வாழ்க்கையில சில விஷயங்களை நாம மறந்துட்டு போய்ட்டே இருக்கோம்.
மறப்பதுதான் மனிதன் இயல்பு. இன்று நான், நாளே நீ, நாளை மறுநாள் இன்னொரு முகம். ஞாபகம் வெச்சுக்க முடியுங்களா? கண்டிப்பா முடியாது. என்னை ஞாபகம் வெச்சுக்க முடியலைன்னா நானும் ஒரு நாள் சிதிலமடைஞ்சிதானே போறேன். அதுதாங்க வாழ்க்கை.
"என்ன ஆனாலும் பரவாயில்லை, உனக்கு மட்டும் என் பொண்ணைத் தர மாட்டேன். ஒரே ஜாதி, நல்ல வேலை, சரியான அந்தஸ்த்து இருந்துட்டா மட்டும் பொண்ணை குடுத்துரனமா என்னா? பார்ப்போம்".
"சரிங்க, நீங்க ரெண்டு பேரும், இப்படி அடம் புடிக்கிறீங்க. கல்யாணம் பண்ணி வெச்சுடறேன். ரெண்டு பேரும் நல்லா இருந்தாவே எனக்கு போதும். பொண்ண பெத்தவனுக்கு பொண்ணு நல்லா இருந்தா மட்டும் போதும். வேற என்ன வேணும்."
"உனக்கு என்னப்பா பொண்ணும், மாப்பிள்ளையும், பேரனும் உலகமெல்லாம் சுத்துறாங்க. பெரிய இடத்துல கட்டி குடுத்துட்டே, உன் கடமைய சரியா பண்ணிட்டே. யாருக்கு இப்படி வாய்க்கும் சொல்லு. இதுக்கு எல்லாம் குடுத்து வெச்சு இருக்கனும். ஹ்ம்ம்"
"அட, கண்ணு போடாதீங்கய்யா. என் பொண்ணு நல்லா இருக்கனும் இல்லே"
"டேய். பேராண்டி. இப்ப எல்லாம் என்ன பாட்டு. பாகவதர் பாடுவாரு பாரு. அது பாட்டு. இப்ப பாடுறது எல்லாம் பாட்டா?"
"யாரு தாத்தா பாகவதர்?"
"ஹேய், இளா என்னை ஞாபகம் இருக்கா? Botany டா. என்னை கூட நீ கிளின்னு சொல்லி கூப்பிடுவியே!"
"அட ஆமா. மறந்தே போச்சு. ஹிஹி"
"இந்த இடத்துலதான் நாங்க அப்போவெல்லாம் பேசி கூத்தடிப்போம். இப்போ அது இல்லே, வேற ஏதோ கட்டடம் இருக்கு. அப்போ பெரிய படிக்கட்டு இருந்துச்சு, எங்களுக்கு பேச வசதியா இருந்துச்சு""
மேலே இருக்கும் படம் நான் பிறந்த வளர்ந்த வீடு. மேலும் ஒரு சிதிலம்.
கால ஓட்டத்திற்கு ஏற்றாற் போன்று மனிதனின் முன்னுரிமைப் பட்டியல் மாறும்.நேற்று உயிராய் இருந்தவை நாளையும் அப்படியே இருக்கப் போவதில்லை.மாற்றமே நிரந்தரம்.
ReplyDeleteபுகைப்படம் பிடித்திருந்தது :-)
நட்சத்திர வாரம் நன்றாகச் சென்றது...
கஷ்டப்பட்டு தான் எதையும் அடையமுடியும் என்பதை நீங்க நிருப்பித்து இருக்கிங்க இளா!!! மேலும் சிறக்க வாழ்துகள்!!!
ReplyDelete//மேலே இருக்கும் படம் நான் பிறந்த வளர்ந்த வீடு. மேலும் ஒரு சிதிலம். //
ReplyDeleteஏசு நாதர் கூட குடிலில் தான் பிறந்தாரம். நீங்கள் பிறந்து வளர்ந்து இன்னும் அதை மறக்காமல் நினைவு வைத்து இருப்பது என்பது ஏழ்மையிலிருந்து முன்னேறியவர்களுக்கு இயல்பாகவே இருக்கும் ஒரு உணர்வு.
நாமெல்லாம் பழசை மறக்க முடியுமா ?
மிகவும் நெகிழ்வு தர கூடியதாக உள்ளது. நீங்கள் நட்சத்திரமாக திகழ்வது இன்னும் நெகிழ்ச்சி அதிகமாகிறது!
ReplyDeleteவாழ்த்துக்கள் இளா!
ஆஹா நான் பிறந்த இடமும் இதே மாதிரி குடிசைதான்.இருந்த இடமும் சென்னையில் குடிசைதான். என்ன இப்போ ஒன்னும் குறையில்லை. எங்கே போனாலும் எல்லாமே சௌகரியமாகத் தெரிகிறது. ஒரு வாரம் ஓடிப்போச்சு
ReplyDeleteஇன்னும் அந்த வீடு இருக்கும் நிலம் உங்க குடும்பத்துகிட்டதான் இருக்கா?
ReplyDeleteஇருந்தா ஏழைக்கேத்த எள்ளுருண்டையா ஒரு வீடு கட்டலாமே?
நட்சத்திர வாரத்துல கலக்கறீங்க
இளா,
ReplyDeleteஎனக்குக் குடிசை வீடு ரொம்பப் பிடிக்கும். மண் தரைன்னா இன்னும் விசேஷம்.
இதுகூட என் கனவுலே ஒண்ணுதான்.
இங்கே பாருங்க.
வேர்களை விட்டு
ReplyDeleteமைல்கள் தாண்டி விழுகின்றன
விழுதுகள்!
ஒவ்வொரு இனிய நினைவுக்கும் பின்னால ஒரு துயர உணர்வு இருக்கில்ல?
ReplyDeleteall those sweettest things are telling us a sadest thought.
//என்னை ஞாபகம் வெச்சுக்க முடியலைன்னா நானும் ஒரு நாள் சிதிலமடைஞ்சிதானே போறேன். அதுதாங்க வாழ்க்கை. //
ReplyDeleteம்ம்ம்ம்....
நான் சொல்லவந்ததை எனக்கு முன்னால் பின்னூட்டியவர்கள் சிறப்பா சொல்லியிருக்காங்க..
//மனிதனின் முன்னுரிமைப் பட்டியல் மாறும்.நேற்று உயிராய் இருந்தவை நாளையும் அப்படியே இருக்கப் போவதில்லை.மாற்றமே நிரந்தரம்.//
//நாமெல்லாம் பழசை மறக்க முடியுமா ?//
//வேர்களை விட்டு
மைல்கள் தாண்டி விழுகின்றன
விழுதுகள்!//
//ஒவ்வொரு இனிய நினைவுக்கும் பின்னால ஒரு துயர உணர்வு இருக்கில்ல?//
நிறைவானதொரு நட்சத்திர வாரம்! வாழ்த்துக்கள்!! :)
//நட்சத்திர வாரம் நன்றாகச் சென்றது... /
ReplyDeleteநன்றிங்க! சுதர்சன்
//இளா!!! மேலும் சிறக்க வாழ்துகள்!!! //
ReplyDeleteவாழ்த்துக்கு நன்றிங்க குசும்பரே.
//ஏழ்மையிலிருந்து முன்னேறியவர்களுக்கு இயல்பாகவே இருக்கும் ஒரு உணர்வு.
நாமெல்லாம் பழசை மறக்க முடியுமா ? //
அதெப்படிங்க மறக்க முடியும், ரத்தத்துக ஊறுனது ஆச்சே.
சிவபாலன் said... //மிகவும் நெகிழ்வு தர கூடியதாக உள்ளது. நீங்கள் நட்சத்திரமாக திகழ்வது இன்னும் நெகிழ்ச்சி அதிகமாகிறது!. வாழ்த்துக்கள் இளா!//
ReplyDeleteநன்றிங்க சிவபாலன்
//தி. ரா. ச.(T.R.C.) said... ஆஹா நான் பிறந்த இடமும் இதே மாதிரி குடிசைதான். என்ன இப்போ ஒன்னும் குறையில்லை. எங்கே போனாலும் எல்லாமே சௌகரியமாகத் தெரிகிறது. //
அதுதான் வளர்ச்சின்னு சொல்றதுங்க. எல்லாம் அவன் செயல்.
//நிறைவானதொரு நட்சத்திர வாரம்! வாழ்த்துக்கள்!! :) //
ReplyDeleteநன்றி கப்பி
2008-Oct-13
ReplyDeleteவாழ்த்துக்கள் நட்சத்திரமே!
அட, எம்புட்டு நேரம் மறு நட்சத்திரப் பதிவுக்கு காத்துக் கெடக்கறது?
அதான்...இங்கிட்டு வாழ்த்துக்கள் சொல்லிட்டோம்-ல! :)