குறுக்கெழுத்துப்போட்டி நடத்தனும்னு முடிவு பண்னின பிறகுதான் தெரிஞ்சது, அது கொஞ்சம் கோக்கு மாக்கான வேலைன்னு. போட்டிக்கு முக்கியமா தேவைப்படுறதே Tableதான். அப்புறம் பார்த்தா பிலாகரு Table support பண்ண மாட்டாராம். அப்படியே கோடிங் எழுதி போட்டாலும், திருச்சிக்கும் கோயமுத்தூருக்கும் போவது Table. அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா தேடி ஒரு வழியா ஒரு Work around கண்டுபுடிச்சுப் போட்டாச்சு. கேள்விக்கு தகுந்தபடிதான் கட்டம் போட்டு இருக்கோம், அதிகமான எழுத்தை ஒரு கட்டத்துக்குள்ள அடிக்க முடியாது. முயற்சிப் பண்ணி பாருங்க.
சரி எல்லா விடையும் பின்னூட்டத்துல தெரிவிக்கனும்னு இல்லே. கட்டத்தை எல்லாம் நிரப்பின பிறகு 2 கேள்வி இருக்கு. அதைச் சொன்னாவே போதும். இது என்னோட முதல் முயற்சி பதில் எல்லாம் சுலபம்தான், கேள்விதான் கொஞ்சம் கஷ்டமா வெச்சு இருக்கோம்.
வலமிருந்து இடம்:
1. Time Magazine 1930ம் வருடம் இவரை Man of the Yearஆ அறிவிச்சாங்க. இவரைப் பற்றி ஸ்பெயினில் எடுக்கப்பட்ட விளம்பரம் இன்றும் அந்த நாட்டின் சிறந்த விளம்பரமா கொண்டு இருக்காங்க.
3. இவுங்க அம்மாவை கொன்றவர்களுக்கும், இவரைக் கொன்றவர்களுக்கும் சம்பந்தமில்லை. இவர் மகன் ஆரம்பித்தத் தொழில் கால் சென்டர்.
5.கொங்கு மண்டலத்தில் இருக்கும் ஒரு ஊர். தண்ணீருக்கும் இதற்கும் நிறைய சம்பந்தம் உண்டு.
6. SS Music சேனலில் வீடியோ ஜாக்கியாக இருந்தவர், வில்லியாக நடித்த முதல் படம் இது.
7. பாக்யராஜ் நடித்த படத்தின் முதல் பாதி இது. அடுக்குதொடரின் பாதி மட்டும் இங்கே.
8. இது தமிழர்களின் பழமையான, ஆனால் அழிந்து வரும் ஒரு கலை/பொழுதுபோக்கு. திரும்பி உள்ளது.
9.ஜிஸ்ம் என்ற படத்தின் கதாநாயகி.
10. சுரேஸ் கிருஷ்ணா இயக்கிய பெரிய வெற்றிப் படம், நடு எழுத்து மிஸ்ஸிங்.
மேலிருந்து கீழ்:
1. பேபி கல்யாணி ஆட்டம் போட்டு இந்தியாவின் மைக்கேல் ஜாக்ஸனையே அசற வைத்த அந்தப்பாடலின் முதல் வார்த்தை.
2.SKF 1138 என்ற வாசகம் வந்தத் திரைப்படம்
3.கோவையில் இருக்கும் ஒரு தியேட்டரின் பெயர். சங்கீதத்தோடு சம்பந்தப்பட்டப் பெயர்.
4.Sliding Doors என்ற திரைப்படத்தை தழுவி வந்த தமிழ்ப்படத்தின் இயக்குனர்
6. ஈராக்கின் கரன்ஸி
9. 1967ல் ஊட்டியில் உருவாக்கப்பட்ட ஒரு நிறுவனத்தின் முதன்மை தயாரிப்பு இது
10. ஒரு போதை வஸ்து
11. வேற நாட்டுக்கு போவனும்னா இது கண்டிப்பா தேவை.
1 | 2 | 3 | 4 | |||
5 | ||||||
11 | ||||||
6 | 9 | 10 | ||||
7 | ||||||
8 |
தலைவரே!!!
ReplyDeleteஅடிச்சு நொறுக்கறீங்க!!!
எனக்கு தெரிஞ்சு இந்த மாதிரி குறுக்கெழுத்து போட்டி எல்லாம் எங்கேயும் பாத்தது இல்ல!!!
சூப்பரு!! B-)
// CVR said...
ReplyDeleteதலைவரே!!!
அடிச்சு நொறுக்கறீங்க!!!
எனக்கு தெரிஞ்சு இந்த மாதிரி குறுக்கெழுத்து போட்டி எல்லாம் எங்கேயும் பாத்தது இல்ல!!!
சூப்பரு!! B-)//
A BIG REPEAT
SENSHE
FROM SHARJAH
போட்டுட்டேன் போட்டேன் குறுக்கெழுத்துப் போட்டுட்டேன்.
ReplyDeleteமொதக் கேள்விக்கு விடை காகம்
ரெண்டாங் கேள்விக்கு விடை சார்லி
சரியா?
இதெல்லாம் குறுக்கெழுத்து விளையாட்டு கண்டுக்க கூடாது, ஆமா
ReplyDeleteஜி.ரா, உங்க பதில் சரியே. முதல்ல விடைய சொன்னதுக்கு ஒரு நன்றிங்கோவ்.
ReplyDeleteநியாயஸ்தரே, சுட்டி காட்டியமைக்கு நன்றிங்க. மாத்தியாச்சுங்க. அது என்ன பரிசல் போட்டி மாதிரி? புரியலைங்களே
ReplyDelete1) காகம்
ReplyDelete2) சார்லி
எனக்கு தெரிஞ்சும் இந்த மாதிரி குறுக்கெழுத்து போட்டி எல்லாம் எங்கேயும் பாத்தது இல்ல.
அருமையான முயற்சி. வாழ்த்துக்கள் & நன்றி !!
சரியான விடைங்க கதிரவன். உங்க பாராட்டுக்கும் நன்றி
ReplyDelete1)காகம்
ReplyDelete2)சார்லி
ஆகா..ஆயிரம் பொன்னும் எனக்குத்தான்...
கலக்கல் விவ்...
ஓமப் பொடியாரே, நீங்களும் சரியா சொல்லிப்புட்டீங்களே.. கேள்வி சரியா கேக்குலையோ?
ReplyDeleteஇளா,
ReplyDelete//இது என்னோட முதல் முயற்சிதான்.//
முதல் முயற்சியே ரொம்ப ப்ரயத்தனப்பட்டிருக்கீங்கனு தெரியுது. Way different. இதுமாதிரி புதுசா இன்னும் நிறைய பதிவுகள் போட வாழ்த்துக்கள்.
ஊஹூம்............ மூளை( ??) இன்னிக்கு வேலை செய்யலை(-:
ReplyDeleteநான் அப்பீட்டு:-)
அருமையான முயற்சி இளா. இப்படிப்பட்ட முயற்சிகளின் ஆரம்பம் சுலபமாக இருந்தால்தான் அடுத்து இதை எடுத்துச் செல்பவர் உள்வாங்கிக்கொள்ள முடியும் என்ற விதத்தில் சுலபமாக இருந்ததும் சரியே.
ReplyDeleteஇதை எப்படிச் செய்வது என்பதையும் பரவலாக்குவீர்கள் என நினைக்கிறேன்.
இந்தப்பதிவிற்கும், நட்சத்திர வாரத்திற்கும்.. வாழ்த்துக்கள்.
காகம், சார்லி
ReplyDeleteநன்றிங்க--> CVR & சென்ஷி
ReplyDelete//முதல் முயற்சியே ரொம்ப ப்ரயத்தனப்பட்டிருக்கீங்கனு தெரியுது///
ஆமாங்க சதங்கா. இந்த புது விஷயத்தைக் கத்துக்க 5 மணி நேரம் ஆச்சு. பள்ளி/கல்லூரியில் பேப்பர்ல எழுதி ஜெராக்ஸ் போடுவோம், நிறைய செய்து இருக்கோம். அந்த அனுபவத்தினால
பதில் எழுத 5 நிமிஷமும், பிராயத்தப்பட்டு கேள்வி எழுத 10 நிமிஷமும் ஆச்சுங்க.
ஹ்ம்ம், கொத்ஸ் நீங்களும் சரியா சொல்லிட்டீங்களேஎ.அடுத்த முறை கஷ்டமா வெக்கனும் கேள்விகளையும், பதில்களையும்.
ReplyDelete//இதை எப்படிச் செய்வது என்பதையும் பரவலாக்குவீர்கள் என நினைக்கிறேன்.//
ReplyDeleteகண்டிப்பாங்க. தொழீல்நுட்பம்தான் பெரிசு. மத்தபடி எல்லாமே ஒன்னுதான்.
//இந்தப்பதிவிற்கும், நட்சத்திர வாரத்திற்கும்.. வாழ்த்துக்கள்.//
நன்றிங்க.
1. காகம்
ReplyDelete2. சாருலி
முதல் விடை : காகம்
ReplyDeleteஇரண்டாம் விடை : சார்லி
ஆறாவதுக்கு விடை திமிரு
ReplyDeleteமங்களூர் சிவா
என்ன இளா எதாவுது பின்னுட்டம் போடலாம்ன்னு பாத்தா கட்டத்தை போட்டு இக்கட்டை உருவாக்கிட்டீங்களே இது ஞாயமா. சரி இன்றுபோய் நாளை வருகிறென்
ReplyDeleteசிவிஆர், சென்ஷி
ReplyDeleteஇந்த குறுக்கெழுத்தைப் பத்தி ஒரு பதிவு போடறேன். கொஞ்சம் நேரம் கிடைக்கட்டும். புதிருக்கான விதிமுறைகள், விடுவிப்பது பற்றி என சொல்லிவிட்டு அப்படியே தமிழ் குறுக்கெழுத்து ஜாம்பவான் ஒருத்தரையும் பத்திச் சொல்லறேன்.
வெயிட்டீஸ்.
இளா,
ReplyDeleteநட்சத்திர வாரம்னா எதுனா பின்னடி நவீனம் வராப்போல பதிவு போடாம மூளைக்கு வேலை வைக்குறிங்களே (நல்ல வேலை என் மூளை பிழைத்தது எல்லாம் எனக்கு முந்திகிட்டாங்க)
வலைப்பதிவுலக வரலாற்றில் முதல் முறையாக குறுக்கெழுத்து போட்டி நடத்தியவர் என்ற அழியா புகழ் உங்களுக்கு தான்(பெயரிலி கவனிக்கவும்)
சில சைட்களில் இப்படி போடுராங்களே, பிளாக்ல கடினமோ? அடுத்து என்ன ஆடு புலி ஆட்டமா?
nice one ilaa!
இது ஏதோ முளைக்கு வேலை கொடுக்கிற விவகாரமா இருக்கு.. சாய்ஸ்ல விட்டுட்றேன்... ;)
ReplyDeletehttp://mazhai.blogspot.com/2005/08/blog-post_112348524084196782.html
ReplyDeleteஇளா,
ReplyDeleteExcellent!!
ஆனால் என்னால் இது போல் போட்டி எல்லாம் கலந்து கொள்ள முடியாது.. அது சரி... உள்ளே ஏதாவது இருந்தால்தானே..HahAhA..