேட்டாலும் மனசு மகுடிசத்தம் கேட்ட பாம்பாட்டம் டண்டணக்கான்னு ஆடிகிட்டு வந்துருதுண்ணே !
ReplyDeleteஎன்ன ஈரோடுல சந்தனக்கட்டை கடையிலே இல்லையா??????
அப்புறம் எங்கே புடிச்சீங்கன்னு சொல்லுங்கண்ணா !
ஒரிஜினல் சந்தனம் வாங்க பட்ட பாடு ஒன்றா இரண்டா., பேரூர் கோவில்,காதிபவன்,வன கல்லூரி, பக்திமான்களின் வீடுகள் இப்படி எத்தனை அலைச்சல். ம்ம்.. யாம் பெற்ற அலைச்சல் பெறுக இவ்வையகம்... :)
ReplyDeleteKaipponnuvin Varugai matrum therthal Arikkai aagiyavatrai thodarnthu Va.Vaa.Sangathin Kudumba Arasiyal Pokkai kandithu Namakkal Shibi Sangathai Vittu veliyeri Paa.Ma.Kavil Inaiya Iruppathaga therigirathu.
ReplyDeleteபார்த்திக்கு என்னங்க ஆச்சு? பச்சக் குதிர ரிசல்ட் பார்த்துட்டு இப்படி போகும் வரும் ப்ளாக்ல எல்லாம் சிபி பத்தி வதந்தீ பரப்பறாரு!!!
ReplyDeleteஅட அனுசுயா நீங்களுமா ...
ReplyDelete