கொஞ்சம் பாராட்டினாதான் கொறைஞ்சா போயிருவீங்க பாஸூ?
நன்றி: தினமணி(மூலம்) -எம்.ஆனந்த்
========================================
கோவை, வ.உ.சி. மாநகராட்சி உயிரியல் பூங்கா வளாகத்தில் உள்ள தனது அறையில் இரவு, பகல் என அமர்ந்து கொண்டு கம்ப்யூட்டர் வலைதளத்தில் விலங்குகளுக்கான சிகிச்சை மற்றும் தேவையான தகவல்களை அவர் சேகரித்துக் கொண்டிருப்பார். பூங்காவில் உள்ள முதலைக்கு கீழ் தாடை உடைந்துள்ளது. அதை சரி செய்ய வேண்டும், பாம்புக்கு புற்றுநோய் கட்டியுள்ளது அதற்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்...- இப்படி 'எல்லா உயிர்களையும் தம் உயிர் போல் எண்ணும்' தாயுமானவரின் வரிகளுக்கு இலக்கணமாக இருப்பவர், கோவை வஉசி மாநகராட்சி உயிரியல் பூங்கா இயக்குநர் மற்றும் மருத்துவரான கே.அசோகன். அவரிடம் நாம் பேசியதிலிருந்து....
''சென்னையில் உள்ள கால்நடை கல்லூரியில் 1989-ல் எனது படிப்பை முடித்து 1996-ல் சின்ன சேலத்தில் உள்ள அரசுக் கோழிப்பண்ணையில் மேலாளராகப் பணியில் அமர்ந்தேன். 22 ஆண்டுகள் பணியில் 12 முறை இடமாற்றங்கள்... இதுதான் என் பணிக்குக் கிடைத்த பரிசு
.
நான் முதுமலையில் பணிபுரிந்த போது, அடிக்கடி யானைகள் இறந்தன. யானைகளின் திடீர் மரணம் ஏன் ஏற்படுகிறது என்ற ஆய்வில் ஈடுபட்டேன். யானைகளுக்குத் தொண்டையடைப்பான் நோய் வருவதைக் கண்டறிந்து, அதற்குத் தகுந்த சிகிச்சை கொடுத்து, மற்ற யானைகளுக்குப் பரவாமல் தடுத்தேன்.
அதேபோல் மற்ற நாடுகளைவிட இந்தியாவில் யானைகளின் வாழ்நாள் குறைந்திருப்பதற்குக் காரணம் என்னவாக இருக்கும் என்று ஆராய்ந்தேன். யானைகளைத் தாக்கும் நாடாப்புழுக்கள்தான் இதற்குக் காரணம் என்பதைக் கண்டறிந்தேன். அதற்கான சிகிச்சையை மேற்கொண்டேன்.
அதேபோல் காட்டுக்குள் இருக்கும் தனியார் எஸ்டேட்களில் பலா பழத்தில் வெடிகுண்டை ஒளித்துவைத்து யானைகளைக் கொல்வது, அதன் வழித்தடத்தில் ஆணி பொறிகளை வைப்பது, தந்தங்களுக்காக யானைகள் சுடப்படுவது போன்ற காரணங்களைக் கண்டறிந்தேன். தாயால் கைவிடப்பட்ட யானைக் குட்டிகள், தோல் நோய் போன்ற மற்ற காரணங்களையும் கண்டுபிடித்து அவை குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தி வருகிறேன். ஏறக்குறைய 55 யானைகளுக்குப் பிரேதப் பரிசோதனை செய்து பல விஷயங்களைக் கண்டறிந்தேன்.
வயநாடு (கேரளா) - முதுமலை இடையே அவ்வப்போது ஓடி ஒளிந்துகொண்டு 22 பேரைக் கொன்ற மக்கனா (கொம்பில்லா ஆண் யானை). இந்த வகை யானைகள் ஆசியாவிலேயே 5விழுக்காடுதான் உள்ளன. அதனால் அரசிடம் சிறப்பு அனுமதி பெற்ற பல குழுக்கள் அமைத்து அதைப்பிடித்தேன். அப்போதுதான் அதன் உடலில் இருந்த பல துப்பாக்கி குண்டுகளைப் பார்த்தேன். பிழைப்பதற்கு 10 சதவீதம் மட்டுமே வாய்ப்பு இருந்த நிலையில், பல லட்சம் செலவு செய்து தினமும் 3 மணி நேரம் சுமார் ஓர் ஆண்டு சிகிச்சை கொடுத்து அதன் காயங்களைக் குணமாக்கி அதை நடமாடச் செய்து இன்னும் அது உயிருடன் இருக்கிறது என்பதைச் சொல்லிக் கொள்வதில் சந்தோஷப்படுகிறேன்.
1998-99 வாக்கில் சிறுமுகை வனப்பகுதியில் உயர் அழுத்த மின்சாரம் தாக்கி இறக்கும் நிலையில் இருந்த யானைக்கு, எங்களின் மருத்துவக் குழுவுடன் தொடர் சிகிச்சை கொடுத்து அதைப் பிழைக்க வைத்தோம்.
2000-ஆம் ஆண்டில், குன்னுரில் விஷம் தடவிய மாட்டு இறைச்சியைச் சாப்பிட்டு கோமா நிலைக்குச் சென்ற சிறுத்தைக் குட்டியை பிழைக்கவைத்தோம். அண்மையில் கோவை வஉசி பூங்காவில் புற்றுநோய் கட்டியால் பாதிக்கப்பட்ட பாம்புக்கு முதல் முறையாக அறுவை சிகிச்சை செய்து அது நல்ல நிலையில் உள்ளது.
நாகை மாவட்டத்தில் 2004-ஆம் ஆண்டு கால்நடை மருத்துவராக இருந்தபோது படகு வலையில் சிக்கி ஆயிரக்கான ஆமைகள் இறப்பது வழக்கமாக இருந்தது. அப்போது கடற் கரையில் செயற்கையாக ஆமைகள் முட்டைகளைப் பாதுகாக்க ஓர் இடத்தை உருவாக்கி குஞ்சுகள் பொரிந்தவுடன் அவற்றை எடுத்துச் சென்று ஆழ்கடலில் விட்டு ஆமைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் பணியையும் செய்திருக்கிறேன். மீனவர்களுக்கு விழிப்புணர்வு வகுப்புகள் மூலம் ஆமைகள் பாதுகாப்புக்கு வழிவகை செய்கிறோம்.
மேற்கு வங்கத்தில் பறவைக் காய்ச்சலை கட்டுப்படுத்த 2008-ஆம் ஆண்டு அங்கு சென்ற குழுவில் நானும் இடம்பெற்றேன்'' என்றார்.
- இவர் முதுமலையில் இருந்தபோது, இவரின் தன்னலமற்ற பணிக்காக 'அண்ணா' விருதுக்கு இவரின் பெயரை பரிந்துரை செய்தனர் அந்தப் பகுதியில் இருந்த சுற்றுச் சூழல் ஆர்வலர்கள். ஆனாலும் விருது கிடைக்கவில்லை. சுயநலமில்லாமல் சூழலுக்கு உழைப்பவர்களுக்கு அரசு விருது தந்து கௌரவிக்க வேண்டும் என்பது பல சுற்றுச் சூழல் ஆர்வளர்களின் ஏக்கம்.
பாராட்டுகள் திரு அசோகன் அவர்களுக்கும் உருப்படியான விஷயம் செஞ்ச இளா அவர்களுக்கும் :)
ReplyDeleteஅச்சொகன் சாருக்கு மனம் நிறைந்த பாராட்டுகள்! நல்ல செய்தியை பகிர்ந்து கொண்ட விவசாயிக்கும் ஒரு ஜெய்ஹோ! :)
ReplyDeleteஅசோகன் சாருக்கு பாராட்டுகள்!(எழுத்துப்பிழையை பொறுந்தருள வேண்டும்)
ReplyDelete@அனுசுயா--> நான் காண்பதென்ன கனவா இல்லை நனவா?
ReplyDelete@நன்றி--> தக்குடு
டாக்டர் அசோகன் அவர்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுகளும்.
ReplyDeleteபகிர்ந்தமைக்கு நன்றி இளா
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
vazthukal sir,
ReplyDeleteவாழ்த்துக்கள் சார் ...உங்கள் பணி மேலும் சிறக்கட்டும் ...
ReplyDelete