ஞாயித்துக்கிழமை கிரிக்கெட் விளையாடபோனாக்கூட கட்டோடதான் போவோமுங்க. கிரிக்கெட் முடிஞ்சா சீட்டுல களம் இறங்கிருவோம். கல்யாணம்னா மாப்பிள்ளைப்பையன் எங்களுக்கு ஒண்ணும் பெரிசா செய்யவேண்டியதில்லை. சீட்டுதான் மொதல்ல, அப்புறம்தான் மீதியெல்லாம். சீட்டு விளையாட இடம் போட்டுத்தருவது, கட்டு ஏற்பாடு எல்லாம் கல்யாணப்பயனோட வேலைங்க. இல்லைன்னா கல்யாணத்துக்கு வரவேமாட்டோம்னு நேராவே சொல்லிருவோம். நாங்க இல்லாம தாலி கட்டிருவானா மாப்பிள்ளை? மண்டபத்தையே இரண்டு பண்ணிரமாட்டோம்? அதே பொண்ணுக்கு கல்யாணம்னாக்கா பொண்ணுக்கு தம்பியோ, அண்ணனோ இந்த ஏற்பட்டெல்லாம் செய்வாங்க.

எங்க ஊர்ல, ராத்திரி கல்யாணத்துக்கு மாப்பிள்ள வீட்லையும், பொண்ணுவீட்லையும் மதியமே மண்டபத்துக்கு போய்ருவாங்க, அப்பவே நம்ம பட்டாளமும் கூடவே கெளம்பிரும். போன உடனே சாப்டுருவோம், கை கழுவும்போதே குசு குசுன்னு பேச்சு ஆரம்பிக்கும். பேச்சு முடியறதுக்குள்ள கட்டு கைக்கு வந்துரனும், இல்லாட்டி பொண்ணுகிட்ட ஏதாவது சொல்லி போட்டு கொடுத்துருவோம்னு மிரட்டறதும் உண்டு. கைக்கு கட்டு வந்தா மறு நிமிஷம் எஸ்கேப்தான். எதாவது நல்ல ரூமா தேடி செட்டில் ஆகிருவோம். விளையாட தெரியாத பசங்கதான் அன்னிக்கு பூரா ரூம்பாய்ஸ். டீ, காபியெல்லாம் சமையல் கட்டிலிருந்து நேரா கொண்டுவந்டுவாங்க. அக்கம் பக்கம் ஊர்ல எல்லாம் இதே கதைதான்.
ரம்மி, 3 சீட்டுதான் விளையாடுவோம். அதுவும் 2, 3 குரூப்பா பிரிஞ்சு விளையாடுவோம். சின்ன பசங்க எல்லாம் ஒரு கேங், பெரியவங்க எல்லாம் ஒரு கேங். ராத்திரி சாப்பாடு ஆச்சுன்னா, குரூப் திரும்பியும் சேர்ந்துரும். அப்புறம் தான் ஆட்டம் கலை கட்ட ஆரம்பிக்கும்.
ரம்மி விளையாடுற இடம் எப்பவுமே அமைதியாவே இருக்கும், கூட்டமும் கம்மியா இருக்கும்(நம்ம இடமும் இதுதான்). நம்மதான் ஆரம்பகாலத்திலிருந்தே பாயின்ட் எழுதற ஆள். 3 சீட்டு நடக்கிற இடம் சந்தகடை மாதிரி சத்தமாவே இருக்கும். சண்டையெல்லாம் நடக்காது. நடந்ததுமில்லை, ஏன்னா விளையாடுற எல்லாமே மாமன், மச்சானா தான் இருப்பாங்க. முன்ன பின்ன ஊர்ல மூஞ்சில முழிக்கனுமில்ல?
ஒரு 3 மணி இல்லைன்னா 4 மணிக்கெல்லாம் பாதி பேர் கெளம்பிருவாங்க, பணம் எல்லாம் காலியாகியிருக்கும். அவுங்க எல்லாம் வீட்டு போய்ட்டு காலையில முஹூர்த்தத்துக்கு டீசன்ட்டா வந்துருவாங்க. மீதியெல்லாரும் செம வேகத்துல இருப்பாங்க. மாபிள்ள தாலி கட்டுறது கூட தெரியாம விளையாண்டதும் உண்டு. மொய் வைக்க கொண்டு போன பணமெல்லாம் சீட்டுல விட்டுட்டு மாபிள்ளைக்கிட்டையே பஸ்ஸுக்கு காசு வாங்கிட்டு வரதெல்லாம் ரொம்ப சகஜம்.
gain, loss எல்லாம் அடுத்த நாள்ல மறந்துருவோம். மறுபடி அடுத்த கல்யாணம் வரைக்கும் காத்திருப்போம். எல்லாம் ஒரு நாள் கூத்துதான்.
காலேஜ்க்கு சேர்ந்த புதுசுல நாம தான் ராஜா. இருந்த வித்தையெல்லாம் காட்டி சீனியர்களை எல்லாம் சீக்கிரம் நம்ம சைடுல இழுத்துட்டேன். பெரும்பாலும் சனி ஞாயிறு ஊருக்கு போயிருவேன், இல்லாட்டி வெள்ளிக்கிழமை ராத்திரியே ஆட்டம் ஆரம்பிச்சிரும். இரண்டு நாளும் சீட்டும் கையுமாத்தான் இருப்போம். காலேஜ் முடிஞ்ச சமயம் ஒரு தடவை 3 நாள் தொடர்ந்து விளையாடி இருக்கோம். குளியலாவது, ஒண்ணாவது விளையாட்டுதான். இன்னமும் நம்ம காலேஜ் கூட்டாளிங்க வந்தால் கட்டுதான் மொதல்ல.
அதென்ன 3*(13*4)+6=0 கேக்கறீங்களா? யாரவது சொன்னா ஒரு சீட்டு கட்டு parcella அனுப்பி வைக்கபடும்.
இப்போ திடீர்ன்னு இந்த சீட்டு பதிவுக்கு என்ன காரணம்னு எனக்கு தெரியும்... ;-)
ReplyDeleteஅதென்ன 3*(13*4)+6=0?
ReplyDelete3 decks + Jokers == Makes your balance ZERO
சரியான விட இன்னும் யாரும் சொல்லல போல இருக்கே
ReplyDeleteகேள்விக்கு சரியான விடை இதுதாங்க
ReplyDeleteவிடிய விடிய ஆடினாலும் கடைசில பார்த்தா கையில லாபம் ஒண்ணும் இருக்காது
3 கட்டு * (13சீட்டு* 4 கலர்)+6 ஜோக்கர்= நம்ம லாபம்
நஷ்டம் ஆக விட்டுருவோமா, நாம யாரு?
என்னாங்க இளா
ReplyDeleteவிடிய விடிய சீட்டுதான் ஆடுவீங்களா !!! நீங்களே ஆட மாட்டீங்களா ;)) ம்ம்ம் கல்யாணம்னாலே ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு மாதிரி டெக்னிக் ராத்திரி முழிக்கறதுக்கு!
எனக்குக் கூட எங்க அப்பாதான் ரம்மி விளையாடச் சொல்லிக் கொடுத்தாங்க. ஆண்பிள்ளைகள் கூட்டத்தில் இன்றுவரை உட்கார்ந்து விளையாடும் ஒரே பெண் நாந்தான். எங்க அண்ணனெல்லாம் நிரையதரம் என்கிட்டே தோத்திருக்காங்க!
ReplyDeleteஇள,
ReplyDeleteரம்மியைப் பொறுத்தவரை நான் மிக நன்றாக விளையாடுவேன். இந்த ஆட்டத்தின் சூட்சுமமே எதிராளி இறக்கும் சீட்டை வைத்தே அவர் கைகளில் என்ன சீட்டு இருக்கிறது என்பதனைக் கணிப்பதாகும்.
வாங்க ஒரு கேம் போடலாம்!
ReplyDeleteஇது நான் பண்ண ஆராய்ச்சி!
ReplyDelete