Saturday, September 24, 2005

(ஹ)அரிக்கேன்

(ஹ)அரிக்கேன்.

(ஹ)அரிக்கேன்,நமக்கு தெரிஞ்சதெல்லாம் ஊர்ல, கரண்டு இல்லாத வீட்ல, ராவுக்கு (ராத்திரிக்கு) வெளிச்சத்துக்காக ஏத்தி வைப்பாங்க. அதுக்கு பட்டணத்துல சிம்னின்னும், எங்க ஊர்ல ராந்தல்ன்னும் பேரு. 2 வாரமா அரிக்கேன்'ங்ர வார்த்தை அடிக்கடி தொலைகாட்சியில், செய்தித்தாள்களிலும் தலைப்புச்செய்தியாய் வருது. அட என்னடா நம்ம ஊர் மேட்டரு எல்லாம் அமெரிக்காவுல அடிபடுதே என்னான்னு பார்க்கலாம்னு கொஞ்சம் விளக்கம் தெரிஞ்சவங்ககிட்ட கேட்டாதான் தெரியுது, அது அமெரிக்காவுல வர்ற புயலோட பெயராம். கத்த்ரீனா, ரீட்டான்னெல்லாம் பேர் வெச்சுருக்காங்க.

அரிக்கேன் அப்படின்னா துர்தேவதைன்னு அர்த்தமாம். இதனால அதிகம் பாதிக்கபடறது கடலோரத்துல இருக்கிற மட்டும் இல்லை, மத்திய அமெரிக்காவும் சூறாவளின்னால பாதிக்கபடுது. ஒவ்வொரு வருஷமும் உயிகளின் இழப்பு அதிகமாயிட்டே வருது. இதுக்கு என்னதான் முடிவு? கடவுள்தான் சொல்லனும்.

அதிகப்படியான தமிழ் மக்களை கொண்ட நகரம் ஹுஸ்டன். முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக ஹூஸ்டன் நகர மக்களை வெளியேர அமெரிக்க அரசு சொல்லிருக்காங்க. உயிருக்கு பயந்து மக்கள் எல்லோரும் ஒரே நேரத்துல மூட்டை முடிச்சுகளுடன் வெளியேர, வரலாறு காணாத போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு இருக்கு. இன பாகுபாட்டோடுதான் சேவை செய்யறாருன்னு கத்ரீனாவால கெட்ட பேர் வந்துருச்சு, ரீட்டாவ எப்படி சமாளிக்க போறாரோ?

ஆமா ஹரிக்கேன்னுக்கு துர்தேவதைன்னா அர்த்தம்ன்னா, நம்ம ஊர்ல ஏன் விளக்குக்கு இப்படி ஒரு பேர்? இருட்டை துரத்திறதனால இந்த பேர்ன்னா, இருட்டுக்கு துர்தேவதைன்னா பேர்? தெரிஞ்சா சொல்லுங்களேன்.

5 comments:

  1. ஹரிக்கென் புயலிலும் அணையாமல் எரியும் விளக்கு என்பதால் ஹரிக்கேன் லாம்ப்

    ReplyDelete
  2. "எங்க ஊர்ல ராந்தல்ன்னும்....."

    என்ன ராந்தலா?

    எங்கள் ஊரில் "லாந்தர்" என்றுதான் சொல்லுவார்கள்- இது ஒல்லாந்து அல்லது போர்த்துக்கீசு சொல் என்று நினைக்கிறேன்

    ReplyDelete
  3. சுனாமி காத்ரீனா ரீட்டா
    இயற்கையின் பாதிப்பால் வாழ்விழந்தோர்க்கும்
    வாழ்விழந்தோர்க்கு ‘தேன்துளி’ போல்
    தோள்கொடுக்கும் தொண்டர்பாதங்களுக்கும்
    சமர்ப்பணமாய் சிறு கவிதை வந்து பாருங்களேன்
    என் வலைப்பக்கம்...

    ReplyDelete
  4. Till 12 Statndard (+2), Hurrican-லாந்தர் (not Hurricanne) was my night eyes. Everything changed including my old 'Kudisai' house.

    Now my son is asking my history and amazing but I am not. I am amazing about my father & Mother who built the base for me. I just put walls and ceiling.....I hope my son can built more floors

    My fathers aim ...

    Today is better than yesterday and tomorrow is better than today.

    Thanks for chance to reveal Malarum Ninaivugal

    Cheran from USA

    ReplyDelete
  5. ஜெயச்சந்திரன் --> :))


    //எங்கள் ஊரில் "லாந்தர்" என்றுதான் சொல்லுவார்கள்- இது ஒல்லாந்து அல்லது போர்த்துக்கீசு சொல் என்று நினைக்கிறேன்//
    @குமரேஸ்
    Lantern என்ற ஆங்கில வார்த்தையின் மூலமாகவும் இருக்கலாமே.

    ReplyDelete

தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி

  தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை  -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை  காசி  எழுதியது தமிழோவியத்துக்காக  பாஸ்டன் பாலாஜி  க...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நாகேஷ் (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) வாலி (1) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)