
நேத்து 10 மணிக்கு இனி அச்சமில்லை அச்சமில்லை(புது Version, அதான் அச்சமில்லை அச்சமில்லை- இனி அச்சமில்லை அச்சமில்லை யா மாறியிருக்கு).எய்ட்ஸ்னால பாதிக்கப்பட்டவங்களை பேட்டி எடுத்தாங்க லஷ்மியம்மா. ஏதோ எய்ட்ஸப்பத்தி மொக்க போட போறாங்கன்னு நினைச்சேன். மேட்டரே வேற.
கல்யாணம் ஆகி புருஷன் மூலமா எய்ட்ஸ் பரவின இரண்டு பெண்களின் பேட்டி அது. அவர்களின் கண்களில் அச்சமில்லை, கூச்சமில்லை. அவர்களது கடமையை நிறைவேற்றுவதில் கண்ணாக இருந்தனர். கடமையை செய்வோம், வேறு எதுவுமில்லை என்பது மாதிரி இருந்தது அது. வாழும் காலம் குறைக்கபட்டது தெரிந்தும், அவைகளின் தெளிவு எனக்குள் ஏதோ உணர்த்தியது. "நாங்க வாழ்றவரக்கும் உழைப்போம் பிள்ளைகளை நல்ல நிலைமைக்கு கொண்டுவருவோம்" அப்படின்னாங்க.
நம்ம மனுஷபயலுக மட்டும் ஏன் இப்படி பொய் புரட்டோட திரியனும், நாமும் போறவங்கதானே, என்ன கொஞ்சம் லேட் ஆகும். ஒரு வேளை எல்லார்க்கும் மேல போற தேதி தெரிஞ்சா ஒழுக்கமாயிருப்பானுங்களோ?
இங்கு இதைப் படித்ததும், எங்கோ படித்த ஒன்று ஞாபகம் வந்தது.
ReplyDelete"ஊர் உடைமை
ஏதும் இல்லாமல்
கூட்டமாய் திரிந்து
தங்கும் இடங்களில்
கூடாரம் போட்டு
சந்தோஷமாய் திரியும்
மனிதர்களைப் பார்த்தால்
சிரிப்புதான் வருகிறது
வாய்க்கால் தகராற்றில்
வாழமறந்த மனிதர்களை நினைத்து"
-ஞானசேகர்
i have tagged u, visit my blog for details
ReplyDeleteநிறைய அப்பாவிப் பெண்கள் கணவருக்கு எய்ட்ஸ் இருப்பதையே நம்புவதில்லை. தனக்கும் பரவி இருப்பது தெரிந்தாலும்கூட சாமிக்கு நேர்ந்துகிட்டால் ரெண்டுபேருக்கும் சரியாகிப் போயிடும்னு நம்பிக்கை வேறு. அறியாமையின் அதீத வெளிப்பாடா நம்பிக்கையின் ஆழமான வேர்களா? ஒன்றும் புரியவில்லை!
ReplyDeleteவேர்ட் வெரிபிகேஷன் கண்டிப்பாக வேண்டுமா?