
மானூத்து மந்தையில மாங்குட்டி பெத்த மயிலே
பொட்டபுள்ள பொறந்ததுன்னு பொலிகாட்டில் கூவும் குயிலே
தாய்மாமன் சீர் சுமந்து வாராண்டி - அவன்
தங்க கொலுசு கொண்டு தாராண்டி
சீரு சுமந்த சாதி சனமே ஆறு கடந்தா ஊரு வருமே
நாட்டுக்கோழி அடிச்சு நாக்குசொட்ட சமச்சி
நல்லெண்ண ஊத்திக் குடு ஆத்தா
வெல்லக் கொடல் வலிச்சா வெல்லப்பூண்டு உரிச்சி
வெல்ல கொஞ்சம் போட்டுக் குடு ஆத்தா
பச்ச ஒடம்புக்காரி பாத்து நடக்கச்சொல்லுங்க
பிள்ளைக்கு தாய்ப்பாலத் தூக்கிக் குடுக்கச்சொல்லு
மச்சான திண்ணையில போத்திப் படுக்கச்சொல்லு
ஆட்டுப்பால் குடிச்சா அறிவழிஞ்சி போகுமுன்னு
எருமப்பால் குடிச்சா ஏப்பம் வந்து சேருமுன்னு
காராம்பசு ஓட்டி வாராண்டி தாய் மாமன்
வெள்ளிச்சங்கு செஞ்சா வெளக்கி வெக்க வேணுமுன்னு
தஙத்தில் சங்கு செஞ்சி தாராண்டி தாய் மாமன்
பச்ச ஒடம்புக்காரி பாத்து நடக்கச்சொல்லுங்க
ஈ எறும்பு அண்டாம எட்டி இருக்கச்சொல்லு
மச்சான ஈரத்துணி கட்டி இருக்கச்சொல்லு
மானூத்து மந்தையில மாங்குட்டி பெத்த மயிலே
பொட்டபுள்ள பொறந்ததுன்னு பொலிகாட்டில் கூவும் குயிலே
கச்சேரி மச்சானுக்கு வாழ்த்துக்கள்
தேவ் அண்ணாச்சிக்கு வாழ்த்து. குட்டிப் பொண்ணுக்கும்..
ReplyDeleteவாழ்த்துகள் என்னுடைய சார்பில்
ReplyDeleteநானும் இந்தப் பாடைத்தான் போடணும்னு நினைச்சேன். சங்கத்து சார்ப்பா போட்டதால இந்த பாட்டை போடலை!
ReplyDeleteநம்ம சார்பாதான் நீங்க போட்டுட்டீங்களே!
தேவும் அவர்தம் குடும்பத்தாருக்கும் லிட்டில் ஏஞ்சலுக்கும் என்னுடைய வாழ்த்துகள்.
ReplyDeleteபாட்டு தேர்வு கலக்கலா இருக்கு இளா.
ஒரு யூகம் பண்ணி ஒரு மாசத்துக்கு முன்னாடியே இந்த பதிவ சேமிச்சு வெச்சு இருந்தேன். அது இன்னைக்குதான் உபயோகப் பட்டது.
ReplyDeleteபையனா இருந்தா என்ன பாட்டு போட்டிருப்பீங்க?
ReplyDeleteஒரு ஆர்வம் தான்.
:)
வாழ்த்துக்கள்...
ReplyDeleteதேவ்க்கும் அவர் குடும்பத்தினருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
ReplyDeleteரெண்டாவது வரியை மட்டும் கொஞ்சம் மாத்தியிருப்போம் மத்ததெல்லாம் அதேதான்
ReplyDelete//தேவ் அண்ணாச்சிக்கு வாழ்த்து//
ReplyDeleteகை தேவுக்கு அண்ணாச்சி ப்ரமோசனும் கெடச்சிடுச்சுப்பா. அவன் வந்ததும் ரெண்டு பார்ட்டியா வாங்கிரணும்.
:)
தேவ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteதேவண்ணா நெம்ப சந்தோசம்ணா! இந்த புடிங்க என்னோட வாழ்த்துக்களை !!!
ReplyDeleteபாசமுள்ள மாப்பிள்ளையின் வாழ்த்துக்களுக்கு கச்சேரி மச்சானின் பதில் வணக்கத்தையும் நெஞ்சார்ந்த நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
ReplyDeleteவாழ்த்திய அனைத்து இனிய நெஞ்சங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ReplyDelete