Thursday, August 23, 2007

வருகிறேன் நண்பர்களே

ஆங்கில பதிவை எழுதிட்டு ஒரு நாளைக்கு மூணு பேரோ, நாலு பேரோ படிச்சுட்டு இருக்க, பின்னூட்டமே இல்லாம 100 பதிவை முடிச்ச பின்னாடிதான் தமிழ்ல பதிவுகள் இருக்குன்னே தெரிஞ்சது. என்னத்தையோ தேடிட்டு இருக்கும் போது தட்டுப்பட்ட, நான் பார்த்த முதல் தமிழ்ப்பதிவு KVRன் "கொசப்பேட்டை". அப்புறம் கொங்கு ராசா, நாமக்கல் ராசான்னு தொடர்ந்து தமிழ்ப் பதிவுகளின் தொடர்பு கிடைச்சு, மதி தொகுத்த வலைப்பூ கண்ணுல பட்ட போது அப்படி ஒரு சந்தோசம் எனக்கு. அப்புறம் சுரதா அண்ணனின் http://www.jaffnalibrary.com/tools/Unicode.htm உதவியோட தமிழ்ல வலைப் பதிக்க ஆரம்பிச்சேன். அப்புறம் இ.கலப்பை.



இப்போவெல்லாம் என்னோட மெயில் பாக்ஸ் திறக்கிறதுக்கு முன்னாடி நான் பார்க்கிற பேரு முகுந்த். எந்த ஊர்ல இருந்தாலும் ஒரு பதிவர் கூப்பிட்டு நல்லா இருக்கியாப்பான்னு கேக்குற அளவுக்கு நண்பர்கள் கூட்டம். வார கடைசியில மணிக்கணக்கா தொலைபேசி பேச்சு. தமிழ்ப்பதிவு மட்டும் உலகம்னு ஆகிப்போயிருச்சு. இப்படி தமிழ்ப் பதிவுகளின் கவர்ச்சியும், கம்பீரமும் பெருமையும் சொல்ல மாளாது. அப்படி ஒரு வசீகரம் இந்த பதிவுலகத்துக்கு இருக்கிற மாதிரி வேறெதுவுமே இல்லே. தமிழ்மணம் பரப்பிய காசி அண்ணனுக்கு ஒரு பெரிய வணக்கம் சொல்லி நன்றி சொல்லிக்கிறேன். அப்படியே தமிழ்மணத்தை வளர்க்க பாடுபட்ட அந்த 5 /6 மக்களுக்கும்.



தமிழ்மணத்துல இருக்கும் பரணை பார்க்கும்போது, அதுல வரும் சுட்டிகளில் ரொம்ப சொற்பமான மக்களின் பதிவுகளே இப்போ படிக்க முடியுது. பரண் ஏதோ வரலாற்று பகுதி மாதிரி பார்த்துட்டு இருப்பேன். அப்போவெல்லாம் "நாமளும் இப்படி ஒரு நாள் வரலாறு ஆகிடுவோம்"னு தோணும். சிதிலங்கள் சகஜம்தானே. அப்படி ஒரு நாள் நினைச்சுட்டு இருக்கும்போது எல்லாம் கவிஞர் எம். யுவன் எழுதிய கவிதை ஞாபகத்துக்கு வரும்


உருமாற்றம்



கொக்கின் பெயர் கொக்கு
என்றறிந்த போது
வயது மூன்றோ நாலோ.
கொக்கென்றால் வெண்மையென
பின்னால் கற்றேன்.
அழகு என பறத்தல் என
விடுதலையென போக்கின்
கதியில் தெரிந்து கொண்டது.
வேலையோ வெய்யிலோ
வார்த்தையோ வன்முறையோ
உறுத்தும் போது கொக்கு
மிருதுவென உணர்ந்தது.
அவரவர் வழியில் வளர்கிறோம்
கொக்கு அடுத்து என்ன
ஆகும் எனும் மர்மம்
உடன் தொடர.


சந்தோஷம்: பல நண்பர்கள், பொழுதுபோக்கு, எழுத்து மேல் கொண்ட காதலின் வடிகால்.


சோகம்: அரசியல் மற்றும் நாகரிகமற்ற வார்த்தை ஜாலங்கள், எழுதுவதற்கு சுதந்திரமற்ற சூழல், தனிமனித தாக்குதல்.


போன வருஷம் இதே நாள்ல தேவ் ஒரு விஷயம் சொன்னாரு

//நண்பா வழக்கமாப் போடுற பின்னூட்டத்தை விட இந்த தடவை ஒரு விஷயம் சொல்ல ஆசைப் படுறேன்.. ஆரம்பத்துல்ல உன் எழுத்துக்களில் இருந்த தீவிரம் இப்போது இல்லை எனபது எனக்கு எப்போதும் வருத்தமே.. உன் வரப்பு உன் எழுத்துக்களின் மறுபிறப்பு எனக் கூடச் சொல்லுவேன்.வரப்பினில் நெஞ்சை வருடும் உன் எழுத்துக்கள்.. விவசாயியாக ஒரு காலத்தில் ஆழ உழவும் செயதன.. ஏனோ இப்போது விவசாயியாக உன் எழுத்துக்களில் அந்த சீற்றம் சற்றே குறைந்து விட்டது போல் உன் வாசகனாய் எனக்கு ஒரு குறை...//

உணமைதான் நண்பா, கிராமத்தின் சீற்றம் கொஞ்சம் குறைஞ்சுதான் போயிருச்சு. அதன் முதல் படியாய்தான் பதிவர் வட்டம்/பதிவர்களைப் பற்றி எழுதுவதை குறைத்தேன், இனிமே கிராமம் பக்கம் போலாம்தான். ஆனால் நாடோடியாய் இருக்கும் எனக்கு என் கிராமமே மறந்துபோகும் அளவுக்கு தள்ளி வந்துட்டேன். பாழும் இந்த பொழைப்புக்காக என் கனவு எல்லாம் தொலைச்சுட்டேன் நிற்கிறேன் நண்பா. அப்புறம் எப்படிடா கிராமத்தை பத்தி எழுத. ஒரு வருஷமா உன் வார்த்தைகள் செவியில அறஞ்சுகிட்டே இருக்கு"

அட என்னாத்துக்கு இவ்ளோ பெரிய பதிவுன்னு கேக்குறீங்களா?. ஆமாங்க நான் தமிழ்ல பதிவு எழுத வந்து ரெண்டு வருசம் ஆச்சு. அடுத்த வருஷம் இப்படி பதிவு எழுதுவேனோ தெரியல, இருந்தாலும் ஒரு நம்பிக்கைதான்.


அந்த நம்பிக்கையில மூணாம் வருஷத்துல அடியெடுத்து வெச்சு
எழுத
வருகிறேன் நண்பர்களே!

30 comments:

  1. //அந்த நம்பிக்க்கையில மூணாம் வருஷத்துல அடியெடுத்து வெச்சு
    எழுத
    வருகிறேன் நண்பர்களே!//

    இதற்குத்தான் இந்த 'பீடி'கையா ?

    கலக்குங்க....ரொம்ப சீரியசாக படிச்சேன் காமடி பண்ணிட்டிங்களே.

    ReplyDelete
  2. இளா,
    3ம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள் விவ்ஸ்..கலக்குங்க! :)

    ReplyDelete
  4. இளா,
    உங்கள் வயலும் வாழ்வும் என்றும் தொடர வாழ்த்துகள்!

    ReplyDelete
  5. எழுதுவ எழுதுவ. என்ன எழுதினாலும் படிக்க என்னை மாதிரி ஆளுங்க இருக்கும் பொழுது உனக்கென்ன. நல்லா இருடே!!

    ReplyDelete
  6. VaazhthukkaL ILA.
    Innum NiRaiya ezhuthunga.
    vaLamaana soRkaL kuRaiyum bothuthaan varuththam.

    nalla ezhuthukku eppothum kuRai varaathu.

    ReplyDelete
  7. //அந்த நம்பிக்கையில மூணாம் வருஷத்துல அடியெடுத்து வெச்சு
    எழுத
    வருகிறேன் நண்பர்களே!//

    வாழ்த்துக்கள் இளா அண்ணா. :-)

    ReplyDelete
  8. இளா,

    3ம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள்.

    கலக்குங்க! :) கலக்குங்க! :) கலக்குங்க! :) கலக்குங்க! :) கலக்குங்க! :) கலக்குங்க! :) கலக்குங்க! :) கலக்குங்க! :) கலக்குங்க! :) கலக்குங்க! :) கலக்குங்க! :) கலக்குங்க! :) கலக்குங்க! :) கலக்குங்க! :)

    ReplyDelete
  9. //கலக்குங்க....ரொம்ப சீரியசாக படிச்சேன் காமடி பண்ணிட்டிங்களே//

    ஆமாமா...நான் கூட மறுபடியும் போயிட்டு வர்றேன்னு பதிவு போட்டுடீங்களோன்னு தான் வந்து படிச்சேன். மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் உங்களுக்கு எனது வாழ்த்துகள்.

    ReplyDelete
  10. ஆஹா... வாழ்த்துகள் விவசாயி!

    ReplyDelete
  11. மூன்றாவது வருடம் முத்தானதாக அமைய வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. வாழ்த்துக்கள் விவாஜி!!!
    மூன்றாவது ஆண்டு என்ன,மூவாயிரம் ஆண்டுகள் உங்கள் தமிழ் பணி தொடர வாழ்த்துக்கள்!!!
    (என்ன பண்ண!! இப்படி ஏத்தி விட்டு ஏத்தி விட்டே பழக்கம் ஆயிறுச்சு!! இதுவும் தமிழ்மணத்துல சேர்ந்த அப்புறம் வந்த பழக்கம் தான்!! :-)))

    ReplyDelete
  13. வாங்க நல்லா எழுதுங்க அம்முட்டுந்தான்

    ReplyDelete
  14. //ரொம்ப சீரியசாக படிச்சேன் காமடி பண்ணிட்டிங்களே//
    கோவி, எவ்ளோ பீலிங்கா பதிவு போட்டு இருக்கேன் உங்களுக்கு காமெடியா? உங்களுக்கும் அந்த நாள் வரும்லே, அப்ப வெச்சுகிறேன் கச்சேரிய

    ReplyDelete
  15. //இனிமே கிராமம் பக்கம் போலாம்தான். ஆனால் நாடோடியாய் இருக்கும் எனக்கு என் கிராமமே மறந்துபோகும் அளவுக்கு தள்ளி வந்துட்டேன். பாழும் இந்த பொழைப்புக்காக என் கனவு எல்லாம் தொலைச்சுட்டேன் நிற்கிறேன் நண்பா. அப்புறம் எப்படிடா கிராமத்தை பத்தி எழுத. ஒரு வருஷமா உன் வார்த்தைகள் செவியில அறஞ்சுகிட்டே இருக்கு"//

    ங்கொப்புரான, சத்தியமான வார்த்தைகள்.
    கிராமத்தின் நினைவுகளை மட்டும் அகற்றி விடாதீர்கள். எனக்கு அதுதான் எனர்ஜி பானம்!!

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  16. //அந்த நம்பிக்க்கையில மூணாம் வருஷத்துல அடியெடுத்து வெச்சு
    எழுத வருகிறேன் நண்பர்களே!//

    உங்கள் முயற்சிகள் வெற்றிபெற வாழ்த்துக்கள்.

    தோழமையுடன்,
    இராகவன் என்ற சரவணன் மு.

    ReplyDelete
  17. 3ம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் இளா உங்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  18. வாழ்த்துக்கள். உங்கள் கனவுகள் நனவாகவும் வாழ்த்துக்கள்.

    மேன்மேலும் பல வருஷங்கள் எழுதி, எங்களையும் அறுத்துத் தள்ளவும் வாழ்த்துக்கள். சொ.செ.சூ? வச்சுக்கறேனோ? :P

    ReplyDelete
  19. //ஆனால் நாடோடியாய் இருக்கும் எனக்கு //

    ஆஹா நீர்தான் இணைய நாடோடியா. நல்லா இருமய்யா. இரண்டு வருஷம் ஆச்சா! மூணாவது வருஷமா...

    எங்கே செல்லும் இந்தப் பாதை? இதை யார்தான் யார்தான் அறிவாரோ!!! :))

    ReplyDelete
  20. //இணைய நாடோடியா//

    வாங்க ஜீன்ஸ் போட்ட நாரதரே. இணையம் எல்லாம் இல்லீங்கன்னா. நெசமாலுமே நாடுக்கு நாடு ஓடிட்டு இருக்கேன்.

    இணைய நாடோடின்னா என்னாங்க?
    browse பண்றதுதானே, அதை நான் நிறைய பண்ணிட்டு இருக்கேன்.

    ReplyDelete
  21. //அட என்னாத்துக்கு இவ்ளோ பெரிய பதிவுன்னு கேக்குறீங்களா?. ஆமாங்க நான் தமிழ்ல பதிவு எழுத வந்து ரெண்டு வருசம் ஆச்சு. அடுத்த வருஷம் இப்படி பதிவு எழுதுவேனோ தெரியல, இருந்தாலும் ஒரு நம்பிக்கைதான்//


    வேற எங்கே போகப்போறீங்க இளா.... ( பதிவு எழுதிதான் உயிரை வாங்கப் வோறீங்களேன்னு உங்க காதில விழுந்தா நான் பொறுப்பில்லை) :)

    3 ம் ஆண்டு விழாவை சிறப்பிதத்து ஒரு பெரிய விருந்துக்கு ஏற்பாடு பண்ணுங்க..அப்பத்தான் அனைவருக்கும் ஞாபகம் இருக்கும்..

    ReplyDelete
  22. Idhaan matteraa?

    anyway, vaazthukkal.

    kanavu meipada vendum.

    ReplyDelete
  23. வாழ்த்துக்கள் :) கலக்குங்க...

    ReplyDelete
  24. நண்பா உங்கள் எழுத்துக்கள் இன்னும் தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள் :)

    ReplyDelete

தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி

  தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை  -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை  காசி  எழுதியது தமிழோவியத்துக்காக  பாஸ்டன் பாலாஜி  க...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நாகேஷ் (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) வாலி (1) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)