இசையமைப்பாளருங்க எல்லாம் முழுமையான இசை தெரிஞ்சவங்கன்னு சொல்ல முடியாது. அதாவது எல்லா வாத்தியத்துக்கும் Notes எழுதி குடுக்க. கார்த்திக் ராஜாவுக்குதான் தமிழ்ல அதிகமான வாத்தியத்துக்கு குறிப்பு(Notes) எழுதித்தர முடியும். இசையமைப்பாளருங்களே குறிப்ப எழுதிக் குடுத்தாதான் அவுங்க அனுபவிச்ச் உணர்வு கிடைக்கும்.
சில இசையமைப்பாளருங்க Sound Engineering பின்புலத்துல இருந்து வந்தவங்க. உதாரணம் ஆதித்யன், இமான். இவுங்களுக்குத்தான் இந்த மாதிரி காப்பி விளையாட்ட விவரமா பண்ணத்தெரியும். Sound Eng இல்லாட்டி காப்பி அடிக்கிறது 'ஈ அடிச்சான் காப்பி' மாதிரி ஆகிரும். அதுக்கு உதாரணம் தேவா. அப்படியே சுட்டுப் போடுறது. சரி, எப்படி எல்லாம் மெட்டுக்களைச் சுடுவாங்க (என் அறிவுக்கு எட்டிய வரையில)
- பழைய பாட்டுக்களை கேட்டு அப்படியே சரணத்தை பல்லவியா போடுறது(Vice Versa). இதுக்கு காரணம் தமிழ் Nativity கெடைக்கும்னு சொல்லிக்கிறது (திருடா திருடி- வண்டார் குழலி)
- ஆங்கிலப் பாட்டுக்களை கேட்டு அப்படியே தமிழ்ல சுட்டுப்போடுறது. ஆதாரத்தோட கேட்டா Inspirationனு சொல்லிடறது, இது பக்கா குழந்தைத் தனம்(முகவரி- ஆண்டே நூற்றாண்டே..)
- இதுக்கு மேல ஒரு புத்திசாலித்தனம் இருக்கு. அதாவது ஸ்பானிஸ், சீனா, அல்ஜீரியா, இப்படி நம்ம ஊர் மக்கள் கேட்காத பாட்டுக்களை சுட்டுத்தர்றது. இதுக்கு ஒரு தனி கலை வேணும். இது பெரும்பாலும் உதவியாளருங்கத்தான் பண்ணுவாங்க. சீக்கிரம் பண்ணிடலாம், காசும்தான். நான் இதுல செம கில்லாடி, பல பாட்டுக்களை அள்ளித்தந்திருக்கேன். MP3 தேட மட்டும் திறமை வேணும். நாம தான் கூகிளு, யாஹூ, அல்டாவிஸ்டா எல்லாத்துலேயும் U டர்ன் அடிச்சவங்களாச்சே. FYI, altavista is the best of mp3 search.
- அடுத்தது உதவியாளருங்ககிட்டே இருந்து வாங்கிக்கிறது/புடிங்கிக்கிறது. இதுதான் நம்ம ஊர்ல ஜாஸ்தி, காரணம் புதுசாவும் இருக்கும், மாட்டிக்கவும் மாட்டோம். என்ன அந்த நாசமா போன மெட்டு போட்டவங்களுக்கு கொஞ்சம் பணம் தரனும், யார்கிட்டேயும் சொல்லிடாம பார்த்துக்கனும். (ஹாரிஸ் உருவான காரணம் இது)
- Freelanceஆ தரவங்க கிட்ட காசு குடுத்து வாங்கிக்கிறது. அதாவது ஒரு குப்பன் நல்ல மெட்டு வெச்சிருந்தாருன்னா 5 ஆயிரத்தை குடுத்து வாங்கிக்கிறது. அவ்ளோதான். குப்பனும் பேச முடியாது, copy rights பிரச்சினையுமில்ல. இதுல காசு குடுக்காம ஏமாத்தினா சங்கர்(கணேஸ்) மாதிரி சில சம்பவங்கள் நடக்கும், கலீஜ் கூட ஆவும், குப்பனுக்கு காசு குடுக்கலைன்னா கோவம் வரத்தானே செய்யும்?
- இப்போ Sound Eng வெச்சிகிட்டே மெட்டு போடுறது. அதாவது ஒரு பாட்டை எடுத்து ரிவர்ஸுல ஒட விடறது, அப்புறமா ஒட்டு போட்டு ரெடி பண்ணிட வேண்டியது. இது ரொம்ப நல்லா வர மேட்டரு. அதான் Sound Eng சீக்கிரமா இசையமைப்பாளருங்க ஆகுற ரகசியம். (முத்து-ஒருவன் ஒருவன் முதலாளி- சன் டிவி theme music , relatedஆம். பசங்க சொன்னாங்க)
- கடைசியா இருக்கிறது ரொம்பச் சுலபம், வேத்து மொழியில ஹிட் ஆன பாட்டுகளோட மெட்டை இங்கே போட்டுக்கிறது. Globalisationல சீக்கிரம் கண்டு புடிச்சிடறாங்க.
me the first?
ReplyDelete//சில இசையமைப்பாளருங்க Sound Engineering பின்புலத்துல இருந்து வந்தவங்க//
ReplyDeleteநம்ம நாக்க முக்கா விஜய் ஆண்டனி கூட
//இதுல காசு குடுக்காம ஏமாத்தினா சங்கர்(கணேஸ்) மாதிரி சில சம்பங்கள் நடக்கும், கலீஜ் ஆவும்//
ReplyDeleteஅது என்ன விஷயம்?
//Technology has improved very much இல்லீங்களா//
ReplyDeleteநீங்க எங்கயோ போயிட்டீங்க சார் :):):)
Rapp-->http://www.mayyam.com/hub/viewtopic.php?t=11183
ReplyDeleteம்யூஸிக் நொடேஷன் எழுதுவதும் அதைப் படிச்சுத் தெரிஞ்சுக்கறதுக்கும் ஒரு புது மொழியைப் படிக்குற மாதிரி.
ReplyDeleteஇங்கே நியூஸியில் ஆரம்பப் பள்ளியிலேயே ரெண்டாவது வருசம் முதலே இதைச் சொல்லிக் கொடுக்கறாங்க.
ம்யூஸிக் படிக்கத் தெரிஞ்ச குழந்தைகளுக்கு மன அளவில் வளர்ச்சி நிறைய உண்டுன்னு சொல்றாங்க.
என்ன எழவோ போங்க!!
ReplyDeleteஎன் தம்பி, அவன் officeல சக்கரகட்டி taxi taxi பாட்ட பொட்டு கெட்டுருக்கான், அவன் சீட் பக்கம் பொன அவஙக அமெரிக்க டிம் லிடர் அந்த பட்டுனடய spanish version ன பாடியிருக்கங்க, தாம் தூம் பட்டுங்க கூட் spanish பட்டுங்க தானாம் அவஙக original பாட்டையெ பொட்டுகாடியிருக்கங்க...அதை பட்ரி ஒரு விரிவன பதிவு விரைவில்...
ReplyDeleteதகவலுக்கு நன்றி.
ReplyDelete//ம்யூஸிக் படிக்கத் தெரிஞ்ச குழந்தைகளுக்கு மன அளவில் வளர்ச்சி நிறைய உண்டுன்னு சொல்றாங்க.//
ReplyDeleteசரிதான், ஆனா காப்பி அடிக்கிற இவங்களெல்லாம் மன்நலம் இல்லாதவங்களா இருப்பாங்களோ
rapp said...
ReplyDelete//சில இசையமைப்பாளருங்க Sound Engineering பின்புலத்துல இருந்து வந்தவங்க//
நம்ம நாக்க முக்கா விஜய் ஆண்டனி கூட
/அந்த பாட்டு அன்னாத்தே ஆடுறார் பாட்டு மாதிரி இருக்கு/
வித்தியாசாகர் ஒரு சீன இசைப்பிரியராமே அப்படியா?
Copy பத்தி தெரிஞ்சிக்க இந்த வலைய பாருங்க.http://www.itwofs.com/
ReplyDelete//ஏமாத்தினா சங்கர்(கணேஸ்) மாதிரி சில சம்பவங்கள் நடக்கும், கலீஜ் கூட ஆவும், குப்பனுக்கு காசு குடுக்கலைன்னா கோவம் வரத்தானே செய்யும்?//
ReplyDeleteஇது பத்தி 2 பதிவில் சொல்லியிருக்கீங்க, உங்க மியூஜிக்கை சுட்டவங்க இவங்களா?
//உங்க மியூஜிக்கை சுட்டவங்க இவங்களா?//
ReplyDeleteபோனது போவட்டுங்க. மனசுல இருக்கிறது கொட்டிட்டேன். பேர்சொல்லி ஏன் அவுங்களை கஷ்டப்படுத்தனும். கஷ்டம் என்னோட போவட்டுங்களே:)
என்ன பண்றது, சொந்த மூளையிருந்தா நாங்க ஏன் இப்பிடிப் பண்றோம்? :)
ReplyDeleteநல்ல அலசல்..
ReplyDeletehttp://itwofs.com/
ReplyDeleteanna intha site poi parunga.. inga irukara ella music directorsum copy than including raja , rahman etc...
தல,
ReplyDeleteகலப்பைய உட்டுப் போட்டு ஆர்மோனியத்த எடுக்கற ஆசை எப்போ வந்தது?
நல்ல பதிவு... எக்கச்சக்க புது தகவல்கள்.
ReplyDeleteஒ... இதுல இவ்வளவு மேட்டர் இருக்கா..???
ReplyDeleteFYI means what?
ReplyDelete//FYI means what?//
ReplyDeleteFor Your Information
Fruity Loops என்று கலக்கலான ஒலியியல் மென்பொருள் உள்ளது. இது இருந்தால், எவரும் எளிதாக இசைக்கோப்புகளை உருவாக்கிட இயலும். தமிழ் படங்களில் பயன்படுத்தப்பட்ட சில பிண்ணனி இசைகளை, இந்த மென்பொருளில் நான் கேட்டதுண்டு. :D
ReplyDelete//அதாவது ஸ்பானிஸ், சீனா, அல்ஜீரியா, இப்படி நம்ம ஊர் மக்கள் கேட்காத பாட்டுக்களை சுட்டுத்தர்றது.//
ReplyDeleteஇது ஒரு நல்ல முறை... ஆனா இப்ப இணையம் எல்லாம் வந்த பிறகு பிடிபடுற வாய்ப்பு கூடத்தான்...!
//சில இசையமைப்பாளருங்க Sound Engineering பின்புலத்துல இருந்து வந்தவங்க.//
Sound Engineering பின்புலம் ஒரு இசையமைப்பாளருக்கு பலவகையிலையும் உதவிசெய்யும். அதில இதுவும் ஒன்னு.
//அதான் Sound Eng சீக்கிரமா இசையமைப்பாளருங்க ஆகுற ரகசியம்.//
ReplyDeleteநீங்க ஒரு முன்னாள் சவுண்ட் இன்ஜினியர் தானே? :)
//(முத்து-ஒருவன் ஒருவன் முதலாளி- சன் டிவி theme music , relatedஆம். பசங்க சொன்னாங்க)//
எப்படி ரிலேட் ஆவுது-ன்னு ஒலிக் கோப்பு கிடைக்குங்களா?
ஒரு படத்துக்கு இம்புட்டு பாட்டு வைப்பதால் தான் இப்படியோ?
பேசாம பாட்டு எண்ணிக்கையைக் கொறைச்சா உலகத் தரத்துக்குச் செல்லலாமோ?
பாடல் இசை காப்பி ஆகும் அளவுக்கு,
பின்னணி இசை காப்பி பற்றி ஏன் அதிகம் பேசப்படுவதில்லை, இசைத்தென்றல் இளா அவர்களே?
Well.. I have also worked with leading music directors of south and north. What vivasayi says is true.. I have a grade 8 in piano (read and write western notations), 7 years of carnatic music training. Still every music director has key persons called arrangers who do 80% of the job for a song. ARR has Ranjit Barot, Srinivas, Joshua Sridhar, (I was once), and many more .. Harris Jeyraj is the copy king and he picks his stuff from Jesus calls gospels.. so his songs sense that moodiness in his style. Karthik Raja is more like his father but he knows both western and classical, not as creative as his brother/IR. Vidyasagar use to listen a lot of mediterranian songs, Deva & co on Malaysian, Indonesian songs, ARR on african and Chinese stuff... SA Rajkumar steal his own songs :))
ReplyDeleteMany more to say... Nice blog..
ஹி ஹி
ReplyDeleteஇளா, நிறைய விஷயம் தெரியுது..:(((( நாம் என்னவோ அவங்களே மியூசிக் போடறாங்கன்னு அவங்களுக்கு ரசிகரா இருக்கோம்.. ஆனா ஒரிஜினல் இல்ல போல இருக்கே..
ReplyDeleteசரி உங்களுக்கு தமிழ் சினிமா பாடல்களுக்கு BGM எங்க தேடலாம்னு தெரியுமா... கிடைக்குமா.. ரொம்ப நாளா தேடறேன்.. கிடைக்கறது எல்லாம் லாலா... ஆஆ..... வோட நின்னுபோகுது.. முழு பாடல்களுக்கு இல்லை
இந்த லிஸ்ட்ல இளையான் பேர் மட்டும் அடிபடலை கவனித்தீர்களா. யார் ரொம்ப ஒரிஜினல் ன்னு இந்த உலகத்துக்கு மறுபடியும் ப்ரூவ் ஆகிருக்கு பார்த்தீங்களா
ReplyDeleteஅருமையான தகவல்கள் இளா. ஏன் இப்பொதெல்லாம் அதிகம் எழுதுவதில்லை?
ReplyDeleteநல்ல டாபிக்.. அட்டகாச அலசல். :-)
ReplyDeleteஆமாங்க.. ஸ்பானிஷ் மொழியில போட்ட அசராஜே டியூனை அப்படியே நேபாளில Hey You Vowன்னு போட்டிருக்காங்க. :-)))
நெறைய இருக்கு. இப்போ மறந்துபோச்சு. :-)
இவ்வளவு ட்ரிக்ஸ் இருக்கா? சமீபத்தில் ஏதோ ஒரு தமிழ்ப்பாடலில் ஷகீராவை ரொம்ப கொடுமையாக காப்பி அடித்திருந்தார்கள் :(
ReplyDelete