Monday, July 31, 2006

கன்னத்தில முத்தமிட்டால்...

கன்னத்தில முத்தமிட்டால் படத்த சின்னத்திரையில் கண்டு சிறிலங்கவை நினைச்சு மனம் வெதும்பி, பிறகு ஏதாவது எழுத நினைச்சு படத்துல "எப்பமா இந்த போர் முடியும்? இங்கே நிம்மதியா இருப்பாங்க" அப்படின்னு கீர்த்தனா கேள்விக்கு ஒன்னுமே சொல்லாத போற நந்திதா தாஸ் மாதிரி நானும்....

கேள்வி : ஏன் இந்த மக்களால மட்டும் நிம்மதியா இருக்க முடியல?

பதில் : மார்ட்டர்ஸ்.கண்ணி வெடி, பாம் செய்றவங்களுக்கு எங்காவது ஒரு யுத்தம் நீடிப்பதில் ஒரு வியாபார நோக்கு உள்ளது. முன்னேறிய நாடுகள்.. யுத்தத்தை நிறுத்திட்டாங்க. முன்னேறாத நாடுகளை அவுங்க தயாரிக்கிற ஆயுந்தங்களை பரிசோதிக்கும் இடமாக மாத்திட்டாங்க. உலகத்திலேயே சமாதானத்தை விரும்புற நாடு ஜப்பான், ஆனா அவுங்கதான் துப்பாக்கி அதிமாக தயாரிக்கிறாங்க. இதுக்கு என்னதான் முடிவு? எல்லா ஆயுதங்களையும் மூட்ட கட்டி தூக்கி கடல்ல கொண்டு போயி போட்டாதான், இதுக்கு முடிவு.
போன தலை முறை ஆரம்பிச்ச இந்த யுத்தத்தை இந்த தலைமுறையிலாவது ஒரு முடிவுக்கு கொண்டுவருவாங்களா?

கண்ணீருடன்
விவசாயி

32 comments:

  1. பிரச்சனைக்களுக்கு தீர்வு இவ்வளவு எளிமையா இருந்தா எவ்வளவு நல்லாயிருக்கும்...

    ReplyDelete
  2. //மார்ட்டர்ஸ்.கண்ணி வெடி, பாம் செய்றவங்களுக்கு எங்காவது ஒரு யுத்தம் நீடிப்பதில் ஒரு வியாபார நோக்கு உள்ளது. //
    குறிப்பா ஜார்ஜ் புஷ் அவர்களுக்கு அந்த நோக்கு இருக்கிறது. இன்றைய போர்கள் ஆயுத முதலாளிகளுக்காக நடத்தப்படுபவையே..

    கன்னத்தில் முத்தமிட்டால் இலங்கைப் பிரச்சனையை தவறாக சித்தரித்த ஒரு படம்.

    ReplyDelete
  3. ILA,
    Naanu, netru antha padam parthu kalangi ponen. Dhinamum dhinam sethu pozhaikkum antha kodumaikku eppathan theervu kidaikkumo.

    :(

    ReplyDelete
  4. அந்த படம் பார்த்து, சஞ்சிகை படிச்சு தெரிஞ்ச சிறிலங்கதான் தெரியும். சொல்லுங்க முத்துகுமரன் அப்படி எப்படிதான் உணமை இந்த படத்துல இருந்து வேறுபடுது?

    ReplyDelete
  5. உண்மைதான் இளா.. நானும் அந்த படத்தை பார்த்து அதிர்ந்தேன். போர் என்றுமே, வெற்றிக்கு திர்வாகாது.. ஒருவரின் வெற்றி எப்போதுமே மற்றவரின் தொல்வியில் இருந்து கிடைப்பதில்லை.

    நான் சந்தித்த சில தமிழர்கள், இந்த பிரச்சினை குறித்து தவறாக கருத்துடன் இருந்த்னர். அது மிக வருத்தத்தை தந்தது.

    - ஸ்ரீதர்

    ReplyDelete
  6. மக்களே வாருங்கள், என்னதான் சிறிலங்காவில் நடக்கின்றது என விவாதித்துவிடுவோம். மணிரத்னம் திரையில் சொன்னது சரியா? தவறா?

    ReplyDelete
  7. ஈழ விடுதலைப் போராட்டத்தையும் காசாக்கிய அற்(ப)புத மேதை திருவாளர் மணிரத்னம் அவர்கள். இலங்கைப் பிரச்சனையை தன் கதையின் பரபரப்பிற்காக வன்முறைப்பகுதிகளை மட்டும் பயன்படுத்திக் கொண்ட லாவகம், போராளிகளைப் பற்றிய அவருடைய கருத்து திணிப்பு(நந்திதா தாஸ் கதாபாத்திரம்) என சொல்லிக் கொண்டே போகலாம். ஆரம்பித்தால் மிகப்பெரிய பதிவாகி விடும்.

    ReplyDelete
  8. கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படம் என்னைப் பொறுத்தவரை இலங்கைப் பிரச்சினையை மையப்படுத்தினதாக இல்லை. தன்னுடைய தாயை அடைய விரும்புகிற ஒரு குழந்தையின் தேடலே அந்தப்படம். கதையின் போக்கின் ஊடே கதையின் களம் இலங்கையிலும் நிகழ்கிறது. இதில் மணிரத்னத்தை திட்டுவதின் மூலம் எவ்விதமான திருப்தி கிடைக்கிறது என்பது புரியவில்லை.

    ReplyDelete
  9. படம் என்ற வகையில் கன்னத்தில் முத்தமிட்டால் என்னையும் பாதித்தது. சிறப்பான காட்சியமைப்புகளும் நடிப்பும் நம்மை அவர்களுடைய உணர்வுகளை உணர வைத்தப் படம்.

    ReplyDelete
  10. //ஈழ விடுதலைப் போராட்டத்தையும் காசாக்கிய அற்(ப)புத மேதை திருவாளர் மணிரத்னம் அவர்கள்//
    //மணிரத்னத்தை திட்டுவதின் மூலம் எவ்விதமான திருப்தி கிடைக்கிறது என்பது புரியவில்லை//

    எனக்கும் புரியவில்லை.

    ReplyDelete
  11. //முன்னேறாத நாடுகளை அவுங்க தயாரிக்கிற ஆயுந்தங்களை பரிசோதிக்கும் இடமாக மாத்திட்டாங்க.//
    இதுதான் மணிரத்னம் சொன்ன விடயம். இதைப் பற்றி மட்டுமே விவாதம் செய்யவும்..

    ReplyDelete
  12. //மணிரத்னத்தை திட்டுவதின் மூலம் எவ்விதமான திருப்தி கிடைக்கிறது என்பது புரியவில்லை//

    திருப்தி கிடைக்கிறது என்று முடிவு செய்துவிட்டதால் மேற்கொண்டு பேச ஒன்றும் இல்லை.

    //கதையின் போக்கின் ஊடே கதையின் களம் இலங்கையிலும் நிகழ்கிறது.//
    அதைத்தான் சொன்னேன் காசாக்கும் லாவகம் என்று.

    ReplyDelete
  13. //இதுதான் மணிரத்னம் சொன்ன விடயம்.//

    முடிவைச் சொல்லிவிட்டு விவாதம் பண்ணுங்கன்னா எப்படி இளா?

    நன்றி.

    ReplyDelete
  14. கன்னத்தில் முத்தமிட்டால் வர்த்தக ரீதியில் தோல்விப்படம். அந்தப் படத்தின் மையக்கருத்து தாயைத் தேடும் குழந்தை. தாய் ஒரு தீவிரவாதியாக இருந்தால் என்னவாகும் என்பதே கதையின் முடிச்சு. ஆகையால் தீவிரவாதக் களத்தை மேலோட்டமாக காட்டி விட்டு பிரச்சனைக்குள் நுழையவில்லை.

    இலங்கைத் தமிழர் பிரச்சனையை இந்தப் படம் முழுமையாகக் கொண்டு வரவில்லை என்பது உண்மை. ஆனால் தவறாகச் சித்தரித்திருக்கிறதா என்பது கேள்விக்குறி.

    ReplyDelete
  15. இளா,
    அந்த படம் உண்மையிலே மிக அருமையான படம். எல்லா விதத்திலும். ஈழத் தமிழர்கள் பிரச்சனையை பற்றி இங்கு எத்தனை பெயர் படம் எடுத்து உள்ளார்கள். அந்த படம் ஒரு குழந்தை கோணத்தில் இருந்து ஈழத் தமிழர்கள் பிரச்சனை மிக மென்மையாக அணுகி இருப்பார்கள். அதை விட தீவிரமாக எடுத்து இருந்தால் அந்த படத்திற்கு அரசாங்கம் தரப்பில் இருந்து தொல்லைகள் வரலாம் என்ற காரணம் கூட. என்னை கவர்ந்த மணிரத்னம் படங்களில் இந்த படமும் குறிப்பிட்ட சொல்லக்கூடிய படம்.

    விடை கொடு எங்கள் நாடே என்ற ஒரு பாடலே ஈழத் தமிழர்களின் அவலத்தை நம் கண் முன் கொண்டு வரும்.

    மிக அருமையான காட்சியமைப்பு, கீர்த்தனாவின் சுட்டித்தனம்.
    பாடல்களும் அருமை. மொத்ததில் ரசிக்க வைக்கும் படம்.

    ReplyDelete
  16. அழகான படம் நேற்றுத்தான் பார்த்தேன் இளா! :) மனதை தொட்டுவிட்டது !

    ReplyDelete
  17. மணிரத்தினத்தின் நாயகன்,பம்பாய் படங்களுக்கு மும்பை களம்.
    ரோஜாவிற்கு காஷ்மீர் களம். அதுபோல கன்னத்தில் முத்தமிட்டால்
    கதைக்கு ஈழம் களம்.நண்பர்களே, தோழர்களே திரைப்படத்தை படமாக பாருங்கள்.பிரச்சினைக்குரிய கதை என்றால் இந்திய அரசின் தணிக்கைகுழு
    எப்படி அனுமதி அளித்திருக்கும்?.

    என் இனிய அன்பு நண்பர்களே, ஈழத்தமிழர்களுக்காக இதுவரை நாம் என்ன செய்திருக்கிறோம்?.இனி என்ன செய்யப்போகிறோம்?.

    இலங்கையில் பிரச்சினையில்லை என்றால் ஏன் இவ்வளவு தமிழர்கள் மட்டும் பலநாடுகளில் அகதிகளாக
    வாழ்கிறார்கள் ?.எந்த நாட்டிற்காவது சிங்களம் பேசும் மக்கள் அகதிகளாகப் போகிறார்களா ?.

    பிரச்சினையின் வரலாறு பெரியது. பேசித்தீர்க்க எந்த பெரியநாடும் வராது.
    ஏனென்றால் ஆளாளுக்கு ஆதாயம் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.

    ReplyDelete
  18. இலங்களையில் மக்கள் படும் அவலங்களை காட்டியது விடை கோடு எங்கள் நாடே என்ற பாடல். கன்னத்தில் முத்தமிட்டால் இலங்கை தமிழர்களின் பிரச்சினையை துளியோண்டு காட்டிய ஆனால் விளக்காத ஒரு படம். மணிரத்னம் ஏன் இந்த பதிவின் பின்னூட்டங்களில் விமர்சிக்க படுகிறார் என்று தெரியவில்லை. ஒரு வேளை முழுமையாக பிரச்சினைகளுக்குள் புகாதது காரணமாக இருக்குமோ. என்று தான் ஒயுமோ இந்த யுத்தம்?

    ReplyDelete
  19. ஒரு படத்தைப்பற்றி ஆரம்பித்த பதிவு இப்போது யுத்தக்களம் ஆகிவிடும் போல இருக்கிறது..

    சரி யாராவது சொல்லுங்களேன், இந்த போர் வந்ததிற்க்கு காரணம் என்ன?

    - ஸ்ரீதர்

    ReplyDelete
  20. //போர் வந்ததிற்க்கு காரணம் என்ன?//
    கொள்கையா? தனி நாடா? இது புரிய வைக்க வரலாறு தெரிஞ்ச மக்கள்தான் சொல்லனும்.

    ReplyDelete
  21. கண்ணத்தில் முத்தமிட்டால் படம் - ஈழப்பிரச்சினையை பற்றி எதுவும் சொல்வதற்க்காக எடுக்கப்பட்டது அல்ல...

    முற்றிலும் வியாபார நோக்கில் எடுக்கப்பட்டது...

    மனிரத்னம் ஒரு நல்ல வியாபாரி...காஷ்மீர் பிரச்சினையை ரோஜாவில் விற்றார்..மும்பை பிரச்சினையை - நாயகனிலும், பம்பாயிலும் விற்றார்...

    இலங்கை தமிழர் பிரச்சினையை விற்க்க முயற்ச்சி செய்து தோற்றார்..காரணம் - ஊசிய பொருட்களை போட்டார் சமையலில்...தரமான பொருட்களை போட தவறினார்...

    உதிரிப்பூக்கள் மகேந்திரன் சமீபத்தில் இலங்கை சென்றபோது - இந்த திரைப்படத்தை பற்றிய வருத்தத்தை அவரிடம் தெரிவித்தவர்..

    புலித்தலைவர் பிரபாகரன்...

    ReplyDelete
  22. //உதிரிப்பூக்கள் மகேந்திரன் சமீபத்தில் இலங்கை சென்றபோது - இந்த திரைப்படத்தை பற்றிய வருத்தத்தை அவரிடம் தெரிவித்தவர்..
    புலித்தலைவர் பிரபாகரன்... //

    அப்படியா?

    ReplyDelete
  23. ஆமாம்...ஆனந்த விகடனில் படித்தேன்

    ReplyDelete
  24. //ஆனந்த விகடனில் படித்தேன்//
    அது குமுதம் ரவி.... :-)

    ReplyDelete
  25. என் இனிய அன்பு நண்பர்களே, ஈழத்தமிழர்களுக்காக இதுவரை நாம் என்ன செய்திருக்கிறோம்?.இனி என்ன செய்யப்போகிறோம்?.

    ReplyDelete
  26. இலங்கையில் பிரச்சினையில்லை என்றால் ஏன் இவ்வளவு தமிழர்கள் மட்டும் பலநாடுகளில் அகதிகளாக
    வாழ்கிறார்கள் ?.எந்த நாட்டிற்காவது சிங்களம் பேசும் மக்கள் அகதிகளாகப் போகிறார்களா ?.

    ReplyDelete
  27. பிரச்சினையின் வரலாறு பெரியது. பேசித்தீர்க்க எந்த பெரியநாடும் வராது.
    ஏனென்றால் ஆளாளுக்கு ஆதாயம் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.

    ReplyDelete
  28. //பிரச்சினையின் வரலாறு பெரியது. பேசித்தீர்க்க எந்த பெரியநாடும் வராது//
    //இலங்கைத் தமிழர் பிரச்சனையை இந்தப் படம் முழுமையாகக் கொண்டு வரவில்லை என்பது உண்மை.//
    முழு மனதோடு ஏற்றுக்கொள்ளப்படவேண்டிய கருத்துகள்

    ReplyDelete
  29. //அது குமுதம் //
    செய்திக்கு நன்றிங்க முத்துகுமரன்.

    ReplyDelete
  30. //ஒரு வியாபார நோக்கு உள்ளது. முன்னேறிய நாடுகள்.. யுத்தத்தை நிறுத்திட்டாங்க. முன்னேறாத நாடுகளை அவுங்க தயாரிக்கிற ஆயுந்தங்களை பரிசோதிக்கும் இடமாக மாத்திட்டாங்க//

    ரொம்ப சரியா சொன்னீங்க...இவங்க சம்பாதிப்பதற்கு அப்பாவி மக்களை கொல்லும் மனப்போக்கு எப்ப தான் மாறுமோ...

    ReplyDelete
  31. இந்த பதிவை தொடர்ந்து ஒரு பதிவை எழுதியிருக்கிறேன்..

    http://iyarkai-kathalan.blogspot.com/

    உங்கள் கருத்தை சொல்லவும்..

    ReplyDelete
  32. 1. ஈழ மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் இடையே உள்ள விரோத மனப்பான்மைக்கு பல நூற்றாண்டு சரித்திரப் பிண்ணனி உள்ளது.

    2. இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்த காலகட்டதில் சிங்கள அரசியல்வாதிகள் தனிப்பட்ட அரசியல் ஆதாயங்களுக்காக எடுத்த முடிவுகள் இவ்வேறுபாட்டை ஊதிப் பெரிதாக்கி விரோதத்தை வளர்த்தன.

    3. பிறகு பெரும்பாண்மை சிங்கள கட்சிகள் கொண்டு வந்த அரசியல் சாசன மாற்றங்கள் தமிழர்களின் மொழி, கலாச்சார, வாழ்வுரிமையை ஒடுக்கின.

    4. 60களிலும், 70களிலும் நடைபெற்ற அறவழி போராட்டங்கள் வெற்றி பெறாததாலே, ஈழத்தமிழ் சமுதாயம் ஆயுதபோராட்டத்தை நோக்கி 80களில் நகர்ந்து, இன்று வரை தொடர்கிறது.

    5. ஈழப்போராட்டம் - 101 crash course கொடுத்துக் கொடுத்து ஓய்ந்துவிட்டார்கள்போல.. அதுதான் ஈழமக்கள் இம்மாதிரி கருத்தாடல்களில் பங்கு பெற விரும்புவதில்லை என நினைக்கிறேன்.

    6. பாரதத்தின் இன்றைய சந்தைப்பொருளாதாரத்தின் பலன்களை அனுபவிப்பதில் மும்முரமாக உள்ள தமிழக இளைய சமுதாயம், ஈழப் பிரச்சினை பற்றி பெரிதாக அறிந்து கொள்ள வாய்ப்பும், ஆர்வமும் கொண்டிருப்பதாகத் தெரியவில்லை.

    7. ஈழம் விடுதலை பெற்றால் இந்தியாவின் கட்டுப்பாட்டில் வந்துவிடும் என்று சிங்களவர்கள் அச்சம் கொள்கிறார்களோ?

    8. அதேபோல் தமிழகம் இந்தியாவிலிருந்து பிரிந்து சுதந்திர ஈழத்துடன் இணைந்துவிடும் என்ற அச்சம்/சந்தேகமுமே டெல்லி சவுத் ப்ளாக்கில் இந்தியாவின் ஈழம் தொடர்பான கொள்கையைத் தீர்மானிக்கிறதோ?

    ReplyDelete

தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி

  தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை  -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை  காசி  எழுதியது தமிழோவியத்துக்காக  பாஸ்டன் பாலாஜி  க...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நாகேஷ் (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) வாலி (1) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)