
நம்ம ஊர்ல இந்த வருஷம் மழை கொட்டோ கொட்டுன்னு கொட்டுச்சி, விவசாயம் பண்றவங்களுக்கு ஏதோ பரவாயில்லை. ஆனா பாருங்க, எங்க ஊர்ல இப்போ கூலி வேலைக்குதான் ஆளுங்க கிடைக்கவே மாட்டேங்றாங்க. காரணம் என்னன்னு யோசிச்சு, விசாரிச்சு பார்த்தாதான் உண்மை தெரியவருது. முன்னாடி தோட்டத்துல வேலை பார்த்த அத்தனை பேரும் Factory இல்லாங்காட்டி கடைல வேலை பார்க்கிறாங்க.
காரணம்:
1. தோட்டத்துல வேலை பார்க்கிறதை கெளரவ கொறச்சலா, அடிமைத்தனமா நினைக்கிறாங்க.
2. பணம் கொஞ்சம் கூடுதலா கிடைக்குது.
3. வாரம் ஒரு நாள் விடுமுறை.
4. வேர்வை சிந்தி உழைக்க தயாராக இல்லை.

ஆனா பாருங்க போன வாரம் கொஞ்சம் கர்நாடகா விவசாய நிலங்களை சுத்தி பார்க்க ஒரு வாய்ப்பு கெடைச்சுது. அங்கே, வேலை ஆள் சுலபமா கிடைக்கிறாங்க. வளமையா இருக்காங்க. இந்த புகைபடங்களை பாருங்க புரியும்.

இதெல்லாம் ஒரு புலம்பல்தாங்க. இன்னும் நிறையா இருக்குங்க.
ஊருக்குப்போய் வாய்க்கா வரப்பெல்லா
ReplyDeleteசுத்திட்டு வந்தமாதிரி இருக்குங்கோ!
அருமையான புகைப்படங்கள்!!!
ReplyDeleteஉங்களுக்கு சிரமம் இல்லையென்றால் ஒரிஜினல் படங்களை எனக்குத் தர முடியுமா? கணினியில் போட்டு வைக்கும் உத்தேசம்.
இப்போதே நன்றி சொல்லிக்கொள்கிறேன்.
mathygrps at gmail dot com.
மிக்க நன்றி இளா
-மதி
நல்ல பதிவு இளா. படிக்கக்கொடுத்தமைக்கு நன்றி..
ReplyDelete