Friday, February 24, 2012

கிராமத்தானின் ஒரு நாள்

கிராமத்துல ஒரு அட்டவணையைப் போட்டு வாழ்றதில்லைன்னு ஆராச்சும் சொன்னாங்கன்னா நம்பாதீங்க. எங்கூர்ல சத்தியமா ஒரு அட்டவணையாட்டம்தாங்க இருக்கும் வாழ்க்கை. எம்பட ஐயன் படிச்சு பட்டணத்துக்குப் போயி வேற அட்டவணையை போட்டு வாழ்ந்தாலும், எம்பட தாத்தா/பாட்டி/அப்பிச்சி/அம்மாயி வாழ்க்கை வேற மாதரதாங்க இருந்துச்சு. இப்ப நானிருக்குற நிலைமைக்கும் அவிங்களுக்கும் சம்பந்தமேயில்லீங்க. பேன் போட்டா கரண்டு சாஸ்தியாயிரும்னு போன வருசம் சொன்னாருங்க அப்பிச்சு. ஆனா, அதுக்கு மின்னாடியெல்லாம் ஃபேனே அங்கே இல்லீங். நானெல்லாம் வளர்ந்த காலத்துல ஃபேன், டிவி, ரேடியோ எல்லாம் இல்லீங். சரி, நாம விசயத்துக்கு வருவோமுங்.


காலை, வெள்ளைனைய எழுந்திருச்சி(4:45-5:00) மாடு,எருமை பாலை பீய்ச்சிருவாங்க. கருக்கல்ல இருக்கறப்பவே சொஸைட்டிக்கு போயி பாலை ஊத்தியாவனும். நம்பூட்டும் சொஸைட்டிக்கும் ஒரு ஒன்ற மைல் இருக்கும்னு நினைக்கிறேன். பால் எடுத்துட்டுப் போவ பால் லாரி வரதுக்கு முன்னாடியே போயாவனும்.

சொஸைட்டியில் ரீடிங் பார்த்து புஸ்தவுத்துவத்துல குறிச்சிட்டு கிளம்புனா விடியறாப்ல மசமசன்னு இருக்கும்போதே வீட்டு வந்துரனும். அப்புறம் பாட்டி வெக்கிற காப்பிய குடிச்சிட்டு கிளம்பிரோனும். வருசையா தேங்காய் மரத்துல இருந்து உழுந்த தேங்காயெல்லாம் பொறுக்கி ஒன்னா இரு கூட்டானா சேர்த்துட்டு அப்படியே “2” போயிட்டு வந்துரனும். வரும்போதே பல்குச்சியில பல்லு விளக்கிட்டே திரும்ப வந்து, சாப்பிட தயாராயிரோனும். இந்த நேரத்துல பாட்டி கட்டுத்தாரைய கூட்டியிருக்கும், தயிர கடைஞ்சு மோராக்கியிருக்கும். ஒரு பெரிய தேங்கா அளவுக்கு வெண்ணை எடுத்து உரில போட்டும் வெச்சிருக்கும். வந்தவுடனே பழைய சோத்துக்கு மோரும் ஊத்தி குடுச்சிபுட்டா மணி 8 ஆயிருக்கும். காட்டுல வேல இருந்தா அப்படி பார்க்க வேண்டியதுதான். என்னவேலைன்னு கேட்குறீங்களா? தண்ணி கட்டுறது, பார் புடிக்கிறது, செடிக்கு மருந்து வெக்கிறது, கரும்புக்கு சோவை எடுக்கிறது, களை புடுங்குறது, பருத்தி புடுங்குறது, வயலடிக்கிறது, செடி வெட்டியாந்து உரம்போடுறது இப்படி மொறைக்கு ஒவ்வொரு வேலை இருக்கும்.


இதெல்லாம் காலை நேரத்துல மத்தியானம் சோறுங்கிறது 12-12:30க்குள்ள முடிஞ்சிரும். பெரும்பாலும் நேத்து வெச்ச குளம்புதான் சோத்தோட திங்கனும். மோர் ஊத்தி கரைச்சி குடிச்சிபுட்டா கண்ணை சொக்கிரும்.தென்ன மரமோ, புங்க மரத்தடியிலோ, இல்ல வேப்ப மரமோ ஒவ்வொரு ஊட்டுக்கு மின்னாடியும் இருக்கும், அப்படியே தூங்கிர வேண்டியதுதான். 2 மணிக்காட்டம் எந்திருச்சு ஆட்டையும், மாட்டையும் கரட்டுக்கு ஓட்டிக்கிட்டுப் போனா சாயங்காலம் ஆகிரும். 4-4:30ரக்கு ஊட்டு திரும்ப வந்து ஆட்டை எல்லாம் பட்டியில அடைச்சிபுடனும். மறுபடியும் பால் பீச்சினதும் காப்பி வெச்சுரும் பாட்டி. குடிச்சிட்டு பாலை எடுத்துட்டு சொஸைட்டிக்குப் போயிருவோம். அங்கே கதையடிக்கிறது, பொரணி பேசறதெல்லாம் அப்பத்தான் நடக்கும்.
[ஒலக்கச்சின்னானூர்- கோட்டான்கல் கரடு]

இந்த நேரத்துல பாட்டி சோறு பண்ணி வெச்சிருக்கும். சொஸைட்டியில இருந்து திரும்ப வந்ததும் அண்டாவுல தண்ணியூத்தி சூடு பண்ண வேண்டியதுதான். அதுக்குன்னே தேங்காய் மட்டை உரிச்சி அடுக்கி வெச்சிருப்போம். தேங்காய் உரிக்கிறதைப் பத்தி இன்னொருக்கா சொல்றேங்க. குளிச்சிட்டு வந்து சாப்பிட்டு தூங்கிர வேண்டியதுதான்.
[ஒலக்கச்சின்னானூர்- அப்பச்சி வீட்டுல இருக்கும் குளியலறை]

சனிக்கிழமைன்னக்கே பால் சொஸைட்டியில அந்த வாரத்துக்குண்டான பால் காசு வந்துரும். சனியன்னிக்கி கொங்கணாபுரம் சந்தை, ஆடு விக்க வாங்க வேலை இருந்தாப் போவலாம், காய் போட போவோம். அதுக்கு வெள்ளிக்கிழமையன்னிக்கே காயேல்லாம் பொறிச்சு சாக்குப்பையில கட்டி வெச்சிருவொம். மொதல்ல சைக்கிள்லதா போயிட்டு இருந்தோம். இப்போ டிவிஎஸ் 50 வந்ததிலிருந்து 4-5 மூட்டை அடிக்கி எடுத்துட்டு போயிரலாம். கண்டிப்பா தனியா போவ மாட்டோம், பங்காளிங்க எல்லாம் ஒன்னு கூடிதான் போவோம். அப்பத்தான் புரோக்கரு ஏமாத்தாம காசு தருவான்.

அதுவுமில்லா நாங்க பங்காளிங்க அல்லாரும் ஒன்னாப் போனாவே அவனுக்கு 407 அளவுக்கு வந்துரும்ல. அவனுக்கும் ஒரே வேளையாப் போயிரும். சனியன்னிக்கு கொங்கணாபுரம் போவற வேலையில்லைன்னா ஞாயித்துக்கிழமை சங்கீரி (சங்ககிரி) போயிருவோம். அன்னிக்குத்தான் சங்ககிரியில் சந்தை. அன்னிக்குத்தான் பலசரக்கு சாமான் வாங்குறதெல்லாம். கோழிபுடிக்கிறது எல்லான் ஞாயித்துக்கிழமைதான்.

அப்புறம் சினிமாவுல காட்டுறாப்ல பஞ்சாயத்தையெல்லாம் என் வாழ்க்கையிலேயே பார்த்தது இல்லீங். எங்க ஐயனும் பார்த்தது இல்லியாம். இட்லி தோசை எல்லாம் தீவாளுக்கும், ஆடி அமாவாசைக்கும்தான் கிடைக்கும் இல்லாட்டினா சந்தைக்குப் போறப்ப சாப்புட்டுவந்தாதான் ஆச்சு. சனிக்கிழமை சாயங்காலம் ஆனா பஜ்ஜியோ, போண்டாவோ, கச்சாயமோ, தேங்கா வடையோ பாட்டி சுடும். ஒரு ரவுண்டு கட்டிட்டா ரவைக்கு சாப்புடவே தோணாதுங்.

இந்த வாழ்க்கை முறை, 1990 களில் என் பள்ளிப் பருவத்தை அடிப்படையா வெச்சி எழுதுனதுங்க. 2000கள்ல டிவி வந்துச்சு, நாடகம், போன் எல்லாம் வந்துருச்சு. அதைப் பத்தி இன்னொரு நாள்ல எழுதறேனுங்.

16 comments:

 1. நல்லா இருக்குதுங். ரசிச்சனுங்.

  பாழாப்போன நாகரிகம் வந்து ஒலகைக் கெடுத்துருச்சுங்:(

  ReplyDelete
 2. 2000ல் ஒருமுறையும்

  2010க்கு பின்னர் ஒருமுறையும் பெரிய அளவில் மாறியுள்ளது.

  வெயிட்டிங் பார் நெக்ஸ்ட்

  ReplyDelete
 3. சரியாச் சொன்னீங்க மாப்பு.....கலக்கிப் போட்டீங்க......பழசெல்லாம் திலும்ப நினைக்க வச்சிப் போட்டீங்களே.....
  ம்ம்ம்.....அதொரு காலம்.....

  ReplyDelete
 4. நன்றி @டீச்சர்
  முரளி - இப்பவும் இதேதாங்க. ஆனா என்ன கொஞ்சம் டிவி இருக்கு, அதுவும் சாயங்காலம் நேரம்.

  ReplyDelete
 5. @ஆரூரன் மாம்ஸ், அந்த காலத்துல அப்படித்தான் இருந்தோம். இப்பவெல்லாம் ஒரு ரெண்டு மணிநேரம் அங்கே போய் இருக்க முடியறதில்லை

  ReplyDelete
 6. வாவ் இப்படி ஒரு பிஸி schedule ல இருந்த நீங்க எப்படி இவ்வளவு சோம்பேறியா ஆனீங்க?

  என்றும் அன்புடன்
  பாஸ்டன் ஸ்ரீராம்

  ReplyDelete
 7. ரொம்ப நல்லாருக்குங் இளா. ரொம்ப வருஷம் பின்ன இழுத்துட்டு போச்சு:)

  ReplyDelete
 8. பதிவு சூப்பருங்.. ஏனுங் இதையெல்லாம் விட்டுப்போட்டு அமெரிக்கால போயி உக்காந்தீங்..

  ஆனாலும் இந்த வேல எல்லாம் நீங்க செய்தீங்களான்னு டவுட்டிங்...

  நிறைய புது வார்த்தைகள் தெரிஞ்சிக்கிட்டேங்.. //பீய்ச்சிருவாங்க// பாலை கறப்பதுன்னு தான் நாங்க சொல்லுவோம்.

  //வெள்ளைனைய - கருக்கல்ல //
  இரண்டும் ஒன்னுத்தானே..

  ReplyDelete
 9. //எப்படி இவ்வளவு சோம்பேறியா//
  @SriRam எல்லாம் உங்க வீட்டுக்குப் பக்கத்துல குடிவந்த பின்னாடிதாங்க.

  @வானம்பாடிகள் --> நன்றி
  @கவிதா -->
  //ஏனுங் இதையெல்லாம் விட்டு//
  அதான் நீங்க எல்லாம் இந்தியாவுல இருக்கீங்கன்னுதான்.

  வெள்ளைனைய = சீக்கிரமே || கருக்கல்ல = காலையில, அதாவது காலையில சீக்கிரமே.

  ReplyDelete
 10. இதெல்லாம் போன சென்மத்துல நடந்துங்களாக்கும், நீங்க இந்த சென்மத்துல என்ன பண்றீங்க அதை சொல்லுங்க

  ReplyDelete
 11. Nice write up.

  two corrections,
  காலை - காத்தால
  தேங்கா மரம் - தென்னமரம்.

  ReplyDelete
 12. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 13. @பழமைபேசி நன்றி!
  @விஜி --> எல்லாம் இந்த ஜென்மம்தாங்க. பாட்ஷா மாதிரி அது பம்பாய் எடிசன்
  @செந்தில்மோகன் --> இது எங்கூரு வழக்குங்க. இடத்துக்கு இடம் வார்த்தைகள் மாறலாம்ங்க

  ReplyDelete
 14. அருமை. மறுபடியும் என் சின்ன வயசு காலத்துக்கு போய் பாத்துட்டு வந்த மாதிரி இருந்தது.

  ReplyDelete
 15. Vivaji , innum unga oor 'Olakkachinnanoor' thaana illa naagareega maatrathil 'Grinderchinnanoor' , 'MixiChinnanoor' nu paeru maariducha?

  Aana onnu, namma kongu naatu graamapura vaazhkai muraiyai nallave solli irukeenga.

  ReplyDelete

பேங்க் மேனேஜரும் நானும்

ஒரு தடவை ஒரு வங்கியில் Personal Loan கேட்கப் போனேன்.  மிகுந்த சிரமப்பட்டு மேலாளரை சந்திக்க முடிந்தது, மே லாளர் என்னிடம் கடனுக்குப் பிணையாக ...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (3) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (30) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (10) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (2) காதல் (13) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (20) சிபஎபா (11) சிறுகதை (6) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)