
எங்க வீட்டுல வெள்ளிக்கிழமை ஆனாக்கா, ராவு 10 மணிக்கு விஜய் டிவி-தவிர வேற எதுவும் ஓடாது. அவ்வளவு பேரும் ஒண்ணா "கலக்கப் போவது யாரு?"க்கு ரசிகரா மாறிட்டோம். ஒரு பந்தயம் முடிஞ்சு போச்சுன்னாலும் இப்ப ஜெயிச்சவங்களே கலக்கிட்டு இருக்காங்க. போன போட்டியில ஜெயிச்சது கோவை குணா, 2வது பரிசு முத்து, 3வது டேவிட்(கைபுள்ளயோட ஜெராக்ஸ்).


இது மீட்டரு: கட்டதுரைக்கும் கைபுள்ளைக்கும் ஆவாதுன்னு எல்லருக்க்மே தெரியும்.லல்லுவோட நாற்காலி ஆட்டம் கண்டப்ப அவுங்க மனைவி ஆட்சி பொறுப்ப ஏத்துகிட்டாங்க. லல்லு விட்ட பொறுப்பை ரப்ரிதேவி தொடர்ந்து செய்யுற மாதிரி உமாவும் டேவிட்டுக்கு 3வது இடம் கிடைக்க வெச்சுட்டாங்க. பின்னே கட்டதுரையோட (ரியாஸ்கான்) மனைவிதானே உமா. அங்க நடக்கிறத்துக்கு இங்கே பழி வாங்கிட்டாங்க. இருக்கட்டும் பின்னாடி பார்த்துக்குவார்(?!) கைப்பு.
எங்கள் தங்கம் கைப்புவை மூன்றாம் இடத்துக்குத் தள்ளிய கட்டத்துரையின் துணைவியாரின் சதியை எதிர்த்து தளபதி சிபி இன்று முதல் காலை, மாலை, மதியம் உணவு வேளைகள் தவிர மற்ற வேளைகளில் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்துள்ளார்..
ReplyDeleteவாழ்க தளபதி சிபியின் நாமம்.!!!!
வாழ்க மால்கேட் மாணிக்கம் கைப்புள்ள!!!!!
வீழ்க கட்டத்துரை.. !!!!
வீழ்க கட்டத்துரை செய்யும் சதி... !!!!!