இன்னைக்கு ஆடி-1.
அதாவது பாரதப் போர் ஆரம்பிச்ச நாள். நிறைய அக்கப்போரும் இருக்குங்க. புருஷன்மாருங்க எல்லாரும் பர்ஸ கெட்டியா புடிச்சுக்கனும் இல்லைன்னா கவுத்திருவாங்க இல்லே. பின்ன நிமிஷத்துக்கு ஒரு தரம் டி.வில ஆடித்தள்ளுபடி விளம்பரம். "எடுத்துக்கோ, எடுத்துக்கோ அண்ணாச்சி கடையில எடுத்துக்கோ"ங்கைறாங்க. அப்புறம் வுட்டுக்காறம்மாங்கல்லாம் என்ன பண்ணுவாங்க. அதுவுமில்லாம ஆடி மாசம்'ன்னா புருஷன், பொஞ்சாதிங்களை பிரிச்சு வேற வெச்சுருவாங்கலாமில்லை. இதையெல்லாம் பார்த்தா ஆடி மாசம் ஒரு பெரிய வில்லத்தனமான் மாசம்'ன்னு தான் நமக்கு தோணுதுங்க.
சரி, ஆடி-1 என்ன விஷேசம் தெரியுங்களா? தேங்காய் சுடுறதுதான். அட அடுத்தவங்க காட்டுல இருந்து இல்லீங்க. நம்ம தோட்டத்து தேங்காயதாங்க. பள்ளிகூடம் போகுறப்போ எல்லாம் பசங்களும், பொண்ணுங்களும் பள்ளிகூடத்துலயே தேங்காய் சுடுவோம். அது ஒரு கனாக்காலம். ஹ்ம்ம். சனிக்கிழமையே எல்லா கூட்டாளிங்களுக்கு சொல்லிவிட்டோம். திங்கள் காலையில தேங்காய் சுடறதா. இப்ப பசங்க கழுதமாதிரி ஆகி, தொப்பைய வெச்சுக்கிட்டு வந்துட்டாங்க. கையில ஒண்ணு, ரெண்டுன்னு குழந்தைங்க வேற. என்ன பண்ண காலம் வேகமா உருண்டு ஓடுது.
அட, இத எப்படி சொய்யறது சொல்லிறேங்க. அநேகமா, யாரும் சொல்லாத சமையல் குறிப்பு இது, அதனால குறிச்சு வெச்சுக்குங்க. நல்லா முத்தின தேங்காய், சோளம், ஒரு 10 கிராம், கம்பு ஒரு 10 கிராம், வெல்லம், எள்ளு ஒரு 10 கிராம். சுடுறதுக்கு குச்சி + எரிக்க சுள்ளி. தேங்காய நல்ல மட்ட உரிச்சு, குடுமி எடுத்துடனும். தேங்காய்க்கு புள்ளி மாதிரி 3 வடு இருக்கும். அதுல ஒண்ண மட்டும் ஓட்ட போட்டு பாதி தண்ணியை எடுத்துரனும். அப்புறமா, எள்ளு, கம்பு, சோளம், வெல்லம் எல்லாத்தையும் திணிச்சு, ஒரு பெரிய குச்சியில சொருகிட்டு சுடனும். அந்த குச்சி ஒரு 5 அடியாவது இருக்கனும், அப்போதான் தீ சுடாது. அப்படியே தேங்காய் சுடும்போது எவனாவது எகத்தாளம் பேசினா அந்த குச்சியாலையே ஒரு போடு போடலாம் பாருங்க.
Camp Fire மாதிரி ஒரு நெருப்பு மூட்டி எல்லாரும் உக்காந்து சுட வேண்டியதுதான். தேங்காய் நல்லா வெந்த பிறகு வெடிக்கும், எடுத்து உடச்சு திங்கவேண்டியதுதான். என்னா ருசி தெரியுங்களா? அம்புட்டுதான் தேங்காய் சுடுறது. சுடும்போதுதான் ஊர் கதையெல்லாம் பேசுவோம். எவனாவது கடுப்பு ஆகி சுட்டுகிட்டு தேங்காயால இருக்கிற அடிப்பான், அதுவும் தனி கலாட்டா. இதெல்லாம் நகரத்து பக்கம் இருக்குமா? தெரிஞ்சா சொல்லுங்க
Subscribe to:
Post Comments (Atom)
தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி
தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை காசி எழுதியது தமிழோவியத்துக்காக பாஸ்டன் பாலாஜி க...
Labels
18+
(1)
365-12
(33)
Adverstisement
(1)
aggregator
(1)
BlogOgraphy
(2)
book review
(1)
Buzz
(1)
cinema
(6)
Comedy
(6)
Computing
(1)
Controversial
(1)
cooking
(1)
Copy-Paste
(10)
corruption
(1)
cricket
(1)
Doctor
(1)
Drama
(1)
experience
(4)
GVM
(1)
Indli
(1)
Information
(3)
Interview
(2)
IR
(1)
Job Interview
(1)
Jokes
(1)
KB
(3)
kerala
(2)
kids
(1)
Language
(1)
manoj paramahamsa
(2)
Movie Review
(15)
Movies
(39)
music
(6)
Music Review
(1)
News
(8)
NJ
(2)
nri
(1)
NYC
(2)
Oscars
(1)
Personal
(31)
Photo
(5)
Photos
(4)
Politics
(7)
Quiz
(10)
rumour
(1)
Sevai Magik
(1)
Short Film
(8)
Social
(46)
song
(4)
Songs review
(2)
songs.
(1)
Story in blogging world.
(3)
sujatha
(1)
tamil
(2)
Tamil Blog awards
(1)
Tamil Kid
(2)
TamilmaNam Star
(16)
TeaKadaiBench
(13)
technology
(5)
train
(2)
twitter
(28)
USA
(13)
Video Post
(11)
Vivaji Updates
(9)
webs
(4)
Wish
(1)
WorldFilm
(1)
Xmas
(1)
அப்பா
(1)
அப்பாட்டக்கர்
(1)
அரசியல்
(6)
அலுவலகம்
(2)
அனுபவம்
(11)
இசை
(2)
இயற்கை
(3)
இளையராஜா
(4)
ஈழம்
(9)
எதிர்கவிதை
(1)
ஏரும் ஊரும்
(8)
கடிஜோக்ஸ்
(1)
கதை
(9)
கலவரம்
(1)
கலைஞர்
(1)
கவிதை
(42)
கற்பனை
(4)
காதல்
(15)
கிராமம்
(20)
குத்துப் பாட்டு
(1)
குறள்
(1)
சங்கிலி
(5)
சமுதாயம்
(12)
சமூகம்
(21)
சிபஎபா
(11)
சிறுகதை
(7)
சினிமா
(1)
சுட்டது
(1)
சுயம்
(1)
தமிழ்
(4)
திரைத்துறை
(1)
திரைப்படம்
(2)
துணுக்ஸ்
(17)
தொடர்கதை
(6)
நகைச்சுவை
(7)
நட்பு
(1)
நாகேஷ்
(1)
நிகழ்வுகள்
(12)
நினைவுகள்
(4)
படிச்சது
(1)
பண்ணையம்
(7)
பதிவர் வட்டம்
(35)
பதிவுலகம்
(11)
பத்திரிக்கைகள்
(2)
பயணம்
(1)
பாரதி
(1)
புலம்பல்
(10)
புனைவு
(8)
பெற்றோர்
(5)
பொங்கல்
(2)
மீட்டரு/பீட்டரு
(1)
மீள்பதிவு
(8)
மொக்கை
(2)
ரஜினி
(3)
வாலி
(1)
விமானம்
(1)
வியாபாரம்
(3)
விவசாயம்
(4)
விவாஜியிஸம்
(1)
ஜல்லி
(8)
-
சூ னியம் என்றொரு சமஸ்கிரதச் சொல்லொன்று உண்டு. அதற்கு இன்மை, மாயை என்று தமிழில் பல பொருள்கள் இருக்கலாம். ஆனால் மனதிற்கோ ஒரே விதமான உணர்வுதான...
-
கலிஃபோர்னியாவிலிருந்து வந்த ஒரு வட இந்தியரை இன்று சந்தித்தேன். இன்னிக்கு பாஸ்டனில் செம குளிர். அவரோ மெலிசா ஒரு Jacket அணிந்து குளிரில் நடு...
//இதெல்லாம் நகரத்து பக்கம் இருக்குமா? தெரிஞ்சா சொல்லுங்க//
ReplyDeleteசுட வேண்டாம்...அப்படியே சாப்பிடுவோம்.
:)
//இதெல்லாம் நகரத்து பக்கம் இருக்குமா? தெரிஞ்சா சொல்லுங்க//
ReplyDeleteஅட ஏங்க வயித்தெரிச்சலைக் கிளப்பிறீங்க?
:-))))
நீங்க ஈரோடா?
ஓ... பவானியா? கவனிக்கவில்லை பொரபைலை...
ReplyDeleteநான் சின்ன வயசில ஈரோடுல இருக்கும்போது அங்க இத செய்வாங்க. வாசனை சூப்பராயிருக்கும். கோவையில யாரும் செய்யற மாதிரி தெரியல.
ReplyDeleteஇத இதுக்கு முன்னாடி கேள்வி பட்டு இருக்கேன். சாப்பிட்டது கிடையாது. ஊராண்ட வந்தா கிடைக்குமா....
ReplyDelete//புருஷன்மாருங்க எல்லாரும் பர்ஸ கெட்டியா புடிச்சுக்கனும் இல்லைன்னா கவுத்திருவாங்க இல்லே//
அட என்ன இளா, சேர்த்து சேர்த்து வைக்காதீங்க, கரையான் அரிச்சுட போகுது. அண்ணியே வீட்டுடாதீங்க விவ்வ....
அது சரி நாங்க நோன்பு தான் கேள்விப்பட்டு இருக்கோம். அது என்ன நோன்பி...
ReplyDeleteபெண் பாலா
கைப்பு, இப்படியே எவ்வளவு நாளைக்குதான் சின்னபுள்ளத்தனமா பேசுவீங்க?
ReplyDeleteகோவை, நகரமுங்க அனுசுயா. கிராமம் பக்கம் வாங்க
நாகை சிவா-->வந்தா கிடைக்குமாவா? வாங்க சுட்டு பார்த்திருவோம்
நோன்பி-பெண்பாலா? ஆட்டுப்பாலான்னு எல்லாம் தெரியாது. ஆனா ஆடி பெண்பால் தான்.(ஆடன், தான் ஆண்பால்)
புள்ளையாருக்கு படைக்காமயே தின்னுபுடுவிங்களா?
ReplyDeleteஅந்த குச்சிய வச்சுக்கிட்டு என்ன பண்ணுவிங்க? அந்த விளையாட்டை கொஞ்சம் சொல்றது.
நோன்பி = திருவிழா = பண்டிகை
எல்லாம் ஒன்னுதாம்பா.
// எவனாவது எகத்தாளம் பேசினா அந்த குச்சியாலையே ஒரு போடு போடலாம் பாருங்க.//
ReplyDelete:-)
எகத்தாளமா பின்னூட்டமோ பதிவோ போட்டா அடிக்க இந்த மாதிரி எதும் வழி இருக்கா?
நாங்க சின்னப்புள்ளைல கரூர்ல இருந்தப்பச் சுடுவோம்.
ReplyDeleteதேங்காயில கண்ணக் குத்தி, பொரிகடலைப் பொடி, வெல்லப் பொடி, கொஞ்சம் பொரிகடலை, கடலை....அது இதுன்னு போட்டுச் சுடுவோம். நல்லா ஓடு பத்திக் கருகி டப்பு டப்புன்னு வெடிச்சி வர்ரப்போ உள்ள தேங்கா வெந்திருக்கும். பொதுவாக் கரூரு பக்கத்துலதான் இந்தப் பழக்கம் இருக்குன்னு நெனைக்கிறேன்.
ஒரு சுட்ட தேங்காய் பார்சேல்ல்ல்ல்ல்.... :)
ReplyDeleteகுறும்பன் - //புள்ளையாருக்கு படைக்காமயே தின்னுபுடுவிங்களா? //
ReplyDeleteபுள்ளையாரா? அவருக்கு ஆடி மாசத்துல என்ன வேளை?
மனதின் ஓசை -->// எகத்தாளமா பின்னூட்டமோ பதிவோ போட்டா அடிக்க இந்த மாதிரி எதும் வழி இருக்கா? //
அட, எகத்தாளமா என்ன வேணுமின்னாலும் தமிழ்ல பதியலாங்க. யாரு கேட்கபோறாங்க?
ஜீ-ரா --> //பொதுவாக் கரூரு பக்கத்துலதான் இந்தப் பழக்கம் இருக்குன்னு நெனைக்கிறேன்.//
ReplyDeleteகொங்குமண்டலத்திலதான் தேங்காய் சுடுவாங்கன்னு நினைக்கிறேங்க. வேற எங்கேயும் இல்லைன்னு நினைக்கிறேன்.
இலவசக்கொத்தனார் --> //ஒரு சுட்ட தேங்காய் பார்சேல்ல்ல்ல்ல்.... :) //
ReplyDeleteஉங்களுக்கு பார்சல்ல கிடைக்க ஏற்பாடு பண்ணிரலாம்க்க ஜூலை மாச அட்லாஸ் வாலிபரே. அதுலையும் பின்னூட்டம் போடுவீங்களோ?
இலவசக்கொத்தனார் --> தேங்காயில பின்னாடி ஓட்ட போட்டுதான் நவ தானியங்களை ஊட்டுவோம் .(திணிப்போம்) அதைதான் சுருக்கி பின்னூட்டம்ன்னு சொன்னேங்க. கொதஸ்'னாவே பின்னூட்டம்ன்னுதான் தட்ட வருது,
ReplyDeleteதிருச்செங்கோட்டுக்கு அருகிலுள்ள மணியனூர் என்ற கிராமத்தில் வசித்தபோது நாங்களும் தேங்காய் சுட்டிருக்கிறோம்.
ReplyDeleteகோவிலின் ஒரு புறம் சருகு மற்றும் ஓலைகளைக் குவித்து தீ மூட்டி அனைவருமாகச் சேர்ந்து சுட்டு, வெந்தவுடன் அப்படியே பிள்ளையாருக்கு சிறிதளவு படைத்துவிட்டு உண்போம். நாமக்கல்லில் இருந்தபோதும் சுட்டிருக்கிறோம்.
நம்ம வட்டாரத்துல இருக்கிறவங்களுக்குதான் தேங்காய் சுடுறதைப் பத்தி தெரியுது. மணியனூர்ல நமக்கு நெறைய சொந்த காரங்க இருக்காங்க சிபி.
ReplyDelete