Monday, October 13, 2008

* செந்தழல் ரவி - BlogOgraphy

பொதுவா பதிவர்களைப் பத்தி எழுதறதை தவிர்த்துட்டே வந்திருக்கேன். காரணம், தேவையில்லாத சச்சரவு வரும்னுதான். தலையில மண்ண வாரிப் போட்டுப்பாங்களான்னுதான். பதிவர் வட்டத்தைப் பத்தி எழுதினா குழுமடல் மாதிரியும் ஆகிருங்கிறது என்னோட எண்ணம். பதிவுலகத்தை திருப்பி போட்டவங்க (இதென்ன தோசையா?) சிலரைப் பத்தி, இல்லைன்னா பதிவுலகமே திரும்பி பார்த்தவங்கங்களைப் எழுதனும்னு நெனைச்சுட்டு இருந்தேன். அதுக்கு காலம் நேரம் எல்லாம் சரியா வரனும்தானே. அது என்ன BlogOgraphy? BioGraphy மாதிரிதான்.

மொதல்ல எழுதனும்னு நினைச்சது செந்தழல் ரவியப் பத்தி.

முன்குறிப்பு: Comments moderated.

நான் தமிழ்ப் பதிவுலகத்துக்கு வந்தக் காலத்துல ரொம்ப நாகரிகமா கருத்துக்களை மறுத்தாங்க(போலி மட்டும் கெட்ட வார்த்தையிலதான் திட்டுவாரு). ஏதோ ஒரு பதிவுல எங்கே பார்த்தாலும் "I beg a pardon to offfend your post" அப்படின்னு பார்த்திருக்கேன். இந்தமாதிரி நாகரிகமான ஒரு கட்டமைப்பை உடைச்சதுல செந்தழல் ரவிக்கு ஒரு பெரும் பங்கு இருக்கு. அந்தக் காலத்துல தான் செந்தழல் ரவி பதிவுலகத்து வந்தாரு. வந்தவுடனே டமால் டுமீல்னு பதிவுகள் வரும். செம கடுப்புல எல்லாரும் பார்த்துட்டு இருந்தோம். இதுல இரவுக்கழுக்குன்னு ஒரு கேங் வேற தரத்துக்கு கீழே போச்சு.(நம்பி ஏமாத்துனா தரத்துக்கு கீழேங்கிறது என்னோட வாதம்). பொன்ஸ் பத்தி எழுதின பதிவுதான் எனக்கு மட்டுமில்லாம எல்லாருக்கு ரவி மேல செம கோவம் வர வெச்ச பதிவு. ஆம்புளைகளோட பதிவுகளையே கிண்டல் அடிக்க யோசிக்கிற நேரத்துல ஒரு பொண்ணைப் பத்தி(Personalஆ) எழுதுனப் பதிவைப் பார்த்து கோவம் வராதுங்களா?


ரவிய நான் மாமா, மச்சான்னு கூப்பிட ஆரம்பிச்ச காலத்துலதான் ரவி போலி கேங்ல இருக்காருன்னு கேள்விப்பட்டேன். அந்தச் சமயத்துல தான் ரவி தேடுJobs ஆரம்பிச்சாரு. அதுவரைக்கு வில்லனா இருந்த ரவி கதாநாயகனா எல்லா பத்திரிக்கையிலும் வலம் வந்தாரு. அப்பதான் நானும் மோஹன்தாஸும் ரவிய நாய் கடிச்சதைப் பதிவப் போட போலி எங்களுக்கு நேரடியாவே நாய் பட்டம் குடுத்து பாராட்டினதும் இந்தப் பதிவுக்கு தேவை இல்லாத தம்பட்டம்.

ரவி ’U’ அடிச்சது, போலிகளோட நடந்த சண்டைதான். அதான் தமிழ்ப் பதிவுலகத்தோட வரலாறு பக்கமாச்சு. அப்புறம் கர்நாடகா பிரச்சினை வந்ததும், ரவிக்கு போலிகளால தொந்தரவு வந்ததும், செல்லாவும் ரவியும் போலிய பத்தி போலீஸ்ல புகார் தந்ததும் ரகசியமாவே இருந்ததுச்சு. பூனைக்கு மணிய கட்டிய பெருமை இவுங்களையேச் சாரும். இன்னிக்கும் பல பேரோட பின்னூட்டப் பொட்டி திறந்தாப்ல இருக்குன்னா அதுக்கு ரவியும் ஒரு காரணம்.

வீராச்சாமி படத்துக்கு படம் பார்க்காமையே அவர் எழுதுன விமர்சனம் என்னோட favourite. அதுக்கு முன்னாடி சில நல்ல பதிவுகள் வந்ததும் உண்டு. கோழி திருடன், தேங்காய் பொறுக்கி எல்லாம் டாப் டக்கர்.

இன்னும் செந்தழல் ரவி பதிவுலகத்தின் நாகரிகத்தை கண்டுக்கவே இல்லீங்கிறது வருத்தம்தான்(அப்படின்னு ஒன்னு இருக்கா?). இன்னும் அவர் பிராமிணர்களை வசை பாடுறதும், அவர் பதிவுகள்ல அடுத்தவங்க போட்ட பிடிக்காத பின்னூட்டத்துக்கு அனானியா அவரே பின்னூட்டமா திட்டுறதும் எனக்குப் பிடிக்காத செயல்.

(தொடரும்)

அடுத்தப் பதிவர் - கருத்து கந்தசாமி

18 comments:

 1. நெசமாவா சொல்றீங்க!!!!

  நீங்க சுட்டிக் காட்டலைன்னா இது எனக்குத் தெரிஞ்சே இருக்காது!!!!

  ReplyDelete
 2. இளா,

  நான் கூட பின்னூட்டப் பெட்டியை திறந்து வச்சிருக்கேன். அதன் பலனாக,

  இதுல 'நாரதர்' பின்னூட்டம் பாருங்க,

  http://govikannan.blogspot.com/2008/10/blog-post_5350.html

  எல்லாம் 'அவன்' செயல் !
  :)

  ReplyDelete
 3. அவர் ரொம்ப நல்லவரு. அறிவியல் பற்றி எழுதுறதெண்டு சொல்லிட்டு இப்பவும் சகிலா கதை எழுதுறாரு.
  எதையாவது எழுதணும் என்ற ஆர்வம் முட்டி மோதிக் கொண்டே இருக்கும் போல. என்னை அடிக்கடி திட்டுவார். தனிய.

  ReplyDelete
 4. உங்கள் பதிவில் என்னைப்பற்றிய உண்மையான புரிதல் 30% மட்டும் தான் என்று கருதுகிறேன்...

  தோழி.பொன்ஸ் பற்றி ஒரு லைன் தான் அந்த பதிவில். அந்த பதிவு சுட்டிக்காட்டிய "புதுமைப்பெண்" பெங்களூரை சேர்ந்தவர், என்னுடைய தோழி (இன்றும்)..!!!

  வாழ்க்கையை பற்றிய சில தவறான புரிதல்கள் !!! அவருக்காகவே எழுதப்பட்டது, அதன் பிறகு 100 சதவீதம் திருந்தினார்..

  கோவியார் சுட்டிக்காட்டிய பதிவில் உள்ள பின்னூட்டம் என்னுடையது அல்ல, பிடிக்காத செயல்களை செய்பவர்களை நேரடியாக கேட்கும் குணம் என்னுடையது, அது கோவியாருக்கே தெரியும். அப்படி இருக்க ப்ரொபைல் எல்லாம் உருவாக்கி பின்னூட்டம் போட்டிருப்பேன் என்று அவர் தவறாக நினைத்துள்ளார். பெங்களூர் ஐ.பி கவுண்டரில் வந்தால் அது நான் தான் என்று தவறாக எண்ணும் போக்கு என்று தான் தீருமோ ?

  துளசி டீச்சர் என்ன சொல்கிறார்கள் என்று புரியவில்லை ?

  இந்த ஒரு மாதமாக கடும் ஆணியில் வலைப்பதிவுக்கு 30 நிமிடம் மட்டுமே ஒதுக்கி வருகிறேன்.

  என்னை உண்மையில் புரிந்துகொண்ட பதிவு அல்ல இது !!!!

  ReplyDelete
 5. //ஆம்புளைகளோட பதிவுகளையே கிண்டல் அடிக்க யோசிக்கிற நேரத்துல ஒரு பொண்ணைப் பத்தி(Personalஆ) எழுதுனப் பதிவைப் பார்த்து கோவம் வராதுங்களா?
  // இது கோபப்படவேண்டிய விஷயம் அல்ல. சிந்திக்க வேண்டிய விஷயம். செந்தழல் ரவி இந்த பதிவில் எழுதியது இன்றைய இளம்பெண்கள் பலருக்கும் பொருந்தும். அளவவுக்கு மீறிய நாகரீகம் மனிதர்களை மிருகநிலைக்கு கொண்டு சென்றுவிடும். தற்போது சில திருமணமான பெண்கள்கூட அரைநிர்வாணமாக அலையும் நிலையை பார்க்கிறோம். இதில் பெருமை வேறு. பெண்விடுதலை என்பது ஆணை அடிமை படுத்துவது என்ற தவறான திசை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. பல ஆண்களுடன் 'தொடர்பு' வைத்திருப்பதைகூட நியாயப்படுத்த சில அறிவுஜீவிகள் முயற்சி செய்வதை ஊடககங்கள் மூலம் அறியலாம்.

  ReplyDelete
 6. பின்னூட்டங்கள் மட்டுறுத்தப்படுவதே நல்லது. ஒரு சில பின்னூட்டகளங்களை பார்த்தால் வாந்திவரும் அளவிற்கு ஆபாசமான வார்த்தைகளும் தனிப்பட்டமுறையில் அசிங்கமாக திட்டுவதும் இடம் பெற்றிருக்கும். இவ்வாறு செய்பவர்கள் பெரும்பாலும் anonymous என்று வரும் பெயரில்லாதவர்களே

  ReplyDelete
 7. செந்தழல் பற்றி இவ்வளவு லேட்டா
  பதிவு போடறீங்க?
  இப்பல்லாம் அவரோடபேரனோட
  பதிவுகள்தான் நிறைய ஹிட்ஸ் வாங்குது

  ReplyDelete
 8. //கோவியார் சுட்டிக்காட்டிய பதிவில் உள்ள பின்னூட்டம் என்னுடையது அல்ல, பிடிக்காத செயல்களை செய்பவர்களை நேரடியாக கேட்கும் குணம் என்னுடையது, அது கோவியாருக்கே தெரியும். அப்படி இருக்க ப்ரொபைல் எல்லாம் உருவாக்கி பின்னூட்டம் போட்டிருப்பேன் என்று அவர் தவறாக நினைத்துள்ளார். பெங்களூர் ஐ.பி கவுண்டரில் வந்தால் அது நான் தான் என்று தவறாக எண்ணும் போக்கு என்று தான் தீருமோ ?//

  வழக்கமான அவசர அவதூறு,

  நான் இங்கே இளா சொல்லி இருக்கும் பின்னூட்ட பெட்டி திறந்துவைத்திருப்பது பற்றி சொல்லி இருப்பதற்குத்தான் அந்த பின்னூட்டம் இட்டேன். ஐபி பார்த்து மோப்பம் பிடிக்கும் பழக்கம் எல்லாம் எனக்கு கிடையாது. அந்த பின்னூட்டம் யாருடையது என்பது அனைவருக்குமே தெரியும். அந்த பின்னூட்டம் இட்டது நீங்கள் இல்லை. தமிழ்மணப் பதிவர் என்றால் அந்த பின்னூட்டமிட்டவரை நானும் கூட பெயரை நேரடியாகவே சொல்லிவிடுவேன். வழக்கமாக ரஜினி பற்றி பதிவிடும் போதும், பிஜேபி பற்றி எழுதும் போது அத்தகைய பின்னூட்டங்கள் வரும் என்பதையும் இங்கே தேவையற்ற தகவல்களாக தெரிவித்துக் கொள்கிறேன்.

  ReplyDelete
 9. ///செந்தழல் பற்றி இவ்வளவு லேட்டா
  பதிவு போடறீங்க?
  இப்பல்லாம் அவரோடபேரனோட
  பதிவுகள்தான் நிறைய ஹிட்ஸ் வாங்குது////

  இவர் இருக்காரே ? எப்பவுமே குசும்புதான்...

  ReplyDelete
 10. ஆஹா நீங்கள்தான் இந்த வார நட்சத்திர பதிவராஅ? வாழ்த்துக்கள் ILA...

  தலைவர் ரவி அவர்களின் பயோகிராபி சூப்பர்... அவரைப்பற்றி நமக்கு தெரியத விசயங்களையும் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி

  ReplyDelete
 11. முடிந்து போன மற்றும் ஒதுங்கிச் சென்று விட்டவர்களை குறி வைத்து ஏன் இப்படி? ரணத்தை சீண்டிப் பார்ப்பதில் ஏதும் ஆனந்தமா :(

  ReplyDelete
 12. //முடிந்து போன மற்றும் ஒதுங்கிச் சென்று விட்டவர்களை குறி வைத்து ஏன் இப்படி? //
  மன்னிக்கனும் அனானி, சம்பந்தப்பட்டவங்களின் அனுமதி வாங்கியாச்சுங்க.

  ReplyDelete
 13. //ரணத்தை சீண்டிப் பார்ப்பதில் ஏதும் ஆனந்தமா//
  இதைக் கூட அனானியாத்தான் வந்துச் சொல்லனுமா? உங்க பேர்ல வந்தா என்னங்க ஆகிரும்?

  ReplyDelete
 14. //என்னை உண்மையில் புரிந்துகொண்ட பதிவு அல்ல இது !!!!//
  தனிப்பட்ட முறையிலைன்னா அந்தப் பதிவு வேற மாதிரி இருந்திருக்கும். இது ஒரு மூணாவது மனுசனா பார்த்து எழுதின பதிவுதான். அதுவுமில்லாம ஓரளவுக்கு அரசியலும், உங்களுக்கு எவ்வளவு பிரச்சினை இருந்திருக்கும் அப்படிங்கிறதும் ஓரளவுக்கு புரிஞ்ச பின்னாடியே எழுதின பதிவு. தனிப்பட்ட முறையில மாமா/மச்சான்னு கூப்பிட்டுகிட்டாலும் சில விசயங்களை மாத்திர முடியாதுதானுங்களே.

  ReplyDelete
 15. J_K_B- நீங்க சொல்றதும் ஒரு வகையில நியாயம்தானுங்க. ஆனா எந்த விசயம் இதுல தப்புன்னு சொல்லுங்க பார்ப்போம். அந்தப் பதிவுல வர பீன்ஸ் எல்லாம் யாருங்க? அந்தச் சமயத்தில நீங்க பதிவுலகத்துல இல்லாம இருந்திருக்கலாம்..

  ReplyDelete
 16. கழுகா? எங்கையோ கேட்ட மாதிரி இருக்கே :)

  ///அடுத்தப் பதிவர் - கருத்து கந்தசாமி///
  வெயிட்டிங்! :)

  ReplyDelete
 17. ரவியைப் பற்றி, அவரது உதவும் குணத்தைப்பற்றி, வெளியே சொல்லிய சொல்லாத உதவிகளைப்பற்றி மற்றும் அவரது எழுத்துவன்மை பற்றியெல்லாம் எழுத மனமின்மை அல்ல நேரமின்மை தான் காரணம் என்று என்னை எண்ண வைத்த பதிவு இது என்று சொல்லியிருந்தால் நன்றாக இருக்கும் என்று சொல்ல ஆசைதான்! ;-)

  ReplyDelete

WhatsApp DP - சிறுகதை

கா லை எழுந்தவுடனே சுந்தரியின் WhatsApp DP யைத் தேடிப் போய் பார்ப்பதே எனக்கு வழக்கமாகிவிட்டது. என் பெயர் தாரணி, நானும் சுந்தரியும் ஒரே அப்பா...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (3) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (30) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (3) காதல் (14) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)