Wednesday, October 22, 2008

ஏகன் - விமர்சனம்

இராணுவத்துல இருக்கிற ஒரு அதிகாரி ஏகன். அவருக்கு அவருடைய மேலதிகாரி ராகவன் மேல மரியாதை கலந்த மதிப்புமட்டுமில்லாம் பாசமும் அதிகம். அவருடைய மேலதிகாரிொரு தகவல் வருது, அதுல அவருடைய மகன் மற்றும் மனைவியை தீவிரவாதிங்க கொலை செய்ய திட்டமிட்டுருக்காங்கன்னு தெரியவருது. அதனால அவருடைய சீடன் ஏகனை மகன் மற்றும் மனைவியை காக்க அனுப்புறார்.




அவருடைய மகன் லக்கி அந்தக் கல்லூரியின் HotGuy. எல்லாப் பொண்ணுங்களும் அவருக்கு பின்னாடியே சுத்த இவர் மட்டும் பூஜாவோட காதலுல சுத்துறாரு. ஏகன் ஒரு கல்லூரி மாணவரா சேர்ந்து அந்தக்கல்லூரிக்கு போயி லக்கிய அவருக்கு தெரியாமையே பின் தொடர்ந்து காக்குறாரு. ஒரு சமயத்துல ஏகனுக்கு அந்தக்கல்லூரியின் வேதியியல் விரிவுரையாளரோட chemistry வொர்கவுட் ஆகிருது. இந்த சமயத்துல ஏகனும், லக்கியோட வீட்டுல தங்கி அவங்க அம்மாவுக்கு ஒரு மகனாவே பாசத்துக்கு கட்டுப்பட்டுடறாரு.




இந்தச் சமயத்துல லக்கிக்கு, ஏகன் பின் தொடர்ந்து வர்றது தெரிஞ்சு போகவே ஏகன் மேல லக்கிக்கு வெறுப்பு வந்துருது. நடுவே நடுவே லக்கிமேல தீவிரவாதிங்க தாக்க முயற்சி பண்ண ஏகன் காப்பாத்துறாரு. ஒரு கட்டத்துல ஒட்டுமொத்த கல்லூரியையும் தீவிரவாதிங்க சுத்தி வளைச்சு, லக்கியோட உயிரைப் பணயாமாக் கேட்க ஏகன் எப்படி லக்கியையும் காப்பாத்தி, அவரோட பாசத்தையும் சம்பாதிச்சு, கடமையை ஆத்துறாருங்கிறது Climax.
பின்குறிப்பு: இது Main Hoon na கதை. ஏகன்=இராம்ன்னு மாத்துனதோட நம்ம வேலை முடிஞ்சிருச்சு. இந்தியில கொடுமையா இருந்துச்சு. தமிழ்ல எப்படி எடுத்திருப்பாங்கன்னு தெரியலை.

31 comments:

  1. நாலு வருசத்துக்கு முன்னாடி மப்புல போயி பெங்களூரு காவேரித் திரையரங்குல பார்த்ததுங்க. படம் லேசாத்தான் ஞாபகம் இருக்கு.கதையில ஏதாவது தப்பு தண்டா இருந்தா அதுக்கு தகுந்தா மாதிரி பின்னூட்டத்தைக் குறைச்சுக்குங்க. இந்தக் கதைய ஏன் அஜித் எடுத்தாருன்னு தெரியல:(

    ReplyDelete
  2. :-(((...

    ஹிந்தியில படம் கொடுமையா இருந்துச்சு...ஏகன் என்ன பண்றாருன்னு பாப்போம்..

    ReplyDelete
  3. எனக்கென்னமோ ஹிந்தியை விட தமிழ்ல இன்னும் கொடுமையா இருக்கும்ன்னு தோணுது..

    அந்த Matrix டைப் சண்டையெல்லாம் போடப்போறானுங்க. அதை பார்த்து நம்ம மக்கள்ஸ் விமர்சனத்துல கிழிச்சு எடுக்க போறாங்க..

    ஹிந்தில பாடல்கள் இசையும் கலக்கல்ஸ்.. பாடல் காட்சிகளும் கலக்கல்ஸ். தமிழில் பாடல் இசை அந்த expected அளவுக்கு இல்லைன்னுதான் சொல்லணும்.. பாடல் காட்சி ராஜு சுந்தரம் பிரமாதமாக செய்திருப்பார் என தோன்றுகிறது. இங்கதான் தமிழ் நடன அமைப்பாளர் சூப்பரா? ஹிந்தி நடன அமைப்பாளர் சூப்பரான்னு கேள்விகள் வரும்.. FarahKhan நல்ல choreographer ஆச்சே..

    ஹிந்தியில ஒரு கல்லூரி விழாவில் எல்லாரும் சிவப்பு உடைகளில் வருவார்கள். தமிழிலிலும் அதே சிவப்பு உடைகளில்தான் எல்லாரும் வர்றாங்க. இதுலே இருந்தே தெரியுது படம் எந்த அளவு ஈ அடிச்சான் காப்பியா இருக்கும்ன்னு. நீங்க சொன்னது போல ராம் ஏகன் என்ற பெயர் மாற்றத்தை தவிர கதையில் மற்ற எந்த மாற்றமும் இல்லைன்னு நல்லா தெரியுது.

    ஆங்.. சொல்ல மறந்துட்டேன். ஹிந்தியில சுனில் ஷெட்டி fake-ஆ ஒரு தோப்பா வெள்ளை முடி போட்டிருப்பார். இதுலேயும் வில்லன் fake-ஆ வெள்ளை முடி போட்டிருக்கார். இந்த அளவுக்கு காப்பி அடிக்கணுமான்னு கேட்கும்போது.. இயக்குனனரா இருக்கிறவங்க ரீமேக் என்ற பேரில் அச்சடித்த காப்பி அடிக்கும்போது நடன இயக்குனர் இயக்குனரா ஆகும்போது அதேப்போல செஞ்சுட்டு நானும் ஒரு இயக்குனர்தான்னு வடிவேலு ஸ்டைலில் சொல்லிக்கலாம்ன்னு முடிவு பண்ணிட்டார் போல.

    சுஷ்மிதா சென் ரோலுக்கு நயந்தாரா ஈடு கட்ட முடியுமான்னு தெரியல. :-))

    ReplyDelete
  4. ஹலோ.. ஹிந்திப்படத்தை யாரும் குறை சொல்ல முடியாது. கலக்கல் பாட்டுங்க, இசை, காஸ்டியும் டிசைனிங்க், காமெடின்னு சும்மா மனச அள்ளிட்டு போன படம் அது. அதுலயும் சுஷ்மிதாவும், சாருக்கும் மீட் பண்ற இடம் எல்லாமே ஜாலி இளமை குவியல்..

    அஜீத் நல்லா செஞ்சிருப்பாருங்கற நம்பிக்கை சத்தியமா இல்லை. :(

    கடவுளே.. இந்த படம் பார்த்துடாம என்னைய காப்பாத்திடு!!!

    ReplyDelete
  5. //FarahKhan நல்ல choreographer ஆச்சே../

    and also a good director :)

    ReplyDelete
  6. ஹிந்தியில ராமு, லக்கிக்கு அண்ணாவா வருவாரு :)

    ReplyDelete
  7. //சுஷ்மிதா சென் ரோலுக்கு நயந்தாரா ஈடு கட்ட முடியுமான்னு தெரியல.//

    எங்கள் தலைவியின் புகழை இப்படியெல்லாம் ஒப்பிட்டு குறைக்க முடியாது மலேசிய மாரியாத்தா. :))

    நயன்தாரா ரசிகர் மன்றம்
    பெண்களூர் கிளை (உப கிளைகள் கிடையாது)

    ReplyDelete
  8. //சென்ஷி said...

    ஹலோ.. ஹிந்திப்படத்தை யாரும் குறை சொல்ல முடியாது. கலக்கல் பாட்டுங்க, இசை, காஸ்டியும் டிசைனிங்க், காமெடின்னு சும்மா மனச அள்ளிட்டு போன படம் அது. அதுலயும் சுஷ்மிதாவும், சாருக்கும் மீட் பண்ற இடம் எல்லாமே ஜாலி இளமை குவியல்..//

    கரேக்ட்.. படம் ஆஹோ ஓஹோன்னு சொல்ல முடியலைன்னாலும் it was a good entertaining package. படம் முழுக்க அழகா இருந்துச்சு..

    ReplyDelete
  9. //அஜீத் நல்லா செஞ்சிருப்பாருங்கற நம்பிக்கை சத்தியமா இல்லை. :(//

    அஜித் நல்லா செஞ்சிருக்கலாம். ஆனா டைரக்டர் கெடுத்திருந்தார்ன்னா பாவம் தலதான் என்ன பண்ணுவார்? :-))

    ReplyDelete
  10. // ambi said...

    //சுஷ்மிதா சென் ரோலுக்கு நயந்தாரா ஈடு கட்ட முடியுமான்னு தெரியல.//

    எங்கள் தலைவியின் புகழை இப்படியெல்லாம் ஒப்பிட்டு குறைக்க முடியாது மலேசிய மாரியாத்தா. :))//

    உண்மை உங்களுக்கு சில நேரம் கசக்கத்தான் செய்யும் அம்பிண்ணே. :-))

    // நயன்தாரா ரசிகர் மன்றம்
    பெண்களூர் கிளை (உப கிளைகள் கிடையாது)//

    இதுல ஏதாவது உள் அர்த்தம் இருக்காண்ணே? :-))

    ReplyDelete
  11. 'விஜய்' இங்க பக்கத்துல தெலுங்குல இருந்து காப்பி அடிக்கிறார். 'தல'க்கு ஹிந்தி.

    முதல்ல Don. இப்ப Main Hoon Na. அடுத்து?
    :)

    ReplyDelete
  12. இந்த தீபாவளி 'தல' தீபாவளின்னாங்க, பார்க்கலாம்.

    ReplyDelete
  13. // Karthik said...

    'விஜய்' இங்க பக்கத்துல தெலுங்குல இருந்து காப்பி அடிக்கிறார். 'தல'க்கு ஹிந்தி.

    முதல்ல Don. இப்ப Main Hoon Na. அடுத்து?
    :)//

    அடுத்த படம் Race. Saif Ali Khan & Akshay Khanna நடிச்ச ட்ரில்லர் படம். தல டபுள் ரோல் செய்யுறாராம். தமிழில் ஏன் டபுள் ஹீரோ சப்ஜெக்ட் டபுள் ரோல் சப்ஜெக்ட்டாக மாறுது!!! :-(

    ReplyDelete
  14. //அதுலயும் சுஷ்மிதாவும், சாருக்கும் மீட் பண்ற இடம் எல்லாமே ஜாலி இளமை குவியல்

    தமிழ்லயும் அதேமாதிரி நயன்தாரா சேலை பறக்க அஜித் விழுவார் போல.. ஏதாவது சேஞ்ச் இருக்கான்னு பார்த்தால்தான் தெரியும்.

    ReplyDelete
  15. //அடுத்த படம் Race. Saif Ali Khan & Akshay Khanna நடிச்ச ட்ரில்லர் படம்.

    நிஜமா? கௌதம் படம் இல்லையா?

    //தமிழில் ஏன் டபுள் ஹீரோ சப்ஜெக்ட் டபுள் ரோல் சப்ஜெக்ட்டாக மாறுது!!!

    அதானே. K3G மாதிரி ஒரு படம் தமிழ்ல வர சான்ஸே இல்ல.

    'தல' டபுள் ரோல் பண்ணா ஹிட் தானாம். அந்த சென்டிமென்ட் காரணாமாகவும் இருக்கலாம்.

    ReplyDelete
  16. //அதுல அவருடைய மகன் மற்றும் மனைவியை தீவிரவாதிங்க கொலை செய்ய திட்டமிட்டுருக்காங்கன்னு தெரியவருது. அதனால அவருடைய சீடன் ஏகனை மகன் மற்றும் மனைவியை காக்க அனுப்புறார்.//

    என்ன தல ஸ்டோரி மெயின் லைனையே மாத்திடீங்க.... மேலதிகாரி பொண்ணை பாதுகாக்க தான் ஷாருக்கான் அனுப்பபடுவார். முதலில் அவர் போக மாட்டேன்னு சொல்லும் போது, அந்த அதிகாரி, அதே கல்லூரில இறந்து போன உங்கப்பாவோட இன்னொரு தாரத்தோட மகன் படிக்கிறாருன்னு சொன்ன உடனே போவாரு. அந்த அவரோட தம்பியைத் தான் அதிகாரி மகள் காதலிப்பாங்க... அந்த கெமிஸ்ட்ரி புரொபஸர இவர் காதலிப்பாரு....இப்படி காதுல பூக்கடையவே சுத்துற படம் தான் அது..
    ஸ்ஸ்ஸ்ப்பா இப்பவே கண்ண கட்டுதே..

    ReplyDelete
  17. // Karthik said...

    //அடுத்த படம் Race. Saif Ali Khan & Akshay Khanna நடிச்ச ட்ரில்லர் படம்.

    நிஜமா? கௌதம் படம் இல்லையா?
    //

    முதல்ல ரேஸ் முடிஞ்சு கௌதம் படம்ன்னாங்க. இப்போ கௌதம் படம் முடிஞ்சு ரேஸ்ங்கிறாங்க. பார்ப்போம்.

    :)

    ReplyDelete
  18. @நான் ஆதவன்:

    நல்லா தெளிவா இருக்கீங்க. ;-)

    அந்த டாம்பாய் கெர்ள்ஃபிரண்ட் தமிழ்ல யாருனுன் தெரியல. :-)

    அப்புறம் அந்த ஞாபக மறதி தலைமையாசிரியர் கேரக்டர் தூள்.. அதுவும் யாருன்னு தெரியல. :-)))

    ReplyDelete
  19. Vijay's VILLU is Hindi remake of Bobby Deol's Soldier. Ajith is doing now Main Hoon Na and RACE.

    Remake Thala and vijay....
    Jayam Ravi started doing Originals...

    ReplyDelete
  20. Main Hoona Songs are very good and picturised very well. But Agen songs are very noisy. Yuvan Shankar started sleeping sometimes while composing..

    Copy Cat Anu Malik did good job in MHN.

    Sharukh Movies are not suitable for remake. Don (Don original is Amitabh)

    ReplyDelete
  21. //இந்தியில கொடுமையா இருந்துச்சு.//

    சாருக் சுஸ்மிதாவுடன் உருகும் காட்சிக்காக இந்த வார்த்தையை எடுத்திருக்கலாம்.
    அதை இப்போது நினைத்தாலும் ஒரு சிரிப்பு வருகிறது எனக்கு

    ReplyDelete
  22. ரிக்ஷாவில் ஜீப்பைத் துரத்துர கதை தானே மே ஹூ நா ? தமிழில் என்ன தல ஓடிப்போயே பிடிக்கிறாரா ?

    ReplyDelete
  23. //.:: மை ஃபிரண்ட் ::. said...
    //அஜீத் நல்லா செஞ்சிருப்பாருங்கற நம்பிக்கை சத்தியமா இல்லை. :(//

    அஜித் நல்லா செஞ்சிருக்கலாம். ஆனா டைரக்டர் கெடுத்திருந்தார்ன்னா பாவம் தலதான் என்ன பண்ணுவார்? :-))//

    ரிப்பீட்டேய்!

    ReplyDelete
  24. //ரிக்ஷாவில் ஜீப்பைத் துரத்துர கதை தானே மே ஹூ நா ? //
    அதே தான் வஜ்ரா..அதே தான்..:-)))) அதான் சொன்னேன்னே காதுல பூ சுத்துற படம்ன்னு....

    ReplyDelete
  25. ஒ.. அந்த ஹிந்தி படமா இது, படம் நல்ல இருக்கோ இல்லையோ உங்கள் விமர்சனம் நல்லா இருக்கு

    ReplyDelete
  26. நான் கூட இந்தப்படத்துக்கு நெசமாவே விமர்சனம் எழுதியிருக்கேங்க.
    http://binarywaves.blogspot.com/2004/05/main-hoon-na-microsoft-moviecopied.html

    ReplyDelete
  27. I liked the Hindi original. Irreverent, funny, well paced.

    ReplyDelete
  28. //தமிழில் பாடல் இசை அந்த expected அளவுக்கு இல்லைன்னுதான் சொல்லணும்.. //
    ஹிஹி ஆனாலும் பெரிய மனசு உங்களுக்கு. பாட்டே சரியில்லைன்னு பொலம்பிகிட்டு இருக்காங்க தல மக்கள்ஸ்

    ReplyDelete
  29. இதுக்கு ஒரு உப செய்தி.

    ஹிந்தில சுனில் ஷெட்டி பண்ணிய ரோலுக்கு ஷாருக் கமல்ஹாசனை கேட்டிருந்தாராம். ஹேராம் பண்ணினதுக்காக நன்றிக்கடனா கமல் திரும்பி ஏதாவது பண்ணனும்னு நினச்சிருப்பார்ப் போல. ஆனா வில்லன் ரோல் எல்லாம் டூ மச். கடைசியில கமல் பண்ணாம போயிட்டார்ன்னு ஷாருக்கான் வருத்தப் பட்டிருப்பார்.

    நான் பார்த்தது பெங்களூர் ஸ்வாகத் தியேட்டர்ல. Zayed Khan-க்கு அறிமுகப் படம். என்னால உக்காந்து பார்க்க முடியல. பின்னாடி இவர் ஐஸ்வர்யா ராயோட எல்லாம் ஜோடிப் பொட்டு பெரிய ஆளாயிட்டார்.

    ReplyDelete
  30. ஏனுங்க இளா, இந்த எத்தனயோ கொடுமைகளப்பாத்திருக்கோம். இத மட்டும் விட்டுருவமா. பாத்திடுவோம்

    ReplyDelete
  31. I watched the crap movie today in pvr bangalore.
    KOLA KODUMAI.
    PLEASE DONT WATCH IT.

    ReplyDelete

தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி

  தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை  -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை  காசி  எழுதியது தமிழோவியத்துக்காக  பாஸ்டன் பாலாஜி  க...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நாகேஷ் (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) வாலி (1) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)